Chapter 26

0Shares

பெண் வீட்டாரில் ஊர்மிளாவை அறிந்த அபிராமியின் உறவுக்கார பெண்மணி ஒருத்தி இருந்தாள்.. ஊர்மிளாவின் அழகையும், வடிவையும் கண்டவர்கள் கல்யாணப் பெண்ணை விட்டு விட்டு ஊர்மிளாவை வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்க அவளுக்கு அது பொறுக்கவில்லை.. செவ்வந்தி அவளைக் கவனிக்காமல் விட்டு விட்டாள்.. தாய் மாமன் மனைவி என்று தான் இருக்கும்போது தன் வரவிற்குக் காத்திராமல் நலங்கை ஆரம்பித்து விட்ட கோபத்தில் அவள் இருந்தாள்..

அபிராமி ஏதோ கூற ஊர்மிளா பல் வரிசை தெரிய அழகாய் சிரித்தாள்.. வீடியோவின் கேமிரா கூட்டத்தை விட்டு அவளிருக்கும் திசைப் பக்கம் திரும்பி விட்டது..

நலங்கு ஆரம்பிக்க எல்லோரும் நலங்கு வைக்க ஆரம்பித்தனர்.. அபிராமியை விட்டு அப்போதும் விலகாமல் ஊர்மிளா நிற்க அந்தப் பெண்மணிக்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது..

ஊர்மிளா மேல் தவறு இல்லை.. அவளை நகர விடாமல் அபிராமி ஊர்மிளாவின் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. எனவே நகராமல் தோழியின் அருகில் அவள் நிற்க அந்த உறவுக்காரப் பெண்மணி படக்கென்று இடத்தை விட்டு எழுந்த ஊர்மிளாவின் அருகே வந்தாள்..

“ஏம்மா.. ஒன்னு தானாத் தெரியனும்.. இல்லை யாரா வது சொல்லியாவது கொடுக்கனும்.. இங்கே உனக்கும் தெரியலை.. யாருக்கும் சொல்லனும்கிற எண்ணம் வர்ற மாதிரியும் எனக்குத் தெரியலை..”

“ஏங்க என்னாச்சு..?”

“இன்னும் என்ன ஆகனும்..? கல்யாணப் பெண்ணுக்கு நலங்கு வைக்கிற இடத்தில் உனக்கு என்ன வேலை..? வந்தோமா, பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டோமா, ஓரமாய் ஒதுங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்த்தோமான்னு இல்லாமல் இங்க வந்து போஸ் கொடுக்கிற..?”

அதுவரையில் அவள் எதையோ பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டு அசட்டையாய் பார்வை பார்த்தபடி அருகில் வந்த செவ்வந்தி அவள் பேசியதன் பொருள் புரியவும் பொங்கி எழுந்து விட்டாள்..

“ஏய்ய்.. எங்கே வந்து யாருகிட்ட என்ன பேசுற..? தானாத் தெரியனும் இல்லை சொல்லித் தெரியனுமா..? யாருக்கு எது தெரியனும்..? இங்கே எல்லோருக்கும் எல்லாமும் தெரிஞ்சுதான் இருக்கு.. உனக்குத் தான் வளமை தெரியலை.. கழுத்தில் தாலியைக் கட்டிக் கிட்டால் நீ சுமங்கலியா..? உன் கதை எனக்குத் தெரியாதா..? கட்டிக் கிட்டவன் ஓடிப்போய் இருபது வருஷமாச்சு.. அவன் எங்கே போய் எவகூட குப்பை கொட்டறான்னு தெரியலை.. நீ யெல்லாம் நியாயம் பேசிக்கிட்டு நலங்கு வைக்க வந்துட்ட.. பந்தியிலே உட்கார்ந்து சாப்பிட நீதான் முந்தனும்.. இது எங்க வீடு.. நாங்க நடத்தற கல்யாணம் எங்கே வேணும்னாலும் நிற்போம்.. எப்போ வேணும்னாலும் சாப்பிடுவோம்.. ஓரமாய் ஒதுங்கிப் போக வேண்டியவ நீதான்.. எங்க வந்து நாட்டாண்மை பண்ற..? காலக் கொடுமை..”

“என்னது நான் ஒதுங்கிப் போகனுமா..? தணிகை நாதா, தெய்வ நாயகி இதைக் கேட்டிங்களா..?”

“உனக்கு மட்டும்தான் வாய் இருக்கிறதா..? நீ மட்டும் தான் கூப்பிடுவாயா..? நானும் கூப்பிடறேன்.. டேய் நடேசா இங்கே வாடா…”

தணிகைநாதன் பதறிக் கொண்டு வந்தார்.. நடேசன் கேள்வியாய் நோக்கியபடி வந்தான்..

“என்னக்கா என்ன பிரச்னை.. தெய்வ நாயகி இங்கே என்ன நடந்தது..? ஏன் அக்கா கோபமா இருக்கு..?”

“என்னத்தை சொல்ல.. இங்கே வந்ததில் இருந்தே நமக்கு மதிப்புக் கொடுக்காமல் இவங்க இருக்கிறதை கவனித்துக் கிட்டுத்தான் இருந்தேன்.. இப்ப ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடித்த கதையாய் உங்க அக்காவை அவமானப் படுத்தறாங்க..”

