Chapter 24

0Shares

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலேன்னு சொல்வாங்க.. வொய்பும் 

குழந்தை மாதிரிதாண்டா.. மத்தவங்களுக்கு அவங்க மெச்சூரிட்டியான வுமன்.. ஹஸ்பெண்டுக்கு கைக்குழந்தை.. அவங்களோட சிரிப்பையும், அழுகையையும் வேறு எங்கேடா காட்டுவாங்க..? ஹஸ்பெண்டிடம்தானே காட்டியாகனும்..? அவங்களோட அழுகையைப் புரிந்துக்காத கணவனிடம் அவங்களுக்கு கோபம் வருது.. கோபம் வெறுப்பா மாறுது.. சண்டை மூளுது.. தப்பித்துப் போக ஆண்களுக்கு வெளியுலகம் இருக்கு.. பிரண்ட்ஸ் இருக்காங்க.. பெண்கள் எங்கே போவாங்க..? வேலைக்குப் போனா மட்டும் வெளியுலகில் அவங்க சுற்றி விட முடியுமா..? யாரிடமும் பழகிவிட முடியுமா..? மனதில் நினைப்பதைத்தான் பேசிவிட முடியுமா..? பாவம்டா அவங்க..”

“பரணி..”

“ஏண்டா டேய்.. வீட்டில் வளர்க்கிற செல்லப் பிராணிகள் கிட்டக் கொஞ்சி விளையாடறிங்க.. வாக்கிங் கூப்பிட்டுக்கிட்டுப் போறிங்க.. அதுவே.. உங்களுக்காக உங்க வீட்டைப் பார்த்துக்கிட்டு வாட்ச் வுமன் போல காவல் காக்கிற பெண்டாட்டியிடம் சிரித்துப் பேச கூலி கேட்கறிங்க.. வெளியில் அழைத்துக் கொண்டு போய் மனம் விட்டுப் பேசாம வீட்டுக்குள்ள பூட்டி வைக்கறிங்க..”

நிதானமாக பரணிதரன் பேசப்பேச.. தான் செய்த தவறு என்ன வென்பதை புரிந்து கொண்டான் இளங்கோ..

பின்மாலைப் பொழுது ஏதோ செய்தது.. பகல் முடிந்து இரவு தொடங்கும் அற்புதவேளை.. வெளிச்சமுமில்லாத இருளும் சூழாத மெலிதான வெளிச்சம் அல்லது மெல்லிய இருட்டு.. இதை அந்தி மயங்கும் நேரம் என்று சொல்வாள் சங்கீதா… மயக்கும் 

மாலைப் பொழுது என்பதால் மயங்கும் நேரம் என்று பாட்டி குறிப்பிட்டாளோ என்ற நினைவில் நகத்தைக் கடித்துக் கொண்டாள் மலர்நிலா.. மொட்டை மாடியில் அவள் மட்டும் தனித்திருந்தாள்.. அது பரணி அவளுடன் செல் போனில் பேசும் நேரம்.. தென்னந்தோப்பில் சந்தித்துப் பிரியும்போது அவளுடைய செல் போன் நம்பரைக் கேட்டான்.. அவள் கொடுத்தாள்.. எப்போது பேசினால் அவளுக்கு வசதியாக இருக்கும் என்று அவன் கேட்டபோது பின்மாலைப் பொழுதைச் சொன்னாள்..

“மத்த டயங்களில ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பக்கத்தில இருப்பாங்க.. ஈவினிங் டயத்தில காபி டிபன் முடிந்ததும் அம்மா, சித்தி, பாட்டியெல்லாம் டிவி முன்னால சீரியல் பாக்க உட்கார்ந்திருவாங்க.. அண்ணி அண்ணனுடன் ஜாயின் ஆகிருவாங்க.. அஜய் லேப்டாப்பை நோண்டிக்கிட்டு இருப்பான்.. இல்லேன்னா பிரண்ட்ஸைப் பார்க்க வெளியே போயிருவான்.. அஜந்தா எப்போதும் கூட்டமா, ஆளுக இருக்கிற இடத்திலதான் இருப்பா.. அப்பா, சித்தப்பா, தாத்தான்னு போர்டிகோ பக்கமா இருக்கிற சிட் அவுட்டில உட்கார்ந்து அவங்களைப் பார்க்க வர்ற ரிலேட்டிவ்ஸீடன் பேசிக்கிட்டு இருப்பாங்க.. நைட் டின்னர் வரைக்கும் யாரும் என்னைத் தேட மாட்டாங்க.. நான் நைஸா நழுவி மொட்டை மாடிக்கு வந்து விடுவேன்.. ஸோ.. அந்த டைம் தான் பெட்டரா இருக்கும்..”

காதலனுடன் மனம் விட்டுப் பேச அவள் எத்தனை பேரிடம் இருந்து மறைந்து ஒளிய வேண்டியிருக்கிறது என்ற நினைவில் அவன் மனம் கனிந்தான்.. மாதந்தோறும் அவனைப் பார்க்கக் கடற்கரைக்கு வருவதையும் இதைப் போலதானே யோசித்து திட்டமிட்டு செயலாற்றியிருப்பாள்..? ஆண்களுக்கு எளிதான எதுவும் பெண்களுக்கு எளிதானதாக இருக்காது போல..

“சரி.. அந்த டயத்திலேயே கூப்பிடுகிறேன்..” அவன் வாக்களித்தான்..

தினமும் அவன் அவளை அழைத்து விடுவான்.. நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.. மாலை வெளிச்சத்தில் ஆரம்பிக்கும் பேச்சு.. இருள் கவிந்து மையிருட்டாக மாறும் வரை தொடரும்.. இரவு உணவுக்கு அவளைத் தேட ஆரம்பித்து விடுவார்கள் என்று தோன்றும் போது மலர்நிலா அவனிடம் தயக்கத்துடன் பேசுவாள்.. அவன் புரிந்து கொண்டு பேச்சை நிறுத்திக் கொள்வான்.. அதில் அவள் மனதில் இதம் பரவும்..

ஒவ்வொரு நாளும் விழித்து எழும் போதே.. மாலைநேரம் எப்போது வரும் என்று மனதுக்குள் ஓர் பரபரப்பு வந்து விடும்.. காபி டிபன் முடிந்தவுடன் எப்போது வீட்டுப் பெண்கள் டிவி முன்னால் உட்காருவார்கள் என்று படபடப்பாகக் காத்திருப்பாள் மலர்நிலா.. அவர்கள் சீரியலில் மூழ்கியதும் மெல்ல நழுவி மொட்டை மாடிக்கு வந்து விடுவாள்..

மொட்டை மாடியின் கைபிடி சுவரில் படிந்திருந்த தென்னங்கீற்றுகள் சலசலத்தன.. சிலுசிலுவென ஓர் குளிர்காற்று அவளது தேகம் தழுவி குளிரை அவளுள் இறக்கியது.. அவள் மனதில் ஓர் மயக்கம் வந்தது.. இதுதான் மாலை நேரத்து மயக்கமா என்று அவள் துவண்டாள்.. மாலை நேரத்தின் மயக்கம் அவளை ஏதோ செய்தது.. அவளது செல்போன் ஒலித்தது.. எடுத்துப் பேசினாள்..

“என்ன செய்கிற..?” என்ற அவனது குரல் அவளை ஏதோ ஓர் குளிர் அருவியில் நனைய வைத்தது..

“நீங்க பேசறதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்..”

“எனக்காக ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கியா..?”

“உங்களுக்காக வருசக் கணக்கில் காத்துக்கிட்டு இருக்கேன்..”

“மலர்..” அவன் நெகிழ்ந்தான்..

“ம்ம்ம்..” பேச முடியாமல் அவள் தடுமாறினாள்..

அது என்னவோ தெரியவில்லை.. அவனுடன் பேச வேண்டும் என்று ஏதேதோ நினைத்திருப்பாள்.. மனனம் செய்யாத குறைதான்.. ஆனால் அவனிடம் பேச ஆரம்பித்தவுடன் அத்தனையும் மறந்து விடும்.. பேச வராது.. அவன் முன்னால் இருப்பது போல வெட்கத்துடன் ‘ம்ம்ம்’ என்பாள்..

“இந்த வீக் எண்டில சென்னைக்குக் கிளம்பப் போகிறீர்களாமே..”

“யார் சொன்னது..?”

“உன் அண்ணன் சொன்னான்.. கவலைப்படாதே.. நீ சென்னைக்குக் கிளம்புவதற்குள் நம் கல்யாணம் நிச்சயமாகி விடும்..”

“எப்படி..?”

“அது அப்படித்தான்..”

“சித்தப்பாவும் சித்தியும் நம் மேரேஜீக்கு எகைன்ஸ்ட்டா இருக்காங்க.. அவங்களை இக்னோர் பண்ண ஃபேமிலியில் யோசிப்பாங்க..”

“அவங்களே நம் கல்யாண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைப்பாங்க..”

“குட் ஜோக்.. உங்களுக்கு சித்தியைப் பற்றித் தெரியாது..”

“உனக்கு என்னைப் பற்றி இன்னும் முழுசா தெரியலை..”

இதை குரலில் ஓர்விதமான சிரிப்போடு சொன்னான் பரணிதரன்.. மறைபொருளை உணர்ந்து கொள்ள முடியாத மழலையில்லை மலர்நிலா.. அவளது உடலுக்குள் ‘ஜிவ்’ வென்று ஓர் உணர்வு பரவியது.. உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவன் போனை அணைத்து விட்டான்..

என்ன மாயம் செய்தானோ தெரியவில்லை.. அவன் சொன்னதைப் போலவே மறுநாள் காலையில் வினோத் குடும்ப மாநாட்டைக் கூட்டினார்..

“அப்பா.. நீங்களும் அண்ணனும் சொன்னதை நான் யோசித்துப் பர்த்தேன்.. பழைய பகையை இழுத்துப் பிடித்துக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு தான் தோணுது.. அத்தோட.. சோமசுந்தரம் சித்தப்பா வீட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..? நம்மிடம் பெண் கேட்பது கோயம்பத்தூர் கிரிதரன்தானே.. அவரிடம் சம்பந்தம் வைத்துக்குவது நம் குடும்பத்துக்கும் பெருமைதானே.. அதோடு.. நாம் ஒன்றுக்குள் ஒன்றாக போய்விட வேண்டுமென்று இந்துபிரியா ஆசைப்படுகிறாள்..”

‘என்னது..???!!!’

ஒட்டு மொத்த குடும்பமே வியப்பில் வாய் பிளந்தது.. அண்ணன் மகனுக்கு மைத்துனன் மகளை திருமணம் செய்து வைத்து ஒன்றுக்குள் ஒன்றாக போய்விட வேண்டும் என்று பரணிதரனுக்குப் பெண் கொடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்துபிரியா இப்படிச் சொன்னாளா..? மலர்நிலாவை பரணிதரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் இந்துபிரியா எப்படி ஒன்றுக்குள் ஒன்றாக ஆவாள்..? ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறதே..

குடும்பத்தினர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க.. போனால் போகிறது என்று குடும்பத்தினரின் பாவம் பார்த்து வினோத்தே மர்மத்தை விடுவித்தார்..

“நம்ம இந்துவோட அக்கா மகன் ஹைதராபாத்தில ஐ.டி கம்பெனி ரன் பண்ணிக்கிட்டு இருக்கானில்லையா..? அவனுக்கு கிரிதரனோட மகள் பவித்ராவைக் கொடுக்கிறதா பேச்சு வார்த்தை நடக்குதாம்..”

‘இது எப்போ..?’

குடும்பத்தினர் ரகசியப் பார்வை பார்த்துக் கொண்டார்கள்.. இந்து பிரியாவின் அக்கா சிந்துபிரியாவை ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.. அவளுடைய கணவர் பெரும் பணக்காரர்.. ஏகப்பட்ட பிஸினெஸ்கள் அவருக்கு உண்டு.. அவர்களுக்கு ஒரே மகன்.. பெயர் கார்த்திக்.. எம்.பி.ஏ. படித்தவன்.. அவனுக்கென்று ஒரு கம்பெனியை ஆரம்பித்துக் கொடுத்திருந்தார்கள்..

கார்த்திக் பவித்ராவுக்கு ஏற்ற மாப்பிள்ளைதான் என்பதில் யாருக்கும் மாறுபாடான கருத்தில்லை.. பவித்ராவின் பெயரில் கோயம்பத்தூரில் ‘பவித்ரம் ஜவுளி ஸ்டோர்..’ இருந்தது.. பங்களாக்கள்.. அபார்ட்மெண்ட் என்று மற்றச் சொத்துக்கள் ஏராளம்.. இப்படியொரு பெண் தமக்கை மகனுக்கு வாய்க்கும் போது அதை தடுத்து நிறுத்த இந்துபிரியா என்ன முட்டாளா..? அவளுடைய அண்ணன் மகனுக்கு வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளலாமே.. அத்துடன் சிந்துபிரியா பரணிதரனின் தங்கையை மருமகளாக்கிக் கொள்ள முடிவு செய்து விட்ட பின்பு இந்து பிரியாவால் என்ன செய்ய முடியும்..? சிந்து பிரியாதான் தன் தங்கையிடம் திட்டவட்டமாகச் சொல்லி விட்டாளே..

