Chapter 24

0Shares

“உனக்குப் பிடிக்காத கல்யாணம்.. நீ சம்மதிக்காத கல்யாணம்.. நிர்பந்தத்தாலே நடந்த கல்யாணம்.. பஞ்சாயத்தில் நிற்க வைச்சு.. இதுவா.. அதுவான்னு உன் கழுத்தில கத்தியை வைச்சு நான் தாலி கட்டிய கல்யாணம்.. அந்தக் கல்யாணத்தில நீ இசைஞ்சு என் கூட வாழ மாட்டேன்னு நான் நினைச்சேண்டி..”

அவளின் பின்புறமாக நின்று அவள் தோளை அணைத்து அவள் உச்சந்தலையில் முகம் புதைத்தபடி சொன்னான் தனஞ்ஜெயன்.. அத்தனை நாள்களாக ஏங்கிய கணவனின் அருகாமை கிடைத்து விட்ட ஆனந்த அயர்வில் கண்களை மூடினாள் சுமித்ரா.. தனஞ்ஜெயனின் கரங்கள் அவள் இடையில் ஊர்ந்து வயிற்றுப் பகுதியில் அழுந்தி இறுக்கிப் பிடித்தன..

‘ஹ..’ மனதுக்குள் அரற்றினாள் சுமித்ரா..

அவள் மீதிருந்து வந்த பூவாசத்தில் தனஞ்ஜெயனின் அத்தனை கட்டுக்கோப்புகளும் உடைந்து சுக்கு நூறாக ஆகின.. அவனுடன் ஒன்றிக் கண்மூடியிருந்தவளைப் பார்த்தபோது அவளை ஆளும் ஆவேசம் கொண்ட வேட்கை அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது..

“சுமித்ரா..” கரகரத்த குரலில் அழைத்தான்..

“ம்ம்ம்..” அவள் பதிலுக்கு முணுமுணுத்தாள்..

“கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்குள்ளே காலடி வைச்சவுடனே நீ காய்ச்சல் கண்டு மயங்கி விழுந்த.. நான் ராட்சசனோன்னு என்னை நானே நொந்துக்கிட்டேண்டி..”

“நானா காய்ச்சலை வா.. வான்னு வெற்றிலை பாக்கை வைச்சு அழைத்தேன்..? அதுவா வேண்டாத விருந்தாளியாய் வந்து நின்னா நானென்ன பண்ணுகிறதாம்..? திடிர்ன்னு கழுத்தில தாலி விழுந்தா எந்தப் பெண்ணுக்கும் அதிர்ச்சி வரும்.. இது நீங்க 

பிறந்து வளர்ந்த வீடு.. நம்ம கல்யாணத்தில நீங்க எங்கேயும் போக வேண்டியிருக்கலை.. இருக்கிற வீட்டிலே சட்டமாக இருந்தீங்க.. நான்தானே என் பிறந்த வீட்டை விட்டுட்டு.. உங்க பின்னாலே உங்க வீட்டுக்கு வந்தேன்..? அதையும் அப்படி நடக்கப் போகுதுன்னு நினைச்சுப் பார்க்காம நடந்ததிலே அதிர்ச்சி வராதா..? அந்த அதிர்ச்சியிலே மயக்கமும்.. காய்ச்சலும் வராதா..? நீங்க அதுதான் சாக்குன்னு வீட்டுக்குள்ளேயே என்னைத் தள்ளி வைச்சிருவீங்களா..?”

“தள்ளி வைச்சேனா..? நானா..? என்ன கொடுமைடி இது…! முதலிரவுக்கு நம்ம ரூமை அலங்காரம் பண்ணியிருந்தாங்க..”

“நம்ம ரூமா..?”

“பின்னே..? அது என் ஒருத்தனோட ரூம் மட்டும் தானா..? அடிதாண்டிவாங்கப் போற.. அது நம்ம ரூம்தான்..”

“இப்ப வந்து இதைச் சொல்லுங்க.. காய்ச்சல் வந்தவளைத் தன்னத் தனியா சின்ன ரூமில படுக்க வைச்ச ஆளுதானே நீங்க..?”

