Chapter 12

0Shares

“சாவியைக் கொடு..” கபிலன் கை நீட்டினான்..

“கொடுக்க மாட்டேன்..” அவள் சாவியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்..

“ஏய்ய்.. கொடுடின்னா..” கபிலன் சாவியைப் பறிக்க முயல, ஆர்த்தி அவனிடமிருந்து விலகி உள்ளே ஓடினாள்..

“வேண்டாம் ஆர்த்தி.. விளையாடாதே.. சொன்னால் கேளு சாவியைக் கொடுத்து விடு..”

“மாட்டேன்..”

ஆர்த்தி பின்வாங்கிக்கொண்டே செல்ல… கபிலன் அவளிடம் சாவியைக் கேட்டபடி முன்னேறினான். ஒரு கட்டத்தில் அவன் அவளைப் பிடித்துவிட, ஆர்த்தி கால் தடுக்கி கட்டிலின் மேல் விழுந்தாள்.. அவள்மேல் கபிலனும் சேர்ந்து விழுந்தான்..

அதை உணராதவர்களாய்.. இருவரும் சாவியைக் கைப்பற்றிக் கொள்வதிலேயே தீவிரமாய் போராடினார்கள்..

முதலில் அதை உணர்ந்தது கபிலன்தான்.. தலை முடி கலைந்திருக்க நெற்றியில் பொடிப்பொடியாய் துளிர்த்த வியர்வைத் துளிகளுடன் சேலை கசங்குவதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் அவன் கைகளுக்குள் சிக்கியிருந்தவளைப் பார்த்தான்..

மிகவும் அருகாமையில் தெரிந்த அவளின் முகம் அவனை அழைத்தது.. அவளது மூச்சுக்காற்றை அவனது மீசை உணர்ந்தது.. அவளது கன்னத்தில் அவனது இதழ்கள் உரசுவதைப் பற்றிய உணர்வில்லாமல் இருந்தவளின் அறியாமை அவனை ஈர்த்தது.. ஈரம் பளபளத்த அவளின் உதடுகளும் குடைபோல் கவிழ்ந்த அவளின் இமைகளுக்கு அடியிலிருந்த கண்களும் அவனை வசீகரிக்க கபிலன் சாவியை மறந்து அவளது அதரங்களைத் தேடிக் குனிந்து அவளது இதழோடு இதழ் பொருத்தினான்..

ஆர்த்தி அசைவற்று உறைந்து விட்டாள்.. ‘ஹோ’ வென்று எழுந்து வந்த பேரலை ஒன்றில் அடித்துச் செல்லப்படுவதைப் போல உணர்ந்தாள்.. அவளது உடல் மேல் கவிழ்ந்திருந்த கபிலனைப் பற்றிய உணர்வு அப்போதுhன் அவளுக்கு வந்தது.. அவள் முகத்தோடு அவன் முகம் இழைய.. ஆர்த்தியின் உடல் நடுங்கியது..

‘விட்டு விடுங்க..’ என்று சொல்ல நினைத்தாள்.. வழக்கம் போல் காற்றுத்தான் வந்தது.. வார்த்தை வரவில்லை..

கபிலன் அவளைத் தழுவிக்கொண்டான்.. அவளது அதரங்களை விடுவிக்க மனமில்லாமல் பின்னிப் பிணைந்தான்.. அவளுடைய தோள் தொட்ட கைகள் அவளுடைய உடல் மீது பரவிய போது ஆர்த்தி தன் வசம் இழந்திருந்தாள்..

என்ன நடக்கிறது என்பதை அவர்கள் இருவரும் கணிக்கும் முன்னாலேயே எல்லாம் நடந்து முடிந்திருந்தது.. அவளது முகம் தொட்டுத் திருப்பியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகி எழுந்தான்..

ஆர்த்தி கட்டிலில் எழுந்து அமர்ந்து அவளுடைய முழங்கால்களில் முகம் புதைத்துக் கொண்டாள்..

“ஆர்த்தி..” அவள் முடிகோதி கபிலன் அழைத்தான்..

“என்னை நிமிர்ந்து பார்..”

அவள் நிமிரவில்லை..

“த்சு.. சொன்னால் கேட்கணும்..”

கபிலன் பிடிவாதமாக அவளது முகத்தை நிமிர்த்தினான்.. அவள் முகம் கண்ணீரால் நனைந்திருந்தது.. தன் கர்ச்சீப்பை எடுத்து அவள் முகத்தைத் துடைத்து விட்டான்..

“காபி குடி..” என்று சூடான காபிக் கோப்பையை அவள் கையில் திணித்தான்..

அவள் வாங்கிக் கொள்ளாமல் தேம்பிக் கொண்டிருந்தாள்.. அவன் பிடிவாதமாய் அவளுக்கு காபியை புகட்ட முனைய, தடுத்து காபியை வாங்கிக் கொண்டாள்.. கலைந்திருந்த அவளது முடியைக் கோதி சீராக்கியவன்.. அவளது கண்ணீர் துடைத்தான்..

“அழாதே..”

“……”

“இது வேண்டுமென்று நடந்ததல்ல, உனக்கே தெரியும்..”

“……”

“கோபம் வந்தால் என்னைத்திட்டி விடு.. இப்படி அழாதே.. உனக்கு என்னவோ கொடுமை பண்ணிவிட்டது போல என் மனசுக்குக் கஷ்டமாக இருக்காதா..?”

ஆர்த்தி அவசரமாய் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.. அந்த நிலைமையிலும் அவன் மனம் கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்று அவள் நினைப்பதை உணர்ந்து கொண்ட கபிலன் அவள் கையைப் பற்றி அதில் முத்தமிட்டான்..

இப்போது ஆர்த்தி கையை உருவிக் கொள்ள வில்லை.. காலிக் கோப்பையை வாங்கி, அருகிலிருந்த ஸ்டூலின் மேல் வைத்தவன் கட்டிலில் அவளருகே அமர்ந்து அவள் கையைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு பேசினான்..

“நீயே யோசித்துப் பாரு ஆர்த்தி.. நான் உன்னைக் காதலித்தேன்.. அதை உன்னிடம் சொல்லவும் செய்தேன்.. உன்னைத் தொட்டு விடