Chapter 23

0Shares

நதியோரம் நடந்தபோது

நிலவின் பிம்பம் நீரில் தெரியும்

நிலவோடு கதை பேசும்

நினைவோடு மனம் துள்ளும்

…நதியோரம் நான் நடந்த போது…

தன் அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்ட வித்யாவின் மனம் துடிதுடித்தது.. ‘என்ன வார்த்தை சொல்லி விட்டான் அவன்..?’ வித்யா ஒரு தலையாய் காதலிக்கிறாளா..? அவள் நரேந்திரனை ஒருதலையாய் காதலித்தது உண்மைதான்.. ஆனால் அது சென்னையில்.. நதியோரம் நடந்ததெல்லாம் இந்த சுரேந்திரன் அறிவானா..?

ஆனால் சுரேந்திரனை இந்தியாவிற்கு வரச் சொன்னதே நரேந்திரன்தானாமே.. வித்யாவை மணந்து கொள்ள கேட்டுக் கொண்டானாமே.. அவன் எப்படி இதைச் செய்யலாம்..? அவனால் எப்படி இதைச் செய்ய முடிந்தது..?

மனமார தான் காதலித்த பெண்ணை, தன்னைக் காதலித்த பெண்ணை இன்னொருவனிடம் திருமணம் பண்ணிக் கொள்ளச் சொல்லிக் கேட்க எப்படி மனச்சாட்சி உள்ள மனிதனால் முடியும்..? வித்யாவின் வாழ்ககையை தீர்மானிக்க அவன் யார்..? இத்தகைய கொடிய செயலைச் செய்தவனின் முகத்தில் இனி விழிப்பதா..?

வித்யா ஒரு முடிவுக்கு வந்தாள்.. பெட்டிகளை எடுத்துத் தன் துணிகளை மடமடவென்று அடைத்துக் கொண்டாள்.. செல்போனை உயிர்ப்பித்தாள்.. நம்பர்களை அழுத்தினாள்.. மறுமுனையில் குரல் கேட்டது..

“குகன் ஸ்பீக்கிங்..”

“நான் வித்யா பேசுகிறேன் குகன்..”

“யெஸ் மேடம்.. இப்போதுதானே விட்டு விட்டு வந்தேன்..? எனி அர்ஜென்ட் மேட்டர்..?”

“யெஸ் குகன்.. நான் உடனே சென்னை போக வேண்டும்.. ஏதாவது டாக்ஸி பிடித்துக் கொண்டு வருகிறீர்களா..? வரும்போதே அம்பாசமுத்திரத்திலிருந்து சென்னை போக பஸ் எத்தனை மணிக்குக் கிடைக்கும் என்பதை விசாரித்துக் கொண்டு வருகிறீர்களா..?”

மறுமுனை ஒரு வினாடி மௌனமானது.. மறுவினாடி,

“யெஸ் மேடம்.. நான் வருகிறேன்..” என்றது.

வித்யா பெட்டிகளை தயார் பண்ணிவிட்டு ஜன்னலருகில் ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.. அங்கிருந்து பார்த்தால் மெயின் கேட்டு தெரியும்.. குகன் டாக்ஸியோடு வந்தால் உடனே இறங்கிப் போக ஏதுவாக இருக்கும்.. தன் செல்போனை எடுத்துச் சென்னையில் உடன் பணிபுரிந்த தோழி நளினியை அழைத்தாள்.. “ஹலோ..” என்ற குரல் கேட்டதும்..

“நளினி நான் வித்யா பேசுகிறேன்..” என்றாள்..

“ஓ.. வித்யா எங்கேப்பா உன்னைப் பற்றி ஒரு தகவலையும் காணோம்.. சொல்லாமல் கொள்ளாமல் ரிசைன் பண்ணி விட்டுப் போய் விட்டாயே.. இப்ப எங்கே இருக்கிறாய்..? என்ன வேலை பார்க்கிறாய்..?”

