Chapter 42

0Shares

நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்த அந்த திருமண மண்டபத்தில் கடுகு விழுகக் கூட இடமில்லாத வகையில் கூட்டம் கூடியிருந்தது…

“பொண்ணுக்கும்.. மாப்பிள்ளைக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ்தான் ஆகியிருக்கு.. அதையும்.. தேவையில்லாத கேஸில் மாட்டி விட்டுட்டாங்கன்னு அவசர.. அவசரமா பண்ணியிருக்காங்க.. முறைப்படி நீங்க கல்யாணம் செய்து கொடுத்தாத்தான் உங்க பெண்ணை என் பெண்டாட்டியா நான் கூப்பிட்டுக்கிட்டுப் போவேன்.. இல்லேன்னா.. 

உங்க பெண்ணா உங்க கூடவே இருக்கட்டும்ன்னு மாப்பிள்ளை சொல்லிட்டார்.. நாங்க கொடுத்து வச்சிருக்கனும்.. இப்படியாப்பட்ட மாப்பிள்ளை எங்களுக்கு கிடைக்கனும்ன்னு இருக்கு…”

மண்பத்தில் வந்திருந்த உறவினர்களிடம் மாற்றி மாற்றி இதையே சொல்லிக் கொண்டிருந்தார் சிதம்பரம்..

“அவருக்கு பாரின்லே வேலை கிடைச்சதாம்.. அப்ப போக முடியலையாம்.. இப்ப சொந்தமாவே அங்கே கம்யூட்டர் கம்பெனியொன்னை ஓபன் பண்ணிட்டாரு 

எங்க அத்தான்.. மேரேஜ் முடிஞ்சதும்.. அக்காவோட பிளேனில் பறக்கப் போறாரு..” முகம் மலர நண்பர்களிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தான் அஸ்வின்…

“ஸோ.. உனக்கும் அங்கே வேலை ரெடியாயிருக்கும்..?” நண்பன் பொறாமைப் பட்டான்…

“யெஸ்..” பூரிப்புடன் சொன்னான் அஸ்வின்…

“சென்னையில அஞ்சாறு பங்களா மாப்பிள்ளை பேரிலதான் இருக்கு.. அதில ஒன்னை உங்க பெயருக்கு மாத்திட்டேன்னு சொல்லி.. எழுதிக் கொடுத்திட்டாரு.. நாங்க இப்ப அங்கேதான் குடி போயிட்டோம்.. அஸ்வின் அப்பா வேலைக்கு வி.ஆர் கொடுத்திட்டாரு.. மாப்பிள்ளை தான் அவருக்கு ஷாப்பிங் காம்லெக்ஸே வாங்கிக் கொடுத்திட்டாரே.. அஸ்வினுக்கு கார்கூட வாங்கிக் கொடுத்திருக்கார்..” மதுரா தன் பங்குக்கு பெருமை பீற்றல் களஞ்சியமானாள்…

குறித்த நேரத்தில்… மாளவிகாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் ரமணன்.. சிதம்பரத்தின் குடும்பம் அட்சதை போட்டு வாழ்த்துச் சொல்லியதில் அவன் முகத்தில் மலர்ச்சி வந்தது.. நெஞ்சம் நிறைய மனைவியை நோக்கினான்..

‘இவளால்தான்.. இது சாத்தியமானது..’ அவன் மனதில் பிரியம் பொங்கியது…

அன்றைய இரவில்.. அவனிடம் தனித்து மாட்டிக் கொண்ட மாளவிகாவிடம்.. முரட்டுத்தனமாக நெருங்கினான் ரமணன்.. அவள் வெட்கத்துடன் பின் வாங்கினாள்..

“நீ தப்பிச்சு ஓட முடியாதுடி.. இது பர்ஸ்ட் நைட் ரூம்..” தாகத்துடன் சொன்னான் ரமணன்..

“நினைப்பிருந்தாச் சரி.. அதை விட்டுட்டு.. ஹீரோயினை ஸ்வாஹா பண்ணப் போற வில்லனைப் போல பில்ட் அப் பொடுத்தா எப்படி..?” வெட்கத்துடன் கேட்டாள் மாளவிகா..

“உன்கிட்ட அன்னைக்கே சொன்னேனா இல்லையா..?”

“என்னைக்கு..?” மாளவிகா திருதிருத்தாள்…

“அதாண்டி.. நாம காட்டுப் பங்களாவில குடியிருந்தோமே.. அங்கே முதல் நாளில நீ என்னை ஸ்வாஹா பண்ண நினைச்சியே..” ரமணன் கண்சிமிட்ட மாளவிகா வெட்கிப் போனவளாக.. அவன் கையைக் கிள்ளினாள்…

“அசிங்கமா பேசாதீங்க…”

“அதை விடுடி.. அன்னைக்கு நான் சொன்னேன்.. நினைவிருக்கில்ல..?” ரமணன் புருவங்களை உயர்த்தினான்…

மாளவிகாவுக்கு நினைவு வந்தது…

“என்னைக்கு உன் வாயாலே.. நான்தான் உன் புருசன்னு உன் அப்பா.. அம்மாவுக்கு துணிச்சலா அறிமுகப் படுத்தி வைக்கறியோ.. அன்னைக்குத்தான் உன்னை 

நான சூறையாடுவேன்.. அப்ப நீ தெரிஞ்சுக்குவடி.. இந்த ரமணன் உன்னை எந்த அளவுக்கு தேடியிருக்கான்னு..”

