Chapter 20

0Shares

“ஷால்…”

“ம்ம்ம்…”

எப்போதுமே அவன் ‘ஷால்…’ என்றால்…

‘நானென்ன சுடிதாரில் போடும் துப்பட்டாவா?’ என்று சீறுபவள்.. இன்று அமைதியாக ‘ம்ம்ம்’ என்றாள்..

அவளிடமான இந்த மாற்றம் அவனைக் கவர்ந்தது.. சொந்தத்துடன் அவளைப் பார்த்தபடி..

“அம்மா ஒண்ணு சொன்னாங்கடி..” என்றான்..

“என்ன..?”

“ஷால்.. உன்கூட ஹனிமூன் டிரிப் போகணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன்னு உனக்கே தெரியும்…”

“அதுக்கென்னங்க..?”

“நான் அம்மா சொன்னதைச் சொல்கிறேன்.. பட்.. ஃபைனல் டிஸிசன் உன்னோடது தான்…”

“என்னன்னு சொல்லுங்களேன்..”

“நீ எப்படிச் சொல்றியோ.. அப்படித்தான் ஷாலினி..”

“அத்தை சொன்னதை சொல்லுங்க..”

“அவங்க நம்மை நாமக்கல்லுக்கு வரச்சொல்றாங்க.. இந்த லீவு பூராவும் அங்கே.. அவங்களோடவே இருக்கச் சொல்றாங்க.. நாமக்கல்லில் நம்ம வெட்டிங் ரிசப்ஷன் நடத்தப் போறாங்களாம்.. கிராமத்தில் நம்ம குலதெய்வம் கோவிலில் நீ பொங்கல் வைக்கணுமாம்.. என்னடி சொல்ற..?”

அவள் அமைதியுடன் அவன் முகத்தையே பார்த்தாள்..

“நாம நாமக்கல்லுக்கே போகலாம்..”

“அப்போ.. ஹனி மூன் டிரிப்..?”

“இதுவும் ஹனிமூன் டிரிப் தான்..”

“எப்படி..?”

“எனக்கு அப்படித்தான்.. புது ஊர்.. புது மனுசங்க.. புது சொந்தம்.. இதை என்ஜாய் பண்ணாம வேற எதை என்ஜாய் பண்ணச் சொல்றீங்க..?”

“நமக்குத் தனிமை கிடைக்காது..”

“வேண்டாம்.. இப்ப நான் தனியாத்தான் இருக்கேன்.. இதே தெருவிலேயே நாலு வீடு தள்ளி.. என் பிறந்தவீடு இருக்கு.. அங்கேதான் நான் பிறந்தேன்.. என் அண்ணனோடு வளர்ந்தேன்.. என்னைத் தாங்கிப் பிடிக்க என்னைப் பெத்தவங்க இருந்தாங்க.. இப்பப் பாருங்க.. இதே தெருவில் நான் அவங்களோட சொந்தத்தை இழந்து நிற்கிறேன்…”

“ஷாலினி..”

“கஷ்டமாயிருக்குங்க.. நான் என்ன கேட்டேன்..? என் மனசுக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணிக்-கிறேன்னுதானே கேட்டேன்..? அதுக்காக என்னை விரோதியைப் போல தள்ளி வச்சுர்றதா..?”

“உன் மனசில் இவ்வளவு இருக்கா..?”

“பின்னே.. இருக்காதா..? எனக்குப் பிடிச்ச துணிகளை எடுத்துக்கோன்னு சொல்லுவாங்களாம்.. எனக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டுத்தான் நகை வாங்கிக் கொடுப்பாங்களாம்.. ஏன்.. எங்க வீட்டில் என் ரூமுக்கான பெயிண்ட்டிங் நிறத்தைக்கூட எனக்குப் பிடித்ததைக் கேட்டுத்தான் அடிச்சுக் கொடுத்தாங்க.. இத்தனையையும் எனக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டு செய்துட்டு.. கல்யாண விசயத்தில் மட்டும் எனக்குப் பிடிக்காத ஆளைக் கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னால்.. எப்படி என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியும்..?”

அரவிந்தன் அவளையே இமைக்காமல் பார்த்தபடி.. மௌனம் சாதித்தான்…

அந்த நிமிடம்.. அவளது மனக் குமுறலைக் கேட்கும் ஒரு நெருங்கிய நண்பனாக தன்னை உணர்ந்தான் அவன்..

“பிடிக்காத துணிகளை உடுத்திக்க முடியாத ஒருத்தியால.. பிடிக்காத ஆம்பளையோட குடும்பம் நடத்த முடியுமா..? இது ஏன்.. என்னைப் பெத்தவங்களுக்குத் தெரியலை..?”