“நளினி.. நான் இங்கே ஓர் பேக்டரியில் பெர்ஸனல் மேனேஜராக வேலை பார்த்தேன்.. பிடிக்கவில்லை.. ரிசைன் பண்ணிவிட்டேன்.. சென்னைக்கே வந்து விடலாமென்று பார்க்கிறேன்.. அங்கே வந்து வேறு வேலை தேட வேண்டும்.. அதுவரை நீ தங்கும் லேடீஸ் ஹாஸ்டலில் நான் தங்க ஒரு ரூம் கிடைக்குமா..?”

“ஓ.. எஸ்.. உனக்கில்லாததா..? இங்கே நேற்றுத்தான் ஒரு பெண் பெங்களூர் டிரான்ஸ்பர்ன்னு ரூமைக் காலி பண்ணிவிட்டுப் போனாள்.. நான் வார்டனிடம் பேசுகிறேன்.. நீ வா.. நோ பிராப்ளம்..”

“தேங்க் யூ நளினி..” என்றவள் செல்லை அணைத்து விட்டு கைப்பையைத் திறந்து தன் சேமிப்புகளை சரி பார்த்துக் கொண்டாள்.. பேக்டரியில் பணி புரிந்ததற்கான மாதச் சம்பளமாக அறுபதாயிரம் ரூபாய்களை நரேந்திரன் கொடுத்து வந்தான்.. அதிகமென்பதை அறிந்தாலும் அவனோடு வாதாட மனமில்லாமல் வித்யா ஏற்றுக் கொண்டாள்.. அதற்காகத்தான் இரவு பகல் பாராமல் மனப்பூர்வமாக உழைத்தாள்.. மாதா மாதம் கைச்செலவு சொற்பத்தொகை போக மீதத்தை பேங்கில் எஸ்.பி. கணக்கில் போட்டு வைத்திருந்தாள்.. அது ஏறக்குறைய எட்டு லட்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.. இருபதாயிரம் ரூபாய் பணமாக இருந்தது.. சென்னைக்கு போய் ஏ.டி.எம். கார்டில் ஹாஸ்டலுக்கான முன் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு வழக்கம்போல் நகைப் பெட்டியையும் ஸேவிங்க்ஸ் பத்திரங்களையும் எஸ்.பி. கணக்குப் புத்தகத்தையும் துணிகளுக்கு அடியில் வைத்து பெட்டியை மூடினாள்.. கைப்பையில் பணத்தை வைத்துக் கொண்டு தயாரான போது கதவு தட்டப்பட்டது.. திறக்க யோசித்தவள் பின் ஓர் முடிவுடன் திறந்தாள்.. பூர்ணிமா நின்றிருந்தாள்.. அவள் விழி சிவந்திருந்தது..

அமைதியாய் உள்ளே வந்தவள் வித்யாவின் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்தாள்.. தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றாள்.. துக்கம் அவள் தொண்டையை அடைத்தது..

பூர்ணிமாவும், நரேந்திரனும் வந்து கொண்டிருக்கும் போது நரேந்திரனின் செல் ஒலித்தது.. எடுத்துக் காதில் வைத்தவன்,

“சொல்லு குகன்..” என்றான்.. மறுமுனை பேசிக் கொண்டிருக்க இவன் பதில் சொல்லாமல் “உம், உம்” என்று உம் கொட்டிக் கொண்டு இருந்தான்.. கடைசியில்..

“ஓகே.. குகன் நான் நேரில் வருகிறேன்..” என்று போனை அணைத்தான்.. பின்னர் பூர்ணிமாவைப் பார்த்து..

“நிலைமை கைமீறி விட்டதம்மா..” என்றான்..

“என்ன அண்ணா… பேசியது குகன்தானே..? பேக்டரியில் பிரச்சனையா..?”

“என் வாழ்க்கையில் பிரச்சனை..”

“என்ன அண்ணா சொல்லுகிறீர்கள்..?”

