Chapter 18

0Shares

‘ஒரு வார்த்தை போதும் அங்கிள்..” மேகநாதனிடம் சொன்னாள் நிவேதா..

‘ஹலோன்னு சொல்லுங்க.. சரியாப் போயிடும் ..”

‘ஆனா.. அதையும்கூட எப்படிம்மா சொல்லுவது..?”

‘வாயால்தான் சொல்லனும்.. இதுகூடத் தெரியாமலா.. இத்தனை நாளாய் இருந்தீங்க.. ஊருக்குள்ள நீங்கதான் சின்னப் பண்ணையாhன்னு சொல்கிறாங்க…. ம்ஹீம்..”

மேகநாதன் நிவேதாவின் பேச்சை ரசித்துச் சிரித்தார்..

‘என்னம்மா செய்யறது.. நானா இந்தப் பட்டத்தைக் கேட்கலை.. தானாய் வந்துருச்சு..”

‘ஒரே வீட்டில் இருந்திருந்தா.. ஒரே பண்ணையார் மட்டும் யோசித்திருப்பாரோ..”

‘ம்ம்.. நானும் அதை யோசித்திருக்கேன்..”

‘ஊருக்குள்ள என்ன பேசிக்கிறாங்க தெரியுமா அங்கிள்..?”

மேகநாதனுக்கு அது தெரியும்.. அவர் முகம் கடினமாகிவிட்டது..

‘தெரியும்மா..” என்றார் ஒற்றைச்சொல்லில்..

‘தெரிந்துமா பேசாம இருக்கீங்க..”

‘என்னை என்னம்மா செய்யச் சொல்கிற..? ஒத்துமையாய் ஒரே வீட்டில் குடித்தனம் பண்ணினாலே ஆயிரம் பேச்சு வரும்.. இதில நான் தனியாய் பிரிஞ்சு போனா.. சின்னப் பண்ணையாருன்னு என்னைச் சொல்லனும்னு நான் தனியாப் போனதாகத்தான் பேசுவாங்க.. அதுக்கு வருத்தப்பட்டு ஆகப் போகிறது என்ன..? என்ன ஒன்னு.. இந்த  ஊருக்குள்ள என் அப்பாவை பண்ணையாருன்னு சொன்னவங்க.. அடுத்ததா என் அண்ணனைத்தான் சொல்லியிருக்கனும்.. அந்தப் பட்டத்தை இரண்டாப் பிரிச்சுட்டேன்..”

‘எதனால அப்படி ஆச்சு அங்கிள்.. நீங்க குடும்பத்தை இரண்டாப் பிரிச்சீங்க.. பட்டமும் இரண்டாப் பிரிஞ்சுருச்சு..”

‘ம்த்சு.. நான் என்ன வேனும்னா அப்படிச் செய்தேன்..? நிலைமை அப்படி ஆகியிருச்சும்மா.. என் பெண்டாட்டியோட பிறந்த வீட்டால எங்க குடும்பத்துக்கே பழிவந்து சேர்ந்துருச்சு.. அதுக்கு அவ என்ன பண்ணுவா.. என் குடும்பத்தோட கஷ்ட.. நஷ்டத்தில அவளுக்கும் பங்கில்லையா..? அதுக்காக தினமும் அவளோட பிறந்த வீட்டைப் பத்தி அவ முன்னாலேயே பேசனுமா..? எந்தப் பொண்ணுதான் இதைத் தாங்கிக்குவா..? நீ யே சொல்லு..”

‘உண்மைதான் அங்கிள்..”

‘அப்படியிருந்தும் அவ என் அண்ணன் பேசின பேச்சையெல்லாம் தாங்கிக்கிட்டாம்மா.. ஆனா.. வீட்டுலயும்.. தோட்டம் துரவில வேலை செய்கிற வேலையாள்க முன்னாடியும் அதே போல பேசி வைச்சா.. வேலை செய்கிறவங்க.. என் பெண்டாட்டியை எப்படி மதிப்பாங்க..? நீயே சொல்லு..”

மேகநாதனின் மனைவியின் மரியாதை வீட்டிலும்.. தோட்டத்திலும் வேலை செய்யும் வேலையாள்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறது.. அiத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போயிருக்கிறது..

‘ஆயிரம் பேசினாலும்.. நமக்குள்ளே பேசிக்கனும்.. அதுதான் நாகரிகம்.. அதை விட்டுவிட்டு..தம்பி பெண்டாட்டியின் பிறந்த வீட்டைப் பத்தி வேலை செய்கிறவங்க முன்னால  தினமும் என் அண்ணன் பேசி வைச்சா.. ஒரு நாள் இல்லேன்னா.. ஒருநான் அவள் வாய் திறந்து எதிர்த்துப் பேச மாட்டாளா..?”

