Chapter 28

0Shares

நீ சிந்துகின்ற கண்ணீர் கண்டு..

          மனம் துடிக்க உன்அருகில் வந்தேன்..

நீ சாய்ந்து கொள்ள தோள் தந்தேன்..

    நீ பிரிந்து செல்ல மனம் வெந்தேன்..

காதலாகி.. கசிந்துருகி..

சந்தியாவின் இதழ்கள் துடித்தன.. ஏற்கனெவே ஜீவாவின் அருகாமையில் அவள் மனம் இனம் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தவிப்பில் சிக்கிக் சிணுங்கிக் கொண்டிருந்தது.. தன் உணர்வுகளைக் கொட்ட வடிகால் கிடைத்துவிட்ட வேகத்துடன் அவள் ஜீவாவைப் பார்த்தாள்..

“கவிதா எனக்கு இரண்டில் ஒன்று தெரிய வேண்டும்..”

“எந்த இரண்டில் ஒன்றைச் சொல்கிறாய்டி..”

“உன் அண்ணன் ஏன் என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறார்..? ஏன் என் கண்களுக்கு மட்டும் எல்லாம் கெட்டதாகவே தெரிகிறதாம்.. கெட்டதுதானே கெட்டதாகத் தெரியும்..?”

“கவி ஊரெல்லாம் நல்லவன் என்று சொல்கிற ஒருவனைப் பார்த்து உன் பிரண்ட் கெட்டவன்னு சொன்னால் நான் வேறு எப்படிச் சொல்வதாம்..”

“எல்லாமே வேசம் போட்டு ஆளை ஏமாற்றுகிற வேடதாரிகள்.. இவர்கள் நடிப்பைப் பற்றி எனக்குத் தெரியாதா..?”

“தெரிந்தால் சொல்லச் சொல்..”

“முதலில் உன் அண்ணனைச் சொல்லச் சொல்..”

“இப்போ உன் பிரண்டிற்கு ஏன் நான் அப்படிச் சொன்னேன்னு விளக்கம் வேண்டும்.. அவ்வளவுதானே..”

“அவ்வளவேதான்..”

“கவி.. கிருஷ்ண பரமாத்மா ஒருநாள் துரியோதனனையும்.. தர்மரையும் கூப்பிட்டாராம்..”

“ஊம்..”

“இரண்டு பேரையும் உலகத்தை சுற்றிவரச் சொன்னாராம்..”

“எதற்காகவாம் அண்ணா..?”

“மனிதர்களின் குணம் எப்படியிருக்குன்னு தெரிந்து கொண்டு வரச் சொன்னாராம்..”

“ஓஹோ..”

“தருமர் திரும்பி வந்து ஆஹா உலக மக்கள் எல்லாருமே நல்லவர்கள்.. தங்கக்கம்பிகள்ன்னு சொன்னாராம்.. இந்தத் துரியோதனன் திரும்பி வந்து என்ன சொல்லியிருப்பான்னு நீ நினைக்கிற கவி..?”

கவிதாவுக்கு விடை தெரிந்துதான் இருந்தது.. சந்தியாவின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“தெரியவில்லையே அண்ணா..” கவிதா வேண்டு மென்றே சொல்ல சந்தியா எரிந்து விழுந்தாள்..

“ஏய்ய் உனக்காடி தெரியாது.. வேண்டுமென்றே உன் அண்ணனைத் தூண்டி விடுகிறாயா..?”

“பொறு சந்தியா.. இன்ட்ரெஸ்டாய் நான் அதை கேட்டுக் கொண்டிருக்கிறேனில்ல.. ஊடே பேசாதே..”

“இது வெறும் கதையா..?”

“பின்னே இல்லையா..?”

சந்தியா கோபத்துடன் முறைக்க கவிதா அப்பாவி போல் கேள்வி கேட்டாள்.. போதாத குறைக்கு சந்தியாவின் எரிகின்ற கோபத் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல..

“நீங்க சொல்லுங்க அண்ணா..” என்று ஜீவாவைத் தூண்டிவிட வேறு செய்தாள்..

சந்தியாவின் முறைப்பை ரசித்துக் கொண்டே ஜீவா தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.

