Chapter 20

0Shares

வெற்றிவேலின் முகத்தில் கோபம் கனன்று கொண்டிருந்தது.. கிரணிடம் பேசிய பேச்சுக்களின் நினைவில் சிரிப்பு மாறாத முகத்துடன் வேகமாக ஓடி வந்த கீர்த்தனா.. வெற்றிவேலைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள்.. அவள் முகத்திலிருந்த சிரிப்பு ஓடியே போய் விட்டது..

‘எதுக்கு இப்படி முறைக்கிறான்..?’

வெற்றிவேலின் கோபத்துக்கான காரணம் விளங்காமல் அவள் திகைத்து நின்றாள்.. அவளது சிரிப்பு மறைந்ததில் அவனது கோப்ம அதிகரித்தது..

“ஓ.. அவனைப் பார்த்தாச் சிரிப்ப.. என்னைப் பார்த்தா முறைப்பியா..?”

‘முறைக்கிறேனா..? நானா..? அத்தானையா..?’

அவனது அபாண்டமான குற்றச்சாட்டில் அவளுக்கு கண் கலங்கிவிட்டது.. அவன் அதற்கும் கோபப் பட்டான்..

“இப்ப எதுக்காக கண்ணைக் கசக்கிற..? அவனைப் பார்த்தா சிரிப்பு வரும்.. என்னைப் பார்த்தா அழுகைதான் வருமா..?”

‘எவனைச் சொல்றான்..?’

கீர்த்தனாவுக்கு புரியவே இல்லை.. கிரணிடம் சிரித்துப் பேசியதற்கு அவள் மனதில் முக்கியத்துவம் கொடுக்கவே இல்லையே.. கொடுத்திருந்தால்தானே அதைப் பற்றிப் பதில் சொல்வாள்..?

அது எதுவும் தெரியாமல்.. அவள் மிரண்டு விழித்ததில்..

“அப்படிப் பார்க்காதே..” என்று அவன் சீறினான்..

“எதுக்கு அப்படிப் பார்க்கிற..? உன்னை கொடுமைப் படுத்தறேனா..? அதைத்தான் அவன்கிட்டப் பேசிக்கிட்டு இருந்தியா..? பாவம்.. தாய்.. தகப்பனில்லாத அனாதையாச்சேன்னு வீட்டில சேர்த்துக்கச் சொன்னேன் பாரு.. அதுதான் உன்னை இந்த அளவுக்குப் பேசச் சொல்லுது…”

“அத்தான்..”

கீர்த்தனாவின் விழிகளில் தெரிந்த அதிர்வில்.. வலியில்.. வெற்றிவேல் தன் தவறை உணர்ந்தவனாகப் பேச்சை நிறுத்திக் கொண்டான்..

கீர்த்தனா அவனையே இமைக்காமல் பார்த்தாள்.. அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாத சங்கடத் துடனும்.. குறையாமலிருந்த கோபத்துடனும்.. அவன் அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்து வானத்தைப் பார்த்தான்.. அதிகாலை வானில் இரை தேடிப் பறக்கும் பறவைகளின் கூட்டத்தில் அவன் மனம் குளிர்ந்து விடவில்லை…

அவன் மனதில் கிரணின் ரசனை ததும்பிய முகம் மட்டுமே இருந்தது..

“வாவ்..! என்ன அழகுடா வெற்றி..! சும்மா கஜீகோரா சிற்பம் போல இல்ல இருக்கா.. என்ன ஸ்ரெட்சர்.. என்ன பியுட்டி.. செம பிகர்டா.. இப்படி ஒருத்தி உன் வீட்டில் இருக்கான்னு நீ சொல்லவே இல்லை பார்த்தியா..”

சொல்லியிருந்தால் அவன் என்ன செய்திருப்பான் என்ற நினைவில் பல்லைக் கடித்தான் வெற்றிவேல்..

