Chapter 19

0Shares

அண்ணனும்.. தம்பியும் பேசிக் கொண்டார்கள்..

‘தெரியுமா சேதி.. சின்னப்பண்ணையும்.. பெரிய பண்ணையும் பேசிக்கிட்டாங்களாம்..”

‘உனக்கு யார் சொன்னது..?”

‘என் கண்ணாலே பார்த்தேன் புள்ள..”

‘ஏண்டி பஞ்சவர்ணம்.. இந்தக் கதையைக் கேட்டியா..”

‘என்னக்கா..”

‘நம்ம ஊரு பண்iணாருக ஒன்னு மண்ணா போயிட்டாங்களாம்..”

‘அடி ஆத்தி.. உனக்கு இதை யாரு சொன்னது..?”

‘என் புருசன்தான் சொன்னாரு.. வேற யாரு சொல்லுவாங்க..? அவங்க தோள் மேல கையைப் போட்டுக்கிட்டு.. ஒரே காரில போனாங்களாம்..”

‘அப்படியா..?”

‘தண்ணி எடுக்கப் போனமா.. வந்தமான்னு இல்லாம.. குழாயடியில உனக்கு ஏண்டி அத்தனை பேச்சு..?”

‘சும்மாயிரும்மா.. அந்த மேலத் தெரு பொன்னமாக்கா.. ஒரு சேதியச் சொல்லுச்சு.. அதை கேட்டுட்டு வர நேரமாயிருச்சு..”

‘வயசுப் பொண்ணா லட்சணமா இருந்து பழகு பஞ்சவர்ணம்.. ஊரு கதை உனக்கு எதுக்கு..? ஆமாம்.. நீ ஆன்னு வாயைப் பிளந்து கேட்கிறாப்புல.. அப்புடி என்ன கதையைச் சொன்னா.. அந்தப் பொன்னம்மாக்கா..?”

‘இப்ப நீ மட்டும் கதை கேட்க அலையலாமாக்கும்..?”

‘ஆத்தாளை எதுத்துப் பேச.. எங்கே போய் படிச்ச பஞ்சவர்ணம்..?”

‘இதுக்குன்னு பள்ளிக்கூடமா கட்டி விட்டிருக்காங்க..? எல்லாம் உன் ஆத்தாளை நீ எதுத்துப் பேசினதைப் பார்த்துப் பழகினதுதான்.. அதை விடு.. நம்ம ஊரு பண்ணiயாருக.. ஒரே வீட்டில குடியிருக்கப் போறாங்களாம்..

‘நிசமாலுமா..? ரெண்டும் பேரும் பிரிஞ்சு வருசக் கணக்கா ஆகுதே புள்ள..”

‘அது என்னமோ எனக்குத் தெரியாது.. இப்ப பிய்ச்சாலும் பிய்க்க முடியாம கோந்தில்லா ஒட்டிக்கிட்டாங்களாமே..”

‘சோத்தைப் போடாம.. என்ன யோசனையில இருக்கிறவ..”

‘சின்னப் பண்ணையும்.. பெரிய பண்ணையும் ஒன்னாச் சேர்ந்துட்டாங்களாமே..”

‘உனக்கு எப்படி தெரியும் புள்ள..?”

‘நம்ம பஞ்ச வர்ணம் தண்ணிக்குப் போனப்போ.. மேலத்தெரு பொன்னம்மா சொன்னாளாம்.. அண்ணனுக்கு.. சர்க்கரைப் பொங்கல.. தம்பிNய் ஊட்டி விட்டாராம்.. தம்பி நெத்தியில விபூதியை அண்ணனே பூசி விட்டாராம்..”

‘இங்கே பாருடா.. இந்தக் கூத்தை.. நாம பேசிக்கிட்டா நம்மள அடிக்க வருவாங்க.. இப்ப இவங்க கூடிக்கிட்டாங்களே.. இத எங்கே போயி சொல்றது..”

அந்தக் காத்தான்.. அடுத்த வரப்பில் உழுது கொண்டிருந்த சின்னசாமியிடம் விசயத்தைச் சொல்ல.. அவன் பம்பு செட் மோட்டாரிலிருந்த அவன் மகனிடம் சொன்னான்.. அவன் சைக்கிளை மிதித்துக் கொண்டு ஊருக்குள் போய் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து.. வருவோர்.. போவோரிடமெல்லாம் சொன்னான்.. அவர்கள் அந்தச் செய்தியை சுமந்து கொண்டு ஊருக்குள் போய் ஊர் பூராவும் உலவ விட்டார்கள்..