“சின்ன ரூமில படுக்க வைச்சேன்னு மட்டும் சொல்லு.. தன்னந்தனியான்னு சொல்லாதே.. உன் பக்கத்திலே மணிக்கொருதரம் மாத்திரை மருந்தைக் கொடுத்துக்கிட்டு விடிய.. விடிய.. கண்முழிச்சுப் பார்த்துக் கிட்டது யாராம்..?”

“யாராம்..?”

“உன் புருசன்டி..”

தனஞ்ஜெயனின் கரங்கள் இறுகின.. சுமித்ராவின் தவிப்பு அதிகமானது.. அவனுடன் ஒன்றியிருந்த அந்த அற்புதமான பொழுதில் இடையூறு வந்து விடக்கூடாது என்று அவள் வேண்டிக்கொண்டாள்.. அவன் விரல்களின் அழுத்தமான ஸ்பரிசத்தில் அவளுக்கு அப்போதும் காய்ச்சல் வந்து தொலைத்து விடும் போல இருந்தது..

“என்னக் கிராதகன்னு நானே திட்டிக்கிட்டு இருக்கிறப்ப.. முதலிரவு அலங்காரம் பண்ணியிருக்கிற நம்ம ரூமில உன்னைப் படுக்க வைச்சா என்னைப் பத்தி நீ என்ன நினைப்பேன்னு என் மனச்சாட்சி என்னை சாட்டையாலே அடிச்சுச்சு..”

“உங்க மனச்சாட்சிக்கு வேற வேலையே இல்லையா..?”

“ஹா.. ஹா..”

“அதுதான் போகுதுன்னு பார்த்தா.. காய்ச்சல் குறைஞ்சு ஒரு வாரத்தில ஐயா என்னை அடைச்சு வைச்சிருக்கிற சின்ன ரூமுக்கு வந்து நிற்கிறாரு.. மன்னிச்சுக்க.. உன் மனசில என்ன இருக்குன தெரியாம உன் வாழ்க்கையை கெடுத்திட்டேன்னு வசனம் பேசறாரு.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..?”

“அப்ப என் மனசில குற்ற உணர்வுதான் இருந்துச்சுடி சுமி..”

“சுமியா..? யாரைக் கூப்பிடறிங்க..?”

சுமித்ரா சுற்று முற்றும் தேடுவதைப் போல பாவனை செய்ய தனஞ்ஜெயனுக்கு சிரிப்பு வந்தது.. அது ஆனந்தச் சிரிப்பு..

“ஹா.. ஹா.. ஏண்டி.. என் பெண்டாட்டியோட பேரைச் சுருக்கிக் கூப்பிடறதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா..?”

அவன் அவளை இன்னும் அதிகமாக இறுக்கிக் கொண்டான்.. சுமித்ரா கிறங்கிப் போனாள்.. அவளின் உடலின் ஒவ்வொரு அணுவும் அவனது அருகாமையைத் தேட ஆரம்பித்தன.. அந்தத் தாபத்துடன் அவள் கோபப் பட்டாள்..

“இப்பத்தான் இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருக்கு.. இத்தனை நாளா சுமித்ரான்னு கூடக் கூப்பிடாம மௌனப் பார்வை பார்த்துக்கிட்டு இருந்தாரே.. அப்ப இந்த ஞானோதயம் எங்கே போயிருந்ததாம்..? கடைத் தெருவில பெண்டாட்டிக்குன்னு கால் கிலோ அல்வாவும்.. ஒரு முழ பூவும் வாங்கிட்டு வர முடியலை.. எப்பப்பாரு.. வீசின கை வெறுங்கையா வீடு வந்து சேர்வாரு.. இதிலே சுமியாம்.. சுமி..”

“ஏய்ய்..! நீ அது வேணும்ன்னு நினைச்சியாடி..”

தனஞ்ஜெயனின் பரபரப்பில் அவன் சொன்ன அந்த ‘அது’ எது என்ற கேள்வியுடன் அவள் உதட்டைக் கடித்தாள்..

