Chapter 04

0Shares

“இப்ப உனக்கு என்னதாண்டா வேணும்…?”

ரமீலா அந்தோணியிடம் சிலிர்த்துக் கொண்டபோது…

‘நீதான் வேண்டும்…’ என்று சொல்ல முடியாமல் அவன் ஊமையாகிப் போனான்…

“உனக்குத் திமிரிருந்தா.. அதை மத்த திமிர்பிடிச்ச பசங்ககிட்டக் காட்டு… அதை விட்டுட்டு… பாவம் (?) போல இருக்கிற இவன் கிட்ட ஏண்டா உன் திமிரக் காட்டற…?”

இப்படித்தான் அரவிந்தன் – வாய் பேசாமல் – பெண்கள் மத்தியில் சிக்ஸர் அடித்து வைத்தான்.

மாதேஷைப் போல… இங்கேயும் அந்தோணி கிளீன் போல்டாகி… முதல் நாளிலேயே… களம் விட்டு அகல… அரவிந்தன் பெண்களின் மத்தியில் ஆட்ட நாயகனாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.

அவன் வாயைத் திறந்தாலே அவனது வகுப்பு மாணவிகள் மட்டுமின்றி… மற்ற வகுப்பு மாணவிகளும் ரசித்துச் சிரிக்க ஆரம்பிக்க… அந்தப் பள்ளிக் கூடத்தின் ஒட்டு மொத்தமான மாணவர் குலமும் வெறுக்கும் ஒரே வில்லனாக அரவிந்தன் ஆகிப் போனான்.

மொத்த மாணவர்களின் வயிறும் எரிய… அந்த வயிற்றெரிச்சலின் சக்தியினால்.. அரவிந்தனின் அப்பாவுக்கு மீண்டும் மாறுதல் கிடைத்தது…

இந்த முறை அரவிந்தன் கால் வைத்தது… கல்லூரியில்…

எல்.கே.ஜி. படிக்கும் போதே… பக்கத்து பெஞ்சில் அமர்ந்திருக்கும் பாப்பாவின் கருணைப் பார்வைக்கு ஆளாகி விடும் அதிர்ஷ்ட மச்சம் வாய்த்த அரவிந்தனைக் கொண்டு போய் கல்லூரிக்குள் விட்டால் என்ன ஆகும்?

அவனது ‘கன்னிராசி’ பயங்கரமாக வொர்க் அவுட் ஆக.. மொத்த கல்லூரிப் பெண்களுக்கும் அவன் கதாநாயகன் ஆகிப் போனான்.

வருடத்திற்கு இருபது பெண்களைக் காதலித்து டாட்டா சொல்லி விட்டு… ஒருவழியாக கல்லூரிப்படிப்பை முடித்து வெளியுலகில் கால் வைத்தான் அரவிந்தன்.

தோராயமாக… அந்தக் கல்லூரியில் படித்த அனைத்துப் பெண்களும் அவனிடம் காதல் கடிதம் நீட்ட… அவனும் பதிலுக்கு வரைந்து தீட்டினான்…

ஆனால் படிப்பை முடித்து வெளியேறியபோது… ஒருத்தியிடம் கூட திருமணத்தைப் பற்றி அவன் பேசவில்லை…

“கெட்டிக்காரன்டா நீ..” அவனது நெருங்கிய நண்பனான கார்த்திக் பாராட்டினான்…

“என்னை என்னடா செய்யச் சொல்கிற… காதலிக்கிறதில எந்த கமிட்மென்டும் இல்லை… கல்யாணமுன்னா யோசிக்கணுமே..”

“அதை உன்னைக் கட்டிக்கப் போகிறவ சொல்லணும்… நீ சொல்லக்கூடாது..”

“அப்படிங்கிற..?”

“ஆமாம்.. அவ மட்டும் அப்படி யோசிச்சான்னு வெய்யி… காலம் பூராவும் நீ பிரம்மசாரியாய்தான் வாழணும்…”

“கல்யாணம் பண்ணிக்காம வாழ்வேன்னு சொல்லு.. பிரம்மச்சாரியாய் வாழ்வேன்னு சொல்லாதே.. கல்யாணம் பண்ணிக்காதவன் எல்லாம் பிரம்மச்சாரியா..?”

“அதானே.. இதை மறந்துட்டேன் பார்த்தியா…”

“விடுடா… எனக்குன்னு ஒருத்தி எங்கேயாவது பிறந்திருப்பா…”

அவள்… அதே தெருவில் குடியிருந்த ஷாலினியாக இருப்பாள் என்று கனவிலும் அரவிந்தன் நினைத்துப் பார்க்கவில்லை…

“படிச்ச படிப்புக்கு வேலையைத் தேடுடான்னு சொன்னா… எங்கேயோ… அட்வர்டைசிங் கம்பெனியில் வேலையைப் பிடிச்சுக்கிட்டு வந்து நிற்கிறான்… எப்படியோ உருப்பட்டாச் சரி…”

ஆசிர்வதித்த அரவிந்தனின் அப்பாவுக்கு.. வழக்கம் போல மாறுதல் வந்து சேர… அவரும் வேறு ஊரைத் தேடிப் போனார்…

கூடப் படித்த கார்த்திக்கே… கூடவும் வேலை பார்க்க.. அவனுடன் அரவிந்தன் தனிக்குடித்தனம் போட்டான். 