ஆக மொத்தம்.. சிதம்பரநாதனும்.. மேகநாதனும்.. வெகு காலத்திற்கு பிறகு.. நிவேதாவின் உபயத்தால் மலைக்கோவிலில் நின்று.. “நீ சௌக்கியமா.. நான் சௌக்கியம்..’ என்று பேசிக் கொண்ட இரண்டு வார்த்தைகளும்.. கண்.. காது.. மூக்கு வைத்து ஜோடனை செய்யப்பட்டு.. அவர்கள் இருவரும் கட்டித் தழுவி .. முத்தம் கொடுத்து.. கண்ணீர் விட்டு கரைந்து அழுததாக அடுத்த சில நிமிடங்களிலில் ஊர் பூராவும் பரவி விட்டது..

விளைவு..! அவர்கள் கோவிலை விட்டு இறங்கிய போது.. அண்ணனும் தம்பியும் ஒன்றாக இறங்கி வரும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண.. ஊரே மலைக் கோவிலின் அடிவாரத்தில் குழுமி நின்றது..

கடகடவென்று வாய் விட்டுச் சிரித்தான் கார்த்திகேயன்.. நிவேதா அவனை முறைத்தாள்..

‘என் பாடு.. உங்களுக்கு சிரிப்பா இருக்கா..?”

‘நீதானே இதை இழுத்து விட்டுக்கிட்ட..? நான்தான் சொன்னேனே .. கேட்டியா..? இரண்டு பேரும் பாசத்தை பிழிஞ்சுக்குவாங்க.. ஆனா நேரில பார்த்தா பேசிக்க மாட்டாங்க..”

‘யெஸ் கார்த்திக்.. என்னவோ “டூ’ விட்டுக்கிட்ட லவ்வர்ஸைப் போல.. இரண்டு பேருமே தெற்கு.. வடக்காய் திரும்பி நின்னுக்கிட்டாங்க.. அவர்களை நேராப் பார்த்து பேச வைக்க நான் படாதபாடு பட்டுட்டேன்..”

       ‘தலையால தண்ணியக் குடிக்க வைச்சிருப்பாங்க.. உனக்கு எதுக்குடி இந்த வேலை..?”

கார்த்திகேயன் உண்மையான அக்கறையுடன் நிவேதாவை கடிந்து கொண்டான்.. சில நாள்களாக அவள் இதே வேலையாய் அண்ணன் தம்பிகளை ஒன்று சேர்த்து வைக்க அவர்களுக்கு இடையே தூதுவராக அலைந்ததை அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்..

“இவ என்னை மறந்துட்டாளா..’

அவனுக்குள் மனத்தாங்கலும்.. மெலிதான கோபமும்.. எழத்தான் செய்தது.. அவனும்.. அவளும் தனியாக அருவிக்கரையில் அமர்ந்து பேச முடியவில்லை..

வீட்டுக்குள் கிடைத்த தனிமைப் பொழுதுகளை பங்கு போட்டுக் கொள்ள.. கல்யாணி  அங்கு இருந்தாள்..

அது என்னவோ.. கல்யாணி இருந்தால்.. நிவேதா அவள் முகத்தையே அள்ளிப் பருகுவதைப் போல வாத்சல்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள்.. கார்த்திகேயனை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்..

“இவ என்னைக் காதலிக்கிறாளா.. .இல்லை .. என் தங்கையை காதலிக்கிறாளா..?’

அவன் பொறாமைப் படுவான்.. அவளிடம் கேட்கவும் செய்வான்..

‘ஐய்யே.. பேச்சைப் பார்..” நிவேதா தலை சாய்த்து அவனை ஒரு பார்வை காதலுடன் பார்த்து வைத்தால்.. உடனே விழுந்து விடுவான்..

அதையும் தாண்டி.. நிவேதா.. அவனது அறையைக் கடந்து போகும் போது யாருக்கும் தெரியாமல்.. அறைக்குள் இழுத்துக் கொள்வான்..

‘ஐயையோ.. யாராவது.. பார்த்து விடப் போகிறாங்க..” அவள் பதறுவாள்..

‘பார்த்தாப் பார்க்கட்டும்.. அப்படியாவது  உனக்கும்.. எனக்கும் கல்யாணமாகட்டும்..” அவன் ஆவேசமாக அவளைத் தழுவி.. முத்தங்களை பதிப்பான்..

அந்த ஆவேசத்தில் .. அவளை.. அவனது உடலும்.. மனமும்.. எந்த அளவுக்கு தேடுகின்றன.. என்ற தேடல் புரியும்..

அவனது தேடலை உணர்ந்து கொள்ளும் நிவேதாவின் மனதில் காதல் பொங்கியெழ.. அவனது.. தேடல் பெயர்ந்து .. அவள் உடலிலும்.. மனதிலும்.. பரவி..பற்றிக் கொள்ளும்..

