Chapter 37

0Shares

ரமணனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்.. தேர்ந்தெடுத்த மனோ வைத்தியரின் வார்த்தைகளைப் போல வெளியில் வந்து விழ.. இதுதானா என்று பிரமித்துப் போனாள் மாளவிகா..

“என் மனசும்.. உடம்பும் கல்லில்ல.. அதுவும் உன்னை வெறிபிடிச்சதைப் போல காதலிக்கிறவன் நான்.. என் மனசும் உனைத் தேடுச்சு.. உடம்பும் அதைப் போலத்தான் தேடுச்சு.. உனக்குத் தெரியாது.. என்னைக் கண்ட்ரோல் பண்ணிக்க நான் எத்தனை தூரத்துக்கு சிரமப் பட்டேன்னு..”

ரமணன் சொல்லச் சொல்ல தலை கவிழ்ந்து விட்டாள் மாளவிகா..

“ஐ ஆம் ஸாரி…”

“இதுக்குப் பதிலா ஐ லவ் யுன்னு சொல்லி-யிருக்கலாம்.. போகுதுபோ.. என்னைக்கு நீயா வாயைத் திறந்து அந்த வார்த்தையைச் சொல்றியோ.. அன்னைக்கு நான் உன்னை கவனிச்சுக்கறேன்…”

ரமணனின் பார்வை தாகத்துடன் அவள் மேல் படிய.. மாளவிகாவிற்கு என்னவோ போல ஆகிவிட்டது.. அவள் சங்கடத்துடன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள்…

“அது மட்டுமில்லை.. உனக்கு ஒரு சங்கடம் இருக்கு.. என்னை நீ ஒரு கேள்வி கேட்டிருக்க.. அது உனக்கு நினைப்பில இருக்கும்ன்னு நம்புறேன்…”

அவளுக்கா நினைவில்லை..? நன்றாக நினைவில் இருந்ததால் உதட்டைக் கடித்துக் கொண்டாள்…

“என்னை உன் புருசன்னு உன் அப்பா அம்மாகிட்டச் சொல்ல முடியுமான்னு கேட்ட.. நான்தான் உனக்கான மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா உன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திரும்ன்னு சொன்ன.. நல்லாக் கவனி மாளவிகா.. உன் வாயாலே என்னை உன் காதலன்னும்.. உன் புருசன்னும்.. என்னைக்கு உன் அப்பா.. அம்மாவுக்கு துணிச்சலா அறிமுகப் படுத்தி வைக்கறியோ.. அன்னைக்குத்தான் உன்னை நான் சூறையாடுவேன்.. அப்ப நீ தெரிஞ்சுக்குவடி.. இந்த ரமணன் உன்னை எந்த அளவுக்கு தேடியிருக்கான்னு…”

சட்டென்று அவள் அருகில் வந்த ரமணன் அவளை எழும்புகள் நொறுங்கும் அளவிற்கு இறுக்கி அணைத்து.. உதட்டில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தான்.. மறு நொடியில் அவளை விடுவித்தவன் படிகளில் இறங்கி வேகமாக போய் விட்டான்…

அலைமீது துரும்பாக.. அசைவற்று நின்றாள் மாளவிகா.. சற்றுமுன் நிகழ்ந்த நிகழ்விலிருந்து 

வெளிவர அவளால் முடியவில்லை.. ஜன்னலில் தலை சாய்த்து வெளியே பார்த்தவளுக்கு மனதில் துக்கம் பொங்கியது…

‘ஏன் அப்படிப் பேசினேன்..?’ மனது அலை பாய்ந்தது..

மௌனமாக படியிறங்கிப் போனாள்.. சமையலறைக்குள் எதையோ செய்து கொண்டிருந்த ரமணனைக் கண்டதும்…

‘ம்ஹீம்.. சிங்கத்தை சமைக்க வைச்சுக்-கிட்டிருக்கேன்…’ என்று அவளுக்குத் தேன்றிவைத்தது…

சேலை முந்தானையை இழுத்துச் சொறுகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்…

“விலகுங்க…” என்றாள்…

“எதுக்கு..?” என்றான் ரமணன்…

“சமைக்கத்தான்…” அவள் கத்தியை எடுத்தாள்..

“நீ சமைக்கப் போறியா..?” அவன் சந்தேகத்துடன் கேட்டான்…

“நீங்களே சமைக்கிறப்ப.. நான் சமைக்க மாட்டேனா.. வெளியே போங்க.. இனிமே இது என் இடமாக்கும்…”

“அப்படியெல்லாம் பட்டாப் போட்டுக் கொடுக்க முடியாது.. இருக்கிறது இரண்டு பேர்.. இதில பொம்பளை சமைக்க.. ஆம்பளை உட்கார்ந்து சாப்பிடனும்னா.. அவனுக்கும் பொழுது போக வேணாமா..? கத்தியைக்கொடு..”

“எதுக்கு..?”

“காய் நறுக்கத்தான்ம்மா.. இது கத்தியைப் பிடிச்ச கை.. சும்மா விட்டு வைக்க முடியாது…”

“த்ச்சு.. இதென்ன பெருமைன்னு பேசறிங்க..” அவள் முகம் சுளித்தாள்…

“ஓகே.. இனி பேசலை.. நீ காயைக் கொடு…” அவள் வார்த்தைக்கு அவன் கட்டுப்பட்டான்…

அதில் அவள் மனம் லேசானது.. அவர்கள் பேசியபடியே உணவை தயாரித்து டைனிங் டேபிளில் பரத்தி வைத்தார்கள்…

“குளிச்சுட்டு வர்றேன்..” கிளம்பிய மாளவிகா…

“அச்சச்சோ..” என்று கை உதறினாள்…

“என்னடி..?” அவன் புருவங்களை உயர்த்தினான்..