அந்தத் தெருவிலிருந்த அனைத்துப் பெண்களும் அவனிடம் நின்று பேச… அவனும் மறுக்காமல் கடலை போட்டான்…

ஆனால் ஒரு முறை கூட ஷாலினி அவனை நிமிர்ந்து பார்த்ததில்லை… அவனும் அவளுடன் பேச முயன்றதில்லை…

“அவளைப் பார்த்தா குடும்பக் குத்துவிளக்கு போல இருக்குடா..”

கார்த்திக்கிடம் அபிப்ராயம் சொன்னான்…

“இதப்பாருடா… உனக்கு இப்படியெல்லாம் கூடத் தோணுமா…?”

“சில சமயம் தோணும்..!”

அந்த ஷாலினி ஒருநாள் அவனைப் பார்த்து முறைத்த போது அரவிந்தன் புருவம் உயர்த்தினான்…

“என்னடா கார்த்தி… பட்சி என்னை முறைக்குது…”

“அதுதானே… இதுகிட்ட நீ விளையாட்டு காட்டினதில்லயே..”

அவர்கள் சன்னக் குரலில் பேசிக் கொண்டிருக்க.. அதே முறைப்போடு ஷாலினி அவர்களின் அருகே வந்தாள்… அரவிந்தனை நேருக்கு நேராகப் பார்த்தாள்..

“ஹலோ… உங்க மனசில என்ன பெரிய ரோமியோன்னு நினைப்பா…?”

எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேட்டு வைத்தால்.. அரவிந்தனைப் போன்ற குணசாலியால் அமைதியாகப் போக முடியுமா..?

“ஏங்க… நீங்கதான் ஜூலியட்டா…?”

“அப்படி ஒரு நினைப்புக்கூட உங்க மனசில் இருக்கா…?”

“இருக்கதுன்னா என்ன செய்வதாய் உத்தேசம்..?”

“அவ்வளவு தைரியசாலியா நீங்க…? ஹ…”

அரவிந்தன் சிலிர்த்துப் போனான்… இதுவரை எந்தப் பொண்ணும் இப்படியொரு சவாலுடன் அவனிடம் அறை கூவியதில்லை…

“என் தைரியத்தை நீங்க பார்த்தில்லை…”

“உங்க தைரியத்தைப் பத்தி எனக்குத் தெரியாதா..? நானும் இந்தத் தெருவில் குடியிருக்கிறவதானே…”

“என் தைரியத்தைப் பத்தி.. என்னை விட உங்களுக்கு அதிகமா தெரிஞ்சிருக்கும் போல இருக்கே..”

“நீங்க பயந்தாங்குளின்னு தெரியும் சார்…”

அரவிந்தனின் கண்கள் இடுங்கின… அதுநாள் வரை மரியாதை கொடுத்து விலகி நின்றவன்… முதல் முதலாக அவளை உச்சி முதல்.. உள்ளங்கால் வரை ஆராய்ச்சியுடன் பார்த்தான்…

“பார்வையெல்லாம் பலமாய் இருக்கு… இப்படித் தானே தினமும் நான் இந்தவழியாய் போய் வரும் போது பார்த்து வைக்கறீங்க…?”

“இதுவரை அப்படிச் செய்ததில்லைங்க…”

“நீங்க சொன்னா… நான் நம்பிடணுமா..?”

“நம்பவேணாம்.. இனிமேல் அப்படித்தான் பார்க்கப் போகிறேன்… இப்ப அதுக்கு என்னாங்கறீங்க…”

அதற்குப் பின் ஷாலினியின் மெய்காப்பாளராகவே மாறிப் போனான் அரவிந்தன்…

காலையில் ஷாலினி வரும் வரை வீட்டு வாசலில் காத்திருப்பவன்… அவள் அவனது வீட்டைக் கடக்கும் போது பின் தொடர ஆரம்பிப்பான்…

அவளுக்காகவே டூவீலரை புறக்கணித்து பஸ்ஸில் பயணம் செய்து.. அவளது அலுவலக வாசலில் பத்திரமாக சேர்ப்பித்து விட்டு… அதற்குப் பின் அவளது வேலையைப் பாக்கப் போவான்..

“உன் கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குடா” கார்த்திக்கிண்டலடித்தான்…

“சும்மா இருக்கிறவனை உசுப்பி விடறா… அவளை விட்டுவைக்கச் சொல்றியா…?”

“எனக்கென்னவோ… அவ.. உன்னை உசுப்பேத்தி விடணும்னே வம்புக்கு வந்தாள்ன்னு தோணுது…”

‘அப்படியும் இருக்குமோ..’

அரவிந்தனின் மனதில் மத்தாப்பூ மலர… ஷாலினியை விடாமல் பின்தொடர்ந்தான்..

அந்த மாத இறுதியில் ஒருநாள்… ஷாலினி, கார்த்திக்கின் சந்தேகத்தை உறுதிப் படுத்தினாள்.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link