Chapter 29

0Shares

முதலிரவின் அயர்வுடன்.. அறையை விட்டு வெளியே வந்தான் கண்ணன்.. எதிரே.. கையில் காஃபியுடன் தான்யலட்சுமி வந்து கொண்டிருந்தாள் திரும்பவும் அறைக்குள் போய் விட்டான்.. உள்ளே வந்தவள் அவனைக் காணாமல் திகைத்த போது.. கதவு மூடும் சத்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தாள்…

“ஏன் கதவை மூடறீங்க..?”

“இது பெட்ரூம்டி..”

“எனக்குத் தெரியும்… இது விடியற்காலை… உங்களுக்கு இது தெரியலை…”

“கால நேரமெல்லாம் புதுசா கட்டிக்கிட்ட ஜோடிக்கு கிடையாதுடி..”

அவளைக் கட்டித் தழுவிக் கொண்டான் கண்ணன்.. அவள் கழுத்திலிருந்த புதுத் தாலிச்சரடு.. அவளது அழகை அதிகப் படுத்திக் காட்டியது.. ஈரத்தலையை துண்டினால் இறுக்கிக் கட்டி இருந்தாள்.. அவனின் இறுக்கமான முரட்டுத்தனமா அணைப்பில் துண்டு நழுவ.. ஈரக் கூந்தல் அவனது முகமெங்கும் படிந்தது…

“தான்யா..” அவன் கிறங்கிப் போனான்…

தான்யா.. அவனை விட்டு விலகவில்லை.. அவன் பரவிப் படர்ந்தப்போது மறுக்கவில்லை.. அவனுக்கு மனைவியென்ற உறவில் இல்லாத போதே அவனை அவள் மறுத்ததில்லை.. இப்போதோ.. அவன் கேட்பதை.. கேட்ட நேரத்தில் கொடுக்க அவள் தயங்கவில்லை..

அவர்கள் குளித்து முடித்து வெளியில் வந்த போது அம்பிகா எதிர்பட்டாள்.. அவள் முகம் இறுகியிருந்தது..

“உன் மாமனார் வந்திருக்காருடா..” என்றாள்..

மறந்தும் அவள் தான்யாவின் அப்பா என்று குறிப்பிட வில்லை.. அதை உணர்ந்த தான்யாவின் இதழ்களில் புன்னகை படர்ந்தது..

இவர்களின் மேன்மையை அவளின் தந்தை தெரிந்து கொள்ளவில்லை என்று நினைத்துக் கொண்டாள்…

சோமசுந்தரமும்.. அகிலாண்டேஸ்வரியும்.. சகஜமாக பேச முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள்…

“டாடி.. மம்மி..” தான்யாவின் இதயம் இளகியது..

“எங்களுக்கு இருக்கிறது ஒரே மகள்.. நடந்தது என்னவோ நடந்திருச்சி.. அதுக்காக பெரிய மனது பண்ணி நீங்க எல்லோரும் என்னை மன்னிச்சிரனும்.. பெண்ணையும்… மாப்பிள்ளைளையையும் என்னோடு அனுப்புங்க… தான்யா குரூப் ஆப் கம்பெனிஸூக்கு இவங்கதான் முதலாளி.. இவங்க எதுக்காக வெளியே வேலை பார்க்கனும்..?” சோமசுந்தரம் நயந்து பேசினார்…

“எனக்கு உங்க மேலே எந்த வருத்தமும் இல்லை சார்.. பெண்ணைப் பெற்றவர் நீங்க.. உங்க மனதுக்கு தோணியதை செய்துட்டீங்க.. நடந்ததை மறந்திருவோம்.. நீரடிச்சு நீர் விலகறதில்லை.. உங்க வீட்டுக்கு உங்க மகளையும் மருமகனையும் மறுவீட்டு விருந்துக்கு அனுப்புறதில் எனக்கொன்னும் ஆட்சேபனையில்லை.. உங்க வீட்டோடு அனுப்புகிறதா இருந்தா.. அந்த முடிவை என் மகன்தான் எடுக்கனும்…”

சாமிநாதன் மிகத் தெளிவாக பேசிவிட்டார்.. அனைவரும் கண்ணனின் முகம் பார்த்தார்கள்.. அவன் தீர்மானமாகச் சொல்லிவிட்டான்..

“தான்யா வேலைக்குப் போகிறதில் கூட எனக்கு இஷ்டமில்லைப்பா.. என் பொண்டாட்டி என் சம்பாத்தியத்தில் தான் வாழனும்னு நான் நினைக்கிறேன்.. அதனால.. 

இவங்க வீட்டோடு மாப்பிள்ளையாய் போக என்னால் முடியாது..”

“அதெல்லாம் தான்யாவோட சொத்து மாப்பிள்ளை..”

“இருக்கட்டும் மாமா.. அதை உங்க காலத்துக்குப் பிறகு அவ எடுத்துக்கட்டும்.. ஆனா.. எந்த காலத்திலும் எனக்கு உங்க சொத்து வேணாம்..”

“வர்ற சொத்தை ஏன் வேணாம்ங்கறீங்க மாப்பிள்ளை..?”

“எனக்குக் கிடைச்ச சொத்து தான்யாதான் மாமா.. அவ இருக்கிற இடத்தில நிம்மதி நிலைச்சிருக்கும்.. செல்வம் பொங்கும்..”

கண்ணனின் வார்த்தைகளை சாமிநாதன் ஆமோதித்தான்..

“அதைச் சொல்லு.. என் மருமக.. தான்ய லட்சுமி மட்டுமில்லை.. தைரிய லட்சுமியும் இவள்தான்.. இவ இருக்கிற இடத்தில் செல்வம் நிலைச்சிருக்கும்.. இவ பொன் மகள் கண்ணா..”

கண்ணனும்.. தான்யாவும்.. சோமசுந்தரத்தின் வீட்டிற்கு மறுவீட்டு விருந்துக்கு சென்று வந்தார்கள்.. கண்ணன் திரும்பவும் யு.எஸ்.ஏ விற்கு பறக்க.. இந்த முறை தான்யாவும் அவன்கூட பறந்தாள்..

காதல் என்பது தகுதி பார்த்து வருவதில்லை.. கணக்கு போட்டு முளைப்பதில்லை.. அது தானாக முளைத்து விதையில்லாமல் வேர் விட்டு.. பிரமாண்டமாக நின்று விடும் விருட்சம் போன்றது..

அந்த பொன்மகளும் அந்தக் காதலில் விழுந்தாள்.. அந்தக் காதலுக்காக.. அனைத்தையும் உதறி.. காதலனின் வீடு தேடி வந்தாள்.. தன் காதலில் ஜெயித்தாள்..

– முற்றும் –

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link