“துரியோதனன் சொன்னானாம்.. ஒருத்தர் கூட நல்லவன் இல்லைன்னு.. எல்லாரும் ஏமாற்றுக்காரங்க.. எல்லாரும் நயவஞ்சகங்கன்னு சொன்னானாம்.. இதிலிருந்து என்ன தெரிகிறது..”

ஜீவா சந்தியாவைப் பார்த்துக் கொண்டே கவிதாவிடம் வினவ..

“உன் அண்ணன் என்னை லேடி துரியோதனன்னு சொல்கிறார்ன்னு தெரியுது..” என்று சந்தியா சொன்னாள்..

“ஹா.. ஹா..” என்று சிரித்துக் கொண்டே ஜீவா அங்கிருந்து போய்விட கவிதா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“பார்த்துடி பல் சுளுக்கிக் கொள்ளப் போகிறது..” என்றாள் சந்தியா எரிச்சலுடன்..

கவிதா கையிலிருந்து மெஹந்தியை காய வைத்த வண்ணம் அறைக்குள் அமர்ந்துவிட மொட்டை மாடியில் ஷாமியானா கட்டப்பட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்க அங்கு சென்றாள் சந்தியா..

“வா சந்தியா..” என்ற வண்ணம் குமார் படியிறங்கிப் போய்விட்டான்..

ஜீவாவும் இன்னொரு ஆளும் ஸ்டூல்களில் ஏறி ஷாமியானாவைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்..

சந்தியா வருவதைக் கண்ட ஜீவா அவளைக் கவனிக்காதவன் போல் சத்தமாக பாடிக் கொண்டே வேலையைக் கவனிப்பது போல பாவனை செய்தான்..

“மன்னிக்க மாட்டாய – கொஞ்சம்

மனம் கிரங்கி..

நீ ஒரு மேதை..

நானொரு பேதை..”

கூட இருந்த ஆள் திரும்பி ஜீவாவை விசித்திரமாகப் பார்த்தான்..

“என்ன சார் இவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்தீங்க.. இப்போது இப்படிக் கத்துகிறீங்க..”

“கத்துகிறேனா.. பாட்டுப் பாடுகிறேன்ப்பா..”

“அதை நீங்க சொல்லக் கூடாது.. நான் சொல்ல வேண்டும்.. சும்மா ஓட்டைப் பானைக்குள்ள நண்டை விட்டது போல காதோரமாய் நொய் நொய்ன்னு கத்திவிட்டு பாட்டுப் பாடினேன்னு பீலா விடறீங்களே.. இது நல்லாவா இருக்கு சார்..”

ஜீவா அசடு வழிய சந்தியாவைப் பார்க்க அவள் ‘களுக்’ கென்று சிரித்தாள்..

‘ம்ஹீம் இவள் முன்னால் இவன் இப்படி வாரிவிட்டானே..’ ஜீவா வேலையைப் பார்க்க முனைந்தபோது அந்த ஆள் சந்தியாவைப் பார்த்து விட்டான்..

“ஓஹோ.. இப்பத்தான் தெரியுது.. பிகருக்கு முன்னால் சீன் காட்டறீங்களா.. காட்டுங்க.. காட்டுங்க..”

சந்தியா இப்போது சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்திக் கொள்ள ஜீவா அந்த ஆளுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தான்..

“யோவ் பொம்பளை முன்னால் மானத்தை வாங்காதே.. அடக்கி வாசி..”

அந்த ஆள் வேலையை முடித்துவிட்டு இறங்கிச் சென்றுவிட ஜீவா மட்டும் சரிபார்ப்பது போல் மொட்டை மாடியைச் சுற்றி வந்து அண்ணாந்து பார்த்தான்..

“பார்த்து கழுத்து பிடித்துக் கொள்ளப் போகிறது.. ஓவராய் பில்ட் அப் கொடுக்காதீங்க..” என்றாள் சந்தியா..

அவள் நேரடியாக பேசி விட்ட மகிழ்வில் மனம் பரபரத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் திரும்பிப் பார்த்தான் ஜீவா..

