Chapter 20
சுசரிதா கிளர்ச்சியுடன் சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.. அவன் பார்வை அங்குலம் அங்குலமாக அவள் உடலை மேய்ந்ததில் வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது.. சும்மாவே அவன் அவளை மேய்ச்சல் நிலத்தைப் போலதான் பார்த்து வைப்பான்.. இப்போதோ அவனுக்கு லைசென்ஸ் கிடைத்து விட்டது.. கணவன் என்ற லைசென்ஸ்.. அந்த உரிமைப் பட்டயம் புதுத்தாலியாக அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது..
இப்போது சும்மாவா இருப்பான்..?
அவள் மனம் எதிர்பார்ப்பில் தோய்ந்திருந்தது.. அருகில் நெருங்கும் அவன் காலடியோசையில் அவள் மனம் படபடத்தது.. புதுமணப் பெண்ணின் அத்தனை உணர்வுகளையும் அனுபவித்த சுசரிதாவிற்கு அந்த உணர்வுகளின் கனம் மாமலைபோல அவள் மீது ஏறி அமர்ந்து விட்டதைப் போல தோன்றியது.. அவன் அவளை நெருங்க நெருங்க.. அவளின் இதயத்தின் தடதடப்பு அதிகரித்தது.. அடுத்த அடியை அவன் எடுத்து வைக்க.. வைக்க.. அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது..
அவன் அவளை நெருங்கினான்.. பின்னேறிச் சென்றவள் சுவரில் சாய்ந்து நின்றபோது அவளது இருபக்கம் கைகளை ஊன்றி அவளைச் சிறைபிடித்தான்.. அசைந்தால் அவன்மீது உராய வேண்டிய நிலையில் அவனது மூச்சுக்காற்று அவளை அடித்துச் சென்றது.. புயல் போன்ற சீற்றத்தை அவனது மூச்சுக் காற்றில் அவள் உணர்ந்தாள்..
“எதுக்குடி இழுத்துப் போர்த்திக்கிட்டு நிக்கிற..?”
அவனது கிறக்கமான விழிகள் சேலையைத் தாண்டி எக்ஸ்ரேயைப் போல அவள் உடலை ஊடுறிவிச் சென்று ஆராய ஆரம்பித்தன.. கம்மங் கொல்லையை பார்த்து விட்ட காய்ந்த மாட்டை அவன் கண்ணில் பார்த்தவள் சேலையை இன்னும் அதிகமாக இழுத்துக் கொள்ள முயன்று அசைந்தாள்.. அதில் படிந்த அவளுடலில் அவன் கண்களை மூடி..
“ஹ..” என்று கிறங்கிப் போனான்..
அவளது உடலின் பரிணாமங்களை உணர்ந்த அவனது உடல் விருப்பத்துடன் அவளது உராய்வினை ஏற்று அவள்மீது அழுந்திச்சாய்ந்தது.. சுசரிதா அசைய முடியாத நிலையில் அகப்பட்டுக் கொண்டாள்..
மோகனின் கைகள் அவளது சேலையின் முந்தானையை தேடிப் பிடித்தன.. தோளில் இருந்து விலகிய முந்தானை அவன் முகம் மூடி தோல்வியை ஒப்புக் கொண்டதில் சுசரிதா கண்மூடி சாய்ந்து விட்டாள்.. அவனது ஸ்பரிசத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. பொங்கும் உணர்வின் அலைகள் அவளை ஆக்டோபஸைப் போல ஆக்ரமித்ததில் விடுபட முடியாமல் அதன் ஆழத்தில் அவள் அமிழ ஆரம்பித்தாள்..
அவள் தொய்ந்து கொண்டிருப்பதை அறிந்த மோகன் அவள்மீது சாய்வதைப் போல அவளை அவன்மீது சாய்த்து அணைத்துக் கொண்டான்..