“பேசாமத்தான் இருக்கீங்களா..?” அவள் வெட்கிப் போனாள்..

“இனிப் பேசாம இருக்கிறதா..? வாய்ப்பே இல்லை..” அவன் கரங்கள் அவள் உடலில் ஊர ஆரம்பித்தன..

“போதும்..” அவன் கரங்களை அவள் லஜ்ஜையுடன் அழுத்திப் பிடித்துக் கொண்டாள்..

“சுமி.. என் சுமி..”

தனஞ்ஜெயன் அவள் பக்கத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து அவளை மடிக்கு இழுத்துக் கொண்டான்.. முதன் முதலாக உணர்ந்த அவனது நெருக்கத்தில் சுமித்ரா அவளாகவே இல்லை.. இறக்கையில்லாமல் வானில் பறப்பதைப் போல அவள் உணர்ந்தாள்..

“இந்த வாய்தான் அன்னைக்கு.. உனக்கு விருப்பமில்லாத வாழ்க்கையை உன்மேல திணிக்க மாட்டேன்னு சொல்லிச்சு..”

அவள் குறைபட்டுக் கொண்டாள்.. அந்த வாய் அவளது வாயை நெருங்கிக் கவ்விக் கொண்டது.. சுமித்ரா தாளமுடியாத நடுக்கத்தோடு.. அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.. அதில் உணர்ந்த நடுக்கத்தில் அவன் மனம் ஆண்மையின் கர்வத்தைக் கொண்டது..

“இப்பவும் அதைத்தான் சொல்றேண்டி.. உனக்குப் பிடிக்காத வாழ்க்கையை உன்மேல திணிக்க மாட்டேன்.. ஆனா.. இப்ப.. இந்த நொடியில நீ வாழற வாழ்க்கையில உனக்குப் பிடித்தமில்லைன்னு சொல்லு.. பார்க்கலாம்..”

சிரிப்புடன் அவன் மீண்டும் ஒரு சவாலை முன் வைத்தான்.. சொல்ல முடியாத அவளின் இதழ்களில் அவன் இதழ்கள் மீண்டும் அழுந்தப் பதிந்தன.. அவனது பின்னந்தலைமுடியை இறுக்கிப் பிடித்திருந்த அவளின் துடிப்பில் அவன் மீதான அவளின் ஆசையின் அளவீட்டை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..

‘இத்தனை நாளாய் இது புரியாம எட்டி நின்னிருக்கேனே..’

கடந்து போன நாள்களை ஈடுகட்ட துடித்தவனாக அவன் அவளுடன் பின்னிப் பிணைந்து விடத் துடித்தான்..

“நீங்க அதை மட்டுமா சொன்னீங்க..? மேற்கொண்டு படிக்க விரும்பினாப் படி.. உன் மனசில வேற எதுவும் எண்ணமிருந்தாலும் சொல்லு.. நீ விரும்பற வாழ்க்கையை நான் உனக்கு அமைச்சுத்தரேன்.. அப்படி.. இப்படின்னு வாயில வந்ததை வைத்துத் தள்ளினீங்க..” அவள் மனத்தாங்கலுடன் சொன்னாள்..

“உன் மனசில எதுவும் இல்லைன்னு எனக்கு எப்படிடீ தெரியும்.. நீ நான் சொன்னதுக்கு பதிலே சொல்லலை.. அந்த ரூமை விட்டுட்டு.. நம்ம ரூமுக்கும் வரலை..”

“எப்படி வருகிறதாம்..? இப்படிப் பேசற மனுசன்கிட்ட என் மனசில எந்த எண்ணமும் இல்லைடா.. உன்மேலதான்.. இவன் தான் என் புருசன்கிற எண்ணம் உண்டாகியிருக்குன்னு எப்படிச் சொல்கிறதாம்..?”

“வாடா.. போடங்கிற.. நான் ஜமீன்தாருடி..”

