Chapter 05

0Shares

சுசரிதாவின் பார்வையில் மோகனின் புருவங்கள் உயர்ந்தன.. அவள் அவனைப் பற்றித்தான் லதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று அவனுடைய உள்ளுணர்வு சொல்லியது..

“ஷி இஸ் ஸோ நைஸ்.. இல்லையா மோகன்..?”

அவன் பார்வை போன திசையைக் கவனித்த மார்ட்டின் சொன்னான்.. மேகானின் முகம் மாறியது.. மார்ட்டினின் பாராட்டை அவன் விரும்பவில்லை.. அதனால் அதைக் கவனிக்காததைப் போல பேச்சை மாற்றி விட்டான்..

பேச்சு பேச்சாக இருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி அவனிருக்கும் திசைபக்கம் திரும்பி அவன் மீது படிந்து படிந்து மீண்டு கொண்டிருந்த சுசரிதாவின் பார்வைமீதே இருந்தது..

‘என்னயா தேடறா..?’

அவன் மனம் குறுகுறுத்தது.. பேசியபடியே நடந்து அவன் வேறு பக்கம் செல்ல மார்ட்டினும் இயல்பாக அவனை பின் தொடர்ந்தான்.. அங்கேயிருந்து லேசாக திரும்பிப் பார்த்த மோகனின் கண்கள் மின்னின..

லதிகாவிடம் பேசியபடி அவன் நின்றிருந்த திசையில் பார்த்த சுசரிதாவின் பார்வை திகைத்து அவனைத் தேடித் துழாவி நகர்ந்தது.. வேறொரு பக்கம் நின்றிருந்த அவனைக் கண்டதும் தேடியது கிடைத்து விட்ட நிம்மதியுடன் அவன் மீது படிந்து மீண்டது..

‘பார்ரா.. இவ என்னத்தான் தேடியிருக்கா..’

மோகனின் மனதுக்குள் தென்றலடித்தது.. லதிகாவுடன் அவள் அவனைப் பற்றி அப்படியென்ன பேசிக் கொண்டிருப்பாள் என்று அவனால் அனுமானிக்க முடிய வில்லை.. எதுவாக இருந்தாலும் லதிகா அவனைப் பற்றி நல்லவிதமாக சொல்லிக் கொண்டிருக்க மாட்டாள் என்பதை மட்டும் அவனால் அனுமானிக்க முடிந்தது..

‘அவ செர்டிபிகேட் குடுக்கனும்னுதான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்..’

அவன் உதடுகள் அலட்சியத்துடன் வளைந்து மடிந்தன..

லதிகா அவனைப்பற்றி அத்தனை உயர்வாகத்தான் சுசரிதாவிடம் பிட்டுப்பிட்டு வைத்துக் கொண்டிருந்தாள்..

“இந்த ஆபிசில இருக்கிற அத்தனை பிரான்ச்சோட வேலையும் அவனுக்கு அத்துபடி.. ஆனா யார் கேட்டாலும் புரியறதைப் போல சொல்லிக் கொடுக்க மாட்டான்..”

“ஏன்..?”

“திமிர்..! வேறென்ன..? அவன் காலைத் தொட்டுக் கும்பிட்டாத்தான் வேலையை சொல்லிக் கொடுக்க முடியும்பான்..”

‘அதைச்சொல்லு..’

வந்த முதல் நாளிலேயே சீனியரின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டாமா என்று அவன் காலை நீட்டியது ஞாபகத்துக்கு வந்துவிட.. சுசரிதாவின் உதடு சுழித்தது..

“யாரை எப்படி அடிக்கனும்ங்கிறதில அவன் எக்ஸ்பர்ட்..”

“ஓ..”

“நம்ம மேடம்.. யார் போனாலும் எரிஞ்சு விழுவாங்க.. இவன் போனா வாயேதிறக்காம இவன் பேசற பொய்களை ரசிச்சுக்கிட்டே சைன் பண்ணிக் கொடுத்திருவாங்க.. அது எப்படித்தான் இவன் பொய்யன்.. கள்ளன்.. என்று தெரிந்திருந்தும் அவங்களாலே இவன் பேச்சை ரசிக்க முடியுதோ..”

லதிகா விழி விரித்துக் கொண்டிருந்த போதே.. அவர்களை சமீபித்து விட்ட மோகன் ஏதுமறியாதவன் போல..

“லதிகா.. இப்ப நீங்க பாடினிங்களா..?” என்று கேட்டான்..

“இல்லையே..” என்றாள் லதிகா..

“குயில் பாடினதைப் போல இருந்துச்சுன்னு அன்பு அடிக்கடி சொல்லுவான்.. நான் நம்பவே இல்ல.. இப்பத்தான் உங்க குரலைக் கேட்டதும் அவன் சொன்னது முக்காலும் உண்மைன்னு புரியுது.. அப்படியே குயில் பாட்டுப் போல உங்க குரல் இருக்கு லதிகா..”

“ஈஸிட்..?”

லதிகா மகிழ்ந்து போனபோது.. சற்று நேரத்திற்கு முன்னால் மோகன் சொல்லும் பொய்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த புத்திசாலிப்பெண் இவள்தானா என்று சுசரிதாவுக்கு சந்தேகம் வந்து விட்டது..

‘அந்த லதிகா எங்கே போனாள்..?’

சுசரிதா மானசீகமாக தலையில் கை வைக்க.. தொலைந்து போன அந்த லதிகாவைப் பற்றிக் கவலைப் படாமல் தன் குரலழகைப் பற்றிச் சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாள் லதிகா…

“ஆக்சுவலி மோகன்.. எங்கம்மாவுக்கு என்னை பெரிய கர்னாடிக் சிங்கரா ஆக்கனும்னுதான் ஆசை..”

“போச்சுடா.. அந்த ஆசையை நிறைவேத்தாம இங்கே எப்படி வந்து மாட்டினீங்க..? இதெல்லாம் நீங்க இருக்க வேண்டிய இடமா..?”

மோகனின் கேள்வியில் இந்த அலுவலகத்தில் இருப்பதற்கான தகுதி உன்னிடமிருக்கிறதா என்ற அர்த்தம் பொதிந்திருக்க.. சுசரிதா சிரிப்பை அடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள்..

“ம்ப்ச்.. என்ன செய்கிறது மோகன்.. விதின்னு ஒன்னு இருக்கே..” வருத்தப்பட்டாள் லதிகா..

“ஆமாமாம்… இந்த ஆபிஸோட தலைவிதி அப்படித்தான்..” என்று சுசரிதாவின் சிரிப்பை அதிகப் படுத்தினான் மோகன்..

“கர்னாடிக் மியூசிக் கத்துக்கனும்னு நான் படாத பாடு பட்டேன்..”

“கர்னாடிக் மியூசிக் படாத பாடு பட்டுச்சுன்னு சொல்லுங்க..”

“வாட்..?”

“இல்ல.. உங்களை மாதிரி கவிக்குயில்கிட்ட வந்து சேர முடியாம கர்னாடிக் மியூசிக் பாடாப் பட்டிருக்குமில்ல.. அதைச் சொன்னேன்..”

இவன் ஏன்தான் இப்படிப் பேசித் தொலைக்கிறானோ என்று ஆகிவிட்டது சுசரிதாவிற்கு..

அவளே வாய்க்கு வரும் சிரிப்பை தொண்டைக் குழிக்குள் தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறாள்.. அவளுடைய சிரமம் அறியாமல் அவன் மீண்டும் மீண்டும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தால் அவள் பாவம் என்ன பண்ணுவாள்..? அந்த எண்ணம் அவனுக்கு இருக்க வேண்டாமா..?

அவனுக்கு கொஞ்சம் கூட அந்த எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.. வெகு தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு.. கர்நாடக சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்த பாடகியாக ஆக முடியாத சோகக்கதையைப் பற்றி லதிகாவிடம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தான்..

“அம்மா ஒரு மியூசிக் டீச்சர்கிட்ட கர்னாடிக் மியூசிக் கத்துக்கச் சொல்லி சேர்த்து விட்டாங்க..”

“அந்த டீச்சர் ரெண்டே நாளில சொல்லாம கொள்ளாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பாங்களே..?”

மோகனின் கேள்வியில் சிரிப்பை அடக்க முடியாத சுசரிதாவிற்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது.. கண்ணீரை துடைத்தபடி அவள் அவனை முறைத்தாள்.. அவனோ..

“அடடா.. உங்க சோகக் கதையைக் கேட்டு இவங்களே கண் கலங்கிட்டாங்க லதிகா..” என்று லதிகாவிடம் சொல்லி வைத்தான்..

சுசரிதாவைப் பார்த்த லதிகா நெகிழ்ந்து போனாள்.. அவள் கண்களும் கலங்கியதில் மூக்கை உறிஞ்சியபடி..

“என்ன செய்கிறது சுசரிதா.. நினைச்சது ஒன்னு.. நடந்தது வேற ஒன்னு..” என்ற தத்துவத்தை உதிர்த்தாள்..

சுசரிதாவால் வாய்திறந்து லதீகாவிற்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.. வாயைத் திறந்தால் தான் அடக்கி வைத்திருக்கும் சிரிப்பு வெளிப்பட்டு விடுமே…

“நான் சொன்னதுதான நடந்தது..?” மோகன் கேட்டு வைத்தான்..

