Chapter 17

0Shares

சோமசுந்தரம் கொடுக்கும் சம்பளம் மாணிக்கத்திற்குத் தேவைதான்.. அதைவிடத் தேவை தான்யலட்சுமியின் சந்தோசம்…

அந்த மழை நாளிற்கு அடுத்த நாள் அவளை அழைத்து வருவதற்காக காலேஜிற்குப் போயிருந்த போதுதான் அந்த விவரமே அவனுக்குத் தெரிய வந்தது.. யாமினிதான் அந்த மர்மத்தை விடுவித்தாள்…

“ஏன் மாணிக்கம்.. இதோ இருக்கிற கிரௌண்டில் தான் இவ மழையில நனைஞ்சிக்கிட்டு நின்னிருக்கா.. நீ அதைப் பார்க்காம கிளப்பிட்டு போயிட்டியாக்கும்..?”

மாணிக்கம் பதறி விட்டான்.. ‘அப்படியென்றால் தான்ய லட்சுமி சொன்ன விவரம்..?’

“சும்மா.. உல்லாங்காட்டிக்கு..” என்றாள் யாமினி..

“ஆனாம்மா.. தான்யாம்மாவுக்குத்தான் மழைன்னா பயமாச்சே..”

“பயம்தான்.. ஆனா.. மேடம் ஒரு அடி எடுத்து வைக்க முடியாம லட்சுமணர் கோடு அவங்களை வழிமறிச்சுருச்சே..”

“இதென்னம்மா கதையாய் இருக்கு..”

“கதைதான்.. இந்தக் கதையை நான் எங்கேயும் கேட்டதில்லை மாணிக்கம்..”

“நானும் இப்போதாம்மா கேட்கிறேன்..”

“இவளை சீனியர் பசங்க ராகிங் பண்ணி.. மழையில் நிற்க வைச்சி இருக்காங்க.. இவளும் அசையாம ஆட்டுக்கல் போல இருந்த இடத்திலேயே நின்னிருக்கா..”

“ஏம்மா.. நீங்களே சென்னையில பிறந்து வளர்ந்தவங்க..”

“இப்போ எதுக்காக இந்த ஆராய்ச்சி மாணிக்கம்..?”

“உங்களுக்கு எப்படிம்மா ஆட்டுக்கல்லைப் பற்றித் தெரியும்..?”

“இப்ப அதான் ரொம்ப முக்கியம்.. உன்னையெல்லாம் இவ காப்பாத்தி இருக்கவே கூடாது.. இரு.. இப்பவே இவளோட அப்பாவுக்கு போனைப் போட்றேன்..”

“ஐயோ.. அம்மா.. நீங்க அம்மிக்கல்லை பத்திப் பேசினா எனக்கென்ன..? இல்லை.. ஆட்டுக்கல்லைப்பத்தி பேசினாத்தான் எனக்கென்ன..? எனக்குத் தேவை என் வேலை மட்டும்தாம்மா.. பிள்ளைக்குட்டிக்காரன் தாயி.. கொஞ்சம் காப்பாத்திவுடுங்கம்மா.. உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்..”

யாமினியின் காலில் விழாத குறையாக மாணிக்கம் கெஞ்சினான்.. போனால் போகிறதென்று யாமினியும் அவனை மன்னித்துப் பேசாமல் விட்டு விட்டாள்..

அன்றிலிருந்து சோமசுந்தரத்திடம் சம்பளத்தை வாங்கினாலும்.. தான்ய லட்சுமியின் விசுவாசியாக மாறிப் போனான் மாணிக்கம்…

அவள் கோகுலக் கண்ணனைக் காதலிப்பதை அவன் அறிவான்.. கண்டும் காணாதவனைப் போல.. அவள் கடற்கரைக்கு காரை விடச் சொன்னால் விட்டுவிடுவான்.. மறந்து அதைப்பற்றி அவள் வீட்டில் மூச்சுக்கூட விடமாட்டான்..

“அந்தத் தம்பி கருப்புத்தான்.. ஆனாலும் குணசாலிம்மே..”

மனைவியிடம் சிலாகித்துப் பேசுவான்..

அதனால்தான்.. மாணிக்கம் கோகுலக்கண்ணனைப் பற்றி விசாரித்தான்.. தான்யலட்சுமி முகம் வாடினாள்.. பதில் பேசவில்லை… என்றுமில்லாத வழக்கமாக சோமசுந்தரம் சீக்கிரமே வீடு திரும்பி அவளுக்காக காத்திருந்தார்..

“ஐயாவோட காரும்மா..” மாணிக்கம் வியந்தான்..

தான்யலட்சுமிக்கு அந்த வியப்பு ஏற்படவில்லை.. அதை அவள் எதிர்பார்த்துத்தான் இருந்தாள்..

“ஹாய்.. டாட்..”

அவரைப் கடந்து மாடியேறப் போனவளை.. கடுமையாகப் பார்த்தபடி.. “தான்யா..” என்று அழைத்தார் சோமசுந்தரம்..

“யெஸ்.. டாட்..” மாடிப்படியில் நின்ற வாக்கிலேயே திரும்பிப் பார்த்தாள் தான்யா…

“உன்னிடம் பேசனும்.. இங்கே வாம்மா..”

அவர் எழுந்து அவருடைய அலுவலக அறையை நோக்கிச் சென்றார்.. மிக முக்கியமான பேச்சுக்களை பேசும் போது மட்டுமே அவளை அவரது அலுவலக அறைக்குள் அவர் அழைத்துச் செல்வார்..

அன்றும் அதுபோல அவர் செய்யவும்.. வீட்டிலிருந்த வேலையாள்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

“அரவிந்தனிடம் ஏன் அப்படிச் சொன்ன..?” அவர் நேரடியாக விசயத்திற்கு வந்தார்..

“அவர் ஏன் அப்படி என்னிடம் சொன்னார் டாட்..?” தான்யா பதிலுக்கு கேட்டாள்..

“ஓ.. அப்படின்னா.. அவருக்கு பதிலுக்குப் பதில் கொடுக்க.. பொய்யாகத்தான் அப்படிச் சொன்னாயா..?” சோமசுந்தரத்தின் குரலில் நிம்மதி நிலவியது.. அது தற்காலிக நிம்மதிதான் என்பதை அவர் எப்படி அறிவார்..?

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link