Chapter 08

0Shares

ஒரு தொலைக்காட்சி சேனலில்… இயக்குநர் களுக்கான போட்டி ஒன்றை வைத்தார்கள். பிரபல தயாரிப்பாளர்களும்… இயக்குநர்களும் அதில் நடுவர்களாக பங்கேற்றார்கள்…

“அருமையான சான்ஸ் ஷாலினி…” அரவிந்தன் பரவசப்பட்டான்…

“யெஸ்… லட்டுப் போல கிடைச்சிருக்கு… யூஸ் பண்ணிக்கங்க… உங்க திறமையை வெளிக்காட்ட இதுதான் சரியான டைம்…” ஷாலினி உற்சாகம் கொடுத்தாள்.

அடுத்து ஒரு வார காலத்திற்கு அரவிந்தன் அவளை மறந்து.. தன் டெலிபிலிமில் மூழ்கிப் போக… ஷாலினியால் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை…

அதைவிட… அந்தப் பிரிவு அவளைப் பாதித்த அளவிற்கு அவனைப் பாதிக்காததை தாங்கிக் கொள்ள முடியவில்லை…

ஒரு வாரம் கழித்து உற்சாகமாக அவளைத் தேடி வந்தான் அரவிந்தன்…

“ஷூட்டிங் முடிஞ்சுருச்சு…”

“ம்ம்…”

“இந்தவாரம் அந்த டி.வி. புரோக்ராமில் என் டெலிபிலிமை காட்டுவாங்க…”

“அப்படியா…?”

“ரிசல்ட் என்னன்னு சொல்ல மாட்டேன்.. அது சஸ்பென்ஸ்…”

“இருக்கட்டும்…”

“பாருடி… பார்த்துட்டு உன் கமெண்ட்ஸை சொல்லு…”

“ம்ம்…”

அப்போதுதான் அவள் ஒரு வார்தையிலேயே பதில் சொல்லிக்கொண்டிருப்பதைக் கவனித்தான் அரவிந்தன்…

“ஷாலினி…?” அவன் புருவங்கள் உயர்ந்தன…

அவள் கண்களில் நீர் கோர்க்க… முகம் திருப்பிக் கொண்டாள்… முரட்டுத்தனமாக அவள் முகம் பற்றித் தன் பக்கமாக திருப்பினான் அரவிந்தன்… அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்…

“என்னாச்சுடி…?”

அந்த ஒரு கேள்வியில் உடைந்து அழுதாள் ஷாலினி… அவன் மார்பில் முகம் புதைத்து.. அவனோடு தன்னை இறுக்கிக் கொண்டு கண்ணீர் விட்டாள்…

“ஒரு வாரமாச்சு… உங்களைப் பார்த்து…”

“ஏய்ய்… நீதானே இது லட்டுப் போல கிடைச்ச சான்ஸுன்னு சொன்ன..?”

“சொன்னேன்தான்.. அதுக்காக… என்னை மறந்துட்டு… அதுல இறங்குங்கன்னு சொல்லலையே…”

“உன்னை மறப்பேனா ஷாலினி? வேலை இருந்துச்சுடி…”

“எனக்கு மட்டும் வேலையில்லையா…?”

“இந்தப் பேச்சுக்கு முடிவிருக்கா…?”

“நம்ம காதலுக்கும் முடிவில்லை அரவிந்த்… அது கடைசிவரைக்கும்… என் மூச்சிருக்கிற வரை.. ஏன்… அதன்பின்னால் நான் செத்து சாம்பலானாலும் இருக்கும்…”

ஷாலினியின் அதீத காதலில் கரைந்து போனான் அரவிந்தன்…

‘இவ்வளவு காதலை என் மேல் வைத்திருக்கிறாளே…’ பிரமித்துப் போனான்…

அவளது அன்பில் தன்னை இழந்தான்…

“லீவு போடு…”

“எதுக்கு…”

“இன்னைக்கு பூராவும்… நீயும்… நானும் ஊரைச் சுத்தலாம்.”

“வேண்டாம்…”

“எனக்கு வேண்டும்… ஒரு வாரம் உன்னைப் பார்க்காம பிரிந்திருந்த நேரத்தை… இன்னைக்கு பூராவும் உன்னோடு சேர்ந்திருந்து ஈடுகட்டப் போறேன்…”

அவன் ஈடு கட்டினான்… அவளது அதீத காதலை அப்படியே திருப்பிக்காட்டினான்… அவனது ராட்சஸத் தனமான காதலில் அவள் தன்னை இழந்தாள்.

