Chapter 23

0Shares

வாசவிக்கு ரத்தம் உச்சந்தலையில் பாய்ந்தது போல் ‘கிர்’ரென்று ஆகிவிட்டது.. அவன் கண் சிமிட்டியதை வேறு யாரும் பார்த்து விட்டார்களோ என்ற பயத்துடன் சுற்று முற்றும் பார்த்தாள்.. எல்லோரும் திருமண வீட்டின் சூழலில் கலந்து விட்டிருந்தார்கள்..

வாசவி.. அவனுக்கு அருகில் சென்று வேறு திசையில் பார்த்துக் கொண்டு.. பல்லைக் கடித்தபடி மெதுவான குரலில் முணுமுணுத்தாள்..

“மிஸ்டர்.. நீங்கள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம்.. எனக்கு இல்லை.. ஸோ.. அடக்கி வாசியுங்க..”

“மிஸ்டரா.. என் பெயர் சந்தோஷ்..”

“அதுபாட்டுக்கு இருக்கட்டும்.. எனக்கென்ன வந்தது..”

“அப்படியா.. ஆனால் எதை அடக்கி வாசிக்கச் சொல்கிறாய்..?”

“எதையென்று தெரியாதா..?”

“தெரியவில்லையே..”

“ம்ஹூம்.. இடி மன்னன் என்றுதான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.. இப்படிக் கண் சிமிட்டுவதில் மன்னனாக இருக்கும் ஆளை இப்போதுதான் பார்க்கிறேன்..”

“இதோ பார்.. நான் சொன்ன வார்த்தை தவறாதவன்.”

“பலே..”

“கணக்கென்றால் எனக்கு மிகச் சரியாக இருக்க வேண்டும்..”

“அப்படியா..”

“நூறு என்றால் நூறுதான்..”

“ஓஹோ..”

“இதுவரை மூன்று முறை உன்னைப் பார்த்துக் கண்சிமிட்டியிருக்கிறேன்.. இன்னும் தொண்ணூற்று ஏழு.. பேலன்ஸில் இருக்கின்றது..”

“இதில் பேலன்ஸ் ஷீட் வேறா.. வெரிகுட்..”

“பின்னே.. என்னை வேறு யாரென்று நினைத்தாய்..?”

“நான் உங்களைச் சரியாகத்தான் புரிந்து வைத்திருக் கிறேன்..”

“அ…து..”

“ஆனால் மற்றவர்கள்தான் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.. உங்களைப் போய் ‘ஜென்டில் மேன்’னு பொய்யாய் நம்புகிறார்கள்..”

“நீ வேண்டுமானால்.. என் சுயரூபத்தைப் பற்றி எல்லோரிடமும் பிட்டுப் பிட்டு.. வைத்து விட்டு வா..”

“சொல்லி என்ன பிரயோஜனம்..? என் தொண்டைத் தண்ணீர்தான் வற்றும்.. ஒரு.. ஈ எறும்பு.. கூட என் பேச்சை நம்பித் தொலைக்காது..”

“ச்சோ.. ச்சோ..”

“ரொம்பவும் எனக்காகப் பரிதாபப் பட வேண்டாம்..”

“எனக்கு மனது தாங்கவில்லையே..”

“அடடா.. என்ன நடிப்பு.. என்ன நடிப்பு.. நடிகர் திலகம் கூட உங்களிடம் புதிதாய் நடிப்புக் கற்றுக் கொள்ள ஓடிவந்து விடுவார்..”

“தாராளமாய் வரட்டும்.. சொல்லித் தர நான் ரெடி..”

“ஆனால் கற்றுக் கொள்ள அவர் ரெடியில்லை..”

“ஏன்.. என்ன ஆனது..?”

“இந்தக் கொடுமையெல்லாம் வந்து விடும்ன்னுதான் ரொம்ப நாளைக்கு முன்னாலேயே.. அவர் கடவுள் கிட்ட ஓடி விட்டார்..”

“ஓ.. காட்..”

“அவர் கடவுளின் பக்கத்தில் நிம்மதியாய் இருக்கட்டும்.. விட்டு விடுங்கள்.. ஆமாம்.. பெண்ணையே நாங்கள் இன்னும்.. அழைத்து வரவில்லை.. நீங்கள் ஏன்.. முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு வந்து நிற்கிறீங்க..?”

“உன்னை வரவேற்கத்தான்..”

“ம்ஹூம்.. இப்படி ஒரு வரவேற்பு எனக்காக இந்தக் கல்யாண மண்டபத்தில் காத்திருப்பது எனக்கு முன்ன மேயே தெரிந்திருந்தால் காய்ச்சல்ன்னு இழுத்துப் போர்த்திக் கொண்டு.. வீட்டிலேயே படுத்திருப்பேன்..”

“நான் டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு உன் வீட்டிற்கே வந்திருப்பேன்..”

“அங்கேயும் என்னை விட்டு வைக்கும் எண்ண மில்லை.. போல..”

“விடுவதா.. உன்னையா.. நெவர்..”

அவன் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை ஈர்த்தது.. ஆண்மையின் கம்பீரத்துடன்.. ஆறடி உயரத்தில் நிமிர்ந்து நின்றவனின் தோற்றம் அவளை வசீகரிக்க.. அவள் அவரசமாய் விழிகளைத் திருப்பிக் கொண்டாள்..

‘சே.. என்ன நினைப்பு இது.. இவனைப் போய் சைட் அடிக்கிறேனே.. இவனிடமிருக்கும் பணத்திற்கு.. இவன் எனக்கு எட்டாக் கனி ஆயிற்றே..’ வாசவி மனதிற்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்..

“என்ன.. மனசுக்குள் எதையோ நினைக்கிறாய் போல.”

“என் மனது.. நான் எதையோ நினைக்கிறேன்.. உங்களுக்கென்ன தேவை சார்..? நீங்கள் உங்கள் மனதைப் பாருங்கள்..”

“என்னை முன்னால் வைத்துக் கொண்டு நினைத்தால் நான் என்னவென்று நினைத்துக் கொள்வது..?”

“நிச்சயமாய் உங்களை நினைக்கிறேன்னு நினைக்க வேண்டாம்..”

“எனக்கென்னவோ.. அதுதான் உண்மைன்ணு தோணுது..”

அவனது உதடுகள் சிரிக்கும்போது.. அவன் கண்களும் சேர்ந்து சிரிக்க.. வாசவி தனக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தாள்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link