Chapter 02

0Shares

“இந்த பொண்ணு இந்த வீட்ல தப்பி பொறந்துருச்சி..”

சோமசுந்தரத்தின் குடும்பத்தை அறிந்த அனைவரின் மனதிலும் ஓடும் எண்ணம் இது ஒன்றுதான்.. அப்பேற்பட்ட ஏகோபித்த பாராட்டைப் பெற்ற தான்ய லட்சுமி.. அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தவள்தான்…

அவளுக்கு கடுமையாக பேசத் தெரியாது.. மற்றவர்களின் மனதை புண்படுத்தப் பிடிக்காது..

 “இனிய உளவாக இன்னாத கூறல்- கனியிருப்ப

காய் கவர்ந் தற்று..”

அகிலாண்டேஸ்வரியை உட்கார வைத்து.. வேலை மெனக்கெட்டு திருக்குறளை சொல்லி வைப்பாள்…

“அப்படின்னா..?” அகிலாண்டேஸ்வரிக்குப் புரியாது..

“இனிமையான வார்த்தைகள் இருக்க.. கடுமையான வார்த்தைகளைப் பேசுவது.. பழமிருக்க.. காயைப் பறிப்பதைப் போலன்னு வள்ளுவரே சொல்லியிருக்கார் மம்மி..”

“அதை எதுக்கு சொல்லி வெச்சாராம்..?”

“என்ன மம்மி இப்படி பேசறீங்க..?”

“வேற எப்படி பேசச் சொல்ற..? எல்லோருமே இனிமையாவே பேச ஆரம்பிச்சிட்டா.. கடுமையான வார்த்தைகளை யார் பேசறது..? அந்த வார்த்தைகளை ஒதுக்கி வெச்சா.. தமிழ் மொழிக்கு மனம் வலிக்காதா..?”

இப்படிப்பட்ட வியாக்கியானத்தைப் பேச அகிலாண்டேஸ்வரியால் மட்டுமே முடியும்..

“மம்மி…?” தான்யலட்சுமியே திகைத்துப் போய் விடுவாள்…

“யாருகிட்ட..?” என்பதைப் போன்ற அலட்சியப் பார்வையை வீசியபடி அகிலாண்டேஸ்வரி போய்விடுவாள்..

தான்யலட்சுமியின் வாதங்களை அகிலாண்டேஸ்வரி அணுகும் முறை இவ்விதமாக இருந்தால்.. சோம சுந்தரத்தின் அணுகுமுறையே வேறாக இருக்கும்..

“உங்களைப் பார்த்தாலே வொர்க்கர்ஸ் நடுங்குறாங்க டாடி..”

“ஸோ.. வாட்.?”

“அவங்க கூட கேசுவலா பேசிப் பழகினா என்ன..?”

பௌர்ணமியின் நிலவை ரசிக்க ஆசைப்பட்ட மகளை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்திருந்த சோம சுந்தரம் அவளை உற்றுப் பார்த்து விட்டு.. நிலவை பார்த்தார்…

“அந்த நிலவைப் பார்த்தியா தான்யா…”

“ஹௌ ஸ்வீட் டாடி.. அதைப் பார்க்கத்தானே வந்திருக்கோம்…”

“அந்த நிலவு வானத்தில்தான் இருக்கனும்.. பூமிக்கு இறங்கி வந்து நம்ம கூட கலந்துரையாட ஆரம்பிச்சா.. இந்த உலகம் தாங்குமா..?”

“டாடி..?”

இதற்குமேல் சோமசுந்தரத்துடன் விவாதிக்க தான்யா என்ன முட்டாளா..?

“ம்ஹூம்.. இது வேலைக்கு ஆகாது..”

தகப்பனிடமும்.. தாயிடமும்.. வாதாடும் வேலையை அறவே விட்டு ஒழித்தாள் தான்யா.. அவளால் முடிந்தவரை வேலையாள்களுக்கு சலுகைகள் செய்து கொடுத்தாள்…

“அது தங்கம்ய்யா…”

தான்யாவை வாழ்த்தாத வாயே அந்த வீட்டில் இல்லை… அப்படிப்பட்ட தான்யா.. பள்ளியிருதி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்தாள்..

அவளுக்கு பிடித்த இதழியல் படிப்பு மறுக்கப்பட்டது.. அனைவரும் படிக்கும் பொறியியல் படிப்புக்கே அனுமதி கிடைத்தது…

“ஐ லவ் ஜர்னலிசம் டாடி..”