“அது ஊருக்கு.. எனக்கு என் புருசன் மட்டும்தான்.. ஆசைவந்தா நான் அப்படித்தான் கூப்பிடுவேன்..”

அவள் சொன்ன ஆசையில் அவன் அனைத்தையும் மறந்தான்.. அவள் மேல் ஆசையாகி பின்னிப் பிணைந்தான்.. “சுமி” என்று அவள் காதோரமாக ரகசியம் பேசினான்..

“அதுக்கப்புறமும் வரலாமுன்னா… அன்னவாசல் ஜமீன்தாருக்கு பெண்டாட்டியை வாடின்னு கூப்பிடற நினைவு வராமல் போயிருச்சே.. அப்புறமா எப்படி இவரைத் தேடி இவரோட ரூமுக்குப் போகிறதாம்..?”

“அது நம்ம ரூம்டி..”

தனஞ்ஜெயன் வேட்கையுடன் அவள் கழுத்தில் உதட்டைப் பதித்தான் கண்மூடி அவன் தலையில் முகம் புதைத்த சுமித்ரா.. காலடியோசையைக் கேட்டதும் பதறி விலகினாள்.. அவளின் முந்தானைச் சேலையைப் பிடித்து இழுத்து தடுத்தான் தனஞ்ஜெயன்.. அதைப் பார்த்தபடி அங்கே வந்து நின்ற இந்திராதேவிக்கு அவள் கண்களையே நம்ப முடியவில்லை.. அவளைக் கண்டதும் அவசரமாக தனஞ்ஜெயன் சுமித்ராவின் சேலை முந்தானையை விட்டுவிட.. வெட்கத்துடன் சேலையை சரிசெய்து கொண்ட சுமித்ராவுக்கு சிரிப்பு வந்தது..

“அம்மா..” தனஞ்ஜெயன் எழுந்து கொள்ள முயன்றான்..

“ஒன்னுமில்லை தனா.. நீ உட்காரு.. உன்னைத் தேடி ஊருப் பெரியவங்க வந்திருக்காங்க.. ஸ்கூல் கட்ட டொனேசன் வேணுமாம்.. அதை நானே கவனிச்சு அவங்களை அனுப்பி வைச்சிடறேன்..” இந்திராதேவி அவனை உட்காரவைத்தாள்..

“நான் வருகிறேனேம்மா..”

அரை மனதுடன் சொன்ன தனஞ்ஜெயனை வெட்டும் விழிப் பார்வையிலே முறைத்தாள் சுமித்ரா.. அவன் பேசாமல் உட்கார்ந்து விட்டான்.. அதை ஜாடையாக கவனித்த இந்திராதேவிக்கு மகன் மீதான மருமகளின் ஆளுமையில் சந்தோசம் வந்தது.. மருமகளின் ஒர பார்வையில் அடங்கி உட்கார்ந்தவனைக் கண்டதும்..

‘என் மகன் வாழ்ந்திருவான் போல இருக்கே..’ என்று அவள் மகிழ்ந்து போனாள்..

அவளுக்கு தரையில் கால்கள் பாவவில்லை.. அப்போதிருந்த மனநிலையில் மொத்தப் பள்ளியையும் கட்டிக் கொடுத்து விடுகின்ற முடிவுக்கு அவள் வந்திருந்தாள்..

“நீ ஏன் தனா வரனும்..? பாவம்.. உனக்கே தலைவலி.. இதில உடம்பு வேற கொதிக்கிறதைப் போல இருக்கு..”

இந்திராதேவி அள்ளிவிட.. அப்படியா என்பதைப் போல சுமித்ரா கள்ளச்சிரிப்புடன் கணவனை பார்த்து வைத்தாள்..

“அதனாலே.. நீ ரூமில ரெஸ்ட் எடு.. சுமித்ரா உன்னைக் கவனிச்சுக்கட்டும்.. நான் மதியச் சாப்பாட்டை ரூமுக்கே அனுப்பி வைக்கிறேன்.. மத்த வேலைகளை நான் பார்த்துக்க மாட்டேனா..? நீ இருப்பா..”