அவளது உச்சந்தலையில் பதிந்த அவனது உதடுகளின் வெப்பத்தில் அவளது பரிபூரண தோல்வியை உணர்ந்தாள் சுசரிதா.. அவளது பலகீனமான வெறுப்பு தனது பொய் முகமூடியிலிருந்து வெளிவந்து பின்வாங்கி மறைந்து காணாமல் போய் விட்டது.. நடுங்கிய அவளது உடல் அந்த வேட்டைக்காரனின் கைகளில் முழுவதுமாக தன்னை ஒப்புக் கொடுத்திருந்தது..
அதை உணர்ந்திருந்த அவன் அவளை முழுமையாக ஆக்ரமிக்கத் தொடங்கினான்.. தன் வெற்றியை அவன் பறைசாற்றவில்லை.. ஆனால் அவளை வெற்றி கொள்வதில் படு முனைப்பாக இருந்தான்..
அவனது உதடுகள் இறங்கி அவள் நெற்றியில் முத்தமிட்டபோது அவளுக்குள் ‘ஜிவ்’வென்ற ஓர் உணர்வு தோன்றி மயங்க வைத்தது.. அதை உணர்ந்து கொண்டவன் போல அவள் தோள் தடவி தழுவிய அவனது கைகள் அவளை ஆதரவாக தாங்கிப் பிடித்துக் கொண்டன… அவளது கன்னத்தில் அவன் முத்தமிட்டபோது தொய்ந்திருந்த அவள் கைகள் அவன் பட்டுச் சட்டையை கொத்தாக இறுக்கிப் பிடித்தன..
“இப்பப் போயா சண்டை போடுவ..?” கரகரத்த குரலில் அவள் காதோரமாக கேட்டான் மோகன்..
“சண்டை போட காரணத்தை தேடிக்கிட்டே இருப்பியா..? உன்மேல ஆசை வைச்சிட்ட பாவத்துக்காக உன் மனசு கோணாம உன்னை அடையனும்னு இத்தனை நாளா பாடாய் பட்டிருக்கேண்டி.. அத்தனையையும் தாண்டி உன் கழுத்தில தாலியைக் கட்டி.. உன் மனசில இருக்கிற சந்தேகப் பேயை ஓட்டிவிட்டு உன்னைத் தொட்டா.. நீ பர்ஸ்ட் நைட் ரூமிலயும் கத்தியைத் தூக்கற.. உன்னையயல்லாம் வாயைத் திறக்கவே விடக் கூடாதுடி..”
அவளுக்கு வாய்ப் பூட்டுப் போட்டுத் தண்டிக்கும் பாவனையில் அவள் உதடுகளின் மீது தன் வலுவான உதடுகளை அழுந்திப் பதித்து சிறை பிடித்தான் மோகன்.. அவன் முத்தம் தந்த போதையில் அதுவரை அவள் அனுபவித்திராத உணர்வு வந்து அவளை கைது
செய்து காவலில் வைக்க.. விடுபட விரும்பாமல் அவன் முத்தத்திற்கு உடன்பட்டாள் அவள்..
மெல்ல.. அவளின் உடலும் மனமும் அவனது கட்டுப்பாட்டிற்குள் போய் விட்டன.. அவளது உடலில் பொங்கிய உணர்வுகளின் கொதிப்பில் அவனுடன் யுத்தம் புரிவதில் இருந்த கடினத்தை அவள் உணர்ந்தாள்.. ஆழமான அவனது முத்தம் நீண்டு கொண்டே இருந்தது.. அவள் மனம் நீண்ட அந்த முத்தத்தை விரும்பி ஏற்று… அவளின் தேவையை அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது..
சுசரிதாவின் கை அவனது கழுத்தை வளைத்தது.. ஆழமான அவன் முத்தத்தின் ஆழத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று அவள்மனம் துடிக்க ஆரம்பித்து விட்டது.. அவனது அகன்ற மார்பு நான் உனக்காக மட்டும் என்று சொல்லாமல் சொல்லியதில் அவள் கிளர்ந்தாள்.. அவன் மேல் சரிந்து அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
அவன் சிரித்தான்.. அவனில் அடைக்கலமாகியிருக்கும் அவனது காதல் மனைவியின் ஒப்படைப்பில் கர்வமும் திருப்தியும் கொண்ட காதல் கணவனின் சிரிப்பு அது.. குனிந்து சுசரிதாவின் இடுப்பில் கை கொடுத்து அவளை அழகாக தூக்கிக் கொண்டான்.. கைகள் இரண்டையும் அவன் கழுத்தில் மாலையாக்கி தொய்ந்து கிடந்தவளின் பேரழகில் அவன் மனம் மயங்கியது..