அவனது ஆவேசத்தை முழுமனதாக அனுமதித்து.. அவன் கைகளுக்குள்.. உருகி.. ஒன்றி விடுவாள்..

கட்டின பெண்டாட்டியைப் போல.. அவனது கைகளை அனுமதிப்பவள் இன்னும் அவனது காதலிதான்.. என்று ஒவ்வொரு ஆவேசமான தருணங்களின் கடைசி வினாடியிலும் அறிவு வலியுறுத்த.. கார்த்திகேயனாக அவளை விடுவிப்பான்..

‘தாங்க முடியலை நிவி.. நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்..”

‘ம்ம்ம்.. பண்ணிக்கலாம்.. பண்ணித்தான் ஆகனும்.. கடைசி வரை நாம இப்படி லவ்வர்ஸா இருந்து விட முடியாதில்ல..?”

‘அப்ப நாளைக்கே.. அப்பாவிடம் பேசவா..?”

‘பொறுங்க கார்த்திக்.. அதில சில சிக்கல் இருக்கு..”

‘நீதாண்டி சிக்கல்.. நான் எப்பப் பேசினாலும்.. இப்படியே எதையாவது பேசி.. வாயை அடைத்து விடு..”

‘முதலில் இதுக்குப் பதில் சொல்லுங்க.. அங்கிள்கிட்டப் போய் பேசறீங்க.. அப்ப.. அவரு என்னைப் பத்தி விசாரிக்க ஆரம்பிப்பாரு.. செய்வாரா.. மாட்டாரா..?”

‘செய்வார்.. அதனால் என்ன..?”

“அதனால் என்னவா..? உனக்கு நான் யாருன்னு தெரியுமா..?’ 

நிவேதா.. இமைக்காமல் அவன் முகத்தையே பார்க்க.. அவளது விழிகளில் தெரியும் சொல்ல முடியாத தவிப்பை இனம் கண்டு கொள்வான் கார்த்திகேயன்..

அவள் முகத்தை கைகளில் ஏந்தி.. அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்ப்பான்..

‘ஏன் நிவி..? எதுக்கு இந்தக் கலக்கம்..?”

‘நத்திங்.. கார்த்திக்..”

‘இல்லை.. எதுவோ இருக்கிறது..”

“ஆமாம்.. ஒன்றில்லை.. இரண்டில்லை.. ஓராயிரம் இருக்கிறது.. அதைத் தெரிந்தால் நீ தாங்கிக் கொள்கிறாயோ இல்லையோ.. உன் வீட்டார் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்..’

‘மனசுக்குள்ள பேசாம என்கிட்ட பேசுடி..”

‘பேசுகிறேன் கார்த்திக்.. ஒரு நாள் கட்டாயம் பேசுகிறேன்.. என் மனசில் இருக்கிற அத்தனையும் கொட்டிக் கவிழ்க்கிறேன்.. இப்ப வேண்டாமே.. ப்ளீஸ்..”

‘ஏண்டி..?”

‘எனக்காக கார்த்திக்.. உங்கள் நிவிக்காக.. என் மேல் உண்மையிலேயே உங்களுக்கு பிரியமிருந்தா.. இதைப் பத்தி பேசாதீங்க..”

‘ஆனா.. எனக்கு நீ வேணுமேடி..”

‘உங்கள் கைகளுக்குள் தானே நான் இருக்கிறேன்..?”

உன் கைகளுக்குள்தானே நான் இருக்கிறேன்..? என்ற ஒரு கேள்வியில் அவள்.. அவனுக்கு.. முழுமனதாக தன்னை அளிக்கும் முடிவை பலமுறை உணர்த்தியிருக்கிறாள்..

ஆனால்.. கார்த்திகேயன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகிவிடுவான்.. ஒருமுறைகூட.. அவளது முடிவை அவன் அங்கீகரித்ததில்லை..

“இது தான் என் கார்த்திக்..’ 

அவனுடைய அந்த நேர்மையில் அவளது மனம் விகசித்தது..

அவளையே பார்த்தபடி.. அருவிக் கரையில் அமர்ந்திருந்தவனைப் பார்க்க.. பார்க்க அவளுக்கு தெவிட்டவில்லை..

“இவன் என்னுடையவன்..’

அந்த ஊருக்கு வருவதற்கு முன்னாலேயே..அவளுக்கு அவனைப் பற்றிய் முழுவிவரமும் தெரியும்..

ஆனால் அவனின் காதலுக்கு ஆட்படுவாளென்றோ.. அந்தக் காதலுக்கு குறையாத வேகத்தில் பதிலுக்கு அவனை காதலிப்பாள் என்றோ.. அவள் நினைத்துக் கூட பார்த்ததில்லை..

