Chapter 23

0Shares

ஆடிட் வெற்றிகரமாக முடிந்து விட்டது.. அதைக் கொண்டாட சிறு விருந்தொன்றும் எம்.டி. ஏற்பாடு பண்ணியிருந்தார்.. விருந்து நடக்கப் போகும் உற்சாகத்தில் மற்றவர்கள் இருக்க.. மிருணாளினி மட்டும் எதிலும் மனம் ஒட்டாத விரக்தியுடன் இருந்தாள்..

விருந்து ஆரம்பமானது.. உற்சாகத்துடன் இருந்த எம்.டி.. மிருணாளினியைப் பாராட்டிப் பேசினார்.

“லீவில் இருந்த மிருணாளினி.. ஆடிட் நடக்குதுன்னு நான் சொன்னவுடனேயே லீவைக் கேன்சல் பண்ணிட்டு வந்து ஜாயின் பண்ணிட்டாங்க.. ஐ அப்ரிஷியேட் ஹெர்..”

“அப்படியே அவளை ஒரு பாட்டையும் பாடச் சொல்லுங்க சார்..”

ஜென்ஸி குரல் கொடுக்க.. எம்.டி இன்னும் உற்சாகமானார்..

“ஈஸிட்..? இவங்க பாடுவாங்களா..? மிருணாளினி ப்ளீஸ்…”

உயிரற்ற பொம்மை போல மேடைக்கு வந்த மிருணாளினி பாட ஆரம்பித்தாள்…

“கடலில் மீனாக இருந்தவள் நான்…

உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…

துணைக்கிருந்தேன் கனவினிலே..

திரும்பி விட்டேன் கடலிடமே…”

முகிலன் விழியுர்த்தி அவளைப் பார்த்தான்.. அவனது பார்வை அவளை ஊடுருவ.. அவள் மனம் உடைந்தாள்..

“ஒரு நாள் சிரித்தேன்…

மறுநாள் வெறுத்தேன்…

உனை நான் கொல்லாமல்..

கொன்று புதைத்தேனே…

மன்னிப்பாயா…? மன்னிப்பாயா..?

மன்னிப்பாயா…? மன்னிப்பாயா…?”

அவளது கண்ணீர் கலந்த வார்த்தைகள் முகிலனின் இதயத்தை குத்திக் கிழித்தது..

புறங்கணிக்கப் பட்டால்… ஒரு பெண்.. எந்த எல்லைக்கும் போவாள் என்பதை அவள் அவனுக்கு உணர்த்தி விட்டாள்…

அந்த எல்லைக்கு அவளைத் தள்ளிய முகிலன் தன்னையே நொந்து கொண்டான்…

‘உன்னால் நான்

தடம் மாறி நடந்தேன்…

நூலில் ஒரு 

மலைபோல் ஆனேன்..

உன்னால் நான்

கலைஞனாய் ஆனேனே..

தொலைதூரத்தில் மலர்சூடி..

உனை நோக்கியே…

எனை ஈர்க்கிறாயே…

தேகம் மேலும்

உருகி.. உருகி…

உன்னை எண்ணி

ஏங்கும் என் இதயத்தை

என்ன செய்வேன்..?’

அவன் கண் மூடி.. மனதிற்குள் பாடினான்.. அவனது துயரத்தைக் கண்ட மிருணாளினியின் மனதில் பாரமேறியது. அவளது பாடலில் சோகம் குடியேறியது..

“ஓடும் நீரில் ஒரு அலைதான் நான்…

என் மேல் உள்ள ஈரம் நீதான்..

வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்…

மன்னிப்பாயா… அன்பே..?

காற்றில் ஆடும் காகிதம் நான்…

நீதான் எந்தன் கடிதம் ஆனாய்..

அன்பில் தொடங்கி…

அன்பில் முடிக்கின்றேன்…

என் கலங்கரை விளக்கமே…!”

அவளது மனதைப் பிழிந்த சோகத்தை பாடல் பிரதிபலிக்க.. அனைவரும் அந்தப் பாடலில் கட்டுண்டு நின்றனர்.. சிரித்துக் கொண்டேயிருக்கும்.. ஜென்ஸி கூட சிரிப்பை மறந்து உறைந்து நின்றாள்..