“அரவிந்த்… என் அரவிந்த்…”

அவனது தோள்வளைவில் முகம் பதித்து.. இடைவிடாமல் ஜெபித்தாள். 

அன்று முழுவதும் ஒருவினாடி கூட அவளை விட்டு நகராமல் அடைகாத்தான் அரவிந்தன்…

செல்போன் அழைப்புகளை துண்டித்து.. போனை அணைத்து பாக்கெட்டில் தூக்கிப் போட்டுக் கொண்டான்…

“ஏதாச்சும்… முக்கியமான காலா இருந்துவைக்கப் போகுது…” ஷாலினி கவலைப்பட்டாள்.

“ஸ்ஸ்… இந்த செகண்டில்.. உன்னை விட முக்கியமுன்னு இந்த உலகத்தில் எனக்கு எதுவுமேயில்லடி…” அரவிந்தன் அவளை அருகில் இழுத்துக் கொண்டான்..

“உன்னை விட…

இந்த உலகத்தில்…

சொந்தமுன்னு…

யாருமில்ல.. யாருமில்ல…”

அவன் காதோரமாக கண் மூடி அவள் பாடினாள்…

“உன்னை விட…

என்னைச் சரிவர..

புரிஞ்சுது…

யாருமில்ல… யாருமில்ல…”

அவன் பதிலுக்கு மெதுவான குரலில் பாடினான்…

“வாக்கப்பட கிடைச்சான்

விருமாண்டி…

வாழ்க்கையெல்லாம் இனிமே..

அவன்தாண்டி…

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி…

கேட்ட வரம் உடனே

கொடுப்பாண்டி…”

அவள் பாடினாள்… அவன் அவள் கேட்ட வரத்தை உடனே கொடுத்தான்… அன்று மாலை வீடுதிரும்பிய போது… ஷாலினியின் மனம் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்தது…

“அப்புறம்…?”

கட்டிலில் ஒருக்களித்து படுத்து… தலைக்கு கையை அணைவாகக் கொடுத்து ரங்கநாதனைப் போல காட்சி தந்த கார்த்திக் வினவினான்…

“பச்சைப் புள்ள போலத் தேம்பித் தேம்பி அழுதாடா…”

“அவ பச்சைப் புள்ளதான்… விவரம் தெரிஞ்சவ உன்னைப் போய் காதலிப்பாளா..?”

“டேய்ய்.. உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன்…”

“என் கைகால் பத்திரத்தைப் பத்தித்தானே…? நினைவிருக்கு… நீ மேலே கன்டினியூ பண்ணு…”

“எனக்கு ‘ஹோ’ன்னு ஆயிடுச்சு மச்சான்… இந்த அளவுக்கா என்னைக் காதலிக்கிறான்னு பிரமை பிடிச்சுப் போச்ச…”

“பிரமை பிடிக்காம இருந்தாத்தான் ஆச்சரியம்…”

“அவள விட முக்கியமா எதுவும் எனக்குத் தோணலைடா கார்த்தி…”

“ம்ம்… புரியுது…”

“லீவைப் போடுடின்னு சொல்லிட்டேன். இன்னைக்கு பூரா… அவ கூடவே இருந்தேன்…”

“ஒருவார வேலை பெண்டிங்கில் கிடக்குது… நீ பாட்டுக்கு லீவைப் போட்டுட்டு ஊரைச் சுற்றப் போயிட்டே… அங்கே என்னன்னா… அஸோஸியேட் அலறுறான்…”

“எனக்கு அதைப்பத்தியெல்லாம் எண்ணமில்லடா… என் கண்ணுக்கு முன்னாடி… அவ மட்டும்தான் இருந்தா…”

“சரி விடு… உன் பெண்டிங் வொர்க்கை நான் முடிச்சுக்கொடுத்துட்டேன்…”

“தேங்க்ஸ்டா கார்த்தி…”

“எதுக்கு தேங்க்ஸை வேஸ்ட் பண்ற… உனக்கும் அவளுக்கும் இடையில இருக்கிறது உன்னதமான பந்தம்டா அரவிந்தா… அதுக்காக என்னால முடிஞ்ச உதவியை செய்ய முடிஞ்சதில எனக்குச் சந்தோசம்தான்…”

அரவிந்தனுக்கும்… ஷாலினிக்கும் இடையிலான அந்தக் காதல் மரியாதைக்குரியது… அதை கார்த்திக்கும் நன்கு உணர்ந்திருப்பதை அவனது வார்த்தைகள் தெரிவித்தன.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link