Chapter 14

0Shares

“ஹப்பா.. ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சாச்சு..” நெட்டி முறித்தாள் ஹாசினி…

“ஆமாமாம்.. நீ விழுந்து விழுந்து படிச்சு.. ஒருவழியாகிட்டில்ல.. இனி ரிலாக்ஸாத்தான்.. ஃபீல் பண்ணுவ..” கேலியாக சொன்னாள் மாளவிகா..

“திமிர்டி.. உனக்கு கேம்பஸ் இன்டர்வியுவிலே செலக்ட் ஆகிட்டோம்கிற திமிரு.. வேலை காத்திருக்குல்ல.. அந்தக் கொழுப்பில பேசற..”

“ஆமான்னு தான் வைச்சுக்கயேன்.. நினைச்சுப் பாரு ஹாசினி.. நான் சம்பாதிக்கப் போறேன்.. கை நிறைய சம்பளம்.. வாவ்.. எனக்கே எனக்குன்னு ஒரு டூவீலரை என்னால வாங்கிக்க முடியும்.. கிரேட்..”

“அல்பை மாதிரிப் பேசாதே.. நீ நினைச்சா டூவீலர் என்ன ஃபோர் வீலரே வாங்கலாம்..”

“எப்படி..? எப்படி..?”

“எதுக்கு இத்தனை எப்படி போடற..? கார் லோன் போட்டா கார் உன் வீட்டு வாசலிலே வந்து நிக்கப் போகுது..”

“எனக்கெல்லாம் லோன் கொடுப்பாங்களா..?”

“இத நான் சொல்லனும்.. உனக்குத்தான் கார் லோன் கொடுப்பாங்க.. ஏன்னா.. உனக்குத்தான் வேலை கிடைச்சிருக்கு..”

“அப்படிங்கிற..?” மாளவிகா சந்தோசமாக கேட்டாள்..

“அப்படித்தான்..” ஹாசினி தைரியம் கொடுத்தாள்…

அவர்கள் பேசியபடி கல்லூரிவாசலுக்கு வந்தார்கள்.. ஹாசினி காத்திருந்த காரில் ஏறிப் போக.. அவளுக்கு கையசைத்து விட்டு மாளவிகா மட்டும் தனியாக நடந்தாள்..

‘எனக்கு கார் லோன் கிடைக்குமா..’

அவள் மனதில் கார் வந்து நின்றது.. அவள் அதில் ஏறி மிக ஸ்டைலாக ஓட்டினாள்..

‘யு ஸி மதுரா.. நீங்களும் ஏறிக்கலாம்.. ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்..’ தாயிடம் அலட்டிக் கொண்டாள்..

‘மிஸ்டர் சிதம்பரம்.. நீங்க எனக்கு ஒரு ஓட்டை சைக்கிள் கூட வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டிங்க.. என்னைப் பார்த்தீங்களா சொந்தமாக கார் வாங்கியிருக்கேன் சார்.. காரைப் பார்த்தீங்களா.. சும்மா.. பளபளன்னு இல்ல..’ தகப்பனாரை கடுப்படித்தாள்..

‘ஹேய்… அஸ்வின்.. வா மேன்.. உன்னை காலேஜில டிராப் பண்றேன்.. காரில் போய் இறங்கினேன்னு வைய்யி.. உன்னை சைட் அடிக்காத பிகர்கள் கூட சைட்டடிக்க ஆரம்பிச்சிரும்.. என்ன.. லிப்ட் கொடுக்கவா..?’ தம்பியை வெறுப்பேற்றினாள்…

‘பூமிகா.. என்கூட காரில் ஏறு.. இப்பவே உன் புருசன் கிட்டக் கூட்டிட்டுப் போயி என்னன்னு நியாயம் கேட்கிறேன்..?’ தமக்கையிடம் வீரமாக மனதிற்குள் பேசிக் கொண்டிருந்த போது அவளை உராய்வதைப் போல ஒரு வெளிநாட்டுக் கார் வந்து நின்றது.. பதறி விலகி நின்றவளின் கற்பனை கலைந்து விட்டது…

கற்பனை கலைந்து விட்ட கோபத்துடன் காச்.. மூச்சென்று கத்தப் போனவள் நிதானித்தாள்.. கார் கதவைத் திறந்து கொண்டு ரமணன் இறங்கினான்..

“அதானே பார்த்தேன்..” வேகம் தணிந்தவளாகச் சொன்னாள் மாளவிகா…

“என்ன பார்த்த..?” ஸ்டைலாக புருவங்களை உயர்த்தினான் ரமணன்…

அவனது ஜீன்ஸிற்கும்.. கார்கோ சட்டைக்கும்.. கண்களில் மாட்டியிருந்த கூலிங் கிளாலிற்கும் வெகு பாந்தமாக பொருந்திவர.. மாளவிகாவிற்கு அவனை இன்னொருமுறை பார்க்க வேண்டும் போல இருந்தது…

சும்மாவே அவளைச் சுற்றிச்சுற்றி வருகிறவனை திரும்பவும் பார்த்து வைத்தால் ஏற்படப் போகும் பின் விளைவுகளைப் பற்றிய முன்னெச்சரிக்கை உணர்வுடன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் மாளவிகா..

“இப்படி ரோட்டில போறவங்களை இடிச்சுத் தள்ளற துணிச்சல் உங்களத் தவிர வேற யாருக்கு வரும்..?”

