Chapter 39
“ஹலோ.. அக்கா.. நான் சுமதி பேசுகிறேன்..”
“சொல்லு சுமதி.. எப்படியிருக்கிறாய்..”
“நான் நல்லாத்தான் இருக்கிறேன்.. இங்கே அண்ணாவின் விசயம் நீ கேள்விப்பட்டாயா..?”
“தம்பியின் கல்யாண விசயம்தானே.. கேள்விப் பட்டேன்.. எனக்கு ரொம்பவும் சந்தோசமாய் இருக்கிறது..”
“என்ன சரஸ்வதியக்கா இப்படிச் சொல்கிற..? நம் அண்ணனின் வசதிக்குச் சுகந்தியின் நாத்தனாரைப் போய்க் கட்டுவதா..?”
“உனக்குத் தெரியாது சுமதி.. சந்தோஷ் படிக்கும் போது ஆஷான்னு ஒரு பெண் அவன் பின்னால் சுற்றியிருக் கிறாள்..”
எல்லோரையும் தன்னைப் போல் நல்லவராக நினைத்து விடும் சரஸ்வதி.. தான் மட்டுமே அறிந்த தம்பியின் அந்தரங்கத்தைச் சுமதியிடம் நம்பிச் சொல்லி விட்டாள்..
“இதுதான் சுமதி நடந்தது.. அன்றிலிருந்து.. பெண் களை சந்தோஷ் வெறுக்க ஆரம்பித்துவிட்டான்.. வாசவியை அவன் இந்த அளவிற்குக் காதலிப்பதற்குக் காரணமே அவள் சந்தோஷின் பணத்தைப் பெரிதாக நினைக்கவேயில்லை என்பதுதான்..”
இது போதாதா சுமதிக்கு.. வாசவியின் காதலைக் கலைக்க அவளுக்குத் துருப்புச் சீட்டுக் கிடைத்து விட்டது.
அவள் சந்தோஷிடம் பேசினாள்..
“அண்ணா.. நீ வாசவியை செலக்ட் பண்ணியிருப் பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை.. ஆனால் கல்யாண மண்டபத்தில் அவளுடைய சித்தி பெண்ணிடம் உன்னைப் பற்றி அவள் அளந்து கொண்டிருப்பதை என்காதால் கேட்டதால்தான் சொல்கிறேன்.. எதையும் தீர விசாரித்து.. யோசித்துச் செய்..”
“அவள் என்ன சொன்னாள்..? நீ என்ன கேட்டாய்..?”
“நீ பெரிய புளியங்கொம்பாம்.. உன்னை அவள் வளைத்து விட்டாளாம்.. உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் கடைசி வரை அவள் கோடீஸ்வரியாய் வாழலாமாம்..”
சந்தோஷின் மனம் துணுக்குற்றது…
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.