Chapter 03

0Shares

அந்த நொடியிலிருந்து இந்த நொடி வரை மோகனைக் கண்டு விட்டால் தானாக சுசரிதாவின் இதழ் வளைந்து அவனுக்கு மட்டும் உரித்தான பிரத்யேக கேலிப் புன்னகையை சிந்த ஆரம்பித்து விடும்..

மோகன் அந்த.. உதட்டுச் சுழிப்புக் கேலிச் சிரிப்பை ஒரு மார்க்கமாகப் பார்ப்பான்.. கூர்மையான அந்தப் பார்வையும் சுசரிதாவுக்கு மட்டுமே உரியதான பிரத்யேக மார்க்கப் பார்வையாக இருக்கும்..

அந்தப் பார்வையில் சிவக்கும் அவள் முகத்தையும் சிரிக்கும் அவள் இதழ்களையும் பார்க்கப் பார்க்க.. அவனுக்குத் தெவிட்டியதே இல்லை..

எப்படித்தான் முதல் பார்வையிலேயே மோகன் இப்படித்தான் என்று அவள் அனுமானித்தாளோ.. அவன் பேச வாயைத் திறந்தாலே..

“உங்களை எனக்குத் தெரியாதா..?” என்று சொல்லி விடுவாள்..

அப்படி என்னத்தை தெரிந்து வைத்திருக்கிறாள் என்று இவனின் மனம் குறுகுறுக்கும்..

அவள்தான் வேலைக்குச் சேர்ந்த முதல் தினத் திலேயே உயரதிகாரியிடம் அவன் சொன்ன பொய்யை கண்டு பிடித்து அவன் முன்னால் போட்டு உடைத்தவள் ஆயிற்றே..

“என்னது.. பதினாறு வயது மயிலுன்னா இவன் அவங்களைச் சொன்னான்..?”

அன்பழகன் மோகனைப் பார்த்த கொலைவெறிப் பார்வையில்..

‘அடேய் பாதகா.. இது உனக்கு அடுக்குமாடா..?’ என்ற கொதிப்பு இருந்தது..

“மயில்ன்னு சொல்லலைதான்.. பட்.. அதே மீனிங்கில ஹீரோயின் அப்படின்னு சொன்னார்..” அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்ட சுசரிதாவின் உதடுகளில் நமட்டுச் சிரிப்பு இருந்தது..

‘இவ எப்ப அதைக் கேட்டா..?’

மோகன் தடையைத் தடவியபடி அவளையே குறுகுறுவென பார்த்தான்.. அவள் வெகு சமத்தாக அவன் பார்வையை சந்திக்காமல் பொங்கி வரும் சிரிப்பை ஒரு விரல் கொண்டு அடக்கிக் கொண்டிருந்தாள்..

அவள் விரல் தொட்ட இதழ்களின் வடிவமைப்பல் இவள்தான் எத்தனை அழகாக இருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது..

“கேளுடா அன்பு..”

“என் தலைவிதின்னு நீ சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டுத்தானடா இருக்கேன்..? அதுக்காக இப்படி யெல்லாமாடா நீ நெஞ்சு வலியை வரவைப்ப..? அவங்களுக்கு பதினாறு வயசுன்னு சொல்லியிருக்கயே.. இது அடுக்குமாடா..? உனக்கு மனச்சாட்சியே இல்லையா..? இதைக் கேட்டா பாரதிராஜாவே ஏன் அந்தப் படத்த எடுத்துத் தொலைச்சோம்ன்னு நொந்து போயிர மாட்டாரா..?”

“அடச்சீ.. வாயை மூடு.. விட்டா மேடம் தோளில எல்.கே.ஜி ஸ்கூல் பேகை மாட்டி பேபி ரைம்ஸ் சொல்லிக் கொடுத்திருவ போல இருக்கே.. போனவாரம் அனுப்ப வேண்டிய ஸ்டேட்மெண்ட இப்பத்தான் முடிச்சேன்..”

“அது எப்பவும் நீ செய்யறதுதானடா..? சீக்கிரமா நீ வேலையை முடிச்சிருந்தாத்தான் ஆச்சரியப்படனும்..”

“அந்த ஸ்டேட்மெண்டில மேடத்தோட சைன் வாங்கியாகனும்..”

“அதுக்கு..?”

“மேடம்.. பாக்க நீங்க பதினாறு வயதினிலே பட ஹீரோயின் மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்.. இது தப்பா..?”

“பின்னே.. தப்பில்லையா..?”

“ஏண்டா அந்தப் படம் எப்ப வந்துச்சு..? இப்ப என்ன வருசம் ஓடிக்கிட்டு இருக்கு..? இந்த வருசக் கணக்கை யெல்லாம் நீ கணக்குப் பண்ணிப் பாக்க மாட்டியா..?”

