Chapter 15
“நீ தாராளமாகப் படிக்கலாம்.. ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்..”
அவன் தாராள மனதுடன் சொன்னபோது..
‘அதை ஆட்சேபிக்க அவன் யார்..’ என்ற கேள்வி அவள் நெஞ்சில் எழுந்தது…
“உனக்கு விருப்பப்பட்டதைச் சொல்.. நான் அதற்கு அனுமதி கொடுக்கிறேன்..”
அவனது பெருந்தன்மையில் அவள் பல்லைக் கடித்தாள்..
அவளுக்கு அனுமதிகொடுக்க அவன் யார்..? அவளுக்கு எஜமானனா..? அவளென்ன அவனுக்கு அடிமையா..?
“உன்னுடைய உரிமையை நான் பறிக்க மாட்டேன் தான்யா.. உனக்கு சகலவிதமான உரிமைகளையும் கொடுப்பேன்..”
அவன் மிதப்பாய் பேசிய விதத்தில் தான்யலட்சுமி கொதித்துப் போனாள்.. அணை உடைந்து வெள்ளம் வெளியே பாய்ந்தது..
“என்னோட உரிமையை நீங்க கொடுத்து வாங்கிக் வேண்டிய அவசியம் எனக்கில்லை..”
“நோ.. நோ.. தான்யா.. நான் சொல்ல வந்ததே வேறு..”
“அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. நீங்க முதலில் இதைக் கேளுங்க.. என் உரிமை.. எனக்கான உரிமை என்னிடம் தான் இருக்கிறது.. இனியும் இருக்கும்.. மத்தவங்களிடம் அதை யாசகம் கேட்கும் செயலை ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன்..”
அவள் பேசிய விதத்தில் அவன் முகம் மாறிப் போனான்.. அவனின் உயரம் என்ன.. ஒரு சிறு பெண் அவனிடம் இத்தனை ஆணவமாய் பேசுவதா..?
“உன் மேல் நான் ஆசைப்பட்டு விட்ட ஒரே காரணத்துக்காக.. நீ பேசுறதையெல்லாம்.. நான் பொறுத்துப் போவேன்னு நினைக்காதே..”
“உங்க மனசு புண்படும்படி நான் எதையும் பேசிவிடலை சார்..”
“கால் மீ.. அரவிந்தன்..”
“அதை நானாய் சொல்லனும்.. நீங்க சொல்லி நான் அதைச் செய்ததா இருக்கக் கூடாது..”
“சோமசுந்தரம் மகளை அருமையா வளர்த்து வெச்சிருக்கார்ன்னு சொல்லுவாங்க.. அப்படியில்லை போல இருக்கே..”
“அப்படித்தான்னு நிரூபிக்க நான் என்ன செய்யனும்..? உங்க பாதம் தொட்டு வணங்கி.. என் உரிமைகளை யாசகம் கேட்கனுமா..?”
“குதர்க்கமாய் பேசாதே தான்யா.. கூடிய சீக்கிரத்தில் நம் மேரேஜ் நடக்கப் போகுது.. அதற்குப் பின்னால்.. நான் சொல்வதைத்தானே நீ கேட்டாகனும்..? இன்னம் கூட ஒன்று இருக்கு.. அது என்ன தெரியுமா..?”
“என்ன..?”
“உன்னை எனக்கு மேரேஜ் பண்ணிக் கொடுக்கனும்னு உன் அப்பாதான் அதிக ஆர்வம் காட்டுகிறார்.. என்னைவிட இந்த மேரேஜில் அவருக்கான ஆர்வம் அதிகம்.. அன்டர்ஸ்டாண்ட்..?”
அவனது அதிகாரம் கலந்த மமதையில்.. அவளுக்கு ஆத்திரம் அதிகமானது.. தூரத்தில் அவளது காலேஜ் தெரிந்தது.. இறங்கும் இடம் வந்ததில் அவள் சற்று நிம்மதி கொண்டாள்..
காரை விட்டு இறங்கும் போது.. அவனுக்கான பதிலைச் சொல்லாமல் இறங்க அவளால் முடியவில்லை..
“அவருக்குத்தான் இந்த மேரேஜில் ஆர்வமிருக்கு.. எனக்கில்லை…”
முகத்திலடித்ததைப் போல உணர்ந்தான் அரவிந்தன்.. அதுவரை அவள் மீதிருந்த ஆர்வம்.. இடம் மாறி.. அவளைக் கை பிடித்தே ஆக வேண்டுமென்ற வெறியை மனதுக்குள் தோற்றுவிப்பதை அவனால் உணர முடிந்தது..
“வாட் டு யூ மீன்..?”
“ஐ மீன்.. வாட் ஐ ஸே..”
“என்னை மேரேஜ் பண்ணிக்கனும்னு எத்தனை பெண்கள் தவமிருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா..?”
“நான் தவமிருக்கலை..”
“உனக்கு என்னதான் பிரச்சனை தான்யா..? என்னைப் போல ஒருவன் உன்னிடம் வந்து ஐ லவ் யூன்னு சொன்னால் நீ மகிழ்ந்து போக வேண்டாமா..?”
இப்படிச் சொன்னவனின் விழிக்குள் ஊடுறுவிப் பார்த்தாள் தான்யா.. இவனுக்குத்தான் இவன் மீது எத்தனை உயர்ந்த அபிப்பிராயம் என்று அவளுக்கு தோன்றியது..
‘இவன் ஐ லவ் யூன்னு சொன்னா.. நான் மகிழ்ந்திடனுமா..? வாட் எ கிரேட் கான்ஸெப்ட்..’
இவனது மூக்கை அறுத்தால் தேவலையென்று அவள் மனதில் பட்டது..
அதுவரை தான்யா யாரையும் காயப்படுத்தும் வகையில் பேசியதில்லை.. மட்டம் தட்டும் சொற்களைச் சொன்னதில்லை.. ஏற்கனெவே.. கோகுலக் கண்ணனுடனான பிரிவில் மனம் நொந்து போயிருப்பவளுக்கு அரவிந்தன் பேசிய பேச்சு வேகத்தைக் கிளப்பி விட்டு விட்டது..
“நான் மகிழ்ந்து போக மாட்டேன்.. மிஸ்டர் அரவிந்தன்..”
அவன் சொன்னபடி அவனது பெயரை அவள் உச்சரித்தாள் தான்.. ஆனால்.. அவனது பெயருக்கு முன்னால் மிஸ்டர் என்ற அடைமொழியைக் கொடுத்து கம்பீரமாக உச்சரித்தாள்…
“நான் ஏன் மகிழ்ந்து போகனும்..? நீங்க மேக்னா குரூப் ஆப் கம்பெனிஸின் வருங்கால எம்.டின்னா.. நான் தான்யா குரூப் ஆப் கம்பெனிஸின் வருங்கால எம்.டி. எந்த வகையில் உங்களை விட நான் குறைந்து போய்விட்டேன் சொல்லுங்க..”
அவள் சொன்னது உண்மைதான் என்றாலும்.. தான்யா குரூப் ஆப் கம்பெனிகள்.. மேக்னா குரூப் ஆப் கம்பெனிகளின் பக்கத்தில் கூட நிற்க முடியாது..
அதை உணராமல் குழந்தைத் தனமான கோபத்துடன் பேசியவளை பார்த்த அரவிந்தனின் விழிகளில் கர்வம் மின்னியது..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.