இந்திராதேவி போய் விட்டாள்.. சுமித்ராவுக்கு அவள் காதுகளையே நம்பமுடியவில்லை.. அவளுடைய மாமியார் சொன்னதன் பொருள் என்ன..? தனஞ்ஜெயன் அவளுடன் அந்த நாளைக் கழிக்கப் போகிறானா..?

அவளைத் துகிலுரித்த தனஞ்ஜெயனின் பார்வை ஆம் என்றது.. அவன் அவளை நெருங்கி இடுப்பில் கை கொடுத்துத் தூக்கினான்.. சுமித்ராவின் கைகள் அவன் கழுத்தில் மாலையாகின.. அந்தக் கைகளுக்கு முத்தம் கொடுத்தவன்.. அவனுடைய பிரம்மாண்டமான.. பெரிய படுக்கையறையை நோக்கி நடந்தான்.. அதுவரை அவள் பிரவேசித்தறியாத அவனது அறைக் கதவை அவன் காலால் தள்ளித் திறந்த போது.. அவளது வாழ்வின் கதவுகள் அவளுக்காக திறந்து வழி விட்டதைப் போல அவளுக்கு இருந்தது..

முன்புறமிருந்த ஹாலைப் போன்ற வரவேற் பறையைக் கடந்து அடுத்ததாக இருந்த படிக்கும் அறையையும் கடந்து.. அதற்கும் அடுத்ததாக இருந்த படுக்கையறைக்குள் போனான்.. ஆறு நபர்கள் தாராளமாக படுத்து உறங்கலாம் என்பதைப் போல இருந்த பெரிய கட்டிலின் நுரை போன்ற மெத்தையில் அவளைக் கிடத்தி விட்டு அவள்மீது சரிந்தான்.. அவள் வெட்கத்துடன் விலகினாள்..

“ஏண்டி..?” சீறினான்..

“கதவு..” அவள் கைவிரல்களால் முகத்தை மூடிக் கொண்டாள்..

விரலிடுக்கில் தெரிந்த அவள் பார்வையின் அழைப்பில் அவளை விட்டு விலக முடியாதவனாய் அவள் கை விலக்கி முகம் பார்த்தவன் கெஞ்சினான்..

“ஒரேயொரு முத்தம்டி.. அதுக்கப்புறமா கதவைச் சாத்தறேன்..”

அவள் முகம் சிவந்தாள்.. மௌனத்தையே சம்மதமாகக் கொண்டு.. அவள் முகத்தருகே இவன் முகம் நெருங்கிய போது செல்போன் ஒலித்தது..

“இது ஒரு தொல்லை..” ஆத்திரத்துடன் விலகி எழுந்தான்.. போனை காதுக்கு கொடுத்து.. பேக்ட்ரிக்கு அன்று வரமுடியாது என்று சொன்னான்.. மற்ற இடங்களுக்கும் அதையே சொல்லிவிட்டு செல்போனை அணைத்து தூர எறிந்தான்.. கதவை தாழிட்டு விட்டு.. அவளை வேட்டையாடும் வேட்கையோடு கிட்ட நெருங்கினான்.. சுமித்ராவின் ரத்த நாளங்கள் சூடறின..

“இப்பக் கதவும்.. செல்போனும் ஊடே வராதுடி..”

அவளை இழுத்து மூர்க்கத்தனமாக அணைத்து அவள் முகமெங்கும் முத்தமழையைப் பொழிந்தான்.. முகம் நனைத்த அவனது எச்சிலின் ஈரத்தில் சுமித்ராவின் ஆசைகள் அரங்கேற ஆரம்பித்தன.. அவள் தேடிய அவளுடைய கணவன் அவளுக்கு கிடைத்து விட்டதில் அவள் அவனுடன் இறுக்கிப் பிணைந்தாள்..

அவள்மீது பரவிப் படர்ந்த அவனது கைகளின் அத்து மீறலில் புரியாத பல புரிதல்களை அவள் கண்டாள்.. அவள்மீது சரிந்து ஆக்ரமித்தவனின் உடல் பாரத்தில் அவளது மனபாரம் விலகியோடுவதை வியப்புடன் அவள் உணர்ந்தாள்..