மோகனின் கேள்வியில் சுசரிதா.. வலது கையை உயர்த்தி உள்ளங்கையை விரித்து பாராட்டைத் தெரிவித்தாள்.. அவளின் உதட்டுச் சுழிப்பில் மோகனின் உதடுகள் வளைந்தன.. அவன் அவளையே பார்த்தான்..

“வாரே வாஹ்… பின்னிட்டாரு உங்க பிரண்டு.. ஏன் அன்பு சார்..? இந்த வருச விளக்கத்த மேடம்கிட்ட சார் சொன்னாரா..?”

“அது என்ன தேவைக்கு..? என் ஸ்டேட்மெண்டில அப்புறம் யார் சைன் போடறது..? இன்னைக்குத்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிற இவங்க போடுவாங்களா..?”

“அது முடியாதுதான்..”

“ஏண்டா அன்பு.. அம்மணி ஆபிசுக்குள்ள காலடி வைச்சு ஒருமணி நேரம் கூட முடியல.. அதுக்குள்ள பதினாறு வயசு மயிலில இருந்து.. நம்மளோட பிரண்ட்ஷிப் வரைக்கும் அக்கு வேறு ஆணி வேறாச் சொல்றாங்களே.. அது எப்புடிடா..?”

“ஒரு நொப்புடியுமில்ல.. அன்பு சார்.. காலையில ஜாயினிங் ரிப்போர்ட் கொடுக்க மேடத்தோட ரூமுக்குப் போனேன்.. சார் உள்ளே இருந்தார்.. வாசலில வெயிட் பண்ணினேன்..”

“ஒட்டுக் கேட்டாங்கன்னு சொல்லு..”

“நம்மளுக்குத்தான் ஊருக்கே கேக்கற வெங்கலத் தொண்டையாச்சே.. ஒட்டுக் கேக்கனுமா என்ன..? நான் ரூம் வாசல்ல நிக்காம ஆபிஸ் வாசலிலே நின்னாலும் அது என் காதில விழுந்திருக்கும்..”

“அழகான செவிகள்..”

மோகன் அவளுடைய காதுகளில் இருந்த வளைந்த பூவைப் போன்ற காதணியைப் பார்த்தபடி சொன்னான்.. சுசரிதாவின் விழிகள் அதை கண்டு கொண்ட பாவனையில் பளபளத்தன..

“இந்த செவிகளுக்கென்ன அன்பு சார்..? பொய் சொல்றதைக் கேட்க மாட்டேன்னு சொல்ல முடியாத செவிகள்.. உங்கள் செவிகளைப் போல..”

“இவங்க என்ன வாய்மையே வெல்லும்ன்னு நமக்கு பாடம் சொல்ல வந்திருக்காங்களாடா அன்பு..? காட்டன் புடவையைப் பாத்தா டீச்சர் பாடம் சொல்ல வந்திருக் காப்புலதான் தெரியுது..”

“சொன்னாலும் உங்க பிரண்டு கேட்டுட்டுத்தான வேற வேலையைப் பார்ப்பாரு.. அன்பு சார்.. வாய்மையா..? அது எந்தக் கடையில விக்குதுன்னு கேட்டு வைப்பார்.. பதினாறு வயசு மயிலப் பத்தி சொன்னவராச்சே..”

“பதினாறு வயசு மயிலுக்கொரு விளக்கம் சொல்லிட்டாங்க.. நம்ம நட்பப் பத்தி என்ன சொல்லப் போறாங்க..?”

“சிம்பிள் சைக்காலஜிதான் அன்புசார்.. இந்த மாதிரி பொய்யை கரைச்சுக் குடிக்கிற மகானுபவர்களுக்கு வாயைத் திறக்காத வாயில்லா பூச்சிகள்தான் பிரண்டா வந்து மாட்டும்.. இது விதி..”

சுசரிதாவின் பதிலில் ஆச்சரியமான அன்பழகன்..

“அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கா..?” என்று கேட்டான்..

“ஊம்..?” சுசரிதாவை ஊன்றிப் பார்த்த மோகன்..

“அழகான பெண்களுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் ரொம்ப தூரமாச்சே..” என்று சொன்னான்..

“அப்படி புத்திசாலித்தனம் வந்து உங்ககிட்ட சொல்லிச்சா..?”

சுசரிதா நேரடியாக மோகனை மடக்கியதில் அன்பழகனுக்கு கைதட்ட வேண்டும் போல இருந்தது.. தட்டினான்.. மோகன் முறைத்தான்..

“நீ எனக்கு பிரண்டா.. இல்ல.. இந்த புதுமுகத்துக்கு பிரண்டா..? இப்படி ஜால்ரா தட்டற..?”