“மாற்று டிரெஸ் இல்லையே…”

“அப்படின்னு யார் சொன்னது..? உன் அளவுக்கு ஜாக்கெட் தைக்கனும்னா நேரமிருக்காதுன்னு.. ரெடிமேட்டில் சுடிதார்.. நைட்டின்னு அள்ளிப் போட்டுக் கிட்டு வந்தேன்.. மாடியில நம்ம ரூமில இருக்கிற ஷெல்பை திறந்து பார்.. பைகளா குமிஞ்சிருக்கும்..”

அவன் இயல்பாக ‘நம்ம ரூம்’ என்று சொன்னதில் அவள் வசீகரிக்கப் பட்டாள்..

அந்த வீடு.. அவனுக்கும்.. அவளுக்குமான வீடு.. மாடியிலிருக்கும் அறை.. அவர்களின் அறை என்பதில் அவளுக்குள் ரகசிய சந்தோசம் வந்தது.. அந்த வாழ்க்கையை அவள் மனதுக்குள் விரும்பி ரசித்தாள்…

“நீங்க குளிக்கலையா..?”

“காலையிலேயே ஆச்சு.. நீதான் கும்பகர்ணி.. எட்டு மணிக்கு முன்னாலே முழிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சுக்கிட்டுத் தூங்கினியின்னா.. நானும் அதைப் போலத்தான் இருப்பேனா..? அதெல்லாம் டான்னு ஆறு மணிக்கே எழுந்திருச்சிட்டேன்…”

“எங்கே குளிச்சீங்க..?”

“நம்ம ரூமிலதான்..”

அவன் இயல்பாகச் சொல்லியதில் அவளுக்குள் ஏதோ ஒர்விதமான பரவசம் உண்டானது.. மாடியறையின் அலமாரியைத் திறந்தாள்.. அவனின் உடைகளும்.. அவளின் உடைகளும் கலந்து அடுக்கப்பட்டிருந்தன.. அவற்றையே பார்த்தபடி சிறிது நேரம் நின்றாள்.. இனி இந்த வாழ்விலிருந்து விடுபட முடியுமா.. விடுபட்டாலும் இந்த நிழல்கள் மனதிலிருந்து மறையுமா என்ற கேள்வி அவளுக்குள் தோன்றியது.. கேள்வியைத் துரத்திவிட்டு.. மாற்றுவதற்கான ரோஜா வண்ண சுடிதாரைத் தேர்ந்தெடுத்தாள்.. குளியலறைக்குள் போனாள்.. அவளின் துணிகளோடு.. ரமணனின் அழுக்குத் துணிகளையும் உரிமையுடன் துவைத்துக் குளித்து வெளியே வந்தாள்.. ஈர உடைகளை உலர்த்த பால்கனிக் கதவைத் திறந்தாள்.. அங்கே நின்றிருந்த ரமணன் 

அவள் கையிலிருந்த அவனின் துணிகளைக் கண்டதும்.. அர்த்தம் பொதிந்த ஆழமான பார்வையை பார்த்தான்.. அவன் பார்வையின் வேகத்தில் உதட்டைக் கடித்தபடி..

“இதை எங்கே காயப் போடறது..?” என்று கேட்டாள்..

“இங்கே வெயில் வராது.. என்கிட்டக் கொடு.. கீழே கட்டியிருக்கிற கொடியில் காயப் போடறேன்..”, ரமணன் கை நீட்டினான்…

“என் சேலையும்.. துணிகளும் சேர்ந்து இருக்கே..” மாளவிகா தயங்கினாள்…

“என் துணியை நீ துவைக்கலாம்.. உன் துணியை நான் காயப் போடக் கூடாதா..? அபத்தமா உளறி வைக்காம குடுடி..” ரமணன் அதட்டியபடி துணிகளைப் பிடுங்கிக் கொண்டான்…

அவனுடைய அதட்டல் மாளவிகாவிற்கு இன்பத்தைக் கொடுத்தது.. ‘லா.. லா..’ என்று பாடியபடி.. தலையைப் பின்னி முடித்தாள்.. ஸ்டிக்கர் பொட்டிருக்குமா என்று தேடினாள்.. அலமாரியில் ஒப்பனைப் பொருள்கள் அடங்கிய டப்பாவே கிடைத்தது…

‘எல்லாத்தையும் யோசிச்சு வாங்கியிருக்கான்…’

மனதிற்குள் மெச்சிக் கொண்டவள்.. சிரத்தையாக தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.. துள்ளலுடன் படியிறங்கி வந்தவளிடம் ரோஜாப்பூவை நீட்டினான் ரமணன்…

“உன் டிரெஸ்ஸீக்கு மேட்சாயிருக்கும்…”

அவனை சொந்தத்துடன் பார்த்தபடி அவள் பூவை வாங்கி பின்னலின் ஓரமாக செறுகிக் கொண்டாள்..

அவளை ரசித்துப் பார்த்தவனைப் பார்த்து அவள் புருவங்களை உயர்த்தவும்..

“ஒரு ரோஜாப்பூவே.. ரோஜாப்பூவை வைத்திருக்-கிறதே…” என்று கவிதை சொன்னான்..

மாளவிகா தலையைச் சரித்து அவனைப் பார்த்துச் சிரித்த போது.. பழைய மாளவிகா மீண்டு விட்டதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link