Chapter 10

0Shares

அவள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் உடனுக்குடன் ரமணனுக்குப் போய் சேர்ந்து விடும்.. அதைப் போல்தான் அவள் கார்த்திக்கின் காரில் வந்து இறங்கியதும் போய் சேர்ந்திருக்கிறது..

“அது எவனோ இல்லை…”

விளக்கம் சொல்லத்தான் ஆரம்பித்தாள் மாளவிகா.. கார்த்திக் என்பவன் எவனோ இல்லை.. உறவுக்காரன்.. காலையில் வீட்டுக்கு வந்திருந்தான்.. கல்லூரியில் இறக்கிவிட்டுப் போவதாகக் கூறினான்.. வீட்டில் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் அவனுடன் காரில் வர வேண்டியதாகி விட்டது..

இதையெல்லாம் சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் சொல்ல ஆரம்பித்த போதே.. இவனுக்கு எதற்காக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.. ரமணன் அதையே சாக்காக வைத்துக் கொண்டு அவள் ரமணனைக் காதலிப்பதாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற நினைவு வர பேச்சை நிறுத்திக் கொண்டாள்..

அவள் சும்மா நின்றிருந்தால் கூட ரமணன் அந்த அளவிற்கு கோபப் பட்டிருக்க மாட்டான்.. அந்த வார்த்தை களைச் சொன்னதும் அதிகமாக கோபப் பட்டு விட்டான்..

“ஏய்ய்..” ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தான்..

அதுவரை அது போன்ற ரௌத்ரமான கோலத்தில் அவனைப் பார்த்திராத மாளவிகா வெலவெலத்து விட்டாள்..

“அவன் எவனோ ஒருத்தனில்லை.. உனக்குச் சொந்தக்காரன்னு எனக்கும் தெரியும்.. பெயர் கார்த்திக்.. போலிஸ்ன்னா நான் பயந்து உன்னை விட்டுக் கொடுத்துடுவேன்னு நினைச்சியா..? அந்தக் கதையெல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது.. நான் ரமணன்.. எனக்கு நீதான்னு நான் முடிவு பண்ணியாச்சு.. உனக்கு நான்தான் அதை நினைப்பில் வைத்துக்க..”

மாளவிகா பக்கத்திலிருக்கிறவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பதட்டத்துடன் சுற்று முற்றும் பார்த்தாள்.. ஒரு குருவியைக் கூட பக்கத்தில் கானோம்.. எங்கே..? ரமணன் வந்து இறங்கியதும்தான் அவர்கள் கல் விழுந்த பறவைக் கூட்டம் போல பறந்து விட்டார்களே..

‘இவன் கிட்ட இது ஒன்னு இருக்குது.. எப்பல்லாம் பஸ் ஸ்டாப்பில் கூட்டமா இருக்கோ.. பஸ்ஸில் கால் வைக்கக் கூட முடியாதுன்னு நான் கவலைப்படறேனோ.. அப்பல்லாம் வந்து நின்னு எல்லோரையும் ஓட்டிருவான்..’

அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.. ரௌத்திரமான ரமணனின் முன்னால் சிரித்து வைத்தால் அவன் சும்மா விடமாட்டான் என்று தோன்ற.. அவள் தலையை ஆட்டி சிரிப்பைத் துரத்தினாள்..

அதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டான் ரமணன்.. அவன் முகத்திலிருந்த ரௌத்ரம் கொஞ்சம் வடிந்தது..

“புத்தியோட நடந்துக்க.. உன் படிப்புக்காக பார்க்கிறேன்.. இல்லைன்னா எப்பவோ தூக்கிக்கிட்டுப் போயிருப்பேன்.. இதுவரை நீ இப்படி யார்கூடவும் வந்து இறங்கினதில்லைன்னு கேள்விப்பட்டேன்.. இப்ப இவன் சொந்தக்காரன்னு நீ கூட வந்திருக்கலாம்..”

ரமணன் சொல்லிக் கொண்டே போக அவன் அனுமானத்தில் ஆச்சரியப்பட்டுப் போன மாளவிகாவின் மனதில் நிம்மதி வந்தது…

அது எதனால் என்ற நினைவில் அது குறித்த கவலையும் அதைத் தொடர்ந்து வந்தது..

“இனி இப்படிச் செய்யாதே..”

‘நீ சொன்னாலும்.. சொல்லாட்டியும் அவன் காரில் நான் ஏன் ஏறப் போறேன்..? அவன் பேச்சைக் கேட்கிறதுக்குப் பதிலா.. பஸ்ஸில் இடிபட்டு போகிறது பெட்டர்…’

“அவன் கூடக் காரில் வர்றது உனக்கு கம்பர்டபிளா இருக்கலாம்..”

‘ஒரு மண்ணும் இல்லை.. தலைவலி வந்ததுதான் மிச்சம்…’

“எனக்கு கம்பர்டபிள் இல்லை…”

‘எனக்கும் இல்லைன்னுதானே நான் புலம்பிக்கிட்டு இருக்கேன்..?’

“அதனால…”

‘அதனால…?’

“உனக்கு காரில் போகனும்ன்னா சொல்லு… தினமும் உன்னைக் காரில் கொண்டு வந்து காலேஜில் இறக்கிவிட்டு.. கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்.. என்ன சொல்ற..?”

