Chapter 19
சந்தோஷ் வாசவியையே பார்த்துக் கொண்டிருந் தான்.. அவள் சுமதியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருப் பதையும்.. சுமதியின் ஆணவமான பேச்சுக்களை.. அலட்சியமாய் எதிர் கொள்வதையும் ரசித்துக் கொண்டிருந்தான்..
ஊடே ஓரிரு முறை சந்தோஷின் பக்கம் ஒரு வெட்டும் பார்வையைச் செலுத்திய வாசவி.. உடனே தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
வாசவியின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிக்க அவசரமாய்.. சாப்பிட்டு முடித்தேன் பேர்வழியென்று சாப்பிட்டதாய்ப் பெயர் பண்ணிவிட்டு.. எழுந்து.. கை கழுவச் சென்று விட்டாள் சுமதி..
“ஏன் அண்ணா.. இவங்களைச் சமாளிக்கத் திறமை யில்லை.. என்னைத் துணைக்குக் கூப்பிடுகிறீங்க.. இதில் அண்ணியிடம் காதல் ரசம் வேறு பிழியறீங்க.. அண்ணி..! அண்ணன் சுத்த வேஸ்ட்.. இவரிடம் போய் மயங்கு கிறீங்களே..”
“நீ வேற.. சுமதியின் முன்னால் யாராலும் தாக்குப் பிடித்து நிற்க முடியாது.. உன் ஒருத்தியினால் மட்டும் தான் முடியும்.. அவள் முன்னால் நானே வேஸ்ட்.. அப்புறம் உன் அண்ணன் எம்மாத்திரம்..”
“அடடா.. காதல் கணவரை விட்டுக் கொடுக்க மாட்டிங்களே..”
“காதல் கணவரா..?”
“ஆமாம்..”
“உன் அண்ணனையா சொல்கிறாய்..?”
“பின்னே.. வேறு யாரைச் சொல்வேன்னு நினைக்கறீங்க அண்ணி.. இது அநியாயம்.. தினமும் இரண்டு மணிநேரம் செல்போனில்.. என் அண்ணனிடம் கடலை போட்டுவிட்டு.. இப்போது போய் ஒரு கேள்வியைக் கேட்கறீங்களே..”
“இதை நான் கேட்கவில்லையம்மா..”
“வேறு யார் கேட்டது..?”
“என் கூடப் பிறந்தவள் கேட்டு விட்டுப் போகிறாள்.. எனக்கும் உன் அண்ணனுக்கும் இன்னும் கல்யாணம் நடக்கவில்லையாம்..”
“அதுதான் நடக்கப் போகிறதே..”
“அதற்கு முன்னால்.. அவர் பக்கத்தில் நான் உட்காரக் கூடாதாம்..”
“ஓஹோ.. அதற்குத்தான்.. அவங்க ஹஸ்பென்ட் கல்யாணம் ஆன பின்னாலும்.. அவங்க பக்கத்தில் உட்கார மாட்டார்ன்னு ஒரு கதையைச் சொன்னாங்களா..”
“என்னவோ.. போ வாசவி.. உன் புண்ணியத்தால் நான் இன்றைக்குத் தப்பித்தேன்..”
“என்னை நம்பினோர்.. என்றும் கைவிடப்படார்..”
வாசவி விளையாட்டாய் ஆசிர்வதிப்பது போல் கை காட்டி விட்டு எழுந்து கை கழுவச் சென்றாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுகந்தி.. பிரசன்னாவைப் பார்த்து,
“ஸ்வீட் கேர்ள்..” என்றாள்..
“இவளைத்தான் நீ பொறாமையாகப் பார்த்தாய்..!” என்றான் அவன்.
“தெரியாமல் பேசி விட்டேன். ஐ ஆம் ஸாரி..”
“அதெல்லாம் மன்னிக்க முடியாது..”
“மன்னிக்காமல் என்ன செய்வீங்க..?”
“சொல்லவா..?”
அவன் குனிந்து அவளுடைய காதில் சொன்னான்.. அவள் முகம் சிவந்தாள்..
வாசவி கை கழுவி விட்டுத் திரும்பும்போது… அருகில் கை கழுவுவது போல் வந்து நின்று சந்தோஷின் மேல் மோத இருந்து கடைசி நொடியில் விலகி நின்றாள்..
“ஐ ஆம் ஸாரி..!” என்றான் சந்தோஷ்..
அவள் அதற்குப் பதில் சொல்லாமல் சுற்று முற்றும் பார்க்கவும்.. அவனது புருவங்கள் உயர்ந்தன..
“சார்.. நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்..” என்றாள் வாசவி அவசரமான குரலில்..
‘என்ன சொல்லப் போகிறாள்..? ஏன் இந்தத் திருட்டுத் தனம்..? உன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லப் போகிறாளா..? கடைசியில் இவளும்.. என்னிட மிருக்கும்.. பணத்தைப் பார்த்து மயங்கி விட்டாளா..?”
அவனுக்குள் கசந்தது.. அவளை உதாசீனமாய் அவன் பார்ப்பதை உணராதவளாய் அவள் அவசரமாய் பேசினாள்..
“இன்றைக்குக் காலையில் நான்.. என் அண்ணியைப் பார்த்துத்தான் கண் சிமிட்டினேன்.. அவங்க பக்கத்தில் நீங்கள் வந்து நின்றது கூட எனக்குத் தெரியாது.. ஸோ.. தெரியாமல் நடந்து விட்டதை நீங்கள் மறந்து விடுங்கள்.. தயவு செய்து வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.. உங்களுக்கும் புண்ணியமாகப் போகும்..”
அவள் பேசப் பேச.. அவனுடைய முகம் மலர்ந்தது.. அவளையே அவன் ஆர்வமாகப் பார்த்தான்..
“சொல்லாமல் இருப்பதால் எனக்கு என்ன லாபம்..?”
சந்தோஷ் குறும்பாகக் கேட்க.. வாசவி செய்வதறியாது அவனை முறைத்தாள்.. அவளது முறைப்பைக் கண்டு.. அவன் இன்னும் அதிகமாய் வாய் விட்டுச் சிரித்தான்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.