ஜாக்கிரதையாக அவனைப் பார்ப்பதை தவிர்த்தபடி பேசினாள் மாளவிகா.. அதை கண்டு கொண்ட சிரிப்பு அவன் உதடுகளில் தவழ்ந்தது…

“உன்னைத் தவிர வேற யாரையும் நான் இடிக்க மாட்டேன்… என்னைத் தவிர உன்னை இடிக்கிற துணிச்சல் வேற யாருக்கும் வரவும் வராது.. வரவும் நான் விடமாட்டேன்..”

அவன் தீவிரத்துடன் பேசினான்.. கொஞ்ச நேரத்துக்கு அவன் முகத்தில் காணாமல் போயிருந்த அந்த தீவிரம் மீண்டும் வந்ததில் மாளவிகா உதட்டைக் கடித்துக் கொண்டாள்..

“என்ன..?” அவன் அதற்கும் காரணம் கேட்டான்…

“இல்ல.. நீங்க எப்பவுமே சீரியஸ் மூடில்தான் இருக்கனுமா..? சிரிச்ச மாதிரியே இருக்க மாட்டிங்களா..?”

அவளின் கேள்வியில் அவன் மெல்லச் சிரித்தான்.. அடர்ந்த மீசையின் ஊடே தெரிந்த அந்தச் சிரிப்பில் அவள் மயங்கிப் போனாள்..

“போதுமா..?” அவன் கேட்டான்..

“போதாதுன்னு சொன்னா என்ன செய்வீங்க.. இன்னும் அதிகமா சிரிப்பீங்களா..?” அவள் தலையை சரித்து ஒயிலாக அவனைப் பார்த்தாள்..

என்றும் இல்லாத வகையில் வெகு இயல்பாக அவள் உரையாடிய விதத்தில் ரமணனுக்குள் சந்தோசம் பரவியது.. அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவளைவிட இயல்பாக பேச்சைத் தொடர்ந்தான் அவன்..

“இன்னைக்கு என்ன.. குஷி மூடில இருக்க போல இருக்கே..”

“ஊம்..”

“என்ன விசயம்..?”

“இன்னையோட படிப்புக்கு குட்பை சொல்லியாச்சு.. அதான் விசயம்.. ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சாச்சு.. இனி காலேஜிக்கு நேரத்துக்கு வரனும்னு பறக்க வேணாம்.. பஸ்ஸீக்கு நிக்க வேணாம்.. டீயைக் குடிச்சுக்கிட்டு நடுராத்திரிக்கும் மேலே கண்விழிச்சு படிக்க வேணாம்.. ஐ ஆம் ஃப்ரீ பேர்டு..”

அவள் இறக்கை விரித்துப் பறப்பதைப் போல கைகளை விரித்து அசைத்துக் காட்டினாள்.. அவளுடைய மகிழ்ச்சியை அவனிடம் அவள் பகிர்ந்து கொண்டதில் ரமணனின் சந்தோசம் அதிகரித்தது…

“இந்த சந்தோசத்தைக் கொண்டாட வேணாமா..?” அவள் முகத்தைப் பார்த்தபடி கேட்டான் ரமணன்..

“கொண்டாடனும்தான்.. ஆனா.. எப்படின்னு தெரியலையே..” அவள் குழந்தையாக விழி விரித்தாள்…

“என் கூட ஒரு கப் காப்பி சாப்பிட்டுக் கொண்டாடலாமே..” அவன் இலகுவாகக் கூறவும்…

“என்னது..!” என்று விழி விரித்தாள் மாளவிகா..

“மெல்ல.. எதுக்காக இப்படி முழிக்கற..?” வெகு சாதாரணமாக கேட்டான் ரமணன்…

“ஆர் யு ஜோக்கிங்..?”

“ஏய்ய்.. இது ஜோக்கா..?”

“உங்ககூட நான் காபி சாப்பிட வர்றதா..? நோ.. சான்ஸ்…”

“ஓ.. அப்ப வேற யார்கூட காப்பி சாப்பிட போவ..?”

அவன் ஒரு மாதிரியான குரலில் வினவவும் அவளுக்கு திக்கென்று ஆகிவிட்டது…

‘கோவிச்சுக்கிட்டானோ…’

அவன் முகத்தைப் பார்த்தாள்.. கல்லாக இறுகியிருந்தது.. அவள் கேட்டதற்காக வந்திருந்த சிரிப்பு காணாமல் போயிருந்தது…

‘நான் ஒரு மடச்சி…’ தன்னைத்தானே கடிந்து கொண்டாள் மாளவிகா..

அவன் கேட்டவுடன் சட்டென்று மறுத்திருக்கக் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது.. அவளைப் புரிய வைத்திருக்க வேண்டும்..

“தப்பா எடுத்துக்காதீங்க.. நான் யார்கூடவும் காபி சாப்பிடன்னு போனதில்ல..” அவள் தயக்கத்துடன் தன்னிலை விளக்கத்தை ஆரம்பித்தபோது..

“ஸ்ஸ்ஸ்..” என்று கையமர்த்தினான் ரமணன்..

“நான் என்கூட காபி சாப்பிட வான்னு கூப்பிட்டேன்..” அழுத்தமான குரலில் சொன்னான்…

“அது வந்து.. நான் எப்படி..” அவள் மறுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது..

“நீ வர்ற..” என்று கட்டளையிட்டான் ரமணன்..

‘இவன் யார் என்னை கமாண்ட் பண்ண..?’ மாளவிகா கோபப் படத்தான் முயன்றாள்.. ஆனால்.. பாழாய்போன கோபம் அவளுக்கு வந்து தொலைக்கவில்லை…

மாறாக.. அவனருகில் நின்று கொண்டிருந்த காருக்குள் எட்டிப் பார்த்தாள்…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link