Chapter 19

0Shares

அதே கடற்கரை.. அலையடித்த கடலலை… சற்றுத் தள்ளி மணலில் காலைக் காட்டியவாறு.. அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தான்யா.. சற்று இடைவெளி விட்டு கோகுலக் கண்ணன் அமர்ந்திருந்தான்..

“சொல்லுங்க..” என்றாள் தான்யா..

“என்னடி.. விளையாடறயா.. பெரிசா பேசனும்னு சொல்லி பீச்சுக்கு இழுத்துக்கிட்டு வந்தது நீ.. இங்கே வந்து என்னைச் சொல்லுங்கன்னு சொல்றயே.. இதைச் சொல்லத்தான் இங்கே கூப்பிட்டுக்கிட்டு வந்தயா..?”

உக்கிரமாகக் கேட்டவனையே ஆழ்ந்து பார்த்தாள் தான்யா.. அவள் பார்வையில் பேச முடியாதவனாக முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன்..

“நான் என்ன தப்புச் செய்தேன்னு இத்தனை நாளாய் பேசாமல் என்னைச் சாகடிச்சீங்க..?”

“நீ ஒரே கேள்வியில என்னை சாகடிச்சியே.. அதை விடவா.. நான் பெரிசா செஞ்சிட்டேன்..?”

“அப்படி என்னங்க.. கேட்கக் கூடாத கேள்வியை நான் கேட்டுட்டேன்..? அப்படியே கேட்டிருந்தாலும் என்னை நீங்க மன்னிக்கக்கூடாதா..?”

“மன்னிக்கிற மாதிரியாடி நீ பேசின..? அப்படி என்ன நான் செய்யக்கூடாத தப்பை செஞ்சிட்டேன்..”

அவனது கேள்வியில் அவள் முகம் சிவந்து தலை குனிந்தாள்.. கண்ணனின் மனதில் சாரல் அடித்தது.. அவனது மனவெம்மை கொஞ்சம் தனிந்தது..

“உன்னைக் காதலிக்கிறேன் தான்யா.. நான் பெண்ணைத் தொடனும்னு நினைச்சா.. உன்னைத்தானே தொட முடியும்..? உனக்கேண்டி அது புரியலை..?”

தான்யாவுக்குப் புரிந்தது.. அது புரிந்ததால் அவள் கிளர்ந்தாள்.. அவனை நெருங்கி அமர்ந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள்..

“விடுடி..” அவன் உறுமினாலும்.. கையை உறுவிக் கொள்ளவில்லை.. அவள் மெதுவாக.. அவன் கையில் இதழ் பதித்தாள்.. அவளது மென்மையான இதழின் ஸ்பரிசத்தில் அந்த முரடன் சிலிர்த்துப் போனான்.. இருள் பரவிக் கொண்டிருந்த அந்த வேளையில் தான்யாவின் கரம் உயர்ந்தது.. அவன் தலைமுடியைப் பற்றி இழுத்தது.. அவள் முகம் நோக்கி சரிந்த அவன் முகத்தோடு முகம் வைத்த தான்யா.. அவன் இதழ்களில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தாள்..

ஹோ.. வென்ற சப்தத்துடன் பேரலை ஒன்று.. கரை தொட்டுத் திரும்பிய போது.. கோகுலக் கண்ணனின் கைகள் அவளை வளைத்து இழுத்திருந்தன.. முன்னேறின அவன் கரங்களை இப்போது தான்யா மறுக்கவில்லை.. தடுக்கவில்லை..

“தான்யா..” வெப்பமான அவன் மூச்சுக் காற்று.. அவள் கன்னத்தைச் சுட்டது..

“ம்ம்ம்..” மோகனமாய் அவள் முணுமுணுத்தாள்..

“விலக நினைச்சயேடி..” குற்றம் சாட்டினான்..

“நீங்க.. விலக விட்டுவிடுவீங்களா..?” அவள் மெல்லச் சிரித்தாள்..

சூரியனைக் கண்ட பனியினைப் போல.. அவள் தந்த நெருக்கத்தில் அவர்களுக்கு இடையே இருந்த பனித்திரை கிழிக்கப்பட்டு.. இருவரும் ஒன்றாகி விட்டார்கள்..

“மாலையில் சந்தித்தேன்..

மையலில் சிந்தித்தேன்..

மங்கை நான் கன்னித்தேன்..

காதலன் தீண்டும் போது

கைகளை மன்னித்தேன்..”

மெல்லிய குரலில் அவள் பாடிய விதம் அவனுக்கு பிடித்தமானதாக இருந்தது.. அவள் பேசிய வார்த்தைகளால் அவன் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் மறைந்தது.. அவன் உல்லாசமாக.. பழைய கண்ணனாக சிரித்தான்..

“எப்படிடீ.. பழைய பாட்டா தேடிப்பிடிக்கிற..?”

“எல்லாம் எங்க வீட்டுத் தோட்டக்காரனின் தயவுதான்..”

“புரியலையே..”

“அவனுக்கு பாட்டுன்னா இஷ்டம்.. பழைய பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்.. தினமும் அவன் பாட்டுக் கேட்பான்.. பால் கனியிலிருந்து நான் அதைக் கேட்பேன்..”

“கெட்டிக்காரிதான்..”

“என்னைப் புகழ்கிறது இருக்கட்டும்.. இந்தக் கெட்டிக்காரர் எதுக்காக மாடல் எக்ஸாமில் கோட்டை விட்டாராம்..?”

அவன் கைவிரல்களை நீவியபடி.. அவள் கேட்க.. அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான் கண்ணன்.. புருவங்களை உயர்த்தி ஏனென்று கேட்டாள் தான்யா.. அவன் லேசாக தலையை அசைத்தான்..

“இதுக்காகத்தானே என்னை தேடி வந்தே..?”

அவன் கேட்ட கேள்வியில் அவள் கவலைப் பட்டுப் போனாள்.. அவன் முகத்தை அதே கவலையுடன் பார்த்தாள்..

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link