Chapter 24

0Shares

‘நான்கு நாள்களா கண்களே பூத்துப் போயிட்டது..” ஜெனிபர் அலுத்துக் கொண்டாள்..

‘வழிமேல் விழிவைத்துப் பார்த்தால் கண்கள் பூத்துத்தானே போகும்..?”

‘ஆமாண்டி.. நான் ஒருத்திதான் அவனை சைட் அடிக்கிறேன்.. நீங்க எல்லோரும் அவன் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..” ஜெனிபர் சண்டைக்கு வந்தாள்..

‘பின்னே..இல்லையா..?” அனிதா கேட்டாள்..

‘இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. அவன் வந்தவுடனே உனக்கு அவன்கிட்ட சந்தேகம் கேட்க வேண்டியிருக்கும்.. வசுமதிக்கு.. அவளுடைய ஆர்டிகளைப் பற்றி அவனுடைய ஒபினியன் என்னன்னு கேட்ட வேண்டியிருக்கும்.. இதெல்லாம் அவன் கூடப் பேச.. நீங்களா  உருவாக்கிக்கிற சாக்கு.. எனக்குத் தெரியாதுன்னு நினiச்சீங்களா..” ஜெனிபர் ஏளனமாகக் கேட்டாள்..

‘இதையெல்லாம் நீ செய்ததை வைத்து நாங்க கத்துக்கிட்டதுதான்.. எங்களுக்கா எதுவும் தெரியாதுடிம்மா..”, அனிதா பதிலுக்குப் பதில் கொடுத்தாள்..

‘ஸ்ஸ்.. அவன் வருகிறாண்டி..”வசுமதி சன்னக் குரலில் எச்சரித்தாள்..

அவர்களுக்கு முன்னதாக.. கௌசல்யா பார்வை ஆவலுடன் வாசலைப் பார்த்தாள்..

நிமிர்ந்த நடையுடன்.. கம்பீரமான தோற்றத்துடன்.. ஆளை ஊடுறுவும் அதே பார்வையுடன்.. சக்திவேல் வந்து கொண்டிருந்தான்..

‘எங்கே போயிருந்தானாம்..?’  கௌசல்யாவின் மனம் சிணுங்கியது..

இப்போதெல்லாம்.. அடிக்கடி அவன் காணாமல் போய் விடுகிறான்.. அவன் எங்கே குடியிருக்கிறான் என்று கௌசல்யாவிற்கு;த தெரியாது.. அவள் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை..

இன்னொருத்தியுடன் அவன் குடும்பம் நடத்தும் வீட்டைப் பார்க்கும் சக்தி அவளுக்கு இல்லை.. அதனால்தான்.. அவனது முகவரியைப் பற்றிக் கேட்காமல் விட்டு விட்டாள்..

ஆனால்.. அடிக்கடி அவன் இப்படி கண்களுக்குத் தென்படாமல் போய் விடும் நாள்களில்.. அவன் முகவரியைத் தெரிந்து கொண்டிருக்கலாமே என்ற ஏக்கம் அவளுக்குள் தோன்றும்..

அவன் இன்னொருத்தியின் கணவனாக இருந்தால் என்ன..? ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருந்தாலும்தான் என்ன..? எட்ட நின்று பார்த்து விட்டு வந்திருக்கலாமே என்று மறுகுவாள் அவள்..

அப்போதும் அதைப் போல மறுகிக் கொண்டிருந்தவளின் முன்னால் வந்து நின்று.. எப்போதும் பார்க்கும் புரியாத பார்வையுடன்..

”hய்..” என்றான் சக்திவேல்..

”hய்..”

‘ஈவினிங் நீ ப்ரீயா..?”

‘என்ன விசயம்..?”

‘என் வீட்டில ;ஒரு பங்சன்.. உன்னை இன்வைட் பண்ணச் சொல்ல் என் வொய்ப் சொன்னாள்..”

‘என் வொய்ப்..’  கௌசல்யாவின் மனம் உடைந்தாள்..

‘அடடா.. எனக்கு வேலையிருக்கே..”

‘நாளைக்கு அந்த வேலையை தள்ளிப் போடு..”

‘இல்லை.. அது முக்கியமான வேலை..” 

‘ஈவினிங் நீ கட்டாயம் என்கூட வருகிற..”

சக்திவேல் எடிட்டரின் அறைக்குள் போய் விட்டான்.. மாலையில் வேலை முடிந்தவுடன் அவன் கண்ணில் படாமல் நழுவி வாசலில் இறங்கினாள் கௌசல்யா..

‘க்ரீச்’ கென்ற சத்தத்துடன் அவள் முன்னால் தன் பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான் அவன்..

‘ஏறு..”

‘ப்ளீஸ்..”

‘ஏறுன்னு சொன்னேன்..”

அவன்  குரலில் கடுமை தெரிந்தது.. கௌசல்யா மனமில்லாமல் தயங்கி நின்றாள்..

‘என் வண்டியில் வருகிறேன்..”

‘ஏன்..? என் பின்னால் ஏறினால் கற்புக்கு குறைவு வந்து விடுமா..?”

‘என் வண்டி இங்கே இருக்கு..”

‘நாளைக்கு வந்து எடுத்துக் கொள்..”

‘பூஜாவை கூப்பிடப் போகனும்..”

‘பூஜாவை கொஞ்ச நேரத்துக்கு மற..”

அவன்  விடாமல் வழக்கடிக்க.. வேறு வழியில்லாமல் அவன் பின்னால் ஏறிக் கொண்டாள் கௌசல்யா..

வண்டி காற்றோடு கலந்து விடுவதைப் போலப் பறக்க.. அவன் தோள் தொட்டு சமாளித்தாள்..

‘கொஞ்சம் மெதுவாகத்தான் போங்களேன்..”

அவன் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.. சாலை வளைவில் பூக்கடை இருக்க.. கௌசல்யா அங்கே பைக்கை நிறுத்தச் சொன்னாள்..

‘என்ன..?”

‘உங்க வொய்புக்கு பூ வாங்கிக்கலாம்..”

அவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. அவன் பார்வையைத் தவிர்த்து.. அவள் பூ வாங்கிக் கொண்டாள்.. பக்கத்திலிருந்த கடையில் பிஸ்கட் பாக்கெட்டையும்.. இனிப்புக்களையும் வாங்கிக் கொண்டாள்..

‘பூ என் வொய்ப்புக்கு.. இது யாருக்கு..? ” அவன் கிண்டலாகக் கேட்டான்..

‘இது என்ன கேள்வி..? உங்க மகனுக்குத்தான்..”

‘அது சரி.. வண்டியில் ஏறு..”

‘இவன் ஏன் இப்படியே பேசி வைக்கிறான்.. ?’  அவள் புரியாமல் விழித்துக் கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

அவன் குடியிருந்த அபார்ட்மென்டின் வாசலில் பைக் நின்றது.. கௌசல்யா இறங்கியதும்.. பைக்கை பூட்டி விட்டு அவன் முன்னால் நடந்தான்.. அவள் பின் தொடர்ந்தாள்.. வீட்டிற்குள் போனதும்..

‘எந்த ப்ளோர்..?” என்றாள் கௌசல்யா..

‘தேர்ட் ப்ளோர்..”

மூன்றாவது மாடியில்.. லிப்டிலிருந்து வெளிப்பட்டு நடந்தார்கள்..

‘இதுதான் என் ப்ளாட்..”

சக்திவேல் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான்.. கௌசல்யாவின் புருவங்கள் உயர்ந்தன..

‘வீடு பூட்டியிருக்கே.. உங்க வொய்ப் பையனெல்லாம் எங்கே..?”

‘உள்ளே வா..”

‘பங்சன்னு சொன்னீங்களே..”

‘இப்ப உள்ளே வான்னு சொன்னேன்..”

‘உங்க வொய்ப் இன்வைட் பண்ணினதாய் சொன்னீங்களே..”

‘ஏன்..? நான் இன்வைட் பண்ணினா நீ வரமாட்டியா..?”

‘சக்தி..”

‘உள்ளே வாடி..

