Chapter 22
“கட்டின சேலையோட வந்தாளாம்.. உடனே என் தம்பி வாழ்க்கை கொடுத்துட்டானாம்.. என் நாத்தனாவுக்கு நூறு பவுன் நகை போட்டு கார் வாங்கிக் கொடுக்கிறேன்னு சொன்னாங்க.. ஏமாந்த இந்த சோணகிரி.. காதல்ன்னு விழுந்துட்டான்.. என்ன செய்யறது அத்தை.. மூத்தது மோழை.. இளையவது காளைன்னு சொல்லுவாங்க.. எங்க வீட்டில் அது தலைகீழால்ல இருக்கு..”
கை கழுவும் இடத்தில் ரேவதி வேண்டுமென்றே சத்தமாக பேசிவைக்க.. அவள் ஷாலினிக்கு கேட்க வேண்டுமென்றுதான் உரக்கப் பேசுகிறாள் என்று ஷாலினிக்குப் புரிந்து போனது…
ரேவதி பேசியது ஷாலினியின் காதுகளில் மட்டும் ஒலிக்காமல்.. அனிதாவின் காதுகளிலும் சேர்ந்து ஒலித்து வைக்க.. ஷாலினியின் சுயமரியாதை பாதிப்புக்கு உள்ளானது..
“என் வீட்டிலயும் எனக்கு நூறு பவுன் நகை சேர்த்து வைச்சிருக்காங்க…”
இரவின் தனிமையில் தாகத்துடன் அரவிந்தன் நெருங்கிய போது.. அதைக் கண்டு கொள்ளாமல் அவள் பொருமினாள்..
“அந்தப் பேச்சை இப்ப எதுக்குடி பேசற..?”
“வேற எப்பப் பேச..?”
“காலையில் பேசலாம்..”
“நம்மைச் சுற்றி நூறு பேர் இருப்பாங்க..”
“அவ வேணும்னே பேசினா ஷாலினி..”
“அதை அந்த அனிதாவின் காதுபடப் பேசினாங்க..”
“இதுதான் உன் பிரச்னையா..?”
“எங்க வீட்டிலயும் கார் வாங்கித் தார அளவுக்கு வசதியும் இருக்கு.. மனசும் இருக்கு..”
“இப்ப இதை நான் கேட்டேனா..?”
“அவங்க மனசுப் பிரகாரம் நான் நடக்கலை.. அவங்களோட நகையிலயும்.. பணத்திலயும் என்னால உரிமை கொண்டாட முடியலை..”
“எவ்வளவு தைரியமிருந்தா என்கிட்டயே இப்படிப் பேசுவ? உங்க அப்பன் மனசுப்பிரகாரம் நீ நடக்கலைன்னு வருத்தப்படறியா..? அந்த வினோத்தை நீ கல்யாணம் பண்ணிக்கணும்கிறதுதானே அவங்க மனசு..? அதை நிறைவேத்த முடியலைன்னு உனக்கு வருத்தமா..?”
இருவரும் ஒருவருக்கொருவர் புறமுதுகு காட்டித் திரும்பிப் படுத்தனர்..
மறுநாள் காலையில் குல தெய்வத்தின் கோவிலுக்கு கார்களிலும் வேன்களிலும்.. அணிவகுத்துச் சென்றார்கள்..
விசாலாட்சி உதவி செய்ய ஷாலினி பொங்கல் வைத்தாள்..
“அம்மா.. இதுக்கு நீங்களே பொங்கல் வைச்சிருக்கலாம்.. சமைக்கவும் தெரியாத மருமகளைக் கொண்டு வந்திட்டு இந்தப் பெருமை பேசக்கூடாது..” ரேவதி சந்தர்ப்பம் கிடைத்த சாக்கில் பேசினாள்..
“அவ கிடக்கிறா விடும்மா…”
விசாலாட்சி கூறிய வார்த்தைகளால் ஷாலினி சமாதானமடைந்தாள்..
பட்டுச்சேலையை வாரிச் செருகி.. பழக்கமில்லாத வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்..
அங்குமிங்கும் நடை பழகிக் கொண்டிருந்த அவளது அழகில் கிறங்கிப் போனவனாக.. அருகில் சென்றான்.. அவளுக்கு உதவி செய்யும் சாக்கில் அருகே குனிந்தவன்..