“இந்து நம்ம கார்த்திக்குக்கு கோயம்பத்துரில் பெண் அமைந்திருக்கு.. பெண்ணின் அப்பாவும், அண்ணனும் கோயம்பத்தூரில் நம்பர் ஒன் ஸ்டேட்டஸில் இருப்பவங்களாம்.. அவங்க வீட்டிலதான் உன் மைத்துனர் மகளைப் பெண் கொடுக்கப் போகிறாங்களாமே.. இரண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையில் நடத்தலாம்ன்னு அவங்க வீட்டில் சொன்னாங்க.. நான் ஓகே சொல்லிட்டேன்.. சித்தியோட மைத்துனர் மகள்தான் தன் மச்சினரோட வொய்பாகப் போகிறாள் என்பதில் கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசம்.. உன் மாமாவும் சந்தோசப்பட்டார்..”

அப்புறம் என்ன..? இந்துபிரியாவின் உறவினர் வட்டாரத்தில் சிந்துபிரியாவின் கவணவர்தான் பெரும்புள்ளி.. அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பாத இந்துபிரியா தன் முடிவை மாற்றிக் கொண்டாள்.. எப்படியோ.. அவள் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியது நடந்து விட்டதே.. இனி அவள் பொள்ளாச்சி வட்டார உறவினர் மத்தியில் தனித்தவளில்லை.. அது போதும் அவளுக்கு..

வீராதி வீரன்.. அசகாய சூரன்.. பரணிதரன்.. சொன்னதைப் போலவே இரண்டு நாள்களில் குடும்பத்துடன் வந்து நின்றான்.. உறவினர்களின் மத்தியில் அவனுக்கும் மலர்நிலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொள்ளப் பட்டது.. அடுத்த முகூர்த்த்தில் இரண்டு திருமணங்களும் அமோகமாக நடந்து முடிந்தன.. கார்த்திக் பவித்ராவுடன் தேநிலவுக்காக சுவிட்சர்லாந்திற்குப் பறக்க.. பரணிதரன் மலர்நிலாவோடு பாரிஸீக்குப் பறந்தான்..

காத்திருந்த காதலர்கள் கல்யாணத்தில் இணைந்தவுடன் தடைகளை உடைத்துக் தெரிந்தார்கள்.. கள்ளுண்ண, உண்ண போதை அதிகரிப்பதைப் போல தூய்க்கத் தூய்க்க போதை தந்து உள்ளுக்குள் இழுத்துக் கொண்ட காமம் பரணிதரனை ஆட்டுவிக்க அவன் மலர்நிலாவை ஆட்டி வைத்தான்.. ஒரு சிறு பார்வைக்காக மாதந்தோறும் ஓடி வந்தவனின் காதல் வென்று விட்டது.. பனிரெண்டு வயதில் ஓர் சிறுமி அவன் நினைவை மனதில் சுமந்தாள்.. அவன் வேண்டுமென்று இரவு, பகலாய் தவமிருந்தாள்.. வறண்ட பூமியை வாழ வைத்ததைப் போல அவன் தன்னைத் தந்து அவளைக் காத்து விட்டான்.. நதியாக ஓடும் நீர் நிழலுக்கு அடியில்தான் குளிர்ச்சியைத் தரும்.. வெயிலுக்கு அடியில் வெம்மையைத்தான் தரும்.. பரணிதரன் குளிர் நிழல்.. அந்த நிழலடியில் இளைப்பாறினாள் அந்த மலர்..

“மலரே.. மௌனமா..?”

அவளது காதோரம் அவன் பாடலில் கேட்டபோது பேச முடியாமல் வெட்கம் தடுக்க மௌனத் திரையின் மறைவில் ஒன்றிக்கொண்டு அவனுடன் ஒன்றினாள் மலர்நிலா..

– முற்றும் –

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link