அவளுடைய மனதுக்குப் பிடித்தவனாக தான் இருப்பதில் கர்வம் கொண்டான் அரவிந்தன்.. கை நீட்டி.. அவளைப் பற்றி.. அருகில் இழுத்தான்.. அவள் விலகிக் கொள்ளாமல் அவனைக் கட்டிக் கொண்டு மார்பில் முகம் புதைத்தாள்..

மாலை மயங்கி.. இருள் போர்வையாக அவர்களைச் சுற்றிச் சூழ்ந்தது.. தன்னை நம்பி வந்துவிட்டவளை அவன் தழுவிக் கொள்ள.. அவனது நெருக்கம் தந்த பாதுகாப்பில் தன் மனத் தனிமை விலகுவதை அவள் உணர்ந்தாள்..

“அத்தையும்.. மாமாவும் கூட இருக்கிறபோது.. என் தனிமை விலகிப் போயிடுதுங்க.. உங்ககூட ஹனிமூன் டிரிப் போனாலும்.. என் மனசின் ஓரமா நெருங்சி முள்ளா பெத்தவங்களும்.. கூடப் பிறந்தவனும்.. என்னை ஒதுக்கி விட்ட நினைவு குத்திக்கிட்டே இருக்கும்.. அதுவே.. உங்க ஊருக்குப் போய்.. உங்க சொந்த பந்தங்களோட கலந்தட்டா.. அந்த முள்ளின் வலி இருக்காது.. காணாமல் போயிடும்.. நாம உங்க ஊருக்கே போகலாங்க.. ப்ளீஸ்..”

‘இந்தப் பெண்கள் எப்படித்தான் இன்னொரு பெண்ணின் உணர்வை எளிதாக கணிக்கிறார்களே..’ என்று ஆச்சரியப்பட்டுப் போனான் அரவிந்தன்..

ஷாலினியின் மன உணர்வுகளை விசாலாட்சியால் துல்லியமாக அனுமானிக்க முடிந்தது..

பெற்றவர்களைப் பிரிந்து தன் மகனின் பின்னால் அவனை நம்பி வந்து விட்ட மருமகளை அவளது தாயுள்ளம் அரவணைத்துக் கொண்டது…

தன் மருமகளின் மனதில்.. உறவுகளுக்கான ஏக்கம் வந்துவிடக்கூடாது என்று அவள் நினைத்தாள்..

‘வா மகளே.. இது உன் வீடு.. நாங்கள் உன் புருசனைப் பெத்தவங்க.. உன்னையும் பெத்தவங்கதான்.. இவர்கள் எல்லாம் உன் புருசனின் சொந்தங்கள்.. இனி.. உனக்கும் சொந்தங்கள்.. இது உன் கிராமம்.. இது உன் புருசனின் குடும்பத்தின் குலதெய்வம்.. இனி.. இதுவே உன் ஆராதனைக்குரிய குலதெய்வம்..

இதன் முன் நீ பொங்கலிடு.. படையல் வை.. இந்தக் குடும்பத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்.. இனி, இந்தக்குடும்பத்தின் சுக.. துக்கம் உன் கையில். எனக்கு அடுத்து.. இந்த இல்லத்தின் தலைவியாக பொறுப்பேற்கப் போகிறவள் நீ..

எனக்கு என் மாமியார் தந்த அனைத்து உரிமைகளையும்.. இன்று.. உனக்கு நான் தருகிறேன்.. என்னிடத்தில் நீயிருந்து.. இனி இந்தக் குடும்பத்தை வழிநடத்து…’

விசாலாட்சி சொல்லாமல் சொல்லிய இந்த வார்த்தைகளால் ஷாலினி கட்டுண்டாள்..

நாமக்கல் வீட்டில்.. அவர்கள் போய் இறங்கிய போது.. வீடு நிறைய ஆள்கள் குழுமியிருந்து அவர்களை வரவேற்றது.. அவள் மனதிற்கு இதத்தைத் தந்தது..

“என் மருமகள்..”

விசாலாட்சி பெருமையுடன் ஷாலினியை அணைத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினாள்..

வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.. உறவினர் வருகையால் சந்தடி சூழ்ந்திருந்தது.. வினாடி நேரம் கூட அரவிந்தனைட் தனிமையில் சந்திக்க அவளால் முடியவில்லை.. ஆனால் அவள் மனம் பொங்கிட் தளும்பிக் கொண்டிருந்தது…

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link