‘வேற வினையே வேண்டாம்..’ அரண்டு போனாள் மாளவிகா…

“ப்ளீஸ்.. எனக்கு அதெல்லாம் வேணாம்..”

“இன்னைக்கு வந்திருக்கியே…”

“அவன் எனக்கு ரிலேடிவ்.. காலையில் வீட்டுக்கு வந்திருந்தான்.. நான் காலேஜீக்கு கிளம்பினப்போ போகிற வழியில் டிராப் பண்ணிடறேன்னு சொன்னான்.. அம்மாவும் அப்பாவும் அவன் காரில போகச் சொல்லி ஃபோர்ஸ் பண்ணினாங்க.. நோ அதர் வே.. அவன் காரில் ஏறி வந்திட்டேன்.. மத்தபடி எனக்கு அவன் காரில் வர கொஞ்சம் கூடப் பிடிக்கலை..”

எங்கே ரமணன் காரைக் கொண்டு வந்து வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு அவளைக் கூப்பிட்டு விடுவானோ என்ற பயத்துடன் பேசியவளை கண்களில் மின்னலுடன் பார்த்தான் ரமணன் அவன் முகத்தில் காணாமல் போயிருந்த மென்மை மீண்டிருந்தது..

“உனக்கு அவனைப் பிடிக்காதா..?” ஆழ்ந்த குரலில் அவன் கேட்டபோது.. அவளையுமறியாமல் ‘ஆமாம்..’ என்ற பாவனையில் தலையை அசைத்து விட்டாள் மாளவிகா..

“ஓ…”

அந்த ஒற்றைச் சொல்லில்தான் எத்தனை உற்சாகம்..!

ரமணனின் முகம் பிரகாசித்தது.. அவன் வழக்கமான பரிவுடன் அவளைப் பார்த்தான்..

“நேற்றுத்தான் உன்னைப் பார்த்தேனா.. இன்னைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்.. ஈவினிங் தூரமாய் காரில் உட்கார்ந்துக்கிட்டே பார்த்துட்டுப் போகலாம்ன்னு நினைச்சேன் கண்ணம்மா.. காலையில மும்பை வரை போய் வர வேண்டியிருந்துச்சு..”

என்னவோ.. இதோ இருக்கிற தி.நகர் வரை போய் வர வேண்டி இருந்தது என்று சொல்வதைப் போலச் சொன்னவனை.. ‘ஆ’ வென்று வாய் பிளக்காத குறையாக பார்த்து வைத்தாள் மாளவிகா..

“நான் போயிருக்கக் கூடாதுதான்.. எப்பவும் நம்ம பசங்கதான் போவாங்க.. இந்தத்தடவை ஹாலந்தில இருந்து பிஸினெஸ் பேச ஒருத்தன் நேராவந்து இறங்கியிருந்தான்.. அவனைப் பார்க்க நான் நேரடியா போக வேண்டியதாப் போச்சு..”

அவன் விளக்கம் சொல்லிய விதத்தில் மாளவிகாவிற்கு கலவரம் வந்துவிட்டது.. பஸ் வந்து விடாதா என்ற ஏக்கத்தோடு பஸ் வரும் பாதையை பார்த்துக் கொண்டாள் மாளவிகா..

‘என்னமா கேசுவலா பேசறான்.. நம்ம பசங்கங்கிறான்.. ஹாலந்துங்கிறான்.. பிஸினெஸ்ங்கிறான்.. விட்டா இவனோட அன்டர்கிரௌண்டு பிஸினெஸ்ஸீக்கு என்னையே எம்.டியா ஆக்கிருவான் போல இருக்கே.. கடைசியில்.. ‘என்ஜினியர் மாளவிகா..’ வா நான் ஆகிறதுக்குப் பதிலா ‘லேடி டாண் மாளவிகா..’ வா ஆகப் போறேன்.. ராமா..!’

அவள் ராமனை மனதில் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டிருப்பதை அறியாதவனாய் அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தான் ரமணன்..

“இப்பத்தான் வந்தேன்.. பசங்க விவரத்தைச் சொல்லி.. அவன் ஜாதகத்தையும் சொன்னாங்க.. உன்னைக் கொன்று புதைச்சிரனும்னு கொலை வெறி வந்திருச்சு.. அந்தக் கோபத்தோட வந்து பேசிட்டேன்.. நீ பயந்துராதே..” பிரியத்துடன் அவளைப் பார்த்தான் ரமணன்..

அந்தப் பார்வை மயிலிறகாய் அவள் மனம் வருடிச் சென்றது.. ஏனென்று தெரியாத இனம் விளங்காத உணர்வொன்று அவளுக்குள் புகுந்து ஆட்டுவிப்பதை உணர்ந்த மாளவிகாவின் கலவரம் அதிகரித்தது…

‘இனம் விளங்கவில்லை – எவனோ..

என் அகம் தொட்டு விட்டான்…’

பாரதி பாடி வைத்திருக்கிறானே.. அது உண்மையாகி விட்டதா..? மாளவிகாவின் அகத்தை ரமணன் தொட்டு விட்டானா..?

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link