அவளின் கரம் தொட்டு வேகமாய் உள்ளெ இழுத்தான் சக்திவேல்.. கதவைப் பூட்டி விட்டு அதன் மேல் சாய்ந்து நின்றான்.. அவளையே வேட்கையுடன் பார்த்தான்.. அந்தப் பார்வையில் கனன்ற காதலின் ஜ்வாலையைக் கண்ட கௌசல்யா.. அஞ்சி பின் வாங்கினாள்..

‘கதவைத் திறங்க சக்தி..”

‘முடியாது..”

அவன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்..

‘வேண்டாம் சக்தி..”

அவள் குரல் நடுங்கியது.. அவன் முன்னேறினான்..

‘சக்தி.. உங்களுக்கு இப்ப கல்யாணமாகிருச்சு..” அவள் பதறினாள்.. அவன் நிற்கவில்லை..

‘நீங்க ஒரு பிள்ளைக்கு தகப்பன் சக்தி..” அவள் கதறினாள்.. அவன அவளை நெருங்கி விட்டான் ..

‘என்னைத் தொடாதீங்க சக்தி..”

அவன் தொட்டான். அவள் போராடினாள்.. எளிதாக அவளைக் கைகளில் தூக்கிக் கொண்டவன்.. கால்களால் உதைத்து படுக்கையறையின் கதவுகளைத் திறந்தான்.. அவளைக் கட்டிலில் கிடத்தினான்.. அவள் மேல ;பரவிப் படர்ந்தான்..

‘சக்தி..” அவள் நம்ப முடியாமல் விழி விரித்தாள்.. அவளுடைய சக்தியா இது..? இன்னொருத்தியின் கணவனாக இருந்து கொண்டு.. இன்னொருவனின் மனைவி என்று சொல்லிக்  கொள்பவளிடம் முறை தவறி நடக்கத் துணிகிறானே.. இவனையா அவள் மனதிற்குள் தினம் தினம் ஆராதித்தாள்..?

ஆயிரம்தான் அவள் அவனுடைய காதலியாக இருந்தாலும் முறை தவறி கூட நினைப்பது தவறில்லையா..?

அவள் மனம் குமுறி நியாயம் கேட்டாள்.. அவன் நிதானமாக அவள் முகத்தோடு முகம் வைத்துப் பதில் சொன்னான்..

‘யார்.. இன்னொருத்தியின் கணவன்? நானா..? நீ.. இன்னொருவனின் மனைவியா..? எங்கே.. என் தலைமேல் அடித்து சத்தியம் செய் பார்க்கலாம்..”

‘சக்தி.. அவள் ஸ்தம்பித்தாள்..

‘பெங்களுர் போயிருந்தேன்.. அங்கேதான் சங்கரைப் பார்த்தேன்..

அவளுக்கு எல்லாம் தெளிவாகி விட்டது.. சங்கர் அவளைப் பற்றிய உண்மைகளை சக்திவேலிடம் சொல்லி விட்டது புரிந்துவிட.. அடுத்த கேள்வியைக் கேட்டாள்..

‘நான் உங்களுடைய கௌசிதான்.. ஆனா.. நீங்க இன்னொரு பெண்ணின் கணவனில்லையா..?”

‘இல்லை'”

‘கௌசிக்..?”

‘என் கற்பனை மகன்..”

‘சக்தி.. ?????”

அவள் எல்லையற்ற விடுதலை உணர்வுடன்.. நம்ப முடியாத பிரமிப்புடன் அவனைப் பார்க்க.. அவன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.. இப்போது அவன் பிடியிலிருந்து விடுபட கௌசல்யா போராடவில்லை.. மாறாக.. அவன் மார்பில் முகம் புதைத்து கண்மூடிக் கொண்டாள்..

பாலை வனத்தின் சுடுமணலில் நடந்து வந்தவளுக்கு இளைப்பாற பாலைவனச் சோலை கிடைத்து விட்ட நிம்மதியும்..அமைதியும் அவளது நெஞ்சத்தில் தோன்றியது..

‘உன்னை விட்டு இன்னொருத்தியின் விரல் தொடக்கூட என்னால் முடியுமாடி..?”

‘நான் அதை நினைத்தேன் சக்தி..”