விட்டு விடுதலையான அவர்களின் உடைகள் தரைமீது ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன.. அதற்கு மேல் தனஞ்ஜெயன் அவள் காதோரமாக பேசிய பேச்செல்லாம் வேறு விதமாகவே இருந்தன.. வெறி கொண்ட சிங்கமாக அவன் வேட்டையை ஆரம்பித்தான்.. இரையாக விரும்பிய புள்ளிமானாக அவள் விருப்பத்துடன் அவன் வேட்கைக்கு இரையானாள்.. உண்ண.. உண்ண அடங்காத பசி அவனின் பசியாக இருந்தது.. பரிமாற அவள் சளைத்த போதெல்லாம் அவன் கோபம் கொண்டதில்.. அவள் தடுமாறி.. தயக்கங்களை விட்டு அவனுக்கு உணவானாள்..

திருமணமே வேண்டாம் என்று இருந்த தனஞ்ஜெயனா இவன் என்று அவனை அறிந்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போகும் விதத்தில் அவன் அணுஅணுவாக அவளுடன் இன்பம் துய்த்துக் கொண்டிருந்தான்..

“சுமி…”

“ம்ம்ம்..”

“சுமி…”

“ம்ம்ம்..”

இதுதான் அவர்களின் பேச்சாக இருந்தன.. மூடப்பட்ட அவனது அறைக்கதவு பகலுணவை வாங்கிக் கொள்வதற்காக மட்டுமே திறந்தது.. மறுபடியும் அடைக்கப்பட்ட அறைக்கதவு.. அவன்விட்ட கதையைத் தொடரப் போவதை சொல்லாமல் சொல்லியது..

அலை மோதும் ஜனத்திரளுக்குள் தனஞ்ஜெயனின் கையைப் பிடித்தபடி நடப்பதில் உள்ள பரமசுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.. இந்திரா தேவியின் பிறந்த வீட்டில் விருந்து முடிந்து அன்னவாசலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.. ரயில் பயணத்திற்கு ஆசைப்பட்ட சுமித்ராவுக்காக காரை அன்ன வாசலிலேயே விட்டுவிட்டு ரயிலில் பயணித்திருந்தான் தனஞ்ஜெயன்..

திருநெல்வேலிக்கே உரிய ‘லே’ ஆங்காங்கே காதினில் விழுந்தன..

“என்னலே.. என்ன சொல்லுத..?”

“ம்ம்.. சொரக்காய்க்கு உப்பில்லேன்னு சொல்லுதேன்.. அதுக்கு இப்ப என்னங்கிறலே..?”

இது போன்ற பேச்சுக்களை ரசித்தபடி சுமித்ராவுடன் உராய்ந்து கொண்டிருந்த தனஞ்ஜெயன்.. தூரத்தில் யாரையோ கண்டதும் கை தட்டி அழைத்தான்..

“யாருங்க அது..?” சுமித்ரா விசாரித்தாள்..

“என் கூடப் படிச்சவன்..” தனஞ்ஜெயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. கை தட்டலுக்குத் திரும்பிப் பார்க்காத நண்பன்.. அவனருகே வந்து விட்டான்..

“அன்பு..”

அருகாமையில் அவன் வந்தவுடன் தனஞ்ஜெயன் அன்பைப் பிழிய அந்த நண்பன் பேயைக் கண்டவனைப் போல அரண்டு போய் அப்படியே நின்று விட்டான்..

“என்னடா.. பேக்கு மாதிரி முழிக்கற..? தனஞ்ஜெயன்டா.. காலேஜில உன் கிளாஸ்மேட்.. ஹாஸ்டலிலே உன் ரூம் மேட்..”

இந்தக் கதையையெல்லாம் நான் கேட்டேனா என்ற ரீதியில் அவன் முறைத்துக் கொண்டே நின்றான்.. அவனருகில் நின்றிருந்த பெண் சிநேகிதமாக சுமித்ராவைப் பார்த்து சிரித்து வைத்தாள்..