“ஸாரிடி..” என்றான்..
அத்தனை பேரின் மத்தியில்.. அவன் ரகசியமாக வந்து மன்னிப்பு கேட்டது-அவளுக்குப் பிடித்திருந்தது..
பதில் சொல்ல அவள் வாயெடுத்தபோது..
“அரவிந்த்.. எப்படிடா இருக்க..” என்று கட்டிக் கொண்டாள் ஒரு பெண்..
“ஹாய் நிரஞ்சனா.. நீயா..?” அரவிந்தன் விலகாமல் அவருடன் ஈஷிக் கொண்டான்..
சாமி கும்பிட்டுத் திரும்பி வந்த போது இருட்டியிருந்தது.. எல்லோரும் பயணக் களைப்புடன் படுத்து உறங்கி விட்டார்கள்..
அரவிந்தனுக்கு.. முதல் நாள் இரவிலிருந்து ஷாலினியைத் தொட முடியாத களைப்புத்தான் இருந்தது..
“ஷால்..” என்று அவன் நெருங்கிய போது..
“யாரு.. அவ..?” என்றாள் அவள்..
“எவ..?” புரியாமல் திகைத்தான் அரவிந்தன்..
“அதுதான்.. உங்களோட கோந்து போடாமலே ஒருத்தி ஒட்டிக்கிட்டாளே.. அவதான்..”
“ஓ.. அவளைச் சொல்றியா.. அவ நிரஞ்சனா..”
“அப்படின்னா தெரிஞ்சுருமா..? அவ என்ன பிரைம் மினிஸ்டரா? வெறும் பெயரைச் சொன்னவுடனே தெரிஞ்சுக்கிறதுக்கு..?”
“என்னோட மாமா பொண்ணு..”
“உங்களுக்கு சித்தப்பா பொண்ணு.. பெரியப்பா பொண்ணுன்னு யாருமே இல்லையா..? எல்லாமே.. அத்தை மகள்கள்தானா..?”
அன்று இரவு ஷாலினிக்கு தலை வலி அதிகமாக இருந்தது.. அவளால் அரவிந்தனுடன் பேசக்கூட முடியாது என்று சொல்லி விட்டாள்.. வேறு வழியின்றி அவன் விலகிப் படுத்தான்.. தலைவலியென்று பொய் சொன்னவள் தூங்கிப் போனாள்…
அடுத்த நாள் விடியலில் வேறொரு பிரச்னை வந்தது.
“அம்புஜம் வீட்டுக்கு இன்னைக்கு விருந்துக்கு போயிட்டு வாங்கப்பா..” என்றார் வெள்ளிமலை..
அம்புஜம் அவருடைய தங்கை.. அவள் பெற்றது இரண்டும் மகன்கள் என்பதால் ஷாலினி.. அரவிந்தனுடன் தைரியமாக விருந்துக்குப் போனாள்..
அம்புஜம் பெற்றதுதான் மகன்கள்.. அம்புஜத்தின் பக்கத்து வீட்டுக்காரம்மா ஒற்றைப் பெண்ணைப் பெற்று வைத்திருந்த விவரம்.. விருந்துக்குப் போன பின்னால்தான் ஷாலினிக்கு தெரியவந்தது..
இதில் ஒரு கொடுமை என்னவென்றால்.. மகளைவிட அரவிந்தன் அடித்த ஜோக்குகளுக்கு.. அவளுடைய அம்மாதான் அதிகமாக சிரித்து வைத்தாள்..
ஒருவழியாக விருந்து முடிந்து கிளம்பும் போது அரவிந்தன்.. பக்கத்து வீட்டுக்காரம்மாவிடம் சொல்லி விட்டுத்தான் வருவேனென்று அடம்பிடித்தான்..
கண்ணகி மதுரையை பார்ட்த பார்வையை அரவிந்தனின் மீது ஷாலினி வீசிய போதும் அவன் அயரவில்லை..
வேறு வழியின்றி பக்கட்து வீட்டில் விடைபெற அவர்கள் போன போது.. பக்கட்து வீட்டம்மாள் விடை கொடுட்த விதட்தில் ஷாலினி ஒருவாரட்திற்கு அரவிந்தனுடன் ‘டூ’ விட்டாள்..
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.