“பேசத்தான் செய்வாள்..’ என்று நிவேதாவுக்குத் தோன்றியது..

‘ஒருநாள் அவ எதிர்த்துப் பேசிட்டா.. அத்தனை நாளாய் அவளோட பிறந்த வீட்டை மட்டும் பேசிக் கொண்டிருந்த என் அண்ணன் அன்னைக்கு என் பெண்டாட்டியையே கன்னா.. பின்னான்னு பேச ஆரம்பிச்சுட்டார்.. என ரத்தம் கொதிக்குமா.. கொதிக்காதா..? நீயே சொல்லு..”

“கொதிக்கத்தான் செய்யும்..’ என்று நிவேதாவுக்கு தோன்றியது..

‘கட்;டின பெண்டாட்டியை நான் அடிக்கலாம்.. பேசலாம்.. ஆயிரம் தான் என் அண்ணன் மேல எனக்குப் பாசமிருந்தாலும்.. அவர் என்னை வளர்த்தவராக இருந்தாலும்.. என் கண் முன்னாலேயே என் பெண்டாட்டியை அவர் திட்டுவதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியுமாம்மா..?”

“முடியாது.. அது எப்படி முடியும்..?’ என்று நிவேதாவுக்கு தோன்றியது..

‘என் பெண்டாட்டியை பேச நீங்க யாருன்னு கேட்டுட்டேன்.. அவருக்கு அது குத்தமாம்..”

“அது  குற்றமில்லை..’ என்று நிவேதாவுக்கு தோன்றியது..

‘பெண்டாட்டி பின்னாலே போகிறேன்னு சொன்னார்.. பெண்டாட்டி பின்னாலேதானே போகிறேன்.. வேற ஒருத்தி பின்னாலே போகலையேன்னு சொன்னேன்.. சரிதானே..”

“சரி.. ‘என்று நிவேதாவுக்கு தோன்றியது..

‘குடும்பம் உடைஞ்சிருச்சும்மா.. இத்தனை வருசமா இரண்டு பேரும் இரண்டு துருவமா.. எதிரும் புதிருமாகத்தான் இருக்கோம்.. இப்பப் போயி திடீர்ன்னு பேசுன்னு நீ சொன்னா.. எப்படிப் பேசறதுன்னு நான் கேட்பேனா.. மாட்டேனா..?”

இதற்கு மட்டும்.. “கட்டாயம் கேட்கத்தான் செய்வாங்க..’ என்று நிவேதாவுக்கு தோன்றவில்லை..

‘போனதெல்லாம் விடுங்க அங்கிள்.. நீங்கதானே சொன்னீங்க..அழிச்சு..அழிச்சா பிறக்கப் போகிறோமுன்னு..”

‘அது ஆயிரத்தில ஒரு வார்த்தைம்மா..”

‘அதைச் சொன்ன ஆயிரத்தில் ஒருத்தரும் நீங்கதான்.. அதனால அந்த டைட்டிலுக்கேத்ததைப் போல.. தைரியமா ஒரு முடிவுக்கு வாங்க..”

‘என்ன முடிவைப் பண்ணச் சொல்கிற..?”

‘உங்களுக்கு உங்க அண்ணன் கூட ஒன்று சேரனுமா.. வேணமா..?”

‘இதென்னம்மா இப்படிக் கேட்டுப்புட்ட..? அவர் கூட ஒன்று சேருகிற நாள் வருமான்னுதான் தவிச்சுப் போய் கிடந்தேன்..”

‘அப்புறம் எதுக்கு இப்படி சொதப்புறீங்க..?”

‘அதுவாம்மா..”

மேகநாதன் .. தாடையை சொரிந்து கொண்டே வானத்தை .. உற்றுப் பார்க்க.. தானும் சேர்ந்து வானத்தைப் பார்த்தாள் நிவேதா..

‘என்ன அங்கிள் .. வானிலை ஆராய்ச்சி பண்ணுகிற வரைப் போல வானத்தை பிரித்து மேய்கிறீங்க.. அங்கே என்ன தெரியுது..? இன்னைக்கு.. மழை வருமா.. வராதான்னு பார்க்கறீங்களா..?”

‘ஹி… ஹி..”

‘இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சினை அங்கிள்..?”

‘இத்தனை நாளாய் அண்ணன் எதிரே வந்தாலும்.. முகத்தை திருப்பிக்கிட்டு போனவன்.. திடீர்ன்னு அண்ணன் கிட்டப் பேசனுமுன்னா..”

‘ஓ.. தயக்கமாய் இருக்கா..? இதுதான் உங்க பிரச்சனையா..?