“என்னிடமா பேசினாய்..?”

“இங்கே நீங்களும் நானும் மட்டும்தானே இருக்கிறோம்..?”

“ஆமாமாம்..”

“அப்போ உங்களிடம் தானே நான் பேசியிருக்க முடியும்..?”

“ஆமாமாம்..”

“இந்த ஆமாம் சாமி போடும் வேலையை எல்லாம் கவிதாவின் அம்மாவிடம் மட்டும் வைத்துக் கொள்ளுங்க.. எனக்கு இந்த ஜால்ரா போடுகிற ஆள்களைக் கண்டாலே சுத்தமாகப் பிடிக்காது..”

இப்போது ஜீவா தன் பாசாங்குகளை கைவிட்டு விட்டு சந்தியாவின் அருகில் வந்து அவளைத் தீர்க்கமாக பார்த்தான்..

“நான் ஜால்ரா போடாமல் இருந்தால் மட்டும் உனக்கு என்னை பிடித்து விடுமா..?”

சந்தியா பேச்சிழந்தாள்.. அவனுடைய தீர்க்கமான பார்வையைச் சந்திக்க முடியாமல் முகம் திருப்பிக் கொண்டாள்..

“சொல் சந்தியா.. நான் எப்படியிருந்தால் உனக்குப் பிடிக்கும்..?”

“நான் கீழே போகிறேன்..”

சந்தியா கீழே போக முயல.. ஜீவா அவள் கைபிடித்து அருகே இழுத்தான்.. பூமாலையாய் அவன் மேலே விழுந்தவளின் முகம் நிமிர்த்தி அவள் இதழோடு இதழ் பதித்தான்..

‘விலகி விடு.. சந்தியா.. விலகிவிடு..’ சந்தியாவின் மனம் அலறினாலும் சந்தியாவினால் விலக முடியவில்லை.

ஒரு நிமிடம் கழித்து அவளை விடுவித்தபின் அவள் முகம் பார்க்காமல்..

“ஐ ஆம் ஸாரி.. நானும் மனிதன் தான் சந்தியா..” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்று விட்டான்.

சந்தியா அதிர்ந்து போனவளாக சுவரோடு சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்..

சற்று முன் நடந்ததை நினைத்து அவள் மனம் பொங்கிக் கொண்டிருந்தது.. உடல் நடுங்க அவள் சுவரோடு சுவராக சாய்ந்து நின்று கண்மூடிக் கொண்டாள்.

மூடிய கண்களுக்குள் அவள் முகம் பற்றி அவளது அதரங்களைத் தேடிக் குனிந்த ஜீவாவின் முகம் தோன்றியது.. ஒரு அலை வந்து ஓங்கி அவள் மேல் அடித்து இழுத்துச் செல்வதைப் போல் உணர்ந்தாள் அவள்..

‘பிஞ்சாக நானிருந்தேனே..

பெண்ணாக மாற்றி விட்டானே..

அஞ்சாமல் அணைத்து விட்டானே..

கெஞ்சாமல் விலகிச் சென்றானே..’

அவள் மனம் பாடியது.. முதல் முதலாக அவளைப் பெண்ணென்று உணர்த்தி விட்டுப் போனவனின் பின்னால் அவள் மனம் போகத்துடித்தது..

‘அம்மம்மா.. ஏடின தோழி..

நிலாவினில் நின்றொரு நாழி..

சொல்லாலே உரைத்து பாதி..

        சொல்லாமல் அறிந்தது மீதி.. அம்மம்மா..’

சந்தியா உதட்டைக் கடித்து தன் மன உணர்வுகளை அடக்க முயன்றாள்.. ஜீவாவை வெறுக்க காரணங்களைத் தேடி தன் மனதில் உருவேற்றிக் கொண்டாள்..

‘அவன் அயோக்கியன்.. நயவஞ்சகன்.. நண்பன் போலப் பழகி ஏமாற்றியவன்.. நம்பிக்கைத் துரோகி..’

இதை நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. அவன் இதழ் பதித்த முத்தம் தேவையில்லாமல் அவளது நினைவிற்கு வந்து தொலைத்தது..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link