கடமைக்காக.. அதற்கும் மேலாக.. கல்யாணியைப் பார்த்து விடும் வேகத்தோடு அந்த ஊருக்கு ஓடி வந்தவள் அவள்..

காதலை அவள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை..

“எப்படி.. நான்.. இவனாக ஆகிப் போனேன்..’  அவள் மனதிற்குள் வியந்து போனாள்..

‘நானாக நானில்லை..

நீயாக ஆகிப் போனேன்..”

அந்த இரண்டு வரிக் கவிதை உணர்த்திய செய்தியில் அவன் பரவசப்பட்டு போனான்.. கைநீட்டி எதிரேயிருந்த பாறையில் அமர்ந்திருந்தவளை இழுத்து.. தன் மடியில் போட்டுக் கொண்டான்..

‘நிவி..”

‘ம்ம்ம்..”

‘ஐ லவ் யு..”

‘ம்ம்ம்..”

அவர்கள் வெகு நேரம் அருவிக் கரையில் இருந்து விட்டு வீடு திரும்பினாhகள்.. பக்கத்திலிருந்தவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் கேள்வி இருக்க.. நிவேதா புருவங்களை உயர்த்தினாள்..

‘அண்ணனையும்.. தம்பியையும் ஒன்று சேர்த்திட்ட.. அடுத்து என்ன செய்யப் போகிற..?”

மரகதத்தின்  வீட்டுக்குள் கால் வைத்தாள் நிவேதா..

‘வாம்மா.. வா.. மரகதம்.. யாரு வந்திருக்கிறது பாரு..”

அவளை வரவேற்ற கோசலையின் விழிகளில் தெரிந்த அன்யோன்யம் நிவேதாவை ஆச்சரியப் படுத்தியது.. அதே கணம்.. மனதுக்குள் குளிரெடுக்கவும் செய்தது..

“இந்தப் பாட்டி ஏன்.. என்னை பாசமா பார்த்து வைக்குது..’

அவளது மனது வினவிய வினாவை.. மரகதத்தை முந்திக் கொண்டு அங்க வந்த கேசவ மூர்த்தி வினவினார்..

‘ஏம்மா.. இந்தப் பொண்ணைப் பார்த்துட்டா இப்படி கூப்பாடு போட்ட..?”

‘ஆமாம்பா… ஆமாம்..”

‘வேடிக்கைதான் போ.. நான்கூட வராத விருந்தாளி  யாரோ.. வந்துட்டாங்களோன்னு நினைச்சேன்..”

கேசவமூர்த்தியின் வார்த்தைகளில்.. நிவேதா அந்த வீட்டுக்கு வரக்கூடாத விருந்தாளி என்ற மறைபொருள் தென்பட்டது..

நிவேதா  அதை கண்டு கொள்ளாமல் கை குவிக்க.. பதிலுக்கு பாவமே என்று சிறிதாகக் கூட தலையை ஆட்டவில்லை கேசவ மூர்த்தி..

கோசலையின் முகத்தில் கோபம் வந்தது..

‘கேசவா.. தண்ணிக்கு மேல தெரியற தாமரைப் பூவைத்தான் நீ பார்க்கிற.. தண்ணிக்கு கீழே இருக்கிற தண்டு உன் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது..”

‘நீ போடுற புதிருக்கு நான் ஆளில்லம்மா..”

‘நீ எதுக்குத்தான் ஆளு..? குடும்பத்தை உடைக்கத்தான் நீ லாயக்கு..”

‘இதையேதான்.. உன் மருமகளின் தம்பிகளும் சொல்லிக் காட்டறானுக.. நீயும் சொல்லிக் காட்றே.. என் ஆயுசு பூராவும் இந்தப் பழி என்னைத் துரத்துமா..? விடவே விடாதா..?”

‘விடறதுக்கு வழி கிடைச்சாலும் நீ பிடிச்சுக்க மாட்டேங்கறியே..”

‘என்ன வழியை நீ கண்டு விட்ட..?”

‘நான் கண்டு என்ன செய்ய..? கண்ணுக்கு முன்னால அது வந்து நின்னாலும்.. நீதான் கண்டுக்க மாட்டேங்கறியே..”

கோசலையின் பேச்சில் குழம்பிப் போனார் கேசவமூர்த்தி.. கோசலையும்..இப்படிப் பேசக் கூடியவள் அல்ல..

புதியதாக.. அவள் இப்படி புதிர் போட்டு பேசுகிறாளென்றால் ஏதோ விசயம் இருக்கிறது என்று அவரது அறிவுக்கு உறைத்தது..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link