Chapter 09

0Shares

‘யார் அவள்..?’

இந்தக் கேள்விதான் வர்ஷாவின் மனதில் வண்டாகக் குடைந்து கொண்டிருந்தது.. அவளைப் போன்ற ஒருத்தியின் காதல் கிடைக்க முரளிதரன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. மிகப் பெரிய கோடிஸ்வரரின் மகள் அவள்.. ஒற்றைப் பெண்.. அழகு ராணி..! படிப்பிலும் கெட்டிக்காரி..

அவளைப் போய் ஒருவன் மறுப்பதா..?

நினைத்து நினைத்து நெஞ்சம் ஆறாமல் மறுகினாள் வர்ஷா..  முரளிதரன் விலகிப் போகப் போக எப்படியும் அவனை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி அவளுக்குள் எழுந்தது.. நாளாக ஆக அந்த வெறி அதிகரித்ததே தவிர.. குறையவேயில்லை..

கிட்டாதாயின் வெட்டென மற என்ற அறிவுரைகளெல்லாம் எளிய மக்களுக்குத்தான்.. பணக்காரர்களுக்கு இல்லை.. அவர்களுக்கு நினைத்தது நடக்க வேண்டும்.. கேட்டது கிடைக்க வேண்டும்.

வர்ஷா அந்த ரகம்.. வினோத்தின் அழகும், பணமும், கல்லூரியின் கதாநாயகன் என்ற நட்சத்திர பிம்பமும் அவள் மனதை அசைக்காமல் இல்லை.. அவன் அவளைத் துரத்துவதில் அவளுக்கு உள்ளூர பெருமிதம் உண்டு.. மற்ற பெண்கள் அவனுக்காக ஏங்கும்போது அவன் வர்ஷாக்காக ஏங்குவதில் அவள் மனதில் உண்டாகும் இன்பத்திற்கு அளவேயில்லை..

அவன் அவளை அணுகிப் பேசும் தருணங்களில் எல்லாம் வர்ஷாவின் மனதில் சலனம் உண்டாகும்.. தடுமாற்றம் ஏற்படும்.. வினோத்திடம் மயங்கி விடுவாளோ என்று நடுங்கிப் போவாள்..

அப்படி அவள் அவனிடம் மயங்கி விட்டால்தான் என்ன என்று அவளது அடிமனது ஜொள்ளும்போது ஆடிப்போய் விடுவாள்..

அது அவளுக்கான இரட்டைத் தோல்வியல்லவா..? அப்புறம் முரளிதரனை எப்படி அவளால் அணுக முடியும்..? சும்மாவே அவளைத் துரத்தியடிப்பவன், இன்னொருவனின் காதலியென்றால் சும்மாவா விடுவான்..?

அவளை முரளிதரன் காதலிப்பான்.. அவள் காதலிக்க வைப்பாள் என்று தோழிகளிடம் சவால் விட்டிருக்கிறாளே.. அந்த சவால் என்ன ஆவது..? அவள் அதில் தோற்று விட மாட்டாளா..?

அதுபோல வினோத்தைத் திரும்பியும் பார்க்க மாட்டேன் என்று தோழிகளின் முன்னால் அவள் காட்டிக் கொண்டிருக்கும் பிகு என்ன ஆவது..? இவ்வளவுதான் நீ.. என்று அவர்கள் அவளைப் பார்த்து எள்ளி நகையாட மாட்டார்களா..?

இதனால்தான்.. இந்த இரட்டைத் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான்.. தோழிகளிடம் விட்ட சவாலில் தோற்றுப் போய் விடக்கூடாது என்ற அச்சத்தினால்தான் வர்ஷா வினாத்தைக் கண்டாலே தலை தெறிக்க ஓடினாள்..

அப்படியும் தப்பிக்க முடியாமல் இதுபோன்ற தருணங்கள் வாய்த்துத் தொலைத்து அவனிடம் மாட்டித் தொலைத்து விடுகிறாள்..