முகிலனின் மேல் ஏக்கமாக மிருணாளினியின் பார்வை படிந்தது.. அந்தப் பார்வையை தாங்க மாட்டாத முகிலன் நகர முற்பட்டான்.

மிருணாளினியின் பாடல் அவனைத் தடுத்து நிறுத்தியது…

“ஏன்… என் வாழ்வில் வந்தாய்…?

கண்ணா.. நீ…?

போவாயா.. கானல் நீர் போலேதான்…?

அனைவரும் உறங்கிடும்

இரவெனும் நேரம்…

எனக்கொரு தலையணை

நனைந்திருக்கும் ஈரம்…

மன்னிப்பாயா…? மன்னிப்பாயா..?”

விருந்து முடிந்த போது.. எம்.டி முகிலனை அழைத்துப் பேசினார்..

“வாட் ஹேப்பன் முகிலன்…?”

“சார்…?”

“உங்களுக்கும்.. மிருணாளினிக்கும் இடையே காதல் இருந்தது எனக்குத் தெரியும்…”

“இன்னும் இருக்கிறது சார்.. எப்போதும் இருக்கும்…”

“வெல்.. இந்த அளவுக்கு உங்க காதலில் கான்பிடென்ட் இருக்கிறபோது.. ஏன் அவங்க பாடலில் இத்தனை சோகம்…?”

‘ஏன்…?’

முகிலனால் பதில் சொல்ல முடியவில்லை..

மிருணாளினியும் அவளுடைய பாடலில் இதைத்தான் கேட்டாள் இப்போது எம்.டியும் அதே கேள்வியைத்தானே கேட்கிறார்..

ஏன்.. அவள் வாழ்வில் அவன் வந்தான்..? ஏன்.. அவன் வாழ்வில் அவள் வந்தாள்..?

ரயில் சிநேகிதம் போலக் கையாட்டி விட்டுப் போகாமல் ஒரே பாதையிலே இறுதிவரை இணைந்து நடக்கும் முடிவை ஏன் அவர்கள் எடுத்தார்கள்..?

இந்த வாழ்க்கை நம்முன் வைக்கிற விடை தெரியாத ஆயிரமாயிரம் கேள்விகளில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொண்டான் முகிலன்..

வாழ்க்கைப் பயணத்தில் நாம் கடந்து போகிற லட்சக்கணக்கான ஜனங்களின் மத்தியில் ஒரு முகம் மட்டும் மனதில் பதிந்து தொலைத்தால்.. இந்த அளவுக்கு துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்று யோசித்தான் முகிலன்..

அதனால் தான் கண்ணதாசன் பாடி வைத்தார் போல..

‘ஆயிரம் வாசல் இதயம் – அதில்

ஆயிரம் எண்ணங்கள் உதயம்…

யாரோ வருவார்.. யாரோ போவார்..

வருவதும்.. போவதும்.. தெரியாது…

ஒருவர் மட்டும் குடியிருந்தால்…

துயரம் ஏதுமில்லை..

ஒன்றிருக்க.. ஒன்று வந்தால்..

என்றும் அமைதியில்லை..’

இந்த நிஷா ஏன் டெல்லியிலிருந்து வந்து தொலைத்தாள்..? இந்த ஹரிஷ் ஏன் அமெரிக்காவிலிருந்து வந்து குதித்தான்…?

மிருணாளினியின் இடத்தில் முகிலனால் நிஷாவை வைத்துப் பார்க்க முடியுமா..? முகிலனை விட்டு ஹரிஷின் கைபிடிக்க மிருணாளினியால்தான் முடியுமா..?

‘செத்து விடுவாள்..’

வாடிய மலராய் நின்று கொண்டிருந்த மிருணாளினியை பார்த்த முகிலனால் தெளிவாக இதை அனுமானிக்க முடிந்தது..

ஒருநாளும் முகிலனுக்கு இடம் கொடுத்த மனதில் வேறு ஒருவனுக்கு அவள் இடம் கொடுக்க மாட்டாள்..

அவளருகில் சென்றான் முகிலன்.. ஆவலுடன் நிமிர்ந்து பார்த்தவளின் கையை அனைவரின் முன்னாலும் இறுக்கிப் பிடித்தான்…

“வா…”

அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள.. எம்.டியின் புருவங்கள் உயர்ந்தன..

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link