Chapter 24

0Shares

வீட்டுக்குப் போகாமல் அரவிந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரைத் திருப்பவும் தான்யா முகம் சுளித்தாள்..

“வாட் இஸ் திஸ்..?”

“உன்னோடு பேசனும்..”

“எதைப்பத்தி..?”

“என் காதலைப் பத்தி..”

“அதுக்கான பதிலை அன்றைக்கே சொல்லி விட்டேனே.. நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன்..”

“ஐ டோன்ட் கேர்.. நீ ஒன்னும் அவனை மேரேஜ் பண்ணிக்கலைல்ல.. உன் மேரேஜ் என்னோடுதான்..”

“கனவு காண வேண்டாம் அரவிந்தன்.. என் வாழ்க்கை என் கண்ணனோடுதான்..”

“கண்ணன்..? ஹூ இஸ் தட் கண்ணன்..?” அரவிந்தனின் புருவங்கள் உயர்ந்தன..

“ஹி இஸ் மை லைஃப்..”

“ஓ.. அவன்தான் நீ சொன்ன லவ்வரா..?”

“யெஸ்..”

“லுக் அட் மீ தான்யா.. நமக்குள்ளே ஸ்டேட்டஸ் ஈக்குவலா இருக்கு.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..”

“எனக்கு உங்களைப் பிடிக்கலையே..”

“பட்.. உன் அப்பாவுக்கு என்னைப் பிடிச்சிருக்கே..”

“அப்படின்னா.. நீங்க ஏன்.. டாடியை மேரேஜ் பண்ணிக்கக் கூடாது..?”

அரவிந்தன் பல்லைக் கடித்தான்.. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் மகாபலிபுரத்தில் இறங்க தான்யா மறுத்துவிட்டாள்..

“இங்கே வரனும்னு நான் சொல்லலை மிஸ்டர் அரவிந்தன்.. நீங்களாதான் வந்தீங்க.. உங்களுக்கு இங்கே சுற்றிப் பார்க்கணும்னு தோணினா.. தாராளமாய் போய் சுற்றிப் பார்த்துட்டு வாங்க.. நான் காரிலேயே வெயிட் பண்றேன்..”

எதிலும் தோற்காத அரவிந்தன் அன்று தோல்வியைக் கண்டதில் அதிகமான கோபம் கொண்டான்.. அது சோம சுந்தரத்தின் மீது பாய்ந்தது.. அப்போதும் அவர் மகளைக் கூப்பிட்டு ஏனென்று கேட்கவில்லை..

“விட்டுப் பிடிப்போம் அகிலா..”

“விட்டால் பிடிக்க முடியாதுன்னு தோணுதுங்க..”

“விடுகிறதே.. பிடிப்பதற்காகத்தான்.. புரிஞ்சிக்க..”

சோமசுந்தரத்தின் நிதானம்.. தான்யாவுக்கும் ஆச்சர்யத்தை தான் கொடுத்தது.. புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்று அவளது அறிவு அவளை எச்சரித்தது.. அவரது போர் தந்திரத்தை அவளறிவாள்.. ஆனால் இப்போது என்ன வியூகம் வகுத்துக் கொண்டிருக் கிறார் என்று தெரியாமல் தான் அவள் குழம்பித் தவித்தாள்.

“தான்யா.. உன் வாய்ஸே சரியில்லை.. வாட்ஸ் தி ராங் வித்யூ..?” கண்ணக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைத்து எடுத்துவிட்டான்..

“நத்திங்..” கலங்கிய நீர்த்துளிகளை பக்கத்திலிருந்து பார்க்க அவன் அருகாமையில் இல்லை என்ற தைரியத்தில் அவள் உகுத்தாள்..

‘ஏதோ.. நடக்கப் போகுது..’

அவளது இதயம் பக்.. பக்கென்று அடித்துக கொண்டது.. இது எதற்கான அறிகுறி என்று அவள் கலங்கிப் போனாள்..

கூடிய விரைவில் அவளது கலக்கத்துக்கான காரணம் புரிந்தது..

“அண்ணி..” சுவாதி பதறியபடி ஓடி வந்தாள்.

“தான்யா.. சுவாதி எதுக்காக இத்தனை பதட்டமா ஓடி வர்றா..?”

யாமினி சுவாதி ஓடி வருவதைப் பார்த்துவிட்டு கேட்டாள்..

“எனக்கும் புரியலையே.. அவ வரட்டும்.. கேட்போம்..”

சுவாதியைக் கேட்ட போதுதான் சோமசுந்தரத்தின் நிதானம் எதற்கானது என்று தான்யாவுக்கு புரிந்தது..

‘பதுங்கியிருந்த புலி பாய்ந்துவிட்டது..’

கண்ணனின் அப்பா சாமிநாதன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.. அவரது அலுவலகம் அவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்திருந்தது.. சோமசுந்தரம் செயல்பட்டுவிட்டார்..

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link