“ஷட் அப் வினோத்..” அவள் படபடத்தாள்..

“ரிலாக்ஸ்..! இந்த டென்சன் எதற்கு..? உன் மனதில இருக்கிறதை நான் சொல்லிட்டேன்னு டென்சனாகிறயா..?” அவன் அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்..

“சேலன்ஜீக்காக வாழ்க்கையைப் பணயம் வைக்கிற ஆள் நானில்லை..”

கவனமாக அவனது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி சஞ்சலத்துடன் சொன்னவளை கேலியாகப் பார்த்தவன்..

“ஊஹீம்..?” என்று நம்பாததொனியில் சொன்னான்..

வர்ஷாவுக்குச் சீற்றம் வந்தது.. அவளைப் பார்த்து அவன் நகைப்பதைப் போல உணர்ந்தாள்.. கோபத்துடன் ஏதோ சொல்ல நினைத்து அவனைப் பார்த்தவள் அவனது மேயும் பார்வையில் அவசரமாகப் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்..

அங்குலம், அங்குலமாக அவள் மேனியில் அவனது பார்வை ஊர்ந்து கொண்டிருக்கும் உணர்வில் அவளது மனம் படபடவென அடித்துக் கொண்டது.

“உன் மனதைக் கேட்டுப்பார் வர்ஷா.. அது உனக்கு உண்மையைச் சொல்லும்.. நீ சொல்வது பொய்யின்னு சொல்லும்.. வாழ்க்கையென்ன விளையாட்டா வர்ஷா..? முரளிதரனைப் போன்ற ஒரு சீரியஸான மனிதருடன் ஒரு நாளாவது உன்னால் வாழ்ந்து விட முடியுமா வர்ஷா..?”

வினோத்தின் பொட்டில் அடித்தது போன்ற நேரடியான கேள்வியில் அவளுக்குத் ‘திக்’கென ஆகிவிட்டது.

‘இவன் என்ன இப்படிச் சொல்கிறான்.. மனதைப் படிக்கும் வித்தை இவனுக்குத் தெரியுமா..?’

சம்சயத்துடன் அவனை ஊன்றிப் பார்த்தாள் வர்ஷா.. அவளது விழிகளில் தெரிந்த கலக்கத்தில் அவன் இரக்கம் கொண்டான்.

‘இவள் ஒரு குழந்தை..’

அவளது குழந்தைத்தனம் அவளை எந்த அளவுக்குக் கொண்டு செழுத்தியிருக்கிறது என்ற வேதனையுடன் அவன் பார்த்த பார்வையில் உதட்டைக் கடித்தாள் வர்ஷா.

அந்த பயம் அவளுக்கும் உண்டு.. எப்போது பார்த்தாலும் முகத்தில் முள்ளைக் கட்டிக் கொண்டிருக்கும் முரளிதரனுடன் அவள் வாழ நேர்ந்தால் அந்த வாழ்வு வாழ்வாக இருக்குமா என்ற பயம் அவளை அரித்துக் கொண்டுதான் இருந்தது.

அவளுக்கு முரளிதரனைப் பிடிக்கும்தான்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்தான்.. அது காதலா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவாள்.

ஏனென்றால் அவளுக்கு வினோத்தையும் பிடித்திருந்தது.. அது காதலா என்று கேட்டுப் பார்ப்பதை அவள் தவிர்த்தாள்.. அது காதல்தான் என்று அவளது மனம் உணர்த்தி விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பே அந்த தப்பித்தலுக்கான காரணம்.. 

“ஆன்சர் பண்ணு வர்ஷா..”

“நீங்க கேட்கிற அபத்தமான கொஸ்டினுக்கெல்லாம் நான் ஆன்சர் பண்ணனுமா என்ன..?”