“பூர்ணி.. வித்யா இப்போதுதான் குகனுக்குப் போன் பண்ணினாளாம்.. சென்னைக்கு உடனே போக பஸ் எத்தனை மணிக்குன்னு விசாரித்துவிட்டு டாக்ஸி கொண்டு வரச் சொன்னாளாம்..”

“கடவுளே… வித்யாவிற்குத் தெரிந்து விட்டதா..?”

“அப்படித்தான் நினைக்கிறேன்.. பூர்ணி நீ வீட்டு வாசலிலேயே இறங்கி நடந்து போய் விடு.. நான் குகனிடம் போகிறேன்.. டாக்ஸி வந்தால் அவள் ஏறுவதைத் தடுக்காதே..” என்றவன் தயங்கி நின்றவளைப் பார்த்து.. “நான் பார்த்துக் கொள்கிறேன்.. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன் பூர்ணி.. அவளை என்னை விட்டுப் போக விட மாட்டேன்..” என்றான்..

பூர்ணிமா மெயின் கேட் வாசலில் இறங்கி நடந்து வந்தாள்.. காரின் வரவை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த வித்யாவின் கவனத்தில் அவள் வரவு பதியவில்லை..

வீட்டின் உள்ளே நுழைந்தவள் எதிரே வந்த சுரேந்திரனைப் பார்த்து “ஏதாவது வீட்டில் நடந்ததா சுரேன் அண்ணா..?” என்று கேட்டாள்..

“நத்திங் ஸ்பெஷல்.. உன் பிரண்ட் வித்யாதான் அம்மாவிடம் சண்டை போட்டாள்.. இன்னொஸன்ட் கேர்ள்..” அவள் தோள் குலுக்கினான்..

“இன்னொஸன்டா.. அவளா.. அதுசரி.. நீ அவளுக்கு அப்படி ஓர் சர்டிபிகேட் கொடுக்கும்படி அவள் என்ன செய்தாள்..?”

“என்ன செய்தாளா..? அம்மாவை கொஸ்டின் மேலே கொஸ்டின் கேட்டு அழுக வைத்தாள்..” சுரேந்திரன் வார்த்தைகளைத் துப்பினான்..

“எதற்காகக் கேள்வி கேட்டாள்..?”

“அம்மா என்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டாங்களாம் அதற்காகத்தான்.. யு நோ பூர்ணி.. நரேன் அண்ணா என்னிடம்..”

பூர்ணிமா சுரேந்திரனிடம் கை காட்டி பேச்சை நிறுத்தினாள்..

“ஐ நோ ஆல்.. சுரேன் அண்ணா.. உன்னிடம் பேச வேண்டும்.. அம்மா ரூமுக்குப் போகலாம் வா..”

தாயின் அறைக்குச் சென்றதும் கவனமாய் கதவை அடைத்துத் தாழிட்டவள் சௌதாமினியின் அருகே வந்து அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.. அழுது அழுது சௌதாமினியின் முகம் வீங்கியிருந்தது.. சுரேந்திரன் அலுப்புடன் அவர்கள் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.. பூர்ணிமா தாயின் முகத்தை இரக்கத்துடன் பார்த்தாள்..

“அம்மா.. வித்யா என்னவெல்லாம் பேசியிருப் பாள்ன்னு என்னால் யூகம் பண்ண முடியுது.. ஆனால் அம்மா பெரியண்ணன் மேலிருந்த அளவு கடந்த அன்பால்தான் அவள் அப்படிப் பேசியிருப்பாள்..”

“ஏம்மா.. இதை என்னிடம் சொல்ல வேண்டுமா..? நான் பெற்ற பிள்ளைக்கு ஆதரவாய் ஒருத்தி என்னிடமே சண்டை போட்டாள் இப்படி ஒரு ஆதரவு என் மகனுக்கு இருக்கேன்னு நான் சந்தோசம் தானே படணும்..?” என்றாள் சௌதாமினி சோர்ந்த குரலில்..