இப்போது தோட்டத்தில் யாரிடமும் சிரித்துப் பேசாதவளைச் சிரிக்கச் சிரிக்கப் பேச வைத்தானே.. அந்தக் கற்று வைத்திருக்கும் அவனுக்கு கைவந்த மயக்கும் கலையை பிரயோகித்திருப்பானோ…

கோபத்தில் அவன் முகம் கடுத்தது.. கீர்த்தனாவோ பொங்கி வரும் கண்ணீரை அடக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்..

“நான் அனாதைதான் அத்தான்.. இந்த வீட்டில் நிறையப் பேரு நிறையத் தடவை அதைச் சொல்லிக் காண்பிச்சுட்டாங்க.. அப்பல்லாம் எனக்கு ஒன்னுமே தோணினதில்ல அத்தான்.. நான் அனாதைங்கிற எண்ணமே வந்ததில்ல.. இப்ப நீங்க சொன்னீங்க பாருங்க.. இதுக்கப்புறம்தான் நான் அனாதையா நிற்கிறேனேன்னு துயரமா இருக்கு அத்தான்..”

கீர்த்தனா விம்மினாள்.. வெற்றி அதற்கும் எரிச்சல் பட்டான்..

“வாயைத் திறந்து ஒற்றைவார்த்தை பேசிறக் கூடாது.. உடனே அதில குத்தம் கண்டு பிடிச்சு.. உன்னாலேதான் நான் துயரப் படறேன்னு பட்டம் கட்டிருவ.. உன்மேல் பாவப் பட்டேன் பாரு..”

“வேணாம் அத்தான்.. என்மேல் பாவப் படாதீங்க.. எனக்கு உங்க இரக்கமும்.. கருணையும் வேண்டாம்.. தாத்தாவுக்காக பார்க்கிறேன்..”

“இல்லைன்னா..?” வெற்றிவேல் சினத்துடன் கேட்டான்..

“இல்லைன்னா.. இப்பவே.. இந்த நொடியிலேயே இந்த வீட்டை விட்டுப் போயிருவேன்..”

“என்ன சொன்ன..?”

வெற்றிவேல் சட்டென்று அவள் கன்னத்தில் அடித்து விட்டான்.. அடியைத் தாங்கிக் கொண்ட கீர்த்தனா முகம் சுளித்து.. கன்னம் திருப்பி.. கண்மூடி நின்று விட்டாள்..

“ம்ப்ச்ச்..”

கைநீட்டி விட்ட குற்ற உணர்விலும்.. ஆத்திரத்திலும் வெற்றிவேல் வெறுப்பை உமிழ்ந்தபோது.. ரியா அங்கே வந்தாள்.. கீர்த்தனாவின் சிவந்த முகத்தையும்.. வெற்றிவேலின் கோப முகத்தையும் மாறிமாறிப் பார்த்தாள்..

“என்ன ஆச்சு வெற்றி..?”

“நத்திங்..”

“நீங்க நத்திங்ன்னு சொல்றீங்க.. கீர்த்தனா என்னடான்னா.. கண்ணைக் கசக்கிக்கிட்டு நிற்கிறா.. வாட் ஹேப்பன்..?”

“அவளுக்கு கண்ணைக் கசக்கிறதுன்னா அல்வா சாப்பிடறதைப் போல.. அழுகிறதுக்கு காரணத்தைத் தேடிக்கிட்டு இருப்பா..”

“அப்ப.. இங்கே என்ன நடந்ததுன்னு சொல்ல மாட்டிங்க..?”

ரியாவின் அழுத்தமான கேள்விக்கு அதைவிட அழுத்தமான பார்வை ஒன்றைப் பதிலாக தந்தான் வெற்றிவேல்…

“என்னிடம் கேள்வி கேட்கிற வேலையை வைச்சுக் காதே ரியா.. எனக்கு அது பிடிக்காது.. இங்கே என்ன நடந்திருந்தாலும் உன்னிடம் அதைச் சொல்லனும்கிற அவசியம் எனக்கு இல்லை.. அண்டர்ஸ்டாண்ட்..?”

ரியாவின் முகம் சிவந்து விட்டது.. உதட்டைக் கடித்தாள்… கீர்த்தனாவின் முன்னால் அவளை எடுத்தெறிந்து அவன் பேசி விட்டதை ரியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

“என்னைப் பார்த்தா இப்படிச் சொல்கிறிங்க..?”

அவளின் அந்த உரிமையில் கீர்த்தனா மனம் நைந்தாள்.. இந்த உரிமை கீர்த்தனாவுக்கு கிடைக்க வில்லையே..

“உன்னைப் பார்த்துத்தான் சொல்றேன்.. நீதானே இப்ப கொஸ்டின் பண்ணின..?”

ஏனென்று இனம் புரியாத எரிச்சல் வெற்றிவேலுக்குள் மண்டியது.. அவனுக்கும் கீர்த்தனாவுக்குமான தனிமையில் ரியா குறுக்கே வந்துவிட்டதைப் போல அவன் உணர்ந்தான்.. கீர்த்தனாவும் அதைத்தான் உணர்கிறாள் என்பதை கன்றிப் போன அவளின் முகமே சொல்லியதில் அவனுடைய எரிச்சல் அதிகரித்தது..

ரியாவினால் மற்றுமொரு தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. வெற்றிவேலும் கீர்த்தனாவும் அப்படி என்னதான் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று அறிந்து கொள்ளாவிட்டால் அவளுக்குத் தலை bடிவத்து விடும் போல இருந்தது..

வெற்றிவேலுக்கு ரியாவின் தலை வெடிப்தைப் பற்றி யாதொரு கவலையும் இல்லையென்பதைக் கூட அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.. அதை அவன் வாயாலேயே சொல்லி விட்டதைக் கூட அவளால் தள்ளிவிட முடிந்தது.. அந்தச் சொல்லை கீர்த்தனாவின் முன்னால் சொல்லியதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அப்போதுதான் கீர்த்தனாவின் முன்பாக எடுத்தெரிந்து பேசி ரியாவின் மூக்கை வெற்றிவேல் உடைத்திருந்தான்… மீண்டும் அதே வேலையை கீர்த்தனாவின் முன்பு அவன் செய்து வைத்ததில் ரியாவின் தன்மானம் சிலிர்தது..

வெற்றிவேல் ரியாவைத் தாங்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு அவளிடம் இருந்தது.. அவன் தாங்க மாட்டான் என்பதில் அவளுக்கு எரிச்சலும் கோபமும் இருந்தன.. அவனைப் போன்ற கர்வம் பிடித்த அழுத்தக் காரனை அவள் தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை எனலாம்.. அந்த அளவுக்கு தலைக்கனம் பிடித்தவன் என்று ரியாவினால் கணிக்கப் பட்டவன் வெற்றிவேல்..

இருந்தும் அவள் அவனிடம் தழைந்து போகிறாள் என்றால் அதற்கு ஒரேயொரு காரணம்தான் இருந்தது..

அதுதான் வெற்றிவேலிடம் அவளுக்கு இருந்த ஈடுபாடு.. மங்கள பவனத்தின் மகாராஜாவாக வெற்றிவேல் தான் இருக்கிறான் என்பதை அவள் நன்கு அறிவாள்.. மனைவியின் வழி வந்த சொத்துக்களுக்கு அதிபதியாகி யிருந்த காரணத்தினால் சுந்தரவடிவேலு கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பார்.. விமலாவிடம் அடங்கித்தான் பேசுவார்.. வெற்றிவேல் அப்படியல்ல.. அவன் நிமிர்ந்த தனமாகத்தான் விமலாவிடம் பேசுவான்.. அது அவளுடைய சொத்து என்று ஒப்புக் கொள்ள மாட்டான்..

