Chapter 15
அர்ஜூன் அவளை நெருங்கி அணைத்தான்.. அவள் விடுபட முயன்றாள்.. அவன் விடவில்லை.. அவளது இடுப்பில் கைகொடுத்து அவளைத் தூக்கிக் கொண்டு கட்டிலை அடைந்தான்..
“விடுங்க என்னை..”
“விட முடியாது.. இப்போது மட்டுமில்லை.. எப்போதுமே..”
“நீங்கள் மாளவிகாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்..”
“நீ யாரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறாய்..?”
“அசிங்கமாகப் பேசாதீர்கள்..”
“நீயும் அப்படிப் பேசாதே..”
“நான் வேறு என்னதான் செய்வது..?”
“நான் சொல்லவா..?”
அவன் குனிந்து அவளின் காதருகே முணுமுணுத்தான்.. அவள் கிளர்ந்து சரிந்தாள்.. அவன் அவள் மேல் படர்ந்தான்..
கோவாவில் தடைபட்டதை.. தன் வீட்டில் தடை இல்லாமல் பெற்றுக் கொண்டான் அர்ஜூன்..
களைத்துச் சரிந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகிய கணவனின் கைபற்றித் தடுத்தாள் தர்ஷிணி..
“என்னடி..?” வெகுபிரியமாக கேட்டான் அவன்..
“கோபமாய் ‘ச்சே..’ன்னு சொல்லிட்டுப் போனீங்களே..” விம்மலுடன் கேட்டாள்..
“முட்டாள்.. இன்னும் அழுகையா..?” அவளது கன்னத்தில் தட்டி எழுப்பி உட்கார வைத்தான்..
அவளோ அவன் மடி மீது சுருண்டு கொண்டாள்.. சின்ன விலகலைக் கூட விரும்பாமல் பதட்டப்படும் அவளது பயத்தைப் புரிந்து கொண்டவனாக அவள் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினான் அர்ஜூன்..
“இனி என் வாழ்வில் நீங்க எனக்குக் கிடைக்க மாட்டிங்கன்னு நினைச்சிருந்தேன்..”
“முடிவே பண்ணிட்டன்னு சொல்லுடி..”
“ம்ம்ம்..”
“அந்த முடிவை எடுத்துட்டுத்தான் மாளவிகாவைப் பார்க்கப் போனியா..?”
மென்மையாகத்தான் அவன் கேட்டான்.. அவள் பதறிப்போய் எழ முயன்றாள்..
“அப்படியே படு..” அழுத்தி படுக்கவைத்தான்..
“உங்களுக்கு எப்படித் தெரியும்..?”
“மாளவிகா போன் பண்ணி வரச் சொன்னா.. இன்னும் இரண்டு நாளில் அவள் வெளிநாட்டுக்கு ரிட்டர்ன் ஆகிருவா.. போகிறதுக்கு முன்னாடி என்னைப் பார்த்துப் பேச நினைக்கிறாளோன்னு நினைத்துத்தான் போனேன்.. அங்கே போனால் கதையே வேறாக இருக்கிது.. அவள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு வந்த கோபம் இருக்கே.. அப்படியே கிளம்பிவந்து அடிச்சு உன் பல்லைக் கழட்டி விடலாம்ன்னு நினைச்சேன்..”
“அவங்களைத்தான் உங்களுக்குப் பிடிக்குமே..”
“பிடித்தவளெல்லாம் பெண்டாட்டியாக ஆகி விட முடியுமா..? பேச இருடி.. நான் எதையாவது எக்குத் தப்பாய் சொல்லி வைத்து விடுவேன்.. மாளவிகா என்னோட ஃபிரண்ட்.. குட் ஃபிரண்ட்.. ஏன் இப்படி தர்ஷிணி பேசுகிறாங்கன்னு கேட்டா..”
“நீங்க எதையும் சொல்லி விடலையே..”
“சொன்னால் என்ன..?”
“என்னங்க இப்படிக் கேக்கறிங்க.. இது ஹஸ்பெண்ட் அண்ட் வொய்புக்கு இடையில் இருக்கிற பெர்சனல்.. இதைப் போய் அவங்களிடம் சொல்லலாமா..?”
“ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப்..! அந்த அறிவிருந்தா நீ அவளை எனக்கு செகண்ட் வொய்பா இருக்கச் சொல்லி அப்ளிகேசன் வைச்சிருப்பியா..?”
“அது.. வந்து.. வந்து.. எனக்கு வேறு வழி தெரியல..”
மறுபடியும் விம்மினாள் தர்ஷிணி.. அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு சமாதானப் படுத்தினான் அர்ஜூன்.. அவளது கண்ணீர் அடங்க வெகு நேரமானது..
“போனதை மறந்துவிடு.. நீ சொன்ன வார்த்தையை மறப்பதற்கான வழியை மாளவிகாதான் சொன்னா.. பழிக்குப் பழி என்கிறதைப் போல வார்த்தைக்கு வார்த்தைன்னு எடுத்துக் கொடுத்தா.. நானும் வீட்டுக்கு வந்து சோபாவில் நாமிருந்த சிச்சுவேசனைக் கிரியேட் பண்ணினேன்.. நீ கிறங்கி நின்னப்ப நீ சொன்ன வார்த்தையை நான் சொல்லி உன்னை ஹர்ட் பண்ணினேன்.. தானிக்குத் தீனி சரியாப் போச்சு..”
அர்ஜூன் அவளை நெருங்கி விட்ட கதையைத் தொடர்ந்தான்.. விடிய விடிய கதை படித்தவர்கள் விடியலில் அயர்ந்து உறங்கினான்.. மறுநாள் காலையில் அர்ஜூன் அலுவலகத்துக்கு லீவ் போட்டான்.. மாலையில் அவனும் தர்ஷிணியும் மாளவிகாவைப் போய் பார்த்தார்கள்.. ஜோடியாக வந்தவர்களின் முகங்களில் தெரிந்த சந்தோசம் மாளவிகாவுக்குச் செய்தியைச் சொல்லிவிட்டது..
“கன்ங்ராட்ஸ்..” என்றாள் அவள் புன்னகையுடன்..
“தேங்க்ஸ்..” அவள் கை பிடித்து நன்றி சொல்லி கண் கலங்கினாள் தர்ஷிணி..
மாளவிகாவிடம் விடை பெற்றுத் திரும்பும் போது தர்ஷிணி நகர்ந்து அர்ஜூனின் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள்.. அவளது மனம்..
‘மாறியது நெஞ்சம்..
மாற்றியது இவனே..
காரிகையின் உள்ளம்..
கவர்ந்தவனும் இவனே..’
என்று பாடியது.. வாழ்வதற்காகத்தான் இந்த வாழ்க்கை காத்திருக்கிறது.. வன்மங்களை மறந்து இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம்..
– முற்றும் –
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.