பூர்ணிமா சுரேந்திரனைப் பார்த்தாள்..

“சுரேன் அண்ணா.. நீ வித்யாவிடம் எதுவும் சொன்னாயா..?”

“எதைப் பற்றி..?”

“பெரியண்ணா உன்னிடம் வித்யாவுக்காக கேட்டுக் கொண்டதைப் பற்றி..”

“யெஸ்.. சொன்னேன்.. பூர்ணி.. அந்தப் பெண் தான் இன்னொஸன்ட்ன்னு சொன்னேனே.. அவள் ஒரு தலையாய் பெரியண்ணாவைக் காதலித்திருக்கிறாள்..

நம்ம அம்மா எனக்காக அவளைப் பெண் கேட்டதும் கோபமாயிட்டாள்.. அப்புறம் நான் வந்துதான் உண்மையை எடுத்துச் சொன்னேன்.. இப்படி, இப்படி.. நரேன் அண்ணா உன்னை விரும்பவில்லை.. நீதான் அவரை விரும்புகிறாய்.. அவர் என்னிடம் உன்னை மேரேஜ் பண்ணிக்க முடியுமான்னு கேட்டார்.. அதனால்தான் அம்மா பெண் கேட்டார்கள்.. ஸோ அம்மா மேல் எந்தத் தவறும் இல்லைன்னு எடுத்துச் சொன்னேன்.. அப்செட் ஆயிட்டா.. சோகமாய் போயிட்டாள்.. பட் வாட் வி கேன் டு ஃபார் திஸ்.. நரேன் அண்ணா விரும்பாத போது நாம் என்ன செய்ய முடியும்..?”

“உன் தலை..” என்றாள் பூர்ணிமா கோபமாக..

“உனக்குத் தெரியுமா அவர் வித்யாவை விரும்ப வில்லைன்னு.. முட்டாள் அண்ணா.. அவர் வித்யாவை விரும்புகிறார்.. உயிருக்கு உயிராய் விரும்புகிறார்.. அவள் இல்லைன்னா வாழ்க்கையே இல்லைங்கிறார்..”

“வாட்.. நிஜமாகவா சொல்கிறாய்..? அப்புறம் என்னிடம் ஏன் பேசினார்..?”

“பூர்ணிமா நிஜமாய்த்தான் சொல்றயா.. என் மகனும் அந்தப் பெண் மேல் ஆசைப்படுகிறானா..?” சௌதாமினியும் ஆவலாய் கேட்டாள்..

“ஆமாம்.. ஆமாம்.. சுரேன் அண்ணா.. நம்ம பெரியண்ணா முதலில் வித்யா மேல் வெறும் அன்புதான் வைத்திருக்கிறார்.. வித்யாவின் அழகும் பதவிசும் அவரை இம்ப்ரெஸ் பண்ணியிருக்கு.. பட்.. வயது வித்தியாசம் அதிகமாக இருக்கவும் உனக்கு மேரேஜ் பண்ணிடலாம்ன்னு நினைத்திருக்கிறார்..

ஆனால் வித்யாவும் அவரை விரும்புவதாகக் கூறவும் அவர் மனதிலும் அவள் மேல் காதல் வந்து விட்டது.. அந்தச் சமயம் பார்த்து நீ இந்தியா வந்து விட்டாய்.. இதை எப்படி உன்னிடம் சொல்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார்..”

“காட்.. என்னிடம் சொல்ல என்ன தயக்கம் பூர்ணி..? அண்ணன் காதலிக்கும் பெண் என் அண்ணி அல்லவா..? எப்படிப்பட்ட பாவம் செய்ய இருந்தேன்.. நீயாவது என்னிடம் கூறி இருக்கலாமே..”

“எனக்கே நேற்றுத்தான் தெரியும்.. மனதில் போட்டு மறுகிக் கொண்டு இருந்திருக்கிறார்.. நேற்று இழுத்து வைத்துப் பேசித் தெரிந்து கொண்டேன்..”