இயல்பான குணமும் எளிதில் வெல்ல முடியாத மனமும் கொண்ட அவள் இனி அவனது உடைமை என்பதில் அவன் வெற்றிப் பெருமிதம் கொண்டான்.. கட்டிலை அடைந்து அவளை சரித்து அவள்மேல் அவன் சரிந்த போது அவள் விலக முனையவில்லை.. அவள் மீது பரவிப்படர்ந்த மோகனுக்குள் காட்டாறு வெள்ளம் கரை புரண்டு எழுந்தது..
அவன் முரட்டுத்தனமாக அவள் இதழ்தேடி முத்த மிட்டான். அவனுடைய வேகமான ஆக்ரமிப்பில் அவள் உருகிக் கரைந்து அவனுடன் ஒன்றிக் கொண்டிருந்தாள்..
“காதல்ன்னு ஆயிரம் போர் பின்னாடி சுத்தலாம்டி.. என் மனசு யார் பின்னாலே சுத்துதோ அதுதான் உண்மைக் காதல்டி… அப்படிக் கூட நான் யார் பின்னாலேயும் சுத்தினதில்லையே.. என்கூடப் பேசுகிற பெண்களை பொய்யாய் புகழ்ந்திருக்கேன்.. யு நோ சுசி.. அவர்களுக்கும் அந்தப் பொய் தேவைப் பட்டுச்சு..”
அவனது நெருக்கம் கலந்த பேச்சில் அவனுடன் எந்த அளவுக்கு வாதிடமுடியும் என்று அவளுக்கே தெரிய வில்லை.. ஆனாலும் விட்டுக் கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை..
“ஆமாமா.. அவங்க வந்து உங்ககிட்ட ஒரு பொய்யாவது சொல் கண்ணான்னு கேட்டாங்க.. நீங்களும் சொன்னீங்க..” என்று சொல்லி விட்டாள்..
“ஹா.. ஹா..” அவன் ரசித்துச் சிரித்தான்..
அவன் சிரிக்கும் போது தெரிந்த நெருக்கமான அவன் முகத்தில் வெகு அருகாமையில் தெரிந்த பல்வரிசையில் அவள் ஆகர்ஷிக்கப் பட்டாள்.. அவனின் ஆண்மையில் அவள் மனம் சிக்கித் திணறியது. அவள் கன்னத்தில் கோலமிட்டு கோடாக நகர்ந்த அவன் விரல் அவள் உதடுகளில் மையம் கொண்டு அதை நெருடியதில் அவள் கண்மூடினாள்..
அவன் ஆசையுடன் அந்த உதடுகளில் முத்தமிட்டான்…
“எல்லாத்துக்குமே அங்கீகாரம் தேவை சுசரிதா.. பாட்டே தெரியாத லதிகாவுக்குள்ள பாடகியாகனும்கிற ஆசையிருக்கு.. அவ தன்னை ஒரு தேர்ந்த பாடகின்னு நம்பிக்கிட்டு இருக்கா.. அதனால அவகிட்ட அதைப் பத்தின இனிப்பான பொய் சொல்றதில தப்பில்லையே..”
“அவகிட்ட அப்படிச் சொல்லிட்டு அன்பழகன்கிட்ட வந்து தகரடப்பாவில தாரை ஊத்தினதைப் போல இருக்குன்னு அவள் குரலை கிண்டலடிப்பீங்க..”
“உண்மையையும் சிலநேரம் சொல்லியாகனு மில்லையா.. இல்லைன்னா பொய்யே வாழ்க்கையாய் ஆகிருமில்ல…”
அவன் பேசிய வியாக்கினத்தில் அவளுக்குள் மெலிதான சிரிப்பு வந்தது..
