Chapter 13

0Shares

இருதயத்தை வாள் கொண்டு அறுப்பது என்பதை அது வரை எழுத்தினில் படித்திருக்கிறாள் கௌசல்யா…

வைதேகியின் கடிதத்தைப ;படித்தபோது உணர்வு பூர்வமாக அதை உணர்ந்தாள்..

கடிதங்கள் தொடர் கதையாகின.. அதிலறிந்த வைதேகியின் திருமண வாழ்வின் சரித்திரம்.. கௌசல்யாவைப் பதற வைத்தது.. 

‘என் மேல் ஆணை..’

வைதேகி .. தன் மேல் ஆணை வைத்து கௌசல்யாவின் வாயைக் கட்டிப் போட்டிருந்தாள்..

கைகள் கட்டிப் போடப் படாத கௌசல்யா செயலில் இறங்கினாள்.. வைதேகியின் கணவனின் ஊரிலிருந்த ‘தின ஒலி’ யின் நிருபரிடம் போனில் பேசினாள்.. மறைமுகமாக சகோதரியின்  நிலைமையை உணர்த்தினாள்.. ரகசியம் காக்க வேண்டுகோள் விடுத்தாள்..

‘இது சீக்ரெட்டா இருக்கும்.. நானே டீல் பண்ணுகிறேன் கவலைப்படாதீங்க..”

மறுமுனையில் முகமறியாத அவளது அலுவலகத் தோழன் உறுதியளித்தான்..

தின ஒலியில் வேலை பார்ப்பதினால் கௌசல்யாவிற்கு கிடைத்த நன்மைகளில் இதுவும் ஒன்று..

எல்லா ஊர்களிலும் பரந்து விரிந்திருக்கும் தின ஒலியின் பத்திரிக்கையின் ஊழியர்கள்.. குடும்பத்தின் அங்கத்தினரைப் போன்றவர்கள்..

அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கரம் நீட்டிக் கொள்ள முகமறிய வேண்டியதில்லை.. முகவரியும் வேண்டியதில்லை..

‘நம்ம தின ஒலியின் ஸ்டாப்புப்பா..’

இது ஒன்றே போதுமானதாக இருந்தது..

கௌசல்யாவின் வேண்டு கோளும் அதே முறையில ஏற்றுக் கொள்ளப் பட்டது..

‘இதுக்குப் போய் எதுக்கு இத்தனை தயக்கம் கௌசல்யா..? நீங்க யார்..? நம்ம தின ஒலியின் ஸ்டாப்.. உங்களுக்கு உதவி செய்வது என் கடமை..”

சொன்னபடி ஒரே வாரத்தில்.. வைதேகியின் குடும்பத்தைக் கண்காணித்து கௌசல்யாவிற்கு அறிக்கை அனுப்பினான்.. அந்த முகமறியாத சக ஊழியன்..

அந்த அறிக்கை சொன்ன விவரங்கள் கௌசல்யாவைப் பதைக்க வைத்தன..

மனோஜின் மறுபக்கத்தை அந்த அறிக்கை தெளிவாக எடுத்துக் கூறியது..

அவனுக்கு குடிப் பழக்கத்திலிருந்து.. உலகத்தில் இருக்கும் அத்தனை மோசமான பழக்கங்களும் இருப்பதை.. திருமணத்திற்கு முன்னரே அவன் வேறு சில பெண்களுடன் வாழ்க்கை நடத்தியதை.. அதில் ஒருத்தி கைக்குழந்தையுடன் வந்து வைதேகியின் முடியைப் பிடித்து  வீட்டுக்கு வெளியில் தள்ளியதை.. அதை ஏனென்று கேட்காமல் ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்று அந்தக் குடும்பம் பார்த்ததை.. வைதேகி  இளைத்து..கருத்து உருமாறி நடை பிணமாக நடமாடிக் கொண்டிருப்பதை..

இன்னும் பல செய்திகளை அது பிட்டுப் பிட்டு வைக்க.. கௌசல்யா அரண்டு போனாள்..

வைதேகியை எப்படி மீட்பது என்ற பரிதவிப்பில் அவள் சக்திவேலை மறந்தாள்..

இரவும் பகலும் வைதேகியின் கவலையில் இருந்த கௌசல்யாவினால் ஒழுங்காக சாப்பிட்டு.. உறங்க முடியவில்லை..

கண் மூடினால் அதில் வைதேகியின் முகம்.. கௌசல்யா தூக்கமின்றி  இரவுகi;ள கழித்தாள்.. என்ன செய்வது என்று கௌசல்யா மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்த போது.. வைதேகி ஒரு நாள் பெட்டியுடன் நேரில் வந்தாள்..

 அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த கௌசல்யா.. வாசலில் அழைப்பு மணியின் சத்தம் கேட்டு போய் கதவைத் திறந்தாள்..

‘வைதேகி…” அவள் பாசத்துடன் அணைத்துக் கொள்ள பதிலுக்கு எந்தவித பிரதிபலிப்பையும் காட்டாமல் இயந்திரம் போல உள்ளே வந்தாள் வைதேகி..

இளைத்து கருத்திருந்த வைதேகியின் தோற்றம் கௌசல்யாவின் கண்ணில்பட.. கௌசல்யாவின் குரலைக் கேட்டு வெளியில் வந்த ஆண்டாளுக்கு வேறு ஒன்று கண்ணில் பட்டது..

‘என்னடி இது.. தனியா வந்திருக்கிற..?”

என்னவோ மகள் கொலைக் குற்றம் பண்ணி விட்டதைப் போல அவள் முகம் மாறி விசாரித்தாள்..

‘ஏன்..? தனியா வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டியா?”

‘என்னடி இது..? நோக்கே இது நன்னாயிருக்கா..? கையில் பெட்டியோட.. ஆம்படையான் கூட வராம.. புக்காத்து மனுஷாளின் துணையும் இல்லாம தனியா 

வந்து நிற்கிற.. இதை ஏன்னு கேட்டா.. விதண்டாவாதம் பண்றியே..? கல்யாணமாகி இத்தனை மாசமாகியும் நீ இன்னும் மாறவே இல்லையாடி..?” ஆண்டாள் படபடத்தாள்..

‘எவ்வளவோ மாறியிருக்கேன்.. உன் மாப்பிள்ளைக்கு என்னை மாற்றுவதுதானே வேலை..? என்ன ஒன்னு.. அது உன் கண்ணில் பட மாட்டேன்கிறது.. உன் மாப்பிள்ளை இல்லாம நான் தனியா கையில பெட்டியோட வந்து நிற்கிறது மட்டும்தான் உன் கண்ணில் பட்டுத் தொலைக்குது.. ” , வைதேகி அலுப்புடன் ஆண்டாளைக் கடந்து உள்ளே சென்றாள்.. 

பு+ஜையை முடித்து விட்டு வெளியில் வந்த ராமாமிர்தம் மூத்த மகளைக் கணடதும் முகம் மலர்ந்தார்..

‘வைதேகி.. நன்னாயிருக்கியா குழந்த?”

‘ம்ம்ம்..”

‘மாப்பிள்ளை எங்கே…?”

‘ஆரம்பிச்சுட்டிங்களா..?”

மகளின் கேள்வியில் அவர் முகம் மாறினார்.. மனைவியை கேள்வியுடன் பார்த்தார்..

‘என்னைப் பார்த்தா.. நேக்கென்ன தெரியும்? நுhன் வாசலிலேயே இந்தக் கேள்வியை கேட்டுட்டேன்.. இவதான் சரியான அமுக்குளியாச்சே.. பதிலே சொல்ல மாட்டேங்கிறா..”

‘பெருமாளே..” ஆயாசத்துடன் சுவரில் சரிந்து அமர்ந்தாள் வைதேகி..

‘செத்த சும்மா இருக்கிறேளா..? இது நான் பிறந்து வளர்ந்த வீடுதானே.. இந்த வீட்டுக்கு வர எனக்கு உரிமையில்லையா..?”

‘அதில்லம்மா குழந்தே..”

‘அப்பா.. நானே ஓய்ந்து போய் ஓடி வந்திருக்கிறேன்.. நீங்களும் என் மனசை ரணப் படுத்தாதேள்..”

‘வைதேகி..”

‘நான் வந்துட்டேன்ப்பா.. ஒரேயடியாய் வந்துட்டேன்.. இனி திரும்பவும் அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டேன்..”

வைதேகியின் குரல் தீர்மானமாக ஒலித்தது.. ஆண்டாள் கலவரமானாள்.. ராமாமிர்தத்தின் முகத்தில் சிந்தனை படர்ந்தது.. கௌசல்யா அலுவலகத்திற்கு விடுப்பு சொன்னாள்..

‘அம்மா.. முதலில் இவ குளித்து சாப்பிடட்டும்..” கௌசல்யா கண்டிப்புடன் கூற.. ஆண்டாள் முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள்..

‘இளையதுதான் பெத்தவாளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கலை.. மூத்ததாவது கல்யாணம் பண்ணின்டு புக்காத்துல சமர்த்தா குடித்தனம் பண்ணுதுன்னு நிம்மதியா இருந்தேன்.. இப்ப அந்த நிம்மதியிலேயும் மண் விழுந்துடுச்சு..”

தாயின் பொறுமலைக் கேட்ட வைதேகி கண்ணீரை விழுங்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்..