“பூர்ணி.. நம் வீட்டிற்கு என்று இப்படி சோதனை வருகிறதா…” என்று வேதனையுடன் கேட்ட சௌதாமினியைப் பார்த்து வினவினாள் பூர்ணிமா..

“அம்மா.. சுரேன் வித்யாவை விரும்புவதாய் யார் உங்களிடம் சொன்னது..? ஏனென்றால் சுரேன் வித்யாவிடம் பேசாமல் ஒரு முடிவெடுத்திருக்க சாத்திய மில்லை..”

“அதுதானே.. அவள்.. ஸாரி.. அண்ணிதான் என் கண்ணிலேயே படாமல் தப்பித்து வந்தார்களே.. அம்மா.. யார் உங்களிடம் இதைச் சொன்னது..?”

“மீனலோசனிதான் சொன்னாள் பூர்ணி.. நான் சுரேன் கிட்டக் கேட்டேன்..”

“ஐ லைக் ஹெர்னேன்… பூர்ணி.. லைக் வேற லவ்வேற… இதை நம் அம்மாவிற்கு எப்படிப் புரிய வைப்பேன்..?”

“நீ டியூசன் எடு.. நான் போய் உன் அண்ணியை நிறுத்திப் பார்க்கிறேன்..”

“ஏன் என்ன ஆனது..?” என்று தாயும், மகனும் பதற..

“வித்யா பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாள் அம்மா..”

“கடவுளே.. அந்தப் பெண் வீட்டை விட்டுப் போய் விடக் கூடாது.. சுரேன் வாடா.. அந்தப் பெண்கிட்ட மன்னிப்புக் கேட்டு நிறுத்தலாம்.. அவள் இந்த வீட்டு மகாலட்சுமிடா.. என் மூத்த மருமகள்.. என் வாடிப்போன மூத்த மகனுக்கு உயிர் கொடுக்க வந்த மகாராணி..” சௌதாமினி பதறி எழ பூர்ணிமா அமைதிப் படுத்தினாள்..

“அம்மா வேண்டாம்.. சுரேன் அண்ணா.. உனக்குப் புரியும்ன்னு நினைக்கறேன்… இப்போது அவளது கோபமெல்லாம் நம்மீது இல்லை.. பெரியண்ணா மீது.. அவர் செய்திருப்பது சாதாரணத் தவறல்ல.. அவர்தான் அவளைச் சமாதானப்படுத்த வேண்டும்..”

சுரேந்திரனுக்குப் புரிந்தது.. அவன் தாழ்ந்த குரலில் அன்னையிடம் விளக்கிக் கொண்டிருந்தான்.. பூர்ணிமா மாடியேறி வித்யாவின் அறைக்குச் சென்றாள்..

“பெட்டியெல்லாம் தயாரா இருக்கு.. என்னை விட்டுப் போக முடிவே செய்து விட்டாயா வித்யா..?”

வித்யா கலங்கிய விழிகளைத் திருப்பிக் கொண்டாள்..

“வித்யா என்னைப் பாருடி.. நான் சொல்வதைக் கேட்க மாட்டாயா..?”

“வேண்டாம் பூர்ணி.. நான் கேட்டதும் போதும்.. நம்பிக் கெட்டதும் போதும்.. இனி என் வழியில் போகிறேன்.. குறுக்கே வராதே..”

மெயின் கேட்டில் டாக்ஸி நுழைவது தெரிந்தது.. வித்யா இரண்டு பெட்டிகளை எடுத்துக் கொள்ள பூர்ணிமா இரண்டு பெட்டிகளைத் தூக்கிக் கொண்டாள்..

மௌனமாய் டாக்ஸியின் டிக்கியைத் திறந்து விட்டு குகன் நிற்க பூர்ணிமா பெட்டிகளை அடுக்கினாள்.. வித்யா பின் சீட்டில் ஏறிக் கொள்ள கார் கதவின் அருகே குனிந்தவள் கூறினாள்..

