Chapter 36

0Shares

“நீங்கள் ஒன்றைக் கவனித்தீங்களா பெரியம்மா..”

“எதைச் சொல்கிறாய்..?”

“இந்தச் சுகந்தியின் நாத்தனார் இருக்காளில்ல..”

“வாசவியையா சொல்கிறாய்..?”

“அந்த வாயாடியைத்தான் சொல்கிறேன்..”

“சேச்சே.. அந்தப் பெண்ணை அப்படியெல்லாம் சொல்லாதே சுமதி..”

“என்ன பெரியம்மா.. அந்தக் குட்டிக்குப் போய் நீங்க இவ்வளவு சப்போர்ட் பண்ணுகிறீங்க..”

“அந்தப் பெண்ணை நம்ம சந்தோஷுக்குப் பிடித்திருப்பது போல் தெரிகிறது..”

எதைப் பற்றிப் போட்டுக் கொடுக்க.. கனகாரியமாய் ஜானகியின் பக்கத்தில் வந்து சுமதி அமர்ந்தாளோ.. அதையே ஜானகி கூறவும்.. சுமதியின் வாய் அடைத்துக் கொண்டது..

“அதற்காக..?”

“அந்தப் பெண்ணை எங்களுக்கும் பிடித்திருக்கிறது.. குடும்பம் வசதியானது.. நம் சுகந்தியின் நாத்தனார்ங்கிற கூடுதல் சொந்தம் வேறு.. அந்தப் பெண்ணையே நம் சந்தோஷுக்குப் பேசி முடித்து விட்டால் என்னன்னு நாங்கள் நினைக்கிறோம்..”

“வெறும் நினைப்புத்தானே பெரியம்மா..”

“முடிவே பண்ணிவிட்டோம் சுமதி..”

அதன் பின் நடந்த எதிலுமே சுமதிக்கு மனம் ஒட்ட வில்லை.. மணமக்களை நலங்கு வைக்க அழைத்தது.. மணமகன் சார்பாக வாசவியும்… மணமகள் சார்பாக சந்தோஷும்.. கேலிப் பேச்சில் ஈடுபட்டது.. என்று அவள் மனதில் பதியவில்லை..

மதிய விருந்து முடிந்து.. மணமக்கள் ஓய்வு எடுக்கச் சென்றனர்.. வந்திருந்த பரிசுப் பொருள்களை.. பத்திரமாய் ஒரு அறையில் அடுக்கிப் பூட்டி விட்டுத் திரும்பிய வாசவியை மெலிதாய்ச் சீழ்க்கையடித்து நிறுத்தினான் சந்தோஷ்..

“படிப்புத்தான் வெளிநாட்டுப் படிப்பு.. பண்ணுகிற காரியமெல்லாம் பக்கா லோக்கல்..” என்று நொடித்தாள் வாசவி..

“அப்படி என்னடி.. லோக்கலைக் கண்டுவிட்ட…?” என்று பொய்யாய்க் கோபம் காட்டினான் சந்தோஷ்…

“இந்த வாடி.. போடிங்கிற தெனாவெட்டு எதாம்..?”

“இது உரிமைடி.. என்னைத் தவிர வேறு எவனும் உன்னை இப்படிக் கூப்பிட முடியுமா..? இல்லை, உன்னைத் தவிர வேறு யாரையும் நான் இப்படிக் கூப்பிட்டு விடுவேனா..?”

வாசவியின் மனதில் மழைச்சாரல் அடித்தது.. அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.. அதை வெகுவாக ரசித்துச் சிரித்தான் சந்தோஷ்..

“இந்தக் கண்ணடிப்பது.. விசிலடிப்பது.. இதெல்லாம் லோக்கல் இல்லாமல் வேறு என்னவாம்..?”

“ஏய்ய்.. அதுவும் ஒரு இன்ட்ரெஸ்ட்தான்டி.. அதையும் உன்னிடம் மட்டும்தான் நான் செய்ய முடியும்..?”

“பேசியே ஆளை மயக்கி விடுவீர்கள்..”

“நீ பேசவே வேண்டாம்.. ஒரு சின்னக் கண் சிமிட்டலிலேயே ஆளை மயக்கி விடுவாய்..”

வாசவிக்கு அவன் சொல்வதைக் கேட்டதும் வெட்கமாய்ப் போய் விட்டது..

“நான் அண்ணியைப் பார்த்துக் கண்சிமிட்டினேன்னு.. உங்களிடம் சொன்னேனா இல்லையா..?”

“நீ கண் சிமிட்டியதை உன் அண்ணியா பார்த்தாள்..? நான்தானே பார்த்தேன்..?”

“உங்களை யார் என்னைப் பார்க்கச் சொன்னதாம்..”

வாசவி செல்லமாய்ச் சிணுங்கினாள்.. சந்தோஷின் மனக்கண்ணில்.. சுகந்தியின் செல்போனில் சிரித்துக் கொண்டிருந்த வாசவியின் புகைப்படம் தோன்றியது..

“ம்ம்.. என் தங்கையின் செல்போனில் இருந்த உன் போட்டோதான்.. என்னை நேரில் உன்னைப் பார்க்க இழுத்தது..”

“நிஜமாகவா..”

வாசவி ஆச்சர்யத்துடன் அவனை விழி விரியப் பார்த்தாள்..

“நிஜம்தான்டி.. சுகந்தி மாப்பிள்ளை வீட்டாரைப் பார் அண்ணான்னு அவளுடைய செல்போனில் இருந்த போட்டோவைக் காட்டினாள்.. நான் மாப்பிள்ளையை விட்டு விட்டு மாப்பிள்ளையின் தங்கையை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டேன்..”

“சந்தோஷ்..”

“ஏன் வாசவி… என்னை அத்தான்னு சொல்ல மாட்டாயா..?”

அவள் வெட்கத்துடன் ஓடி விட்டாள்.. சந்தோஷ் தனக்குத் தானே.. தலையை ஆட்டிச் சிரித்துக் கொண்டான்..

அன்று மாலை.. திருமண வரவேற்பு நடந்தது.. அதில் மெல்லிசை நிகழ்ச்சியும் நடந்தது.. அந்த மெல்லிசைக் கச்சேரியில்.. பாடும் திறமையுள்ளவர்கள் வந்து பாடலாம் என்று அறிவித்தார்கள்.. ரமாவும்.. கனகாவும்.. வாசவியை மேடைக்குத் தள்ளிவிட.. அவள் மேடை யேறினாள்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link