Chapter 38

0Shares

ஊரில் உள்ள சாமிகளிடம்

    நேர்த்திக் கடன் நேர்ந்துக்கிட்டேன்..

உன்னுடனே வாழ்ந்திடவே..

    உள்ளம் உருக வேண்டிக் கிட்டேன்..

காதலாகி.. கசிந்துருகி..

அலைகள் கொஞ்சி விளையாடும் குமரியம்மன் ஆலயத்தின் முன்னால் சந்தியா காத்துக் கொண்டிருந்தாள்.

முதல் நாள் ஜீவா வாங்கிக் கொடுத்திருந்த மெரூன் கலர் பட்டுப்புடவையை உடுத்தி.. அவளிடம் ஏற்கனெவே இருந்த மெஜந்தா நிற ஜாக்கெட்டை புடவையின் பார்டரின் நிறத்திலேயே போட்டிருந்தாள்.. மெருன் கலர் கல்லில் தோடு.. உள்ளங்கழுத்தில் மெல்லிய செயின்.. தலை நிறைய குண்டு மல்லிகைப் பூச்சரம்..

அந்தப் பூச்சரத்தை தலையில் வைத்துக் கொள்ளும்போது ஜீவா பூவாசம் பிடித்த நிகழ்வு மனதில் தோன்ற.. கன்னம் சிவந்து போனாள்..

‘இன்னும் வரவில்லையே..’ அவள் மனம் எதிர்பார்ப்பில் படபடத்தது..

“வந்து ரொம்ப நேரமாச்சா..?” ஜீவா அவளருகில் வண்டியை கொண்டு வந்து நிறுத்தி விட்டு இறங்கிக் கொண்டே கேட்டான்..

“அப்படியொன்றும் அதிக நேரமாகி விடவில்லை.. நான் வந்த பின்னால் மூன்று போட் நிறைய விவேகானந்தர் பாறையைப் பார்க்க ஜனங்கள் போய் வந்து விட்டாங்க.. அங்கேயிருந்த சூரியன்.. கடலுக்குள்ளே இறங்கிடுச்ச..”

“போதும் போதும் நேரமாகிருச்சுன்னா நாலு திட்டு திட்டிவிட்டுப் போயேன்.. அதை விட்டு விட்டு பேசிக்கிட்டு போகிறாயே..”

அப்போதுதான் அவளுடைய புடவையைக் கவனித்த ஜீவா மகிழ்ச்சிப் பரவசத்துடன்..

“ஏய்ய்.. இது நான் எடுத்துக் கொடுத்த புடவையில்ல..?” என்று கேட்டான்..

“ம்ம்.. நீங்க எடுத்துக் கொடுத்த புடவைதான்.. அதுக்கு என்ன இப்போ..” அசிரத்தையாய் பதில் சொல்வது போல சந்தியா பதில் சொன்னாள்..

ஜீவா அந்தப் புடவையைக் கவனித்து விட்டதில் அவளுக்கு மனம் நிறைய சந்தோசம் தளும்பியது..

“வா.. அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கலாம்..”

ஜீவாவும் அவளும் கோயிலுக்குள் சென்றார்கள்.. கன்யாகுமரி அம்மன் சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள்..

“நன்றி தாயே.. என் மனதுக்குப் பிடித்தவளை என்னிடம் கொடுத்து விட்டாய்..” ஜீவா மனமார நன்றி சொன்னான்..

கோயிலை வலம் வந்து பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள்.. சந்தியாவின் அழகை அள்ளிப் பருகுவது போல பார்த்துக் கொண்டேயிருந்தான் ஜீவா..

“எப்படி இத்தனை அழகாய் இருக்க சந்தியா..”

அவள் முகம் சிவக்க மௌனமாக இருந்தாள்..

“நீ சாதாரணமாய் டிரஸ் பண்ணினாலும் அழகுதான்.. இன்றைக்கு ஸ்பெசலாய் நான் பார்க்கனும்னு டிரஸ் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறாயே.. இது பேரழகு..”

“அடேங்கப்பா.. இவர் பெரிய மகாராஜா.. இவர் பார்த்து ரசிக்க புடவைகட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்.”

“நீ மட்டும்தானே வந்திருக்கிறாய்..”

“அப்படியொரு நினைப்புக்கூட உங்க மனசில் இருக்கா.. இன்னும் எத்தனை பெண்கள் ஜயாவுக்கு முன் வந்து நிற்கனுமாம்..?”

“நானாக ஏதாவது சொன்னேனா நாங்க நாங்கன்னு நீதானே சொன்னாய்..”

விவேகானந்தர் பாறையில் நிற்கும் போது அவர்கள் இருவரின் மனதிலும் மலரும்.. நினைவுகள் ஊர்வலமாய் வந்தன..

“இங்கேதான்.. உன்னை முதன் முதலாக நான் பார்த்தேன்..”

“ம்ம்ம்..”

“பயந்து மிரளும்.. மான்குட்டியைப் போல நீ.. இருந்தாய்..”

“ஜீவா..”

“உன் கண்ணில் தெரிந்த அந்த சோகம்தான் முதலில் என்னைக் கவர்ந்தது..”

“அழுமூஞ்சின்னு நினைத்தீங்களா..?”

“ஊஹீம்.. உன் கண்ணீர் துடைத்து காலமெல்லாம் உன் நிழலாக இருக்கனும்னு நினைத்தேன்..”

“ஆண்களுக்கு பொதுவாய் சந்தோசம் தானே பிடிக்கும்..”

“எனக்கு உன்னைப் பிடித்ததால் உன்னிடமிருந்த எல்லாமும் பிடித்தது..”

“என் சோகத்தின் நிழல் உங்கள் மேல் படியுமென்று நினைக்கவில்லையா..?”

“சோகத்தின் நிழல்கூட உன்மேல் படிய விடக் கூடாது என்றுதான் நான் நினைத்தேன்.. ஐ லவ் யு சந்தியா..”

ஜீவா நீட்டிய கரத்தை இறுகப் பற்றி அவன் விரலோடு விரல் கோத்த போது..

‘இவன்தான் எனது காதலன்..’ என்ற கவர்வம் சந்தியாவுக்குள் எழுந்தது..

தியானமண்டபத்தில் இருவரும் தியானம் செய்துவிட்டு ஒரே நேரத்தில் கண்விழித்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்…

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link