“போய் வா வித்யா..” 

“திரும்பி வரவே மாட்டேன் பூர்ணி..”

“அதை இப்போதே முடிவு செய்து விடாதே..”

டாக்ஸி கிளம்பியது.. நதியோரமிருந்த பெருமாள் கோவில் அருகில் வந்ததும் டாக்ஸி நின்றது.. டிரைவரின் அருகே அமர்ந்திருந்த குகன் இறங்கி அங்கே நிறுத்தி யிருந்த அவனது பைக்கில் ஏறிக் கிளம்பினான்.. வித்யா பதறிப் போனாள்…

“குகன்.. குகன்..” என்றவாறு கார் கதவைத் திறக்க முயலும் முன் சீட்டில் இருந்த டிரைவர் இறங்கி பின் பக்கக் கதவைத் திறந்து அவளருகில் அமர்ந்தான்.. வித்யா ஹேண்ட் பேகில் இருந்த பேனாக் கத்தியை எடுக்க முயன்றாள்.. அவளது கை பிடித்து அவன் தடுத்தான்.. அந்த ஸ்பரிசம் எதையோ உணர்த்த அந்த மங்கிய நிலவின் ஒளியில் காரில் அருகே அமர்ந்திருந்தவனை வித்யா ஊன்றிப் பார்த்தாள்.. அவள் உணர்வு பொய்யுரைக்க வில்லை.. அவள் கைபிடித்திருந்தவன் நரேந்திரன்தான்.. அவள் கொதித்துப் போனாள்..

“விடுங்க என் கையை.. எவ்வளவு தைரியமிருந்தால் இவ்வளவு நடந்த பின்னாலும் என் கையை பிடிப்பீர்கள்.. என்னைத் தொட உங்களுக்கு உரிமையில்லை.. நீங்கள் யார் என்னைத் தொட..?”

பதில் சொல்லாமல் அவள் கையை விடுவிக்காமல் அவன் காரின் உள் விளக்கைப் போட்டான்..

“எங்கே இந்த வெளிச்சத்தில் என் முகத்தை நிமிர்ந்து பார்த்துச் சொல்.. உன்னைத் தொட எனக்கு உரிமை யில்லையா..? நான் உனக்கு யாரோவா..?”

வித்யா குமுறினாள்.. கண்களில் நீர் பொங்கி வழிந்தது.. சாலையில் நடந்த யாரோ காரின் வெளிச்சம் கண்டு உள்ளே பார்க்க நரேந்திரன் காரின் விளக்கை அணைத்தான்.. அவள் கரத்தைப் பிடித்த பிடியை விடாமல் மென்மையாய் பேசினான்..

“வித்யா.. உனக்குத் தெரியும்.. நான் தவறான பாதையில் போய் விட்ட தாழ்வு மனப்பான்மையில் இருந்தேன்.. நீ என்னை விட பதினைந்து வயது இளையவள் என்பது வேறு.. அப்போது எடுத்த முடிவுதான் அது..”

“நீங்கள் யார் எனக்காக முடிவு எடுக்க..?”

“நீ யார் என் துன்பத்தில் பங்கு கொள்ள..? சொல்.. எனக்காக உன் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொண்டாயே.. உனக்காக நான் முடிவு எடுக்கக் கூடாதா..?”

“அதற்காக.. அதற்காக.. உங்கள் மனைவியாய் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போய்.. நீங்கள் இப்படிச் செய்யலாமா..?”

“வித்யா..” என்று நரேந்திரன் அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.. அப்படியே குனிந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான்.. விலகவேண்டும் என்ற மனதின் கூக்குரலை மீறி வித்யா அவன் அணைப்பிற்குள் கட்டுண்டாள்.. தேம்பினாள்.. அவன் அவள் முடி கோதி ஆதரவாய் தலையில் முத்தமிட்டான்..