‘வருசக் கணக்கில் பிரிந்திருந்தவன் உன்னைத் திடீர்ன்னு பார்க்கிறேன்.. நீயோ கையில் குழந்தையோடு நிற்கிறாய்.. உன் கணவன் வெளிநாட்டில ;வேலை பார்க்கிறான்னு சொல்கிறாய்.. நானென்ன செய்ய? உன்னை நினைத்துக்கிட்டே வாழ்ந்துகிட்டு இருக்கிறேன்னு சொன்னால் உன் குடும்ப வாழ்க்கை பாதிக்காதா..? அதனால் பொய் சொன்னேன்..”

‘சக்தி..” அவளது கண்ணீர் அவன் மார்பை நனைத்தது..

‘நானும் அப்படித்தான்.. பூஜா வைதேகியின் குழந்தைன்னு சொல்ல வாய் திறந்தேன்.. நீங்க நான்கு வயதுப் பையனுக்கு அப்பான்னு ஜெனிபர் சொன்னாள்.. நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறேன்னு தெரிஞ்சா உங்க குடும்ப வாழ்க்கை பாதிக்குமேன்னு பூஜா என் குழந்தைன்னு சொல்லிட்டேன்..”

அந்த நொடியில் அவர்கள் இருவரின் மனமும் ஒன்றையே நினைத்து.. ஒன்றாக செயல் பட்டிருக்கிறது  என்ற நிறைவில் அவர்கள் ஒன்றிப் போனார்கள்..

பூஜாவின் பள்ளியின் வாசலில் சக்திவேலின் பைக் நின்றது.. 

‘அங்கிள்..” பூஜா ஓடி வந்தாள்..

‘நான் உன் அங்கிள் இல்லை பூஜா.. அப்பா..” சக்திவேல் அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான்..

‘வைதேகியின் குழந்தையாக இவள் வளர வேண்டாம் சக்தி..”

‘நம் குழந்தையா.. நம்மோடு வளர்வாள் .. இவள்தான் நம் மூத்த குழந்தை.. போதுமா..?”

பு+ஜாவைத் தோளில் சாய்த்துக் கொண்டு.. கௌசல்யாவின் தோள் மீது கை போட்டு அணைத்தபடி அவன் வீட்டிற்குள் நுழைந்த போது.. ஆண்டாளும்.. ராமாமிhதமும் பரவசப் பட்டுப் போனார்கள்..

‘என்னண்ணா இது? என் கண்ணையே நம்ப முடியலையே..”

‘நேக்கும் அப்படித்தாண்டி இருக்கு..”

அவர்கள் திக்கு முக்காடி நிற்க.. சக்திவேலும்.. கௌசல்யாவும் அவர்களின் பாதம் பணிந்தார்கள்..

‘எங்களை ஆசிhவாதம் பண்ணுங்க..”

நம்பமுடியாத திகைப்புடன் அவர்கள் ஆசிர்வாதம் பண்ணினார்கள்..

‘இவருக்கு கல்யாணம் ஆகிட்டடதா சொன்னயே கௌசி..”

‘எனக்குக் கல்யாணம் ஆகிட்டதா இவர் நினைச்சாராம்.. அதனால் பொய் சொல்லியிருக்கிறார் அப்பா..”

ராமாமிர்தம் மெய் சிலிர்த்துப் போனார்..

இதுதான் காதலா..? காதலித்த ஜீவனின் நிம்மதிக்காக.. சந்தோசத்திற்காக.. தன் தனிமையை வெளிப் படுத்தி கொள்ளாமல்.. பொய்யுரைத்து விலகி நிற்பது எப்படி சாத்தியப் பட்டது..?

‘பொய்மையும் வாய்மையிடத்து..’ என்று பொய்யா மொழிப் புலவன் சொன்னது இதைத்தானா…?

இப்படிப்பட்ட காதல் ஆராதனைக்குரியது அல்லவா..? இந்தக் காதலை ஆராதிக்காமல் வேறு எதை ஆராதிப்பது..?

அவர் கை கூப்பி சக்திவேலை வணங்கினார்..

‘என்ன சார்..? நீங்க வயசில பெரியவங்க.. என்னைப் போய் கும்பிடுகிறீங்களே.. ” அவன் தர்மசங்கடமடைந்தான்.