“தாத்தாவோட சொத்து பேரனுக்குத்தான் சொந்தம் தெரிஞ்சுக்கங்க.. அது அப்பாவழித்தாத்தாவா இருந்தா என்ன.. இல்லை.. அம்மா வழித் தாத்தாவா இருந்தா என்ன..? தாத்தா.. தாத்தாதானே..? ஆமாம் தெரியாமத்தான் கேட்கிறேன்.. உங்கப்பா இந்த மங்கள பவனத்தையும் ஒற்றை தீப்பெட்டிக் கம்பெனியையும் கொடுத்தார்.. அந்த ஒன்றைப் பத்தாக்கி.. பத்தை நூறாக்கியது யார்..? நான் தானே.. பிரிண்டிங் பிரஞ்ஸை ஆரம்பிச்சு.. எக்ஸ்போர்ட் கம்பெனி வரை கொண்டு போனது யார்..? நான்தானே.. ஓரிடத்திலே தேங்கி நிக்கிற தண்ணி நாளடைவில யாருக்கும் யூசில்லாம குட்டையா மாறிரும்.. அது ஓடிக்கிட்டே இருந்தாத்தான்.. ஓடை ஆறாகி.. ஆறு கடலா மாறும்.. உங்ககிட்ட இருந்தது தண்ணீர் குட்டை.. என் கைக்கு அது மாறினதும் கடலா உருமாத்தியிருக்கேன்.. அதனால டாடியை அரட்டறதைப் போல என்னையும் அரட்டிப் பார்த்துடலாம்ன்னு வீண் கனவு காணாதீங்க..”

அப்பேற்பட்ட விமலாவையே அடக்கி வைத்திருக்கும் வெற்றிவேலுக்கு மனைவியாக ரியா விரும்பினாள்.. அவனுடைய வீடான மங்கள பவனத்துக்கு மகாராணியாக விரும்பினாள்.. அந்தக் கர்வக்காரணிடம் பணிந்து போனாள்..

அந்தப் பணிவை கீர்த்தனா வேடிக்கை பார்ப்பதைப் போலத் தோன்றியதில் அவள் மனம் வெகுண்டாள்..

“என்னவோ செய்ங்க.. அதைப்பற்றி எனக்கென்ன.. நான் கீர்த்தனாவைத் தேடிக்கிட்டு வந்தேன்… ஏய்ய் கீர்த்தனா.. என்னோட சல்வாரைத் துவைத்து அயர்ன் பண்ணி வைக்கச் சொன்னேனே.. செய்தியா.. இல்லையா..?”

அவளின் அதட்டலில் கீர்த்தனாவின் முகம் அவமானத்தில் சிறுத்து விட்டது.. அதை வெகு திருப்தியுடன் ரசித்தாள் ரியா..

‘நீ வெற்றிகூடத் தனியா நின்னு பேசறியா..? ஆப்டர் ஆல் இந்த வீட்டில ஒரு வேலைக்காரியின் லெவலில இருக்கிறவ நீ.. நான் மேரேஜ்பண்ணிக்கப் போகிற ஆண்பிள்ளை கிட்ட உனக்கு பேச்சு வேண்டியிருக்கா..? உன் லெவல் எதுன்னு உனக்குத் தெரிய வேணாம்..? போ.. போய் என் சல்வாரைத் துவைச்சுக் காயப்போடு.. அதுதான் நீ இருக்க வேண்டிய இடம்..’

ரியாவின் விழிகள் பிரதிபலித்த குரூரத்தை கீர்த்தனாவினால் புரிந்து கொள்ள முடிந்தது.. முகம் சிவக்க நகர முயன்றவளை..

“நில்..” என்று தடுத்து நிறுத்தினான் வெற்றிவேல்..

“ரியா.. உன் டிரெஸ்ஸை நீயே வாஷ் பண்ணு.. இல்லைன்னா கனகாவைக் கூப்பிட்டு வாஷ் பண்ணச் சொல்லு.. கீர்த்தனாகிட்ட எப்படி அந்த வேலையைச் சொல்லலாம்..?”

வெற்றிவேலின் சீற்றத்தில் கீர்த்தனாவின் விழிகள் அகன்றன.. அவள் மனதில் சாரல் அடித்த 

அதே நொடியில் ரியாவின் மனதில் புயல் மையம் கொண்டது.. கீர்த்தனாவுக்காக பரிந்து கொண்டு வெற்றிவேல் பேசிய பேச்சில் அவள் சண்டைக் கோழியாக மாறினாள்..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link