Chapter 22

0Shares

இப்படிப்பட்டக் காதலை பிரதிபலிப்பவனா பாரதியை மறந்திருப்பான்..?

‘ஆனால் வர்ஷா..?’

இதுதான் பாரதியின் மன வேதனையாக இருந்தது.. காதல் தோல்வி எத்தகைய மனவலியைத் தரும் என்பதை அவளைவிட உணர்ந்தவர்கள் உண்டா..? அந்த வலியை வர்ஷாவும் அனுபவிக்க வேண்டுமா..?

“என்ன யோசனை..?”

உல்லாச சிரிப்புடன் அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் முரளிதரன்.. பாரதி நகர்ந்து உட்கார்ந்தாள்..

“ஏன் பாரதி..?” முரளிதரன் உறுமினான்..

“எனக்கு மனசை அடக்கத் தெரியலை முரளி.. உங்க மேல இருந்த காதலில எங்கே கண்ட்ரோலை மீறிருவேனோன்னு பயமாய் இருக்கு..” அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் பாரதி..

“இருந்த காதலா..? அப்படின்னா இப்ப என்மேல உனக்குக் காதல் இல்லைங்கறியா..?” முரளியின் பார்வை கூர்மையானது..

“இருக்கறதில பிரயோஜனமில்லைங்கறேன்..” பாரதியின் குரலில் உறுதி இருந்தது..

“ஏன்..?” சீறினான் முரளிதரன்..

“ஏன்னா..” பாரதியின் குரல் நடுங்கியது..

தன்னை திடப் படுத்திக் கொள்ள முயன்றவளை உக்கிரமாகப் பார்த்தான் முரளிதரன்..

“ஏன்னான்னு ஏன் இழுக்கிற பாரதி..? என் தலையில எந்தக் கல்லைத் தூக்கிப் போடப் போற..? இதே போலதான் அன்றைக் கொரு நாள் இழுவையாய் இழுத்த.. என்னன்னு பார்த்தா உன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டின.. இப்ப என்ன செய்யலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கிற..?”

“முரளி..”

“சொல்லு பாரதி.. நீ எதைச் சொன்னாலும் கேட்டுக்கத்தான் இந்தக் கேணையன் இருக்கானே..”

“என் ஹஸ்பெண்ட் என்னைப் பார்க்க வந்துக்கிட்டு இருக்கார்..”

“என்னது..?”

முரளியின் முகம் பயங்கரமாக மாறியது.. அவன் முகத்தைக் கண்கொண்டுப் பார்க்கும் தைரியமில்லாமல் விரல்கள் நடுங்க விரல்களைக் கோர்த்துக் கோர்த்துப் பிரித்தபடி தலையைக் குனிந்து கொண்டாள் பாரதி..

“உங்களுக்காகத்தான் வந்திருக்கேன்னு சொன்னியே பாரதி..”

“ஆமாம்.. நான் உங்களுக்காகத்தான் வந்திருக்கேன்.. உங்களை பார்த்துப் பேசனும் போல இருந்தது.. அதான் இந்தியாவுக்கு வந்தேன்.. உங்களையும் பார்த்துட்டேன்.. இனிக் கிளம்ப வேண்டியதுதான்..”

இமைகள் படபடக்க, உதடுகள் துடிக்கச் சொன்னவளை உன்னிப்பாக பார்த்த முரளிதரன்.

“இல்லையே.. எங்கேயோ இடிக்குதே..” என்றான்..

“என்.. என்.. என்ன இடிக்குது..?” குழறினாள் பாரதி..

“உங்ககூட வாழ்கிறதுதான் வாழ்வு.. அதுக்காகத்தான் வந்திருக்கேன்னு சொன்னியே.. அதுக்கென்ன அர்த்தம்..?”

“என் ஹஸ்பெண்ட்டுக்கும் எனக்கும் சண்டை.. டைவர்ஸ் வாங்கிக்கலாம்ன்னு நினைச்சோம்.. நான் இந்தியாவுக்குப் போறேன்.. டைவர்ஸ் கிடைச்சதும் சொல்லுங்கன்னு பேப்பர்ஸில சைன் பண்ணிட்டு வந்துட்டேன்.. அதனால உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு பிளான் பண்ணினேன்.. பட்.. மனோஜீக்கு என்னை டைவர்ஸ் பண்றதில இஷ்டமில்லை..”