“இந்தம்மாவை நாங்க அவமானப் படுத்தினோமா..? காலக் கொடுமை.. நடேசா.. இந்தம்மா நம்ம ஊர்மிளாவை என்ன சொல்லுச்சு தெரியுமா..?”

“சித்தி வேண்டாம் சித்தி..” ஊர்மிளா தடுத்தாள்.. அவமானத்தில் அவள் முகம் ஜிவுஜிவுவெனச் சிவந்திருந்தது. நடேசன் அவள் முகத்தைப் பார்த்தான்..

“அத்தை நீங்க ஒன்றும் சொல்ல வேண்டாம்.. அபிராமி! இங்கே ஊர்மிளாவை யார் பேசியிருந்தாலும் அவங்க இந்த இடத்தை விட்டு உடனே போகணும்..”

தணிகை நாதன் கொதித்து விட்டார்..

“மாப்பிள்ளை…” என்று அவர் சத்தம் போட,

“இன்னும் நான் உங்கள் மாப்பிள்ளை ஆகவில்லை..” என்றான் அவன்..

“அப்போ நீங்கள் செய்வதுதான் நியாயம்.. அதை நாங்க ஏன்னு கேட்டால் மிரட்டுவீங்க.. அப்படித்தானே..”

“அப்படித்தான்…”

“ஒரே பொண்ணு.. ஊர்பட்ட சொத்து.. வரிசையில் நின்னு பொண்ணு கேட்டாங்க.. எல்லோரையும் விட்டு விட்டு அவ காதலிக்கிறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக உங்களுக்கு பொண்ணு கொடுக்க சம்மதிச்சேன் பாருங்க.. எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..”

“இதுவே போதும்ன்னு தான் நான் நினைக்கிறேன்…”

“நடேசன்..” என்று பதற்றத்துடன் ஊர்மிளா குறுக்கிட்டாள்..

“லட்சுமணனின் மேல் ஆணை.. நீ வாயைத் திறக்கக் கூடாது.. இந்த இடத்தை விட்டு நகரவும் கூடாது..” அவன் ஆணையிட்டான்..

தயாநிதி, கலைமதி, சுந்தரம், ராமையா எல்லோரும் உள்ளே வந்து விட்டனர்.. ஈஸ்வரி மருமகளின் அருகே வந்து நின்று கொண்டாள்.. சாந்தா செவ்வந்தியின் அருகே வந்து நின்று கொண்டாள்..

“தணிகை நாதா.. நான் நாட்டு வழக்கத்தைத்தான் சொன்னேன்..” என்றாள் அவரின் அக்கா..

“எங்க நாட்டில் இதுதான் பழக்கம்..” என்றாள் செவ்வந்தி சட்டமாக..

“இங்கே பாருங்க.. பெண்ணைப் பெற்றால் முது கெலும்பு இல்லாமல் இருக்கணுமா..?” தெய்வ நாயகி கொதிப்பாய் கூறினாள்..

“மாப்பிள்ளை வீடுன்னா வளைஞ்சு கொடுக்கனுமா..?” சாந்தா பதிலடி கொடுத்தாள்…

“இங்கே பாருங்க நீங்க எல்லாம் இந்தக் குடும்பத்துப் பெரியவங்க.. எங்க அக்காவை வெளியேறச் சொல்வது நல்லாவா இருக்கு..? நீங்களே ஒரு நியாயத்தைச் சொல்லுங்க..”

தணிகைநாதன் தயாநிதியிடம் கூற அவர் கலைமதியின் முகம் பார்த்தார்.. கலைமதி சுந்தரத்தைப் பார்க்க சுந்தரம் ராமையாவைப் பார்த்தார்.. ராமையா முன்னே வந்தார்..

“உங்க அக்கா இங்கே இருக்கணுமின்னு என் மகனே சொன்னாலும் நாங்க ஒத்துக்கிற மாட்டோம்ங்க.. எங்க வீட்டுப் பெண்ணை எங்க கண் முன்னாடியே மனசு புண்பட பேசினவங்க ஒரு நல்ல காரியம் நடக்கிறப்போ இங்கே நிற்கக் கூடாது.. அவங்க நின்னா எங்க வீடு தாங்காது.. அதனால் அவங்களை அனுப்பிட்டு கல்யாணத்தை நடத்துங்க.. இல் லைன்னா உங்க பெண்ணைக் கட்டிக்க வரிசையில் நிற்கிறவன் எவனுக்காவது ஒருவனுக்கு உங்க பெண்ணைக் கட்டிக் கொடுங்க..”

தணிகை நாதன் திகைத்து விட்டார்.. ஊரே ஒன்று கூடி இந்தப் பெண்ணைக் காவல் காக்கிறதே..

ஊர்மிளாவை இது வரையில் மகளின் தோழி, மாப்பிள் ளையின் உறவுக்காரப் பெண் என்ற முறையில் பார்த்தவர் முதல் முறையாய் மிக மரியாதையுடன் பார்த்தார்…

“அக்கா..” என்று அந்தப் பெண்மணியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு வந்தார்..

“நீ நலங்கு வைம்மா..” என்று ஊர்மிளாவைப் பார்த்துக் கூறினார்.. நடுங்கும் கரங்களால் ஊர்மிளா அபிராமியின் கையை இறுகப் பிடிக்க அபிராமி தோழியின் கரங்களை ஆதரவாய் தட்டிக் கொடுத்தாள்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link