‘ம்ம்ம்..”

‘என்கிட்டச் சொல்லிட்டீங்கள்ல.. கவலையை விடுங்க..”

“யாரிந்த பெண்..?  இவகிட்ட எதுக்கு என் குடும்ப விவகாரங்களை கொட்டுகிறேன்..? இவ எங்கிருந்து வந்தாள்..?’ என்ற யோசனையுடன் மேகநாதன் அவள் போவதையே பார்த்தபடி அசையாமல் நின்றார்..

சிதம்பரநாதன் தென்னந்தோப்பில் காய் இறக்குவதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்..

அவரைத் தேடி.. அங்கே சென்றாள் நிவேதா..

‘என்னம்மா நிவேதா.. ?” பாசத்துடன் கேட்டார் சிதம்பரநாதன்.. 

என்று அவள்.. மேகநாதனின் மனதில் இன்னும் பாசம் வற்றவில்லை அண்ணனும்.. தம்பியும் மீண்டும் ஒன்று சேர்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்பதை அவருக்கு உணர்த்தினாளோ.. அன்றிலிருந்தே அவள் மேல் அலாதியானதொரு பிரியம் அவருக்குள் ஏற்பட்டு விட்டிருந்தது..

‘சும்மாதான் அங்கிள்.. உங்க கூடப் பேசனும்னு தோணியது.. கிளம்பி வந்துட்டேன்..”

‘வா.. இப்படி உட்காரு.. ஏலே பழனி.. அந்த இளநியில ரெண்டை எடுத்து வெட்டுடா..”

வெட்டிய இளநீரை செம்பில் சரித்து அவளிடம் நீட்டினான் அந்தப் பழனி..

அதை வாங்கி ரசித்துக் குடித்தபடி..

‘ரொம்ப ருசியாயிருக்கு அங்கிள்.. உங்களைப் பார்த்துப்  பேசுகிற சாக்கில் தினமும் இந்த தோப்புக்கு வந்து இளநி குடிக்கலாம் போல இருக்கு..”

‘அதுக்கு சாக்கு சொல்லிக்கிட்டுத்தான் வரனுமா..? உனக்கு வேனுமுன்னு சொன்னா.. வீட்டில் ஒரு லோடை இறக்கிப் போடச் சொல்றேன்..”

கோபத்தைக் காட்டுவதில் எப்படி அளவு கோலை வைத்துக் கொள்வதில்லையோ.. அப்படியே.. அன்பைக் காட்டுவதிலும் சிதம்பரநாதன் அளவு கோலை வைத்துக் கொள்வதில்லை என்று நிவேதா நினைத்துக் கொண்டாள்..

“கல்லுக்குள் தான்..எத்தனை ஈரம்..’

இதை மீனாட்சி புரிந்திருக்கிறாள்.. கணவனின் மனதில் இருக்கும் கோபம் தணிய வேண்டும் என்பது மட்டுமே அவளது ஆதங்கமாக இருந்திருக்கிறது..

யார் மனதில் என்ன இருக்கிறது.. அது எப்போது.. எந்த இடத்தில்.. எந்த தருணத்தில் வெளிப்படும் என்பதை யாறறிவார்..? 

‘சொல்லும்மா.. என்ன விசயம்.. நீ சும்மா பேச வருகிற ஆளில்லையே.. விசயமில்லாம என்னைத் தேடி தோப்புக்கு வர மாட்டியே..”

இவர் ஆள்களை நன்றாக கணித்து வைத்திருக்கிறார் என்ற நினைவில் புன்னகைத்தாள் நிவேதா..

‘சின்ன அங்கிளைப் பார்த்தேன்..” நிவேதா ஆரம்பித்தாள்…

‘நினைச்சேன்.. நீ இதைத்தான் பேசுவேன்னு.. அவன் என்ன சொல்கிறான்..?”

‘உங்க கூடப் பேசப் பிரியப்படறாரு.. ஆனா.. இத்தனை நாளுக்கு அப்புறம் எப்படிப் பேசி உறவு கொண்டாடுகிறதுன்னு தயங்கறார்..”

‘இருக்குமில்ல.. எனக்கும் அப்படித்தான் இருக்குது.. “

“போச்சுடா..’ மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டாள் நிவேதா..

இப்படிப் புதுப் பெண்டாட்டிகளைப் போல.. அண்ணனும் தம்பியும் வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால்.. எப்படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேசி வைப்பார்கள்..?

இது வேலைக்கு ஆகாது என்று முடிவுக்கு வந்தாள் நிவேதா.. என்னவோ.. காதலர்களுக்கு இடையில் தூது செல்வதைப் போல அண்ணனுக்கும்.. தம்பிக்கும் இடையில் தூது சென்று அலுத்துப் போயிருந்தாள் அவள்..