“அடடா.. நீங்க பெரிய உண்மை விளம்பிதான்…” கேலி செய்தாள்..
“ஒரு பொய் சொல்லிக்கு எதில் பொய் சொல்லனும்.. எதில் உண்மை சொல்லனும்கிற தெளிவு இருக்கனும்டி.. உதாரணமா உன்மேல நான் வைச்சிருக்கிற காதலைச் சொல்லலாம்.. இதில பொய்யில்ல சுசி.. உண்மை மட்டும் தான் இருக்கு..”
அவன் கண்களில் வழிந்த காதலில் அவள் பேச்சிழந்தாள்.. அவன் கைகள் முன்னேறி அவனுக்கு எதிரான அத்தனை தடைகளையும் நீக்க ஆரம்பித்தன.. எதிர்க்க முயன்ற சுசரிதாவின் கைகள் முடக்கப் பட்டு விலக்கப் பட்டன.. அவன் முன்னேற… முன்னேற… அவளுக்குள் குளிர் ஜிரம் பரவியது.. அவள் பேச்சிழந்தாள்..
பேச்சுக்கள் தேவையற்ற மௌனம் அங்கே ஆட்சி செய்ய ஆரம்பித்தது… அவனை அவளும்… அவளை அவனும் முழுவதுமாக அறிய ஆரம்பித்தார்கள்… ஆண்டாண்டு காலமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உணர்வின் ஜ்வாலை அங்கே பற்றி எழுந்தது.. மோகத்தின் ஜ்வாலையில் அவர்கள் சூடேற ஆரம்பித்தார்கள்.. தகிக்கும் உடல்கள் குளிர்ச்சியைத் தேடி ஒருவரிடம் ஒருவரை அடைக்கலமாக செய்தன… கற்பனைக்கும் அப்பாற்பட்ட உலகத்தில் காலடி எடுத்து வைத்த சுசரிதா உடல் நடுங்கினாள்… அவளின் நடுக்கத்தைப் பொருட்படுத்தாமல் அவனுக்கு வேண்டியதை அவன் கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தான்… கேட்டது கிடைக்காத போது வேட்டையாடி அதை அடைந்தான்..
அவளுக்கான அவனது தேடல்களில் அவனுக்கான அவளது தேடல்கள் கேட்காமலே தீர்ந்து கொண்டிருந்தது.. சூறையாடியனுக்கு கிடைத்த அதே அளவு இன்பத்தை சூறையாடப் பட்டவளும் நுகரும் விந்தை கூடலில் மட்டுமே சாத்தியமாகும்.. அவள் உணர்ந்த அதீத இன்பம் ஆழ்நிலை மயக்கத்துக்குள் அவளைக் கொண்டுபோனது..
அந்தப் பொய்யனை அந்த அளவுக்கு தான் விரும்பியிருக்கிறோமா என்று அவள் அதிசயப்பட்டுப் போனாள்.. அவளைப் பிணைத்த அவன் கைகளின் விருப்பத்திற்கேற்ப எப்படி அவளால் வளைந்து கொடுக்க முடிந்தது என்று அவளுக்கே தெரியவில்லை..
நினைத்தது கிடைத்து விட்டுத் திருப்தியுடன் அவளை விட்டு அவன் அகன்ற போது.. அவன் வேறு.. அவள் வேறு என்ற அவளுக்குத் தோன்றவில்லை.. கலைந்திருந்த அவளது கூந்தலை சீர் படுத்தி விட்டு அவளது காதோரமாக அவன் கேட்டான்..
“இப்பச் சொல்லுடி.. என்னை நீ காதலிக்கலை..?”
“இல்லை..”
வேண்டுமென்றே சொன்னவள் முகம் மூடி விரலிடுக்கில் அவனைப் பார்த்து நகைத்தாள்.. மோகனின் முகம் மலர்ந்தது..
“இப்ப பொய்சொல்லி.. நீதான் நானில்ல..” என்றவன் அவளுடன் கூடச் சேர்ந்து சிரித்தான்..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.