அன்று அவன் சொன்ன வார்த்தைகளின் நினைவில் நின்றவளை.. முரட்டுத்தனமாய் ஆக்கிரமித்து சூறையாடினான் ரமணன்.. அவனின் முரட்டுத்தனத்தில்.. அவளுக்கான அவனின் தேடுதலை உணர்ந்து கொண்ட மாளவிகா மூச்சுத்திணறிப் போனாள்.. அவள் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அந்தக் கள்வன் அவளை முழுதாக எடுத்துக் கொண்டான்.. அத்து மீறிய அவனின் ஆக்ரமிப்பில் மாளவிகா கலைந்து.. கலந்து.. அவனின் மூழ்கி.. காணாமல் போனாள்.. அவன் அவள்மேல் படர்ந்து.. பரவி.. அவனுக்கு வேண்டியதைக் களவாடிக் கொண்டான்…

மறுநாளின் விடியலின் போது.. ஈரத் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்று கட்டியணைத்துக் கொண்டவன்.. காதோடு கிசுகிசுத்தான்..

“இப்பவாவது.. என் மனசும்.. உடம்பும்.. உன்னை எந்த அளவுக்கு தேடியிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டியா..?”

சூடான அவனின் மூச்சுக் காற்றின் வெப்பத்தில் அவள் மயங்கிப் போனவளாக கண்மூடி அவனுக்கு இசைந்து கொடுத்தாள்..

அந்த வார இறுதியில்.. ரமணன் மாளவிகாவுடன் வெளிநாட்டிற்குப் பயணமானான்..

“அண்ணே..” என்று கண்கலங்கின கிருஷ்ணனைக் காட்டி.. “இவர்தான் அடுத்த அண்ணாச்சி..” என்று மற்றவர்களுக்கு உணர்த்தி வைத்தான் ரமணன்..

ரமணனின் வலது கையாக இருந்த கிருஷ்ணனின் கட்டுப்பாட்டிற்குள் அவர்களின் குழு இடம் பெயர்ந்தது…

“இது புலிமேல சவாரி கிருஷ்ணா.. அதனாலதான் இதைக் கலைக்காம உன் கையில ஒப்படைச்சிருக்கேன்.. நீ இதுக்கு தலைவனா இரு.. ஆனா நல்லவனா இரு.. உதவின்னு யாரு வந்தாலும் உன் உயிரைக் கொடு.. ஆனா.. மத்த உயிர்களுக்கு தீங்கு நினைக்காத எந்த உயிரையும் நீ எடுக்காதே.. போட்டுத் தள்ள வேண்டிய கொடுமைக் காரண போட்டுத்தள்ளு.. வாழ வைக்க வேண்டியவங்களை வாழவை.. இதைத்தான் அண்ணாச்சி செஞ்சுக்கிட்டு இருந்தாரு..”

“நீங்க எங்கே போறீங்கண்ணே..”

“இந்த அடையாளம் இல்லாத வெளிநாட்டுக்குப் போறேன்.. என்னை நம்பி.. நல்ல குடும்பத்தில பிறந்து வளர்ந்த ஒருத்தி வந்திருக்கா.. மிச்சமிருக்கிற வாழ்க்கையை அவளுக்காக நான் வாழப் போக வேணாமா..?”

“போயிட்டு வாங்கண்ணே.. இனிமே எங்களை நாங்க பார்த்துக்கறோம்…”

அவனுக்காக உயிரையும் கொடுக்கத் துணியும் அவனின் கூட்டம் அவனை விடுதலை செய்து அனுப்பி வைத்தது.. ரமணன் மாளவிகாவுடன் விமானத்தில் ஏறினான்.. எல்லோருக்கும் கையாட்டிவிட்டு.. அவர்கள் விமானத்தில் நுழைந்து விட்டார்கள்.. விமானம் கிளம்பி புள்ளியாகி.. வானில் மறைந்தது…

கை தொட்ட கள்வனுடன்.. அவனின் மனம் தொட்ட மாளவிகா வெளிநாட்டிற்குப் பறந்து விட்டாள்.. சூழ்நிலையின் கைதியாக துப்பாக்கியை கையிலெடுத்த அந்த முரடன்.. அவளின் அன்பின் கைதியாகி.. அவளுக்கு கட்டுப்பட்டு.. அவளை கைபிடித்து அவனின் அடையாளத்தையே மாற்றிக் கொண்டு வெளிநாட்டிற்கு பறந்து விட்டான்..

இனி அவன் வாழ்வில் வன்முறையின் நிழல் படியாது.. அவனுக்காக அண்ணாச்சி கொடுத்த படிப்பு அவன் கையில் இருக்கிறது.. அதை வைத்து சாதிக்க.. எதிர்காலத் திட்டங்கள் ஏராளமாக அவன் மூளையில் இருக்கின்றன.. வாழ்வு அவனுக்கு வசப்பட்டு விட்டது.. அவன் வாழ்ந்து காட்டுவான்…

…முடிந்தது…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link