“ஊëம்… தாடலடியாய் எதையாவது செய்தே ஆகனும்… இல்லைன்னா.. இவங்களை ஒன்று சேர்க்கிறதுக்குள்ள நான் கிழவியாயிருவேன்..’

‘இப்ப என்னதான் சொல்றீங்க அங்கிள்.. உங்க தம்பி கூட ஒன்றாய் சேர்கிற உத்தேசம் உங்களுக்கு இருக்கா இல்லையா..?”

‘கழுத்தளவு இருக்கு..”

‘அதை வாயளவுக்கு கொண்டு வாங்க..”

‘அது எப்படிம்மா..?”

‘டிரை பண்ணுங்க அங்கிள்.. நான் கூட இருக்கிறேன்..”

மலைக் கோவிலில் மகாலெட்சுமியையும் பெருமாளையும் கண்மூடி வணங்கிய நிவேதா.. அரைக் கண்ணைத் திறந்து.. அருகிலிருந்த சிதம்பரநாதனையும்.. எதிர் வரிசையில் நின்று கொண்டிருந்த மேகநாதனையும் பார்த்தாள்..

மருந்துக்குக் கூட இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் விறைப்பாக நின்றிருந்தார்கள்..

“எனக்குத் தெரியும்..’ அலுப்புடன் தீபாராதனை ஜோதியை வணங்கி குங்குமம் வாங்கிக் கொண்டாள் நிவேதா..

பிரகாரத்தை வலம் வரும் போதாவது இருவரும் பேசிக் கொள்வார்கள் என்ற நப்பாசையுடன் அவள் பார்த்தால்.. பெரியவர் இந்தப் பக்கம் முகத்தைக் திருப்பிக் கொண்டு வந்தார்.. சின்னவர் அந்தப் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தார்..

‘இங்கே பாரு நிவேதா.. எங்கப்பா மேல சித்தப்பாவுக்கும்.. சித்தப்பா மேல அப்பாவுக்கும் பாசம் இருக்குன்னு எனக்கும் தெரியும்.. ஆனா..அவங்களை ஒன்னு சேர்க்கிறது.. கட்டாத்தரையில.. நாற்றை நடுகிறதைப் போல அவ்வளவு கஷ்டமான ஒன்னு.. அதான் நான்.. அந்த யோசனையையே விட்டு விட்டேன்..”

ஏன் கார்த்திகேயன் இப்படிச் சொன்னான் என்று.. அன்று நிவேதாவுக்குப் புரிந்தது..

பொறுமையிழந்தவளாக.. அவள்.. கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து விட்டாள்.. கூட வந்த சிதரம்பரநாதன் அவளை விட்டுவிட்டு எப்படிச் செல்வது என்று புரியாமல் தயங்கி நிற்க..

‘ஹலோ.. சின்ன அங்கிள்..” என்று போய் கொண்டிருந்த மேகநாதனை அழைத்தாள் நிவேதா..

‘என்னம்மா.. ” அவர் அங்கே நின்று கொண்டே.. கிட்டே வராமல் கேள்வியை மட்டும் கேட்டார்..

‘ஆ.. என்ன சொல்றீங்க.. என் காதில எதுவும் விழுகலையே.. ஏன் அங்கிள் உங்க காதில் ஏதும் விழுந்ததா..? ” என்று சிதம்பரநாதனிடம் அவள் கேட்டு வைக்க.. அவர் என்ன பதிலைச் சொல்வது என்று புரியாமல் விழித்தாள்..

வேறு வழியின்றி அருகில் வந்தார் மேகநாதன்..

‘இப்படி உட்காருங்க அங்கிள்..”

அவரை அமர வைத்து விட்டாள் நிவேதா..

‘உங்க வீட்டில போன தலைமுறையில ஒரு பாட்டி இருந்தாங்களாமே.. அவங்க கொள்ளை அழகாமே.. அவங்க பெயர் என்ன அங்கிள்..?” நிவேதா பேச்சை ஆரம்பித்தாள்..

மேகநாதன் ஒரு பெயரைச் சொல்ல..

‘சரியா அங்கிள்.. இந்தப் பெயர்தானா..? என்று சிதம்பரநாதனைக் கேட்டாள் நிவேதா..

‘அவன் என்ன தப்பாவா சொல்லப்போறான்..? என்னை விட எங்க தலைமுறையையும்.. பரம்பரையையும் அவனுக்குத்தாம்மா நல்லாத் தெரியும்..” என்றார் சிதம்பரநாதன்..

மேகநாதன் சட்டென்று நிமிர்ந்து தமையனை பார்த்தார்..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link