கௌசல்யா காதல் விவகாரம் வெளிப்பட்ட தினத்திலிருந்து ராமாமிர்தமும்.. ஆண்டாளும் அவளிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.. ஆமாம்.. இல்லையென்ற ஓரிரு வார்த்தைகளுடன் அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ள.. கௌசல்யா அந்த பேச்சு வார்த்தைக்கு பழகிவிட்டாள்..

‘இளைய மகளிடம் பேச்சை சுருக்கிக் கொண்டவர்கள்.. மூத்த மகளிடமும் அதையே தொடர்ந்தால்தான் என்ன..?’  என்ற எரிச்சலுடன் கௌசல்யா அருகிலேயே இருந்தாள்.. 

‘சாப்பிட வா வைதேகி..”

‘இப்ப அது ஒன்னுதான் நேக்கு குறைச்சல்.. போடி..”

‘எல்லாமும் கிடைச்சவான்னு இந்த லோகத்திலேயே யாருமேயில்லைடி.. அப்படி ஒருத்தரைக் கண்ணிலே காட்டிடு.. நீ சொன்னதை நான் ஒப்புக்கிறேன்..”

இதைச் சொன்ன கௌசல்யாவை வைதேகி உற்றுப் பார்த்தாள்..

‘என்னால உன் காதலில் மண் விழுந்துடுத்தில்லயா..?”

‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை வைதேகி..”

‘எதுக்குடி உன் காதலை அழிச்சுண்டே..? எனக்காகவா?  உன் காதலை அழிச்சுட்டு தாலி வாங்கிக்கிட்ட பாவம்தான்.. நானே அழிஞ்சசு நிற்கிறேன் கௌசி..”

‘வைதேகி…”

கௌசல்யா  சரம் விரிக்க.. வைதேகி தேம்பலுடன் தங்கையின் தோள் சாய்ந்தாள்..

மடிதாங்க வேண்டிய அன்னை கடமையை மறக்க அங்கே தங்கை தாயானாள்..

‘அழாதேடி… “

கௌசல்யா துடைக்கத் துடைக்க வைதேகியின் கண்ணீர் நிற்காமல் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது..

ஆண்டாள் அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.. மூத்த மகளின் அழுகையைக் கண்டு புருவம் சுளித்தாள்..

‘இப்ப எதுக்காக இவ கண்ணில ஜலம் விடுறா..? புக்காத்து மனுஷா கொஞ்சம் அப்படி.. இப்படின்னுதான் இருப்பா.. எல்லாத்தையும் அனுசரிச்சு குடும்பம் நடத்தறதுதான் பொம்மனாட்டிக்கு  அழகு.. இப்படித் தொட்டதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு பிறந்தாத்துக்கு பெட்டியைத் தூக்கிண்டு வந்தா.. பார்க்கிறவா .. உன்னை குத்தம் சொல்ல மாட்டா.. இந்த ஆண்டாள் பொண்ணு வளர்ந்திருக்கிற லட்சணத்தைப் பாருன்னு என்னைத்தான் குத்தம் சொல்வா…” ஆண்டாள் பெரிந்தாள்..

வைதேகியின் முடி கோதி.. ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த கௌசல்யா கடுப்பாகி விட்டாள்..

‘அம்மா.. செத்த நீ சும்மா இருக்கியா? நோக்கு கைக்காரியம் இருந்தா போய் கவனி.. போ..”

‘ஏண்டி.. நீ தான் புக்காத்துக்கு போகிற யோகமில்;லாம பிறந்து தொலைச்சிருக்கே.. 

ஆம்படையான்   வுட வாழ முடியாத வரம் வாங்கி பிறந்து தொலைச்சிருக்கே..  வரம் வாங்கி பிறந்தவளையும் போய் பிழைக்க விடாம.. அவ மனசை ஏண்டி கலைக்கப் பர்க்கிற..?”

இப்படிக்கூட ஒரு தாயால் பேச முடியுமா..? செந்தணல் வார்த்தைகளை அள்ளி வீச முடியுமா..?

கண்களை இறுக்கி மூடி தாய் சொன்ன வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ள முயன்றாள் கௌசல்யா..

தன் துயரத்திலே நின்றால் தமக்கையின் துயரத்தை நீக்க முடியாது என்று புத்தி அவளுக்கு அறிவுறுத்த.. நிமிர்ந்து ஆண்டாளைத் தீர்க்கமாகப் பார்த்தாள்..

அந்த பார்வைக்குத்தான் எத்தனை சக்தி..

அடைக்க முடியாத ஆண்டாளின் வாயை அநதப்  பார்வை அடைத்து விட்டது… ஆண்டாள் வாயடைத்துப் போனாள்.

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link