‘நீங்க மனசில பெரியவா.. சின்ன வட்டத்துக்குள்ள இருந்தவன் உங்களைப் பிரித்தேன்.. உங்க பெரிய மனசால நீங்க ரெண்டு  பேரும் ஜெயிச்சுட்டேள்.. 

நான் சொன்ன ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு.. ரெண்டு பேரும் தபஸ்வியைப் போல வாழ்ந்துட்டிங்களே..” அவர் நெகிழ்ந்தார்..

‘போனதை விடுங்கோன்னா.. இனியாவது அவா வாழட்டும்.. நாம பெரியவாளா லட்சணமா.. இவாளை சேர்த்து வைக்கிற வழியைப் பார்ப்போம்..”

ஆண்டாள்..தன் இயல்புப்படி எதையும் அறியாதவளைப் போல.. அவர்களை வழி நடத்தும் முடிவைக் கூறினாள்..

இவள் எல்லாம் அறிந்தவள் என்று கௌசல்யா நினைத்துக் கொண்டாள்..

இவளுக்குள்ளும் ராமாமிர்தத்தின் மனதிலிருப்பதைப் போல நெகிழ்வு இருக்கத்தான் செய்யும்.. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள்..

அறிவார்ந்தவர்களை விட.. அறியாமையாய் இருப்பதைப் போலத் தோற்றம் அளிப்பவர்கள் தான் அதிகமாக அறிந்தவர்கள்..

திருமணத்தை சென்னையிலேயே நடத்திவிட நிச்சயித்தார்கள்.. “சிம்பிளா.. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமே… ” சக்திவேல் யோசனை சொன்னான்..

‘நம்மவாளை கூப்பிட வேணாமா..?” ஆண்டாள் அதை ஆட்சேபித்தாள்..

‘ரிசப்ஷனை கிராண்டா வைத்துட்டாப் போச்சு.. “

சக்திவேல் அதற்கும் ஒரு தீர்வைக் கூற.. அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்..

‘கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க கோயம்புத்தூர் கிளம்பிவிட முடிவு செய்திருக்கிறோம்”  ராமாமிர்தம் கூறினார்..

‘ஏன்..? எங்க கூட இருக்கலாமே.. என் ப்ளாட் சொந்த ப்ளாட்தான்.. பெரிய ப்ளாட்.. மூனு பெட்ரூம் .. வசதியாயிருக்கும்..”

‘வசதிக்காக  சொல்லலை மாப்பிள்ளை.. கடைசி காலத்தில் சொந்த ஊரில்.. சொந்த வீட்டில் வாழ்கிற சுகமே தனி..”

அதற்கு மேல் சக்திவேலால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.. கௌசல்யா .. திருமதி சக்திவேலானாள்.. அவனுடைய வீட்டிற்கு குடி பெயர்ந்தாள்.. ராமாமிர்தமும்.. ஆண்டாளும் கோயம்புத்தூருக்கு கிளம்பத் தயாரானார்கள்..

‘பூஜா எங்கே..?”

‘அவளை எதுக்குத் தேடறீங்க..”

‘அவ எங்க கூட இருக்கட்டும் மாப்பிள்ளை..”

‘இதைப் பற்றி நானும் கௌசியும் ஏற்கனவே பேசியாச்சு மாமா.. அவ எங்க மூத்த குழந்தை..”

இதைச் சொன்னது கௌசல்யாவாக இருந்திருந்தால் ராமாமிர்தம் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்..  சக்திவேல் சொன்னனான்.. அவர் ஆச்சரியப்பட்டார்..

‘பூஜாவுக்கு கௌசிதான் அம்மான்னா.. நான்தான் அவளுக்கு அப்பா..”

அந்த நிமிடத்தில் அவன் அவர் ;கண்களுக்கு உயர்ந்து தெரிந்தான்..

ஆராதனைக்குரிய தங்களின் இளைய மகளின் காதலை எண்ணி வியந்தபடி.. ஆண்டாளும், ராமாமிர்தமும்.. கோயம்புத்தூருக்கு பயணப் பட்டனர்..

–  முற்றும் –

0Shares

Reviews — Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link