“இங்கேயென்ன சினிமா ஷீட்டிங்கா நடக்குது..? உங்க பிரண்ட் என்னை புதுமுகம்ன்னு எப்படிச் சொல்லலாம் அன்பு சார்..?”

“அப்படித்தான் சொல்லுவேன்.. புதுசாவந்தா சீனியர் காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு தங்கள அறிமுகம் பண்ணிக்கனும்.. அதை விட்டுட்டு பதினாறு வயசினிலே மயிலே மயிலேன்னு அலப்பறை பண்ணக்கூடாது..”

மோகன் தலைமுடியை படுஸ்டைலாக கோதி விட்டபடி சொல்லியதில் சுசரிதா அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல மோகனின் பார்வை அவளை கொக்கி போட்டு இழுத்தது.. ஒரு நொடி அவளின் பார்வையில் லேசான சலனம் வந்து போனது.. இவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது..

‘இவ என்ன கரண்ட் கம்பியா..?’ யோசித்தான்..

“நான்..? உங்க காலிலே..? விழுந்து கும்பிடனும்..?”

சுசரிதாவின் குரலில் புயலின் அமைதி உள்ளடங்கியிருக்க.. அதற்கெல்லாம் அயர்வேனா என்று அடம் பிடித்தவனாக..

“யெஸ்…” என்றபடி அவள் காலில் விழுந்து வணங்குவதற்குத் தோதாக காலை நீட்டி சாய்ந்து உட்கார்ந்தான் மோகன்..

சுசரிதா பல்லைக் கடித்தபடி அருகிலிருந்த ஸ்டூலை வேகமாக இழுத்தாள்.. அது குறிபார்த்து மோகனின் காலை பதம் பார்க்க விர்ரென்று விரைந்து அருகில் வந்தது.. மயிரிழையில் காலை இழுத்துக் கொண்ட மோகன் அவளை அடிக்கண்ணால் பார்த்தபடி..

“விவரம்தான்..” என்றபடி கம்யூட்டரை உயிர்ப்பித்தான்..

“அது இல்லைன்னா சென்ட்ரல் கவர்ண்ட்மென்ட் வேலைக்கு வந்திருக்க முடியாது..” சுசரிதா நிமிராமல் பதிலைச் சொன்னாள்..

மோகன் உதட்டைக் குவித்தபடி கம்யூட்டரின் திரையைப் பார்ப்பதைப் போல அவளை கீழ்பார்வையில் ஆராய்ந்தான்… கொடி போன்ற உடலமைப்புடன் இருந்தவளுக்கு புடவை வெகு அழகாக பொருந்தி-யிருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது..

ஆண்டுக் கணக்கில் அங்கே வேலை பார்ப்பதைப் போல அவள் வெகு இயல்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளது அசைவுகளில் தெறித்து விழும் பெண்மையின் நளினங்கள் அவன் மனதில் சாரலாய் பொழிந்து நனைந்தன..

என்றுமில்லாமல் அன்று மட்டும் அலுவலகமே மிக அழகாக இருப்பதைப் போல தோன்றியது அவனுக்கு..

“அன்பு..” சுசரிதாவைப் பார்த்தபடி அவன் அழைத்தான்..

“என்னடா..?” கம்யூட்டரைப் பார்த்தபடி சுள்ளென்று எரிந்து விழுந்தான் அன்பழகன்..

“பெயரென்னவாம்..?”

மோகனின் கேள்வியில் மின்வெட்டைப் போல உயர்ந்து மோகனின் பார்வையைச் சந்தித்து தாழ்ந்தது சுசரிதாவின் பார்வை..

அதைக் கவனிக்காமல் கடந்து போன அக்கவுண்டன்டைக் கவனித்த அன்பழகன்..

“ஏண்டா.. இத்தனை நாளா இந்தாளு பேரைத் தெரியாமலா வேல பார்த்துக்கிழிச்ச..? நம்மளுக்கு படியளக்கிற தெய்வம் இவர்டா.. பேரு மாணிக்கவாசம்..” என்று எரிச்சல் பட்டான்..

அப்படியே கையிலிருந்த ஃபைலை சுழற்றி அன்பழகனின் மீது வீசியெறிய வேண்டுமென்று ஆத்திரம் கொண்டான் மோகன்..

“களுக்” வாய் பொத்தி சிரித்தாள் சுசரிதா..

மோகன் வாய்க்குள் முணுமுணுத்தபடி அவளையே முறைத்து முறைத்து பார்த்தவண்ணம் கம்யூட்டரை நோண்டிக் கொண்டிருக்க.. உச்சிப் பொழுது சாப்பிடப் போகச் சொன்னது..

“சுசரிதா.. சாப்பிட வரலை..?”

லதிகா உரக்க அழைத்தபோது.. மோகனின் விழிகளில் பல்ப் தெரிந்தது..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link