Chapter 21

0Shares

“முரளி என் மேல உயிரையே வைத்திருக்கார் மேம்.. அவர் காதலை நான் ஏத்துக்கிட்டதில அத்தனை பிரமிப்பு.. காலேஜோட பியூட்டி குவின் நீ.. வயது வித்தியாசம் பார்க்காம என் காதலை அக்செப்ட் பண்ணிக்கிட்டயேன்னு மகிழ்ந்து போனார்.. 

இதுக்கு முன்னாலே காலேஜ் டேஸில எனக்கொரு லவ் பிளாஸ்பேக் இருக்குது.. நல்லவேளை.. அது பிரேக்-அப் ஆகிருச்சு.. இல்லைன்னா இப்படியொரு அழகுராணி எனக்குக் கிடைச்சிருப்பாளா..? என் லைஃப் உப்புச் சப்பில்லாம ஆகியிருக்கும்ன்னு அடிக்கடி சொல்வார்.. அந்த உப்புச் சப்பில்லாத காதலில் வந்த காதலி நீங்கதான்னு எனக்குத் தெரியாது.. உங்களைப் பார்த்ததுமே முரளி மூட்-அவுட் ஆகிட்டார்.. என்ன வர்ஷா.. நாம சந்தோசமா வாழ நினைக்கிறப்ப இவ வந்து நிற்கிறான்னு என்கிட்டச் சொல்லிச்சொல்லி வருத்தப்பட்டார்..”

இதே ரீதியில் வர்ஷா கதை பினைந்து கொண்டே போக.. தாங்க முடியாத தலைவேதனைக்கு ஆளான பாரதி..

“போதும் வர்ஷா.. உன் லவ் ஸ்டோரியில் எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லை.. இதைச் சொல்லவா என்னைத் தேடி வந்த..?” என்று கேட்டு விட்டாள்..

“நோ மேம்.. எங்க லவ் ஸ்டோரியில இண்டர்பியர் ஆகாம விலகிப் போங்கன்னு கேட்டுக்க வந்தேன் மேம்..” இமைகளைக் கசக்கினாள் வர்ஷா.

“புரியலை..”

“நீங்க சந்தோசமா இருந்தாத்தான் நாங்க சந்தோசமா இருக்க முடியும் மேம்.. ஐ மீன்.. உங்க ஃபேமிலி லைஃபில ஏதும் டிராஜடி இருந்தா முரளிகிட்ட அதை ஷேர் பண்ணி அவரோட மன நிம்மதியைக் கெடுத்துராதீங்க மேம்.. உங்க பிராப்ளம்ஸை நீங்களே ஷால்வ் பண்ணிக்கங்க.. அதுதான் நியாயம்.. உங்களாலே எங்க சந்தோசத்துக்கு டிஸ்டர்ப் வந்துரக் கூடாது..”

இரக்கமில்லாத வர்ஷாவின் வேண்டுகோளுக்கு சரியென்பதைப் போல உயிர்ப்பில்லாமல் தலையை அசைத்தாள் பாரதி..

“நம்பலாமில்ல மேம்..”

பாரதியை வாயைத் திறந்து பேச வைக்காமல் எழுந்து போகப் போவதில்லை என்ற குறிக்கோளுடன் குரூரமாக அவளை வற்புறுத்தினாள் வர்ஷா..

“நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை..”

விரக்தியுடன் சொன்னாள் பாரதி.. வர்ஷாக்கு ‘சுளீர்’ என்று சாட்டையடி பட்டதைப் போல இருந்தது.. அவளைத்தான் பாரதி சொல்கிறாளோ என்று சந்தேகித்தாள்..

‘சேச்சே இருக்காது.. என்னைப் பற்றி இவளுக்கென்ன தெரியும்.. சும்மா எதையோ சொல்கிறாள்..’ சமாளித்துக் கொண்டாள்..

“என்னால் முரளிக்கு எந்தக் கஷ்டமும் வராது வர்ஷா..”