“கண்ணீர் விடாதே வித்யா.. நான் இக்கட்டான நிலையில் தவித்தேன் தான்.. ஆனால் எந்த நிலையிலும் உன்னை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன்..”

“பொய்.. நீங்கள் சொல்லாமலா உங்கள் அம்மா உங்கள் தம்பிக்கு என்னைப் பெண் கேட்டார்கள்..?” வித்யா விசும்பினாள்..

“சத்தியமாய் எனக்குத் தெரியாதுடா.. என்னை நம்பு.. சுரேன் கிட்ட எப்படிச் சொல்வதுன்னு சங்கடப்பட்டுக்கிட்டு இருந்தேன்.. அவ்வளவுதான்.. கல்யாணம்ன்னு வந்தால் என்னைக் கேட்காமல் செய்வார்களா..?”

“கேட்டால் மட்டும்.. ஏற்கனவே விட்டுக் கொடுத்த வர்தானே..”

“ஏண்டி.. அவள் என்ன என்னையா காதலித்தாள்..? என் தம்பியைக் காதலித்தாள்.. விட்டுக் கொடுத்தேன்.. உன்னை எப்படிடீ விட்டுக் கொடுப்பேன்..”

“இப்போது இவ்வளவு பேசுகிறவர் இரண்டு வாரமாய் என்னை அவாய்ட் பண்ணிவிட்டு உங்கள் தம்பியுடன் கோர்த்து விட்டீர்களே..”

“கோர்த்து விட்டால்.. நீ அவனுடன் சேர்ந்து போவாயா..? உன் குணம் எனக்குத் தெரியாதா தங்கம்..? சுரேன் என்கிட்ட வந்து கேட்டாண்டி.. நான் வித்யாவைக் காரில் கொண்டு போய் விடுகிறேன்னு..”

“சொன்னால் ஒத்துக் கொள்வதா..?”

“நான் எங்கேடி ஒத்துக் கொண்டேன்..? மௌனமாக இருந்தேன்.. அவன் அதைச் சம்மதம்னு நினைத்துக்கிட்டுப போயிட்டான்..”

“ஒருவேளை நான் அவருடன் காரில் போயிருந்தால்..?”

“நீ போவாயா..? அதைச் சொல் முதலில்.. வித்யா.. என் கண்மணி.. உன்னைப் பிரிந்தால் நான் செத்து விடுவேண்டி.. இன்னும் உன் கோபம் போகலைன்னா சொல்.. இந்தக் காரை அப்படியே நதியில் விட்டு விடுகிறேன்.. கார்க் கதவுகளை மூடிவிடலாம்.. நம்மை ஒன்று சேர்த்த நதியிலேயே நாம் ஒன்றாக மூழ்கிச் சாவோம்.. என்ன சொல்கிறாய்..”

வித்யா அவன் சட்டையிலேயே கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. இன்னும் அவனை நெருங்கி இறுக அணைத்துக் கொண்டாள்.. நரேந்திரன் நிம்மதி அடைந்தான்.. அவளது அணைப்பில் மனம் குளிர்ந்தவன்..

“சொல்லுடி.. என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா..? நான் விட்டு விடுவேனா..? குகன் போன் பண்ணிச் சொன்னதும் ஆடிப் போய் விட்டேன்.. வித்யா என் தவறுக்குத் தண்டனை கொடுப்பதென்றால் என்னைக் கொன்று விடு.. பிரிந்து விடாதே..” என்றான்..

அவள் பதறி அவன் வாய் பொத்தினாள்.. அந்தக் கரத்தில் அவன் இதழ் பதித்தான்.. மிஞ்சி. கெஞ்சி கடைசியில் கொஞ்சி ஓய்ந்த பின்னர் இருவரும் இறங்கி கோவிலுக்குள் சென்றனர்.. ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்ற கூறிய நாராயணன் காதலை நம்பிய அவர்கள் இருவரையும் ஆட் கொள்ளம் விதத்தில் பாதம் நோக்கி அபயக்கரம் காட்டினான்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link