Chapter 20

0Shares

சென்னையில் பரபரப்பான வாழ்க்கைக்கு கௌசலயாவின் குடும்பம் பழகிப் போனது.. மெல்ல.. மெல்ல.. சென்னை வாசிகளாக ஆண்டாளும்;.. ராமாமிர்தமும் மாறிவிட்டனர்..

‘பெருமாளை சேவிக்காம எப்படிடீ இருப்பேன்..?” என்று அரற்றிய ஆண்டாள்.. அடுத்த தெருவிலிருந்த பெருமாள் கோவிலைக் கண்டதும் அமைதியாகி விட்டாள்..

காலையில் உலாவப் போன ராமாமிர்தத்திற்கு.. கூட நடந்து வந்தவர்க்ள பழக்கமானார்கள்.. பந்தம் மெதுவாக இருகி.. சிநேகிதமாய் அது ஊருமாறியது.. நாளடைவில்  ‘வா.. போ.. ‘ என்று அவர்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பிக்க.. தினமும் நண்பர்களுடன் பூங்காவில் அமர்ந்து அரட்டையடிப்பதை வழக்கமாகிக் கொண்டார் அவர்..

சென்னை ஆபிஸ் கௌசல்யாவை அரவணைத்துக் கொண்டது.. கௌசல்யாவின் பேச்சு வழக்கு முதல்.. நிறைய வழக்கங்கள் மாற.. கௌசல்யா பேனாவை ஆயுதமாக்கினாள்..

வைதேகியின் முகம் அல்லும்.. பகலும் நினைவிலிருக்க குடும்பங்களுக்குள் இருக்கும் பாதிக்கப் பட்ட பெண்களின் கதைகளை வெளிக் கொணர ஆரம்பித்தாள்..

ஒரு நாயை அடித்தால்  கூட.. பாவம்.. வாயில்லாத ஜீவன் என்று பரிதாபப்படுகிற சமூகம்.. ஏன் .. ஒரு பெண்ணை அடிக்கும் போது மட்டும் வேடிக்கை பார்க்கிறது..?

அடித்தால் அவளுக்கும் வலிக்கும்தானே..? அடி அதிகமானால் உயிர் போகும்தானே..?

சக மனிதர்களை துன்புறுத்துவது தவறு என்று கூறும் சட்டத்தால் இதை சரி செய்து விட முடியுமா..? 

ஆயிரம் சட்டங்கள் வந்தாலும்.. குடும்பத்துக்குள் ஒரு பெண்ணிற்கு நடக்கும் வன்முறையிலிருந்து அவளைக் காப்பாற்றி விடமுடியுமா..?

கௌசல்யாவின் கனல் வீசும் எழுத்துக்கள் பேசப்பட்டன.. ‘ பேனாவை ஆயதமாக்கிய பெண்மணிகள்’ என்று சாதனைப் பெண்களைப் பற்றி வாரம் ஒரு கட்டுரையை வெளியிட்ட பெண்களுக்கான வார இதழ் ஒன்றில்.. அவளைப் பற்றிய கட்டுரையும் வந்தது..

எதையும் யோசிக்காமல் ஒரு தபஸ்வியைப் போல.. கடமையாற்றிக் கொண்டிருந்த கௌசல்யாவைக் பார்க்கும் போது ஆண்டாளின் மனம் வலித்தது..

‘ஏண்ணா.. ரெண்டு பெண்ணைப் பெற்றோம்.. ஒருத்தி வாழ வேண்டிய வயசில.. கண்ணை மூடிட்டா.. இன்னொருத்தி.. வாழ வேண்டிய வாழக்கையை வாழாம நடமாடிக்கிட்டு இருக்கிறா.. இதைக் கண் கொண்டு பார்க்கிறதுக்கா.. நாம ரெண்டு பேரும் பெத்தவான்னு இருக்கோம்..?”

ஆண்டாளின் ஆதங்கத்தை ராமாமிர்தத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.. இதே ஆதங்கத்தை அல்லும் பகலும் மனதில் சுமந்து கொண்டிருப்பவர்தானே..

‘என்னை என்னடி செய்யச் சொல்கிற..?”

‘அவளுக்கு மாப்பிளை தேடுங்கோ..”

‘தேடி..?”

‘என்னண்ணா இப்படிக் கேட்கிறேள..? எதுக்காக மாப்பிள்ளையை தேடச் சொல்வா.. ? கல்யாணம் பண்ணி வைக்கத்தான் தேடச் சொல்வா.. நமக்கு கோயம்புத்தூரில் வீடிருக்கு.. கடைசிவரை சாப்பிட உங்க பென்சன் பணமிருக்கு.. பூஜாவை நாம வளர்த்துக்கலாம்.. கௌசியாவது புருசன்.. குடும்பம்ன்னு வாழனும்.. அதைக் கண்ணார நான் பார்க்கனும்..”

ஆண்டாளின் மன ஆற்றாமையை கண்ணீர் கோடுகளாக அவளது கன்னத்தில் இறங்கியது..

‘அழாதேடி.. நேக்கு மட்டும் அந்த வருத்தமில்லையா..? ஆனா.. கௌசியின் மனசு.. நேக்கும்.. நோக்கும்.. நன்னாத் தெரியும்.. அதைத் தெரிஞ்சுக்கிட்டே மாப்பிள்ளை தேடச் சொன்னா எப்படிடீ..?”

‘அந்தப் பிள்ளையாண்டான் எங்கேயிருக்கான்னு தேடுங்கோ..”

ஆண்டாள் தனது வட்டம் சிறியதல்ல என்று நிரூபித்தாள்.. ராமாமிர்தத்தின் ஆச்சரியமான பார்வைiய்க கவனிக்காதவளைப்  போல அவள் தன் போக்கில் பேசினாள்..

‘என்னண்ணா பேசாம இருக்கிறேள்..? குலம்.. கோத்திரம்.. ஜாதகம்.. நாள்.. நட்சத்திரம்.. இதையெல்லாம் பார்த்துத்தானே வைதேகிக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்..? என்ன ஆச்சு..? என் குழந்தையை கொன்னுட்டாளே.. இத்தனையையும் பார்த்த நமக்கு.. அவன் குணத்தையும்.. நடவடிக்யையையும் ஒரு ஆளை வைச்சுப் பார்க்கத் தெரியலையே..”

‘ஆண்டாள்..”

‘எனக்கும் ;தெரியும்ண்ணா.. பக்கத்து ஆத்துப் பொண்ணுக்கு வரன் வந்தது.. அவளைப் பெத்தவா.. முதக் காரியமா.. துப்பறிகிற ஏஜென்ஸியைத் தேடிப் போனா.. நான் கூடக் கேட்டேன்.. ஏண்டிம்மா.. கல்யாணம் கூடி வந்தா.. ஜாதகப் பொருத்தம் பார்க்க ஜோஸியரைத்தான தேடிப் போகனும்..? நீயென்னன்னா.. ஏதோ ஏஜன்ஸியைத் தேடிப் போறயேன்னு.. அவா சிரிச்சா.. நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீங்க மாமின்னு கேட்டா.. ஏண்ணா.. நமக்கு இது தோணாம போயிடுத்து..?”

ஏன் தோன்றவில்லை..? மனோஜின் படிப்புக்கு சான்றிதழ்கள் இருந்தன.. அவன் பார்த்த வேலைக்கும் அத்தாட்சி இருந்தது.. அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரிக்கும் போது.. பணவசதியைப் பற்றி மட்டுமே கேட்டறிந்தார்.. ஏன் குணத்தை ஆராய தோன்றவில்லை..?

‘தோணலயேடி.. மடிப்புக் கலையாத உடுப்பைப் போட்டிருக்கிறவன் மனசுக்குள்ளே இப்படிப்பட்ட வக்கிரங்களெல்லாம் குடியிருக்கும்ன்னு எனக்குத் தோணமாப் போயிருச்சே..”

‘அதனாலதான் சொல்றேன்.. குலம்.. கோத்திரம் பார்த்து பெரியவளை நாம சாகக் கொடுத்தது போதும்.. சின்னவளாவது வாழட்டும்.. அவ மனசுக்குப் பிடிச்சவனைத் தேடிப் பிடிச்சு அவனுக்கே இவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்போம்..” சாயங்காலம் வந்தது பூஜாவுடன் கௌசல்யாவும் வந்தாள்.. ராமாமிர்ததிற்கு கண் ஜாடை காட்டினாள் ஆண்டாள.. அதைக் கண்டும் காணாததைப் போல.. உடைமாற்றிக் கொள்ள கௌசல்யா உள்ளே செல்ல முனைந்தபோது ராமாமிர்தம் அழைத்தார்..

‘ஒரு வாக் போயிட்டு வரலாமா கௌசி..?”

‘எங்கேப்பா..?”

‘பார்க் வரைக்கும் போகலாமே..”

கௌசல்யா மறுக்கவில்லை.. ராமாமிர்தத்துடன் நடந்தாள்.. 

‘சொல்லுங்கப்பா…”

மெதுவாக நடந்து கொண்டே வினவியவளின் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார் ராமாமிர்தம்..

‘எதைச் சொல்ல சொல்கிறேம்மா..?”

‘நீங்க என்னிடம் எனன பேசனும்ன்னு நினைத்தீங்களோ அதைச் சொல்ல சொல்கிறேன்.. அதுக்குத்தானே என்னை வாக்கிங் போகலாமுன்னு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க..?”

‘கௌசி..”

இளைய மகளின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்து போனார் ராமாமிர்தம்..

சறுக்கு மரத்தில் சறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தபடி மர பெஞ்சில் இருவரும் அமர்ந்தார்கள்..

‘அவன் எங்கேயிருக்கிறான்னு நோக்குத் தெரியுமா..?” ராமாமிர்தம் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்..

‘எவன்..?” கௌசல்யா புருவங்கள் உயர்ந்தன..

‘அவன்தான்.. அந்த சக்திவேல்.. ” ராமாமிர்தத்தின் பார்வை தாழ்ந்து நிலம் பார்த்தது..

மனோஜை.. ‘நம்மாத்து மாப்பிள்ளை வந்திருக்கிறார்..’ என்று மரியாதையுடன் தான் ராமாமிர்தம் விளிப்பார் என்பது கௌசல்யா நினைவுக்கு வந்தது..

”அவர்’ எங்கேயிருக்கிறார்ன்னு எனக்குத் தெரியாதுப்பா..” கௌசல்யா.. ‘அவர்’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தாள்..

மகளின் கோபம் ராமாமிர்தத்துக்கு புரிந்து விட்டது..

‘ஏம்மா.. உன் பத்திரிக்கையில்தானே அவரும் வேலை பார்க்கிறார்..?”

செய்த தவறை உடனடியாக சரி செய்தார் ராமாமிர்தம்.. கௌசல்யாவின் முகம் கனிந்தது..

‘ஆமாம்ப்பா.. பட்.. அவர் எந்த ஊருக்கு மாற்றல் வாங்கிண்டுப் போனாருன்னு எனக்குத் தெரியாது..”

‘உன் ஆபிஸில் பேசியிருப்பாளேம்மா..”

‘பேசினாங்க.. ஆனா.. அவர் அந்த ஊரில்தான் இருக்கிறார்ன்னு எப்படிச் சொல்ல  முடியும்..? மாற்றல் மேல.. மாற்றலா வாங்கிண்டு போனவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதுப்பா..”

‘நீ தேடினால் கண்டுபிடித்து விடலாமேம்மா..?”

‘கண்டு பிடித்து விடலாம்தான்.. ஒரு வேளை.. இந்த இடைப்பட்ட காலத்தில் வேறொரு பெண்ணை அவர் கல்யாணம் பண்ணியிருந்தா என்ன செய்கிறது..? அவள் முன்னால  நான் போய் நின்னா அவர் மனம் சலனப்படாதா..?”

‘கௌசி..” அவர் அதிர்ந்தாள்..

‘நான்தான் சொன்னேன்ப்பா.. நீங்க வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான்தான் சொன்னேன்.. உங்களுக்கே நன்னாத் தெரியுமே.. அவர் என பேச்சை தட்ட மாட்டாருன்னு..”

‘அப்ப.. நீயும் ஒரு கல்யாணத்தை பண்ணிக்கலாமேம்மா..”

‘அதையும் சொல்லியிருக்கேன்ப்பா.. வாக்குக் கொடுத்திருக்கேனே.. அவரைத் தவிர வேறொருத்தரை மனசாலயும்.. நினைக்க மாட்டேன்னு வாக்குக் கொடுத்திருக்கிறேன்.. என்னை வார்த்தை தவறச் சொல்கிறீங்களா..? என்னால் அது முடியுமா..?”