‘அதென்ன முரளிக்கு மட்டும் கஷ்டம் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறாள்.. அப்ப எனக்குக் கஷ்டம் கொடுப்பாளா..?’ வெகுண்டாள் வர்ஷா..

“எனக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது மேம்..” அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்..

“முரளி வேற, நீ வேற இல்லைன்னு நீதான சொன்ன..?”

தீர்க்கமாக வர்ஷாவைப் பார்த்தபடி கேட்டாள் பாரதி.. அவளது பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாமல் அவசரமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் வர்ஷா.. அவளது உடல் நடுங்கியது.. அங்கிருந்து ஓடிப் போய் விட வேண்டும் போல இருந்தது.. அவசரமாக எழுந்து கொண்டாள்..

“தேங்க்ஸ் அண்ட் பை மேம்..”

பாரதி தலையைக் கூட அசைக்காமல் வர்ஷாவை வெறித்துப் பார்த்தாள்.. அந்தப் பார்வையிலிருந்த வெறுமையில் வர்ஷாவின் ஆழ்மனம் அதிர்ந்தது..

அனைத்தையும் தொலைத்து விட்டதைப் போன்ற நிராதரவான பார்வை அது.. வர்ஷாவுக்குள் பூகம்பம் வந்தது.. அங்கிருந்து வெளியேறி விட்டாள்.. பாரதி சரிந்து அமர்ந்து இமைகளை மூடினாள்.. மூடிய இமைகளுக்குள் முரளிதரன் வந்து நின்றான்..

“நீ கிடைக்கவே மாட்டேன்னு நினைச்சிருந்தேன் பாரதி.. முழுசா என் முன்னாலே வந்து நிற்கிற.. என் கண்களை நம்ப முடியல பாரதி.. இது நீதானா..?”

அந்த முரளிதரன் பாதியை மறந்து விட்டு வர்ஷாவைத் காதலித்திருப்பானா..? பாரதியால் நம்ப முடியவில்லை.. ஆனால் வர்ஷா பாரதியின் வீடு தேடிவந்து முரளிதரனைக் காதலிப்பதாகச் சொல்கிறாளே.. அதை நம்பினாள்..

“ஏன் வந்த பாரதி..? என் அண்ணன் இருக்குதா, செத்துருச்சான்னு பார்க்க வந்தியா..?”

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தற்செயலாக சந்தித்த மாளவிகா பொருமினாளே.. வர்ஷாவைப் பற்றிச் சொன்னாளே..

“உன்னையும், என்னையும் விட வயசில சின்னப் பொண்ணு.. காலேஜிலேயே அவதான் பேரழகி.. கோடிஸ்வர வீட்டுப் பொண்ணு.. ஒட்டு மொத்தச் சொத்துக்கும் ஒரே வாரிசு.. என் அண்ணன்தான் வேணும்ன்னு ஒற்றைக் காலில தவம் செய்யறா.. என் அண்ணனைக் காதலிக்கிறா.. அவனுக்கு நல்லது நடக்கனும்னு நாங்க வேண்டிக்கிட்டு இருக்கிறப்ப எங்கேயிருந்து நீ வந்த பாரதி..?”

மாளவிகா சொன்ன பெண் வர்ஷாதானா..?

இமைகளை மூடி ஆழ்ந்து சிந்தித்த பாரதியின் சிந்தனையைக் கலைப்பதைப் போல அலறியது காலிங் பெல்..

தளர்வாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்..

“ஹாய் பாரதி..” மயக்கும் சிரிப்புடன் நின்றிருந்தான் முரளிதரன்..

வரிசைப் பற்கள் தெரியச் சிரித்த அவன் வனப்பில் மயங்கிப் போனவளாக அவனையே ஆழ்ந்து பார்த்தபடி அசையாமல் நின்றாள் பாரதி.. எவனைக் காண வேண்டும் என்று அவள் ஓடி வந்தாளோ.. எவன் மார்பில் முகம் புதைத்து ஆறுதல் பெற வேண்டுமென்று தவித்திருந்தாளோ.. எவன் தோள்களைத் தழுவ வேண்டுமென்று துடித்திருந்தாளோ.. அந்த முரளிதரன் மோகனப் புன்னகையுடன் எதிரே நின்றான்..