கொஞ்சலுடனும்.. கெஞ்சலுடனும் கேட்ட மகளை உற்றுப் பார்த்தார் சோமசுந்தரம்…

அவருக்கே காதல் என்றால் வேப்பங்காய்.. தான்ய லட்சுமி காதல் என்ற வார்த்தையை உபயோகிக்காமல் சும்மா கேட்டிருந்தாலாவது அவர் மகளின் ஆசையைப் பற்றிய முடிவை மறுபரிசீலனை செய்திருப்பார்..

தான்யா அதைச் செய்யாமல்.. இதழியல் படிப்பின் மீது அவளுக்கு காதல் இருப்பதாக கூறிவிட்டதால் அவளது கனவு முளைக்கும் போதே கிள்ளியெறியப் பட்டது..

“நீ சாதாரணப் பெண்ணில்லை தான்யா..?” கண்டிப்புடன் சொன்னார் சோமசுந்தரம்..

“ஏனாம்..? மத்தவங்களுக்கு இருக்கிறதைப் போல எனக்கும் இரண்டு கால்.. இரண்டு கை.. ஒரு முகம்ன்னு தானே இருக்குது..?”

தான்ய லட்சுமிக்கு அவர்மீது கோபம்…

“ம்த்சு.. விளையாட்டுத்தனமாய் பேசாதே தான்யா..?” சோமசுந்தரம் முகம் சுளித்தார்..

பதினேழு வயதுப் பெண்.. விளையாட்டுத்தனமாய் பேசாமல் எப்படிப் பேசுவாள்.. என்ற நினைவும்.. நியாயமும் அவரிடம் துளிக்கூட இல்லை..

“நீ ஆளப் பிறந்தவள் தான்யா.. தான்யா குருப் ஆப் கம்பெனியின் வருங்கால எம்.டி. உனக்காக பெரிய தொழில் சாம்ராஜ்யமே காத்துக் கொண்டிருக்கு.. அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவள்.. அதற்கான படிப்பை படித்திருக்கனும்.. அதை விட்டு விட்டு ஜர்னலிசம் படிக்கப் போறேன்னு சொல்றியே.. ஆர்.. யூ.. மேட்..?”

“ஒரு துறையின் மீதான ஆர்வம் பைத்தியக்காரப் பட்டத்தை வாங்கித் தந்துவிடுமா..?” மனம் புழுங்கிப் போனாள் தான்யா…

அவளின் மௌனத்தை சோமசுந்தரம் அலட்சியப் படுத்தினார்.. “உன் போக்குப் பிரகாரம் விட என்னால் முடியாது.. இனியும் நீ குழந்தைத்தனமாகவே இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது.. உனக்காக பொறுப்புகளை நினைவு படுத்தாமல் இருக்க என்னால் முடியாது…”

இன்னும் அனேக முடியாதுகளை சோமசுந்தரம் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பட்டியலிட்டார்…

தான்யாவின் காது ஜவ்வு தாள முடியாத வேதனைக்கு ஆனானது.. ஒரு வழியாக அவள் காதிலிருந்து குருதி கொட்டுவதற்குள் அவர் பேச்சை நிறுத்தினார்..

அவர் சொன்ன படிப்பை படிக்க முடியாது என்று மறுத்தால்.. விட்ட சொற்பொழிவை அவர் தொடரக்கூடும் என்று அஞ்சியவளாக.. தான்யலட்சுமி.. மறுபேச்சு பேசாமல் பொறியியல் படிக்க ஒப்புக் கொண்டாள்..

“பர்ஸ்ட்.. பி.ஈ. முடி.. அடுத்து பாரினில் எம்.பி.ஏ., அப்பத்தானே என்னோட இமேஜூக்கும் குறைவு வராது..”

சோமசுந்தரத்தின் பிம்பத்தைக் காப்பாற்ற.. தான்யலட்சுமி பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள்..

“நமக்கு கிரானைட்.. மில்லுன்னு ஏகப்பட்ட பிஸினெஸ் இருந்தாலும்.. மெயினான பிஸினெஸ் கம்ப்யூட்டர்தான்.. அதனால நீ கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படி…”

சோமசுந்தரம் உத்தரவிட்டார்.. அந்த ஒரு காரணத்தில்.. கண்ணில் படும் கம்ப்யூட்டர்களை யெல்லாம் நொறுக்கி துவம்சம் பண்ணும் கொலைவெறி அவளுக்குள் கிளர்ந்து எழுந்தது…

எத்தனையோ செய்துவிட்டோம்.. இதைச் செய்ய மாட்டோமா என்ற எண்ணத்துடன் படிப்பை ஆரம்பித்த தான்யலட்சுமி அதே கல்லூரியில் அதே கம்ப்யூட்டர் படிப்பை இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த கோகுலக் கண்ணனை ஒரு மழைநாளில் மாலை வேளையில் சந்தித்தாள்…

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link