Chapter 41

0Shares

வாசவியின் முகத்தில் சோகம் நிலவியது.. அவள் கண்களில் இருந்து தாரை.. தாரையாய்க் கண்ணீர் பெருக் கெடுத்து வழிந்து கொண்டிருந்தது.. அதைத் துடைத்து விடக் கரம் நீட்டிய சந்தோஷ் வாசவியின் அனல் பார்வையைக் கண்டு.. கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்..

“நீங்கள் என் மேல் வைத்த குற்றச்சாட்டு ரொம்பவும் மோசமானது.. ஆனால்.. அதைக் கூட மறந்து.. மன்னித்து.. உங்களுக்கு விளக்கம் சொல்லியிருப்பேன்.. என்னை உங்களுக்குப் புரிய வைத்திருப்பேன்.. நீங்கள் எனக்கு மட்டும் சொந்தமானவர் என்பது உண்மையாக இருந்திருந்தால்.. ஆனால் அதுதான் பொய்த்துப் போய் விட்டதே..”

“வாசவி..”

“என் பெயரைக் கூடச் சொல்லாதீர்கள்.. அதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது..”

“ஏய்ய்.. என்ன நீ.. என் கடந்த காலத்தை உன்னிடம் பகிர்ந்து கொண்டது தவறா..?”

“காலம் கடந்து பகிர்ந்து கொண்டது தவறு சந்தோஷ்.. அன்றைக்கே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.. உங்கள் பணத்தைக் கண்டு எனக்குப் பயம்தான்னு.. அதையும் தாண்டி எப்படி உங்களுடைய பணத்திற்காக நான் உங்களைக் காதலித்தேன்னு நீங்கள் நினைத்தீர்கள்..?”

“அது வந்து சுமதி சொன்னாள்.. உன்னுடைய சித்தி பெண்ணிடம்… புளியங் கொம்பை வளைத்து விட்டேனென்று நீ பெருமை பேசிக் கொண்டிருந்ததாக..”

“ஓஹோ.. சுமதிக்கும்.. எனக்கும் ஆகாதுன்னு உங்களுக்குத் தெரியுமா.. தெரியாதா..? நீங்கள் தெரிந்து கொள்ளாதது இன்னும் ஒன்று இருக்கிறது.. என் சித்தி மகளுக்கோ.. இல்லை, மற்ற யாருக்கோ.. நம் காதல் விசயம் தெரியவே தெரியாது.. அப்படியே தெரிந்தாலும்.. இப்படிக் கேலி செய்து கொள்வது போல்.. காதல்.. எங்கள் குடும்பத்தில் சகஜமான ஒன்று இல்லை.. நீங்கள் புளியங்கொம்பாய் இருக்கலாம் சந்தோஷ்.. ஆனால் உங்களை வளைத்துப் பிடிக்க.. நான் முயற்சி பண்ணவே யில்லை.. அது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.. நான் உங்கள் பின்னால் சுற்றவில்லை.. நீங்கள் தான் என் பின்னால் சுற்றினீர்கள்.. நான் உங்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.. நீங்கள் பணக்காரர் என்பது உங்கள் மட்டுக்கு சந்தோஷ்.. எனக்கு அது ஒரு விசயமே இல்லை.”

“ஐ ஆம் ஸாரி வாசவி.. சுமதி சொன்ன பொய்யைக் கேட்டு.. என் புத்தி மழுங்கிவிட்டது..”

“பரவாயில்லை.. என்னை என் வீட்டில் விட்டு விடுங்கள்..”

“வாசவி..”

“இனி நமக்குள் ஒன்றுமேயில்லை சந்தோஷ்..”

“ஒன்றுமேயில்லையா.. எங்கே.. என் முகத்தைப் பார்த்துச் சொல்லு.. இரண்டு நாள்களில்.. ஏழு ஜென்மத்தின் வாழ்வையும் வாழ்ந்து முடித்தோமே.. அது பொய்யா..?”

“பொய்தான் சந்தோஷ்.. எல்லாமே பொய்தான்.. உங்கள் கண்களில் என்னைக் கண்டதும் தோன்றிய காதல் பொய்.. உங்களைக் கண்டதும் நான் உயிர்த்தேனே.. அந்த உயிர்ப்பு பொய்.. எல்லாமே பொய்த்து விட்டது..”

வாசவி குமுறி அழுதாள்.. அவளைத் தொட்டுச் சமாதானப்படுத்த முடியாமல் சந்தோஷ் தவிப்புடன் காரைக் கிளப்பினான்..

அன்று அவள் முகம் பார்க்காமல் பிரிந்து சென்ற வாசவி.. அதன்பின் அவன் போன் பேசினாலும்.. போனை எடுக்கவில்லை.. நேரில் சந்தித்தாலும்.. பார்க்காதவள் போல் விலகி நடந்தாள்.. ஆறு மாதங்கள் ஓடின.. அவள் படிப்பை முடித்து விட்டாள்.. ஜானகி சந்தோஷிடம் திருமணப் பேச்சை எடுக்க அவன் பதில் சொல்லாமல் போய்விட்டான்.. வழக்கப்படி அவள் மகளிடம் புலம்ப.. சரஸ்வதி அன்று இரவு தம்பியிடம் பேசினாள்..

“சொல் சந்தோஷ்.. என்ன நடந்தது..?”

சந்தோஷ் துக்கத்துடன் சொன்னான்.. தம்பியின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டாள் சரஸ்வதி..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link