“ஹலோ…”

“ஹலோ..”

“என் பெயர் ஆர்த்தி.. இவரோட வொய்ப்..”

“என் பெயர் சுமித்ரா.. இவரோட வொய்ப்..”

“இதுக ரெண்டும் எங்க குழந்தைகள்..”

மிஸஸ் ஆர்த்தி அன்பழகன் சுட்டிக் காட்டிய திசையில் அன்பழகனின் இரண்டு கைகளையும் ஆளுக் கொன்றாகப் பிடித்தபடி இரண்டு பெண் குழந்தைகள் நின்றிருந்தார்கள்..

“கியூட்டா இருக்காங்க..” சுமித்ரா சொன்னாள்..

“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்..?” ஆர்த்தி கேட்டதும் முகம் சிவந்தாள்..

“இப்பத்தான் எங்களுக்கு மேரேஜ் ஆச்சு..?”

“ஓ.. இவரோட பிரண்டுன்னதும் நான் எங்களைப் போலன்னு நினைத்துக் கேட்டுட்டேன்..”

என்னவோ அந்தப் பெண்ணும் சுமித்ராவும்தான் கல்லூரியில் ஒன்றாகப் படித்த தோழிகளைப் போலப் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அன்பழகன் யாருக்கு வந்த விருந்தோ என்று நின்றிருந்தான்.. தனஞ்ஜெயன் அவனை ஜென்ம விரோதியைப் போல முறைத்துக் கொண்டிருந்தான்..

“டிரெயின் வந்திருச்சு..”

சுமித்ராதான் தனஞ்ஜெயனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ரயிலில் ஏற வேண்டியிருந்தது.. அவன் அப்போதும் பிளாட்பாரத்தில் நின்றிருந்த அன்பழகனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தான்..

ரயில் வேகமெடுத்ததும் சுமித்ரா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்..

“இப்ப எதுக்குடி இந்தச் சிரிப்பு சிரிக்கிற..?” தனஞ்ஜெயன் எரிந்து விழுந்தான்..

“இவர்தான் உங்களால் காதலில் தோற்றுப்போன அன்பழகனா..?”

“உனக்கெப்படிடீ தெரியும்..?”

“மைனா வந்து சொல்லுச்சு.. போவிங்களா.. என்னவோ காலம் பூராவும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு சபதம் போட்டவர்.. காலேஜ் படிப்பு முடிஞ்சதும் முதல் வேலையா அதைத்தான் செய்திருக்காரு போல.. கைக்கொன்னா ரெண்டு பிள்ளைகள் வேற.. ஹா.. ஹா..”

சுமித்ராவின் சிரிப்பை முறைத்தபடி இருந்த தனஞ்ஜெயனின் முகம் மெல்ல.. மெல்ல மாறியது.. அவனும் சுமித்ராவுடன் கூடச் சேர்ந்து சிரித்தபடி அவளைப் பக்கத்தில் இழுத்துக் கொண்டான்.. தனிமை நிறைந்த அந்த முதல் வகுப்பு கூபேயில் அவன் இதழ்கள் அவள் இதழ்களைத் தேடிப் பதிந்தன.. அவள் காதோரமாக சொன்னான்..

“அப்பவே நானும் கல்யாணத்துக்கு ரெடியாகிருந் தேன்னா.. நீ எனக்குக் கிடைச்சிருப்பியாடி.. இப்பவே பப்பா போலதான் இருக்க.. அப்ப நிஜமாவே பப்பாவாய் ஸ்கூல் போய்கிட்டு இருந்திருப்ப.. உனக்கும், எனக்கும் முடிச்சுப் போட்ட அந்த கடவுள்தான் என்னைக் கல்யாணத்தை தள்ளிப் போட வைச்சிருக்காருடி..”

அவன் சொன்னதற்கு இசைவாக அவள் தலையசைத்து கண்களை மூடிக் கொண்டாள்..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link