நினைத்தபடி அவனைத் தொட்டுத் தழுவி கட்டியணைக்க முடியாமல் தொய்வாக வழி விட்டு விலகி நின்றாள் பாரதி..

“வாட் ஹேப்பன்..?” இமைகளை உயர்த்தியபடி உள்ளே வந்த முரளிதரன்..

“மகிழம்பூ மரம் உன் வீட்டை அடையாளம் காட்டிருச்சு பாரதி.. நம்மால மகிழம்பூ மரத்தடியை மறக்க முடியாதில்ல..” என்று விழிகள் பளபளக்கக் கேட்டான்..

சடாரென இமைகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள் பாரதி..

‘இவனா என்னை மறந்து வர்ஷாவைக் காதலித்திருப்பான்..?’

மனம் வலிக்க உள்ளே போனாள்.. தொடர்ந்து வந்த முரளிதரனுக்கு சோபாவைக் காட்டி விட்டு காபி கலக்க சமையலறைக்குப் போனாள்.. ஸ்டவ்வை பற்ற வைத்து பால் பாத்திரத்தை தணல் மீது வைத்து விட்டுத் திரும்பியவளின் இடையை வளைத்தன வலிமையான கரங்கள்..

“முரளி..?”

ரோமம் அடர்ந்த அவன் கரங்களை பலவீனமாக விலக்க முயன்றாள்.. பலனில்லை.. அவளைத் திருப்பித் தன்னுடன் ஆவேசமாக இறுக்கிக் கொண்டவனின் அணைப்பில் கட்டுண்டு நின்று விட்டாள்..

இத்தனை காலமாக இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போல இறுக்கித் தழுவி அவள் முகமெங்கும் ஆவேச முத்தங்களைப் பதித்துக் கொண்டிருந்தான் முரளிதரன்.. விடுபட முடியாமல் அவன் கைகளுக்குள் இளகி நின்றாள் பாரதி.. அவளைத் தழுவிய கைகளுக்குள் குழைந்தாள்.. அவனது ஆவேச முத்தங்களுக்கு ஆட்பட்டாள்.. அவளைத் தேடிய கைகளுக்குள் அடங்கினாள்..

கொதித்து எழுந்த பால்.. பாரதி வீசிய குளிர் தண்ணிர் பட்டு சலசலத்தது.. அவள் காபி கலக்குவதை சொந்தத்துடன் பார்த்தபடி நின்றிருந்த முரளிதரனை ஏக்கத்துடன் பார்த்தாள் பாரதி.. அவளது கைவிரல் பட்டுக் கலைந்த தலைமுடி நெற்றியில் பட்டுச் சிலும்பியிருந்தது.. அவளை அணைத்து இறுக்கியதில் அவனது சட்டை கசங்கியிருந்தது.. அந்தச் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்தால் அவன் எப்படிப் பரவசப்பட்டுப் போவான் என்று இயலாமையுடன் நினைத்துக் கொண்டாள் பாரதி..

கசங்கிய ஓவியம் போல.. அவனது முத்தங்களால் முகம் சிவந்து.. சேலை கசங்கி.. வியர்வைத் துளிகளுடன் நின்றவளைக் கசக்கி முகர வேண்டும் போன்ற வேட்கை அவனுக்குள் கிளர்ந்தது.. அவளை நெருங்கினான்..

“முரளி ப்ளீஸ்..” பலவீனமாக கெஞ்சினாள் பாரதி..

ஓர் ஆழ்ந்த முத்தத்துடன் அவளை விடுவித்தான் முரளி.. காபிக் கோப்பைகளுடன் ஹாலுக்குப் போய் விட்டாள் பாரதி..

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link