Chapter 33

0Shares

கொடைக்கானலின் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.. பாலமுரளி ஆனந்தமாய் துள்ளிக்குதித்து அந்த படகுச் சவாரியை அனுபவித்தான்.. ஊசி மரக் காடுகளில் அலைந்தார்கள்.. மகனை குதிரைச் சவாரி செய்ய வைத்து படம் பிடித்தான்..

“புதிதாய் கல்யாணமாணவர்கள் சுபத்ராவும், நெடுஞ் செழியனும்.. அவர்கள் சென்னைக்கு போக நாம் கொடைக் கானல் கிளம்பி வந்துவிட்டோமே.. அத்தை மாமா என்ன நினைப்பார்கள்..”

“நீதான் சொல்லேன்..”

“நீங்கதான் விட்டுப் போன தேனிலவுன்னு சொல்லிட் டிங்களே.. அப்புறம் என்ன சொல்லுவாங்களாம்…”

“என் அப்பா அம்மாவைப் பற்றி நான் சொல்லியா உனக்குத் தெரியணும்..?”

“அவர்களாவது என் மாமனார் மாமியார் என் பக்கம் நின்றார்கள்.. செவ்வந்தி சித்தியும், சாந்தா அத்தையும் நம் கல்யாணத்தில் பேசிய விதத்தைப் பார்த்து நான் ரொம்ப பயந்து விட்டேன் தெரியுமா..? ஆனால் அவர்கள் இரண்டு பேரும் என்னைப் புரிந்து கொண்டு எவ்வளவு ஆதரவாய் இருந்தார்கள் தெரியுமா..?”

“ஒரு ராணுவ வீரன் தன் மனைவியை பெற்றவர்கள் உற்றவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு கடமையாற்றச் செல்கிறான்.. அவன் திரும்பி வரும் வரை இப்படிக் காவல் காக்கும் சொந்தங்கள் இருந்துவிட்டால் அவன் பாடு பட்டதற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்..”

“எவ்வளவு பேருக்கு அது வாய்த்திருக்கிறது..? எனக்குக் கிடைத்த சொந்தங்கள் போல் மற்ற ராணுவ வீரர் களின் மனைவிகளுக்கு சொந்தங்கள் கிடைத்தால் அவள் பாக்கியசாலி..”

“ஆனால் நிறையப் பேருக்கு அப்படி அமைவதில்லை என்பதுதான் உண்மை.. என் கூட பணி புரிந்த ஒவ்வொரு ராணுவ வீரனின் குடும்பத்திலும் ஓர் கதை உண்டு.. நிறையப் பேருக்கு சொந்தங்கள் சோதனைகளாக அமைந்திருக் கின்றன..”

“அதே சமயம் நிறையப் பேருக்கு எனக்கு கிடைத்தது போல் மகிழ்வான வாழ்வு கிடைத்திருக்கிறது என்பதும் உண்மைதான்..”

“நீ மகிழ்வாய் இருக்கிறாயா..?”

“ஆமாம்..”

“மனதாரச் சொல்.. என்னுடன் வாழ்ந்த வாழ்வில் என்ன கண்டாய்..? வேதனையும் சோதனையும் தானே..?”

“யாருக்காக கஷ்டப்பட்டேன்..? காவல் காக்க நீங்கள் சென்றிருந்தீர்கள்.. போர் புரிந்தீர்கள்.. வெற்றியுடன் மீண்டு வந்திருக்கிறீர்கள்.. உங்களுக்காக காத்திருப்பதும் தனி சுகம்தான்..”

இரவில் மகனை உறங்க வைத்து விட்டு மனைவியின் அருகில் நகர்ந்து படுத்தான் அவன்.. உறங்கிக் கிடந்த அவள் உணர்வுகள் விழித்துக் கொண்டன.. அவனால் மட்டும் எழுப்பக் கூடிய உணர்வுகள்.. அவனைப் பார்த்தால் மட்டும் எழும் உணர்வுகள்.. அவனை மட்டும் வேண்டும் உணர்வுகள்.. பொங்கி எழுந்தன..

அவள் இதழோடு இதழ் சேர்த்தான் அவன்.. அன்று விட்டுப் போன கதையை தொட்டுத் திரும்பி வந்தார்கள்.. விடியலின் அருகாமையில் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு துயிலில் ஆழ்ந்தார்கள்..

பதினான்கு தினங்கள் சென்றபின் மேலக்கால் திரும்பினார்கள்..

“உண்மையிலேயே சொல்கிறாயா..? நீ மிலிடிரிக்குத் திரும்பப் போகப் போவதில்லையா..?” நடேசன் சந்தோசமாய் கேட்டான்..

“ஆமாம்டா.. நான் வரும்போதே என் சர்வீஸை நீடிக்க விருப்பமில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.. பதினைந்து வருடங்கள் ராணுவத்தில் இருந்தி ருக்கிறேன்.. ஒரு போரைச் சந்தித்து போர் புரிந்திருக்கிறேன்.. அதில் சில வெற்றிகள் பெற்றிருக் கிறேன்.. ஆறு வருடம் சிறையில் கழித்து விட்டேன்.. நாட்டிற்கு கடமை யாற்றிவிட்ட மனநிறைவுடன் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன்.. இனி வீட்டிற்கு ஒரு நல்ல மகனாக, அண்ணனாக, கணவனாக, தகப்பனாக என் கடமையை ஆற்ற வேண்டும்.. எக்ஸ்-சர்வீஸ்மேன் கோட்டாவில் நிச்சயம் எனக்கு அரசு வேலை கிடைக்கும்.. அதுவரை அப்பாவிற்கு உதவியாக நிலங்களைப் பார்த்துக் கொள்ளப் போகிறேன்…”

ஊர்மிளா வேலைக்கு சென்று வந்தாள்.. அதே கார்தான்.. ஒரு வித்தியாசம் என்னவென்றால் டிரைவர் சீட்டில் நடேசனுக்குப் பதில் லட்சுமணன் அமர்ந்து இருந்தான்.. கார் வாங்கிய இத்தனை நாள்களில் முன் சீட்டில் அமர்ந்திராத ஊர்மிளா முன் பக்கம் கணவன் அருகில் அமர்ந்து வேலைக்குச் சென்று வந்தாள்..

நடேசன் கடமை முடிந்த நிறைவுடன் தாய், தந்தையை அழைத்துக் கொண்டு அபிராமியின் ஆசைப்படி மதுரையில் வசிக்கப் போய் விட்டான்..

சுபத்ராவும் நெடுஞ்செழியனும் மதுரையில் தனிக் குடித்தனம் நடத்தினார்கள்.. மனைவியை மகாராணி போல் வைத்துக் கொண்டான் நெடுஞ்செழியன்..

பலராமன் மதுரையில் இருந்த பொறியியல் கல்லூரியில் பொறியியல் நான்காமாண்டு படித்துக் கொண்டிருந்தான்.. ஒவ்வொரு வாரமும் ஊர்மிளாவும், லட்சுமணனும் மகனுடன் தாடிக்கொம்பு சென்று வந்தனர்.. மறக்காமல் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தனர்.. ஊர்மிளா மறுபடியும் கர்ப்பமானாள்.. இந்த முறை பிறந்த வீட்டில் அவள் சீராடினாள்..

பதினாறு வயதான கலைமதியின் மகன் ராமசாமியும் பதினான்கு வயதான செவ்வந்தியின் மகள் சீதாவும் ஒரு மார்க்கமாய் பார்வைகளை பரிமாறிக் கொண்டார்கள்.. அதைக் கண்டும் காணாமல் இரு தாய்மார்களும் மனதிற்குள் மகிழ்ந்து கொண்டார்கள்..

பிரிந்து சென்ற லட்சுமணனின் வரவிற்காகக் காத்திருந்த ஊர்மிளாவின் கதையைக் கேட்டால் கல்லும் உருகும்.. அவள் காத்திருப்பதை ஒரு தவமாய் செய்தாள்.. தவத்திற்கு பலன் கிடைத்தது.. அவளது கணவன் மீண்டு வந்தான்.. மீண்டும் அவளைக் காண வந்துவிட்டான்..

காத்திருப்போம்.. பலன் கிடைக்கும்..

– முடிந்தது –

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link