“மனோஜா..? யார் அது..?”

“என் ஹஸ்பெண்ட்..”

“ஓ..!”

“அவர் டைவர்ஸ் பேப்பர்ஸை கோர்ட்டில் சப்மிட் பண்ணவே இல்லையாம்.. நீயில்லாத வாழ்வு, வாழ்வான்னு கேட்கிறார்..”

“அதனால உங்ககூட வாழ்கிறதுதான் வாழ்வுன்னு என்னிடம் சொன்னதை ஏறக்கட்டிட்ட..?”

“ம்ம்ம்.. என்னதான் இருந்தாலும் மனோஜ் எனக்கு ஹஸ்பெண்ட்.. இத்தனை காலமா சேர்ந்து வாழ்ந்திருக்கோம்.. அந்த வாழ்க்கைக்கான மரியாதையை நான் கொடுக்கனுமில்ல..?”

“என் காதல்..? அதுக்கான மரியாதை எங்கே பாரதி..?”

“இதுதான் விதி முரளி.. நாம சேரக் கூடாதுங்கிறதுதான் நம்ம தலைவிதி.. இதை மாத்த நம்மால முடியாது முரளி.. போயிருங்க.. தயவு செய்து போயிருங்க.. லீவ் மி அலோன் ப்ளீஸ்..”

பாரதி கைகளால் முகத்தை மூடிக் கொண்டு கதற ஆரம்பித்தாள்.. அசையாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்த முரளிதரனின் முகத்தில் நிராசை வந்தது.. மெதுவான நடையுடன் வெளியேறினான்.. காரில் ஏறித் தாறுமாறாய் ஓட்ட ஆரம்பித்தான்.. மயிரிழையில் மோத இருந்து விலகிச் சென்றக் காரைப் பார்த்துக் கை நீட்டி திட்ட ஆரம்பித்த வினோத் பாதியிலேயே திட்டை நிறுத்திவிட..

“வாய் வலிக்குதாடா..? நான் வேணும்னா கண்டினியூ பண்ணவா..?” என்று கசரிசனமாகக் கேட்டான் ரமேஷ்..

“டேய்.. அந்தக் காரை ஓட்டிக்கிட்டுப் போகிறது யாருங்கிற..?”

“யாருன்னு நான் சொல்லலையேடா..”

“அடிங்.. அது நம்ம முரளிதரன் சாருடா..”

“இதப் பாருடா.. பாரதி மேம் வீடு வரைக்கும் வந்துட்டாரா..?”

“வந்தவர் ஏண்டா இப்படிக் காரை ஓட்டிக்கிட்டுப் போறாரு..?”

“அதானே..? பாரதி மேம் காருண்யவதியாச்சே.. அவங்களாலே இந்த டென்சன் பார்ட்டி புத்தராத்தானே ஆகனும்..? டெர்ரரா ஆகக் கூடாதே..”

“வா.. மேம்கிட்ட என்னன்னு விசாரிப்போம்..”

வினோத்தும், ரமேஷீம் வீட்டுக்குள் போன போது சோபாவில் சுருண்டு கதறி அழுது கொண்டிருந்தாள் பாரதி.. நண்பர்கள் இருவரும் பதறிப் போனவர்களாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..

“என்னடா இது..? மேம் இப்படி அழுதுக்கிட்டு இருக்காங்க..?”

“டென்சன் பிடிச்ச மனுசன் என்ன பண்ணித் தொலைத்தாரோ.. ரேப், கீப்ன்னு டிரை பண்ணியிருப்பாரோ..?”

“உன்னைக் கொல்லப் போறேண்டா..”

“ஒரு கெஸ்ஸிங்தான் வினோத்..”

“நீயும், உன் கெஸ்ஸிங்கும்.. தூ.. வாயை மூடிக்கிட்டு வா..”