“நீங்க எப்படிச் சொல்லியிருந்தாலும் சரியாத்தான் சொல்லியிருக்கீங்க மோகன்.. என்னோட மியூசிக் டீச்சர் திடிர்ன்னு கிராமத்தில செட்டிலாகனும்னு முடிவெடுத்து வீட்டைக் காலி பண்ணிட்டு கிராமத்துப் பக்கம் போயிட்டாங்க..”

“அந்தப் பக்கம் உங்களை மாதிரி சிஷ்யை கிடைக்க மாட்டாங்கன்னு நினைச்சிருப்பாங்க..”

“அவங்க என்னத்த நினைச்சாங்களோ என்னோட கர்னாடிக் மியூசிக் கனவு ரெண்டே நாளில் கலைஞ்சு போச்சு..”

“அப்ப.. நிஜமாவே நீங்க ரெண்டே நாளில உங்க டீச்சரை ஊரை விட்டு ஓட்டி விட்டுட்டிங்களா..?” என்று கேட்டான் மோகன்..

“விளையாடாதீங்க மோகன்..” என்றாள் லதிகா..

இப்போதுதான் இவளுக்கு இது தெரிந்ததா என்று தலைவேதனை கொண்டாள் சுசரிதா.. 

“நான் விளையாடறது இருக்கட்டும் லதிகா.. எப்படியோ நீங்க கர்னாடிக் மியூசிக்கோட விளையாடாம அதை பிழைக்க வைச்சிட்டிங்க..” என்று சிரிக்காமல் சொன்னான் மோகன்..

“டோன்ட் பி ஸில்லி..”

“அதுசரி.. இனிமே நான் எதைப் பேசினாலும் அது உங்களுக்கு ஸில்லியாத்தான் தெரியும்.. நான் எஸ்கேப் ஆயிடறேன்.. ஆமா லதிகாதான் கர்னாடிக் சிங்கர் ஆக முடியாத வேதனையோட இங்க உக்காந்திருக்காங்க.. உங்களுக்கு என்ன வந்தது..? உங்கசீட் வேலையை முடிக்கனும்கிற எண்ணமே இல்லையா சுசரிதா..?”

கேள்வி கேட்டவன் நிற்காமல் போய்விட..

“இவன் இப்படித்தான்..” என்றாள் லதிகா..

‘இப்போச் சொல்லு..’ சுசரிதா பேசாமல் புன்னகைத்தாள்..

“நல்லாத்தான் பேசிக்கிட்டு இருப்பான்.. திடிர்ன்னு நம்மள வார ஆரம்பிச்சுருவான்.. எப்ப எதைச் செய்வான்னு யாராலேயும் கண்டு பிடிக்க முடியாது..”

‘அடிப் போடி.. அவன் ஆரம்பத்தில இருந்தே உன்னை வாரிக்கிட்டுத்தான் இருந்தான்.. நீதான் அது புரியாம அவன் விரிச்ச வலையில மாட்டிக்கிட்டு இருந்த..’

“எது எப்படியோ.. இவனும் சில சமயம் உண்மை பேசுவான்.. இப்ப என்னை குயில்ன்னு சொன்னானில்ல.. அதைப் போல..”

இருந்தாலும் இவளுக்கு இந்தக் குரலை வைத்துக் கொண்டு இந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருக்கக் கூடாது என்று சுசரிதாவிற்குத் தோன்றியது..

“ஓகே லதிகா.. நான் என் சீட்டுக்குப் போறேன்..”

“என்ன செய்யப் போற..? யார்கிட்ட ஹெல்ப் கேக்கப் போற..?”

“பார்க்கலாம்..”

சுசரிதா மோகனைப் பார்த்தபடி அவள் இடத்திற்குத் திரும்பினாள்..

“தகர டப்பாவில தாரை ஊத்தினதைப் போல குரலை வைச்சுக்கிட்டு இவ குரலை குயில் குரல்ன்னு சொன்னதில மகிழ்ந்து போகிறாடா அன்பு..” என்று அன்பழகனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் மோகன்..

“குயிலுக்கு மட்டும் இது தெரிஞ்சதுன்னு வைய்யி.. இந்த வேப்ப மரத்துக்கு டாட்டா சொல்லிட்டு ஓடியே போயிரும்..” என்றான் அன்பழகன்..

“ஆல்ரெடி.. அவளுக்கு கர்னாடிக் மியூசிக் சொல்லிக் கொடுக்க மாட்டின டீச்சர் அப்படித்தான் ஓடிப் போனாங்களாம்..” என்றபடி சுசரிதாவைப் பார்த்த மோகன்.. அவள் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் புருவங்களை உயர்த்தினான்..

அந்த பொய்காரனின் புருவம் உயர்த்துதலில் வசீகரிக்கப்பட்டாள் சுசரிதா..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link