Chapter 28
“இவ்வளவு நடந்திருக்கு.. என்னிடம் எதையும் சொல்லாம மறைச்சிருக்கீங்க..” கண்ணன் கண் சிவந்தான்..
“சொல்லக் கூடாதுன்னு இல்லைப்பா.. தான்யாதான் வேணாம்ன்னு சொல்லிட்டா..” சாமிநாதன் இதமாகப் பேசினார்..
“இவ பெரிய மனுஷி.. இவ சொன்னான்னு எல்லோரும் கேட்டுக்கிட்டிருக்கீங்களா..” அவன் இறைந்தான்..
“கோபப்படாதே கண்ணா..”
“இல்லம்மா.. இவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது.. மழை சோன்னு வேகமா பெய்தாக்கூட இவ பயப்படுவா.. அப்படியிருக்கப்ப.. இவ சொல்றான்னு நீங்க தனியா நின்று சமாளிச்சிருக்கனுமா.. எனக்கொரு வார்த்தை சொல்லியிருந்தா அடுத்த பிளைட்டை பிடிச்சி பறந்து வந்திருக்க மாட்டேனா..?”
“போனதை விடு கண்ணா.. இனி ஆக வேண்டியதைப் பார்க்கணும்.. தான்யா நம்ம வீட்டுக்கு வந்துட்டா..”
“இது அவ வீடுதானேப்பா..”
“ஆமாம்டா.. ஆனாலும் ஊர் உலகம்ன்னு ஒன்னு இருக்கு முறைன்னு ஒன்னு இருக்கில்ல..”
“அதுக்காக என்ன செய்யனும்ங்கறீங்க..”
“மடையா அவளை கல்யாணம் செய்துக்கன்னு சொல்றேன்.. அவளும் படிப்பை முடிச்சிட்டா.. கேம்பஸ் இன்டர்வியூவில செலக்ட் ஆயிருக்கா.. வேலையில் ஜாயின் பண்ணப் போறா..”
“அதான் ஹீரோ என்ட்ரி ஆகாமலே.. ஹீரோயினே எல்லாத்தையும் முடிச்சிட்டாளே.. அதைப்போல.. தாலியையும் தானாக் கட்டிக்கச் சொல்ல வேண்டியதுதானே..”
கண்ணன் விளையாட்டாகச் சொல்ல.. தான்யா அவனை வெட்டும் பார்வையைப் பார்த்தாள்.. தனிமை கிடைத்த போது அவளை தன் கை வளைக்குள் நிறுத்திக் கொண்டான் கண்ணன்…
“ஏண்டி.. என்னிடம் சொல்லலை..” என்று கேட்டான்.
அவனது கோபம் புரிந்தவளாக.. அவனது சட்டை பொத்தானை திருகியபடி பதில் சொன்னாள் தான்யா…
“சொன்னால் நீங்க சும்மாயிருப்பீங்களா.. விருமாண்டியைப் போல.. என் அப்பாவை வெட்டுகிறேன் பேர்வழின்னு கிளம்பி விட மாட்டீங்களா..”
“அப்பா பாசமா..?”
அவன் ஒரு மாதிரியான குரலில் வினவிய போது.. அவள் அதை மறுக்கவில்லை…
“அவர் வில்லனில்லை கண்ணன்.. எல்லா அப்பாவையும் போல.. அவர் மனது பிரகாரம் எனக்கு மேரேஜ் பண்ணி வைக்கனும்னு நினைத்தார்.. அதுக்காக என்னைப் பணிய வைக்க அவர் கையாண்ட முறைதான் தவறாப் போயிருச்சி..”
கண்ணன் பதில் சொல்லவில்லை… அவன் மனம் பிணங்கியிருப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அதை சரி செய்யும் வித்தைத்தான் அவளுக்குத் தெரியுமே…
அவனது பின்னங் கழுத்தில் கை கொடுத்து.. அவன் முகத்தை தன் முகத்தை நோக்கி வளைத்தாள்.. அவன் கண்கள் மின்ன ஆவலுடன் அவள் முகம் நோக்கி குனிந்தான்..
அந்த நீண்ட முத்தம் வெகு நேரத்திற்கு நீண்டது.. விலக மனமில்லாமல் விலகிய போது தான்யா.. மெதுவான குரலில் சொன்னாள்…
“ஆயிரதம்தான் இருந்தாலும்.. என் அப்பா.. உங்களோட மாமனார்.. நினைவு இருக்கில்ல…”
அவன் சிரிக்காவிட்டாலும்.. அதிகமான கோபத்தைக் காட்டவில்லை…
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.