‘அதுக்காக நீ இப்படி தனி மரமாய் நிற்கலாமா..?”

‘நான் தனிமரம்ன்னு யார் சொன்னது..? என் மனசுக்குள்ள அவர் நினைவிருக்கு .. தினமும் அந்த நினைவை நான் ஆராதிச்சுக்கிட்டிருக்கேன்.. அந்த ஆராதனை எனக்குத் துணையிருக்கும்..”

‘கௌசல்யா.. குலம்.. கோத்திரம்ன்னு பார்த்து.. உன் காதலை சாகடிச்சுட்டேனே..”

‘இதில் குலம்.. கோத்திரத்தை ஏன் இழுக்கறீங்கப்பா..?”

‘கௌசி…”

‘காதல்  குலம்.. கோத்திரம் பார்ப்பதில்லைதான்.. அதுக்காக ஒரே குலம் கோத்திரத்துல வரக்கூடாதுன்னும் இல்லையே.. உங்களுக்குத் தெரியுமா..? வைதேகி செந்திலைக் காதலிச்சலள்..”

‘யாரைச் சொல்கிற..? நம்ம கோடியாத்து வெங்கட்ராமனின் மகனையா சொல்கிற..?”

‘அவரேதான்.. அவரும் நம்ம குலம்.. கோத்திரம்தானே.. வைதேகி மேல உயிரையே வைச்சிருந்தார்.. அவ பின்னாடியே அலைஞ்சார்..

‘இதை ஏன் அவ என்கிட்டச் சொல்லலை..? வெங்கட்ராமனின் ஆத்துல ;சம்பந்தம் பண்ண நாம கொடுத்து வைச்சிருக்கனுமே..”

‘அவதான் கொடுத்து வைக்காதவளாய் போயிட்டாளேப்பா.. கொடுத்து வைத்திருந்தவளா இருந்திருந்தா செந்திலோட காதலை ஏத்துக்கிட்டு இருப்பாளே..”

‘என்னம்மா சொல்ற..? இப்பத்தானே வைதேகி செந்திலை காதலிச்சான்னு சொன்ன..?”

‘அப்பா.. எப்போதுமே நமக்கு கையிலிருக்கிற பொருளின் அருமை தெரியாது.. தூரத்துப் பச்சைதானே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்? வைதேகியும் அப்படித்தான்.. சின்ன வயசில இருந்து பார்த்து வளர்ந்த செந்தில்கிட்ட அவளுக்கு கவர்ச்சி ஏற் படலை.. அதுவே.. சொந்தக்காரில் வந்து இறங்கி.. மடிப்பு கலையாத பேன்ட்.. சர்ட்டோட.. பார்வைக்கு அழகா.. அம்சமாய் பெண்பார்த்த ஆபிஸர் மாப்பிள்ளைகிட்ட அவளுக்கு கவர்ச்சி ஏற்பட்டுபோச்சு.. சம்மதம் சொல்லிட்டா.. நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாள் இருந்தப்போதான்.. அவளுக்கு செந்தில் 

மேல் மனசுக்குள்ள இருந்த காதல் உறைச்சிருக்கு… ஆனா.. உங்களோட கௌரவத்துக்காக வெளியே சொல்லாம திரும்பவும் மனசுக்குள்ள காதலை புதைச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டும் போயிட்டா…”

ராமாமிர்தம் பிரமை பிடித்தவரைப் போல அப்படியே அமர்ந்து விட்டார்..

அவர் மனக் கண்ணில் சிரித்த முகத்துடன் செந்தில் தோன்றினான்.. அதிர்ந்து பேசாத வெங்கட்ராமனின் மனைவி தோன்றினாள்.. மனித நேயம் மிக்க வெங்கட் ராமன் தோன்றினார்..

அப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கைப் பட வாய்ப்பு கிடைத்தும் வைதேகி ஏன் அதை நழுவ விட்டாள்..? ராமாமிர்தம் செயத எந்தப் பாவத்திற்கான தண்டனை இது..?

இதை நினைக்கும் போதே.. மௌனப் பார்வையுடன் வீட்டைக் காலி செய்துவிட்டு ஊரைவிட்டுப் போன சக்திவேலின் உருவம் அவர் மனக் கண்ணில் தோன்றியது..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link