வினோத் பாரதி சுருண்டிருந்த சோபாவின் பக்கத்தில் போய் நின்று மெதுவான குரலில்..

“மேம்..” என்று அழைத்தான்..

விரல்களுக்கிடையில் வினோத்தின் முகத்தைப் பார்த்த பாரதி எழுந்து உட்கார்ந்தாள்.. அவளது முகம் கண்ணீரில் நனைந்திருந்ததைக் கவலையுடன் பார்த்தான் வினோத்..

“என்ன ஆச்சு மேம்..?”

“முரளி வந்திருந்தார்..”

“வர்ற வழியில் பார்த்தோம் மேம்.. ரேஷ் டிரைவிங்.. கண்மண் தெரியாம குடிகாரன் காரை ஓட்டிக்கிட்டுப் போகிறதைப் போல ஓட்டிக்கிட்டுப் போறார்..”

“வினோத்தோட கார் மேல மோத வந்திட்டார் மேம்.. ஹேர் கேப்பில தப்பிப் பிழைச்சோம்..” என்று சொல்லிவிட்டு வினோத்தின் கண்டன முறைப்புக்கு ஆளான ரமேஷ்..

“உண்மையைத்தானேடா சொன்னேன்..?” என்று முறையிட்டான்..

“நீ பெரிய உண்மை விளம்பி..! வாயை மூடு..”

“இதையே சொல்லு..”

மனத்தாங்கலுடன் உட்கார்ந்தான் ரமேஷ்.. வினோத் அதற்கும் முறைத்ததில்..

“கால் வலிக்குதுடா..” என்றான்..

“உட்கார் வினோத்..” குரல் கம்மச் சொன்னாள் பாரதி..

“இந்தா.. மேமே சொல்லிட்டாங்க பார்த்தியா.. நீயும் உட்காரு..”

ரமேஷ் இடம் கொடுப்பவனைப் போல நகர்ந்து கொள்ள.. இருக்குடா உனக்கு என்று கருவியபடி பக்கத்தில் உட்கார்ந்தான் வினோத்..

“என்ன சாப்பிடறிங்க..?” எழுந்து கொள்ள முயன்றாள் பாரதி.

“ஆப்பிள் ஜீஸ்..” என்று சொல்லி விட்டுத் தொடையில் வினோத் கொடுத்த அறையை வாங்கிக் கட்டிக் கொண்டான் ரமேஷ்.

“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க மேம்.. ஜீஸ் குடிக்கிற மூடில நாங்க இல்ல..” கண்டிப்புடன் கேட்டான் வினோத்..

அவனுடைய உரிமையான கண்ட்டிப்பில் நெகிழ்ந்தாள் பாரதி.. உயிர்ப்பற்ற குரலுடன்..

“என்னைப் பார்க்க என் ஹஸ்பெண்ட் வந்துக்கிட்டு இருக்கார்ன்னு முரளியிடம் சொன்னேன்..” என்று முணுமுணுத்தாள்..

“மேம்..?” வினோத் அதிர்ச்சியானான்..

“வர்ஷான்னு ஒரு பொண்ணு.. தேர்ட் இயர் படிக்கிறா..”

“தெரியும்.. சொல்லுங்க..”

“அவ இங்கே வந்திருந்தா வினோத்.. முரளியோட சிஸ்டர் மாளவிகா ஏற்கனெவே அவளைப் பத்திச் சொல்லியிருக்கா..”

நைந்த குரலில் ஆரம்பித்த பாரதி நடந்த நிகழ்வுகளை ஒப்பித்து முடித்தாள்.. கேட்கக் கேட்க வினோத்தின் முகம் கனன்றது.. ரமேஷ்கூட ஆப்பிள் ஜீஸை மறந்து போனவனாக..

“என்னடா வினோத் இது..? அநியாயமா இருக்கு..” என்று அங்கலாய்த்தான்..

முரளியைப் போல வினோத்தும் வேகமாக வெளியேற ரமேஷ் அவனைத் தொடர்ந்து ஓடிக் காரில் தொற்றிக் கொண்டான்..

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link