“அபத்தத்தைப் பத்தி நீ பேசறியா..? ஒரு மனிதர் பெண்களையே திரும்பிப் பார்க்காதவரா இருந்தா அவர் அப்படி இருக்கிறதான்னு அவரை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்கியே.. இது அபத்தம்ன்னு உனக்குத் தோணலையா..? டீஸண்டான லெக்சரரை ஸ்டூடண்டைக் காதலிக்க வைக்கறேன்னு சேலன்ஜ் விட்டிருக்கியே.. இது அபத்தமில்லையா..?”

“தௌசண்ட் டைம் சொல்லிட்டேன்.. ஐ லவ் ஹிம்ன்னு..”

“நான் கோடிதடவை சொல்லிட்டேன்.. உனக்கு அவர் மேல இருக்கிறது ஒர்விதமான அட்ராக்சன் மட்டும்தான்னு..”

“திஸ் இஸ் யுவர் லிமிட்..”

“லிமிட்டைக் கிராஸ் பண்ணி முரளிதரன் சாரின் வீடு வரைக்கும் போய் நிற்கிறது நீதான்..”

“இது என்னோட லைஃப் மேன்.. அவர் வீடு வரைக்கும் போகிறது என் பிராப்ளம்.. இதில அன்னெசஸரியா நீயேன் மூக்கை நுழைக்கிற..?”

வர்ஷா ஏகவசனத்தில் பேச, அதையும் ரசித்தான் வினோத்..

“இதுவும் நல்லாத்தானிருக்கு..” என்றான்..

“எது..?” அவள் விழிகளைச் சுழற்றி அவனைப் பார்த்ததில் மயக்கம் வருவதைப் போல பாவனை செய்தான்.

“போடா..”

அவனைத் துரத்துவதைப் போலக் கையை நீட்டி விட்டு வர்ஷா காரில் ஏறிக் கொண்டாள்.. தள்ளி நின்ற தோழிகளிடம்..

“காரில் ஏறிக்கறிங்களா.. இல்லை.. விட்டுட்டுப் போகவா..?” என்று அவள் மிரட்டியதில்..

“வேணாம்.. வேணாம்..” என்று அலறியடித்துக் கொண்டு அவர்கள் காரில் ஏறினார்கள்.

காரைக் கிளப்பும்போது வர்ஷா வினோத்தைப் பார்க்க அவன் இமையைச் சிமிட்டினான்.. தடுமாறிப் போனவர்ஷா ஆக்சிலேட்டரை அடுத்த கார் அதிவிரைவாகப் பறந்தது.

“போற வழியில யார் மேலயாவது மோதி வைக்கப் போறா..” என்றபடி பக்கத்தில் வந்து நின்றான் ரமேஷ்.

“தின்னு முடிச்சிட்டயா..?” வினோத் விசாரித்தான்..

“நீ வர்ஷாவை விரட்டி முடிச்சிட்டயா..?” பதிலுக்கு ரமேஷீம் விசாரித்தான்..

“முடிவேயில்லாத விரட்டல்டா இது..”

வினோத் காரைக் கிளப்ப.. ஏப்பம் விட்டபடி அவன் பக்கத்தில் உட்கார்ந்த ரமேஷ் வினோத்தின் பர்ஸை நீட்டினான்.

“என்னடா இது.. கொடுக்கிறப்ப பிரெக்னென்ட் லேடி மாதிரி பர்ஸ் வீங்கியிருந்துச்சு.. இப்ப என்னடான்னா ஒட்டிப் போய் இருக்குது..?” கிண்டலாகக் கேட்டபடி பர்ஸை வாங்கிக் கொண்டான் வினோத்.

“அதுவாடா வினோத்.. நீ வர்ஷாகிட்ட கடலை போட டைம் கொடுக்கனும்னு அடுத்ததா பல, சில வெரைட்டிகளை ஆர்டர் பண்ணித்தின்னேனா.. பர்ஸ் இளைச்சுப் போச்சு..”

சிநேகிதன் சொன்ன விளக்கத்திற்கு சிரித்தபடி காரை ஓட்ட ஆரம்பித்தான் வினோத்.

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link