Chapter 20

0Shares

“கண்ணன்..”

அவள் பேசுவதை அவன் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பில் அவள் குரல் நடுங்கியது..

“ம்ம்ம்..”

அவனது முணுமுணுப்பிலிருந்து.. அவனது மனநிலை என்னவாக இருக்கக்கூடும் என்று அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. இருந்தும் அவள் பேசினாள்..

“நீங்க ஜெயிக்கப் பிறந்தவர் கண்ணன்.. என்னால நீங்க சாதிச்சதாதான் இருக்கனும்.. தோத்துட்டதா இருக்கக் கூடாது..”

“அதுக்காகத்தான் எனக்கு முத்தம் கொடுத்தியா..?”

“ச்சீ..”

அவன் மார்பில் செல்லமாகக் குத்திவிட்டு எழுந்து கொள்ள முயன்றவளை அவன் கரம் பிடித்து இழுத்து.. மடியில் போட்டுக் கொண்டான்..

“இருடி.. உன் கூடத் தனியே பேசி எத்தனை நாளாச்சு..”

அவன் தாபம் தீருமட்டும் பேசிக் கொண்டே இருந்தான்.. அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள்.. வெகு நேரம் கழித்தே அவளை அவன் விடுவித்து.. அரைமனதுடன் அவளைப் போக அனுமதித்தான்..

வீட்டுக்குத் திரும்பியவளை.. குற்றம் சாட்டும் பார்வையுடன் எதிர் கொண்டாள் அகிலாண்டேஸ்வரி..

“ஏண்டி லேட்..”

“லேட்டாகிருச்சு மம்மி..”

“அதான்.. ஏன்னு கேட்கிறேன்..”

“பிரண்டோட குரூப் ஸ்டடி பண்ணின்னேன் போதுமா..”

“இப்போதெல்லாம் இயல்பா பொய் சொல்கிற தான்யா..”

“நீங்களா அப்படி நினைச்சிட்டா, நானென்ன செய்கிறது..?”

அன்றிரவு.. அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது.. அவளுடைய கண்ணன் மனம் திரும்பிவிட்டான்.. அவளிடம் திரும்பி விட்டான்.. என்ற நிறைவில் அயர்ந்து உறங்கி விட்டாள் தான்யா..

ஆனால், சோமசுந்தரமும்.. அகிலாண்டேஸ்வரியும் உறங்கவில்லை..

“உண்மையாத்தான் சொல்றீங்களா..?”

அகிலாண்டேஸ்வரியின் குரலில் கவலை அப்பிக் கிடந்தது..

“ஆமாம் அகிலா.. அரவிந்தன் சொன்னதும் நான் தான்யாவை ஃபாலோ பண்ண ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியை ஏற்பாடு பண்ணிட்டேன்.. அவங்க.. கொடுத்த ரிப்போர்ட்தான் இது.. தினமும்.. அவங்க ரிப்போர்ட் கொடுத்திருவாங்க.. இன்றைய ரிப்போர்ட்டின் படி.. உன் மகள் பீச்சில்.. யாரோ ஒரு கண்ணனுடன் காதல் பேசிவிட்டு வந்திருக்கிறா..”

“என்ன செய்யலாம்..?”

“இப்போதைக்கு எதையும் செய்யவேண்டாம்.. அவன் ஃபைனல் இயர் ஸ்டூடன்டாம்.. எப்படியும் இன்னும் இரண்டு.. மூன்று மாதத்தில் அவன் காலேஜை விட்டே வெளியே போய் விடுவான்.. அதுக்குப் பின்னாலே தான்யாவை நம்ம வழிக்கு கொண்டு வந்துவிடலாம்..”

“அதுக்குப் பின்னால மட்டும் அவங்க சந்திக்காம இருப்பாங்களா..?”

“நிச்சயமாய் சந்திப்பாங்க.. ஆனா தினமும் காலேஜில் பார்த்துக்கொள்கிறதைப் போல பார்த்துக்க முடியாதே.. இந்த இடைவெளி கிடைச்சா போதும்.. அதை பெரிசு பண்ணி விரிசல் விட வைக்க எனக்குத் தெரியும்..”

சோமசுந்தரம் அமைதியாக மகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.. விட்டுப் பிடிக்கும் அவரின் யுக்தி தெரியாமல் தான்யாவும்.. கண்ணனுடன் கொஞ்சிக் குழாவிக் கொண்டு இருந்தாள்..

கண்ணனின் தேர்வுகள் முடிந்தன.. தான்யாவும்.. அவளுடைய தேர்வை எழுதி முடித்தாள்.. அவர்கள் தினமும் வெளியில் சந்தித்தனர்..

“என்னங்க..” பதறினாள் அகிலாண்டேஸ்வரி..

“பொறு..” அமைதி படுத்தினார் சோமசுந்தரம்..

தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன.. கண்ணன் யுனிவர்ஸிட்டி ரேங்க் எடுத்து தங்கப் பதக்கம் வாங்கியிருந்தான்..

“உன் ஆள்.. கிழிகிழின்னு கிழிச்சிட்டாண்டி..” என்றாள் யாமினி..

தான்யாவுக்கு பெருமையாக இருந்தது.. கண்ணனுக்கு பண்ணாட்டு நிறுவனமொன்றில் வேலை கிடைத்திருந்தது..

“பாம்பேக்கு போகனும்டி..” அவன் கவலையாகச் சொன்னான்..

தான்யாவுக்கு அழவேண்டும் போல இருந்தது.. அவள் அழுதால் அவன் போகமாட்டான்.. சென்னையிலேயே வேலை தேடிக்கொள்வான்.. ஆனால்.. அவனுடைய எதிர்காலம்..?

“அப்பா.. ஸ்டேட் கவர்மென்டில் கிளார்க்குடி.. தங்கை டென்த் படிக்கிறா.. அம்மா ஹவுஸ் வொய்ப்.. என்னைக் கஷ்டப்பட்டு அப்பா படிக்க வைக்கிறார்.. அதனால் தான் நான்.. பார்ட் டைம் ஜாப் தேடிக்கிட்டேன்.”

அவன் கால்சென்டரில் வேலை பார்ப்பதை அறிந்து அவள் கேள்வி கேட்டபோது.. அவன் சொன்ன விளக்கம் அவள் நினைவுக்கு வந்து.. எதையும் பேச விடாமல் தடுத்தது..

‘எனக்காக பார்த்து.. அவன் குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விடுவான்..’

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link