Chapter 09

0Shares

அலுவலகத்தில் அர்ஜூனை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.. தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்..

“என்ன.. ஏ.ஓ.சார் பாதியிலேயே லீவைக் கேன்சல் செய்து விட்டு ஜாயின் பண்ணியிருக்கிறார்..?”

“அதுதானே.. அதுவும் தேன்நிலவில் பாதியிலேயே யாராவது திரும்பி வருவார்களா..?”

அதையேதான் அர்ஜூனின் நண்பன் கோகுல் கேட்டான்..

“ச்சு..” என்று அலுத்துக் கொண்டான் அர்ஜூன்..

“ஏண்டா.. நீ ஏற்கனவே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதான் கல்யாணமே பண்ணிக்கிட்ட.. இப்ப என்னடாவென்றால் இப்படிப் பாதியிலேயே தேநிலவை விட்டுவிட்டு ஓடி வரலாமா..?”

“ஏண்டா.. எனக்கு மட்டும் ஆசையா..?”

“பின்னே.. உன் மனைவிக்கு வந்த ஆசையா..?”

“இரண்டும் இல்லை.. என் மாமனாருக்கு வந்த ஹார்ட் அட்டாக்கிற்கு வந்த ஆசை..”

“அடப்பாவமே.. உன் வொய்ஃப் இப்போது எங்கே..?”

“அவளுடைய அம்மாவிற்கு துணையாக ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள்..”

“த்சொ.. த்சொ..”

“ஏண்டா இவ்வளவு தூரம் பரிதாபப் படுகிற..?”

“கடைசியில் உன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே..”

“நீயெல்லாம் என்மேல் இரக்கப் படுகிறன்னா நிச்சயம் என் நிலைமை பரிதாபத்துக்கு உரியதுதான்..”

கோகுல் எழுந்து போனபின்.. அர்ஜூன் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து மெயில் பாக்ஸை திறந்தான்.. வந்திருந்த.. மெயில்களைப் பார்வையிட்டான்.. அதில் ஒரு மெயில்..

ஹாய் அர்ஜூன்..

நான் இந்தியா வந்திருக்கிறேன்.. தாஜ்மஹாலைப் பார்ப்பதற்காக இல்லை.. உன்னைப் பார்ப்பதற்காக.. எப்போது நான் உன்னிடம் வர..

– மாளவிகா..

என்று இருந்தது.. அர்ஜூன் புருவங்கள் உயர்ந்தன..

‘மாளவிகா.. இவள் எப்போது அமெரிக்காவில் இருந்து வந்தாள்..’ யோசனையுடன்..

‘நீ என்னைப் பார்க்க வர நேரம் காலம் பார்க்க வேண்டுமா..? எப்போது வேண்டுமானாலும் வரலாம்..’

என்று பதில் மெயிலை அனுப்பி விட்டு.. சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பினான்.. மேஜையின் மீது இருந்த செல்போனில் செய்தி வந்திருந்தது.. எடுத்துப் படித்தான்..

 ‘விடுபட முடியாத உறவுகள் பல

வாழ்க்கையில் உண்டு..

உனக்கும்.. எனக்குமான உறவு..

அந்த வகையைச் சேர்ந்தது..’

– தர்ஷிணி கவிதை அனுப்பியிருந்தாள்.. அர்ஜூன் அதைப் படித்து விட்டு.. ஆழமாய் பெருமூச்சு ஒன்றை விட்டான்.. பதில் செய்தி அனுப்பவில்லை..

அன்று மாலை அவன் அலுவலகம் முடிந்து காரில் ஏறிக்கொண்டிருந்த போது..

“ஹாய்.. அர்ஜூன்..” என்றவாறு மாளவிகா ஒரு கால் டாக்ஸியில் வந்து இறங்கினாள்..

“வா.. மாளவிகா..” உற்சாகமாய் வரவேற்றான் அர்ஜூன்..

“நான் கால் டாக்ஸியை அனுப்பி விடவா அர்ஜூன்..?”

“ஓ.. யெஸ்.. என் காரில் உன்னை டிராப் பண்ணி விடுகிறேன்.. வா..”

மாளவிகா கால் டாக்ஸிக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு.. அர்ஜூனின் காரில் ஏறி.. அவனருகே அமர்ந்தாள்.. கார் சாலையின் போக்குவரத்தில் கலந்தது..

“எப்படியிருக்கிறாய் மாளவிகா..”

“அதுதான் நீயே பார்க்கிறாயே.. எப்படியிருக்கிறேன்..?”

“உனக்கென்ன மாளவிகா.. அழகாகவே இருக்கிறாய்..”

“அப்புறம் ஏன் அர்ஜூன்.. என்னை விட்டு.. இன்னொருத்தியை மேரேஜ் பண்ணிக் கொண்டாய்..?”

மாளவிகா சட்டென்று கேட்டுவிட.. அர்ஜூன் மௌனமானான்.. மாளவிகாவே மௌனத்தைக் கலைத்தாள்..

“நீ என்னிடம் காதல் சொன்னதில்லை அர்ஜூன்.. ஆனால் என்றாவது ஒருநாள் நீ என்னிடம் காதல் சொல்வாய்ன்னு நினைத்தேன்..”

“ஐ ஆம் ஸாரி மாளவிகா..!”

“எதற்காக ஸாரி சொல்கிற..? நீ என்னை ஏமாற்றவில்லையே.. நானும் உன்னிடம் ஏமாற வில்லையே.. என் மனதில் ஓர் எதிர்பார்ப்பு இருந்தால்.. நீ எப்படி அதற்கு பொறுப்பாவாய்..?”

“என் கல்யாணத்தை என் அப்பா முடிவு பண்ணினார்..”

“உனக்கு இதில் விருப்பமில்லையா..?”

அர்ஜூன் பதில் சொல்லாமல் மாளவிகாவைப் பார்த்துப் புன்னகைத்தான்..

“எனக்கு உன்னிடம் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று அர்ஜூன்..”

“எது..?”

“பதில் சொல்ல விரும்பாத போது சிரித்து.. அதிலிருந்து நீ தப்பித்து விடுவது..!”

“ஸோ.. நான் சிரிப்பதை ‘எஸ்கேப்பிசம்’ன்னு நீ சொல்லுகிறாய்..?”

“ஊஹும் உன் ‘எஸ்கேப்பிசம்’ எனக்கு பிடித்தமானதாக இருக்கிறதுன்னு சொல்கிறேன்..”

அர்ஜூன் அதற்கும் சிரித்தான்.. மாளவிகா மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்..

“உன் வொய்ஃபின் பெயர் என்ன அர்ஜூன்..?”

“தர்ஷிணி..”

“அழகான பெயர்..”

“அவளும் அழகாகவே இருப்பாள் மாளவிகா..”

“என்னை விடவா அர்ஜூன்..?”

‘இதற்கு என்ன பதிலைச் சொல்வது..? ஒரு பெண்ணிடமோ.. இல்லை ஆணிடமோ.. உன்னைவிட வேறொருவர் அழகு என்று எப்படிச் சொல்வது..?’

அர்ஜூன் மீண்டும் சிரித்துத் தப்பித்தான்..

“உன் டிரேட் மார்க் சிரிப்பைச் சிரித்து விட்டாய்.. ஸோ.. உன்னிடமிருந்து இனி இதற்கான பதில் வராது..”

“நீ மாறவே இல்லை மாளவிகா.. அமெரிக்காவாசம் உன்னை மாற்றவே இல்லை.. அன்றைக்கு எப்படிப் பேசிப் பழகினாயோ.. அதேபோல் தான் இன்றைக்கும் பேசிப் பழகுகிறாய்..”

“ஏன் மாற வேண்டும்.. நாடு விட்டு நாடு போனால் நான் மாறி விடுவேனா.. என் மனம் மாறிவிடுமா..? அது அப்படியேதான் இருக்கிறது.. எனக்கு இந்தியாவைத்தான் பிடிக்கும்.. இந்தியாவில் இருக்கும் உன்னைத்தான் பிடிக்கும்..”

இப்போது மீண்டும் அர்ஜூன் சிரித்து வைக்க வேண்டியதாயிற்று..

“அர்ஜூன்..”

“சொல் மாளிகா..”

“உன் தர்ஷிணியிடமிருக்கும் வேறு அழகுகள் என்ன.. என்ன..?”

“ம்ம்.. அவள் அழகாக வீணை வாசிப்பாள்.. அழகாகப் பாடுவாள்..”

“வீணை வாசிப்பதும்.. பாடுவதும் திறமையில்லையா..?”

“திறமைவேறு.. அழகு வேறு.. திறமையை வெளிப்படுத்தும் முயற்சியில் ஞானம் வெளிப்படலாம்.. அழகு வெளிப்படாது.. அழகு என்பது அனுபவித்து அதில் மூழ்குவது.. தர்ஷிணி அப்படித்தான்.. வீணையோ.. பாட்டோ.. அதில் முழுமையாய் இறங்கி.. மூழ்கி விடுவாள்..”

அர்ஜூனின் மனதில் தர்ஷிணி பாடிய பாடல் ஒலித்தது..

‘இரவென்பது.. என் வாழ்விலே..

நீ இல்லாமல் போகுமா..?’

அவன் மனம் அன்று அவள் பாடியது போல் அலை பாய்ந்தது..

“அர்ஜூன்..”

மாளவிகாவின் குரல் அவனது மௌனத்தைக் கலைத்தது..

“நீ அவளைக் காதலிக்கிறாயா..?”

“தெரியவில்லை..”

“குட் ஆன்ஸர்..”

“ஈஸிட்..?”

“யெஸ்.. இது நீ சொன்னது போல் அழகான பதிலும்கூட.. அர்ஜூன்.. உன் தர்ஷிணி வேறு எதையெல்லாம் அழகாக செய்வாள்..?”

“ம்ம்.. அழகாக சண்டை போடுவாள்..”

“வாட்..?”

மாளவிகா ஆச்சரியமாய் அவனைப் பார்த்தாள்.. அவள் அவனின் கல்லூரித் தோழி.. பள்ளிக் காலத்து நிகழ்வுகளைப் பற்றி அவளுக்குத் தெரியாது..

“யெஸ்.. அவளும் நானும் எல்.கே.ஜியிலிருந்து ப்ளஸ் டூ வரை சண்டை போட்டுக் கொண்டிருந்தோம்..”

“இன்ட்ரெஸ்ட்.. அப்புறம்..”

“அப்புறம்.. நான் காலேஜ் போனேன்.. பட்டம் வாங்கினேன்.. சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதினேன்.. ஸ்டேட் கவர்ன்மென்டில் பெரிய ஆபிஸராய் ஆனேன்..”

“என்னை மறந்து கை கழுவி விட்டாய்.. அதையும் சேர்த்துச் சொல் அர்ஜூன்..”

“மாளவிகா.. ப்ளீஸ்..”

“ஓ.கே.. லீவ் இட்.. நாம் தர்ஷிணியிடம் வரலாம்.. அவளை உன் அப்பா நிச்சயம் பண்ணியவுடன் நீ ஓ.கே சொல்லி விட்டாயா..?”

“இல்லை..”

“குட்.. இதை நான் உன்னிடம் எதிர்பார்த்தேன் அர்ஜூன்.. நீ உள்ளதை உள்ளபடி பேசுபவன்… என்னிடம் நீ உண்மையை மறைக்கிறாயான்னு செக் பண்ணினேன்.. நீ மறைக்கவில்லை..”

“யு ஆர் மை ஃபிரண்ட் மாளவிகா..”

“தேங்க்ஸ்.. என்னை உன் தோழியாகவாவது ஏற்றுக் கொண்டாயே..”

“ப்ளீஸ் மாளவிகா..”

“நான் எதிர்பார்த்து ஏமாந்தவள் அர்ஜூன்.. என் காதலில் தோற்றவள்.. நினைத்தவனைக் கை நழுவ விட்டவள்.. என் இழப்பை என்னையறியாமல் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறேன்.. நீ தவறாய் நினைக்காதே.. இப்போது நாம் எங்கே போகிறோம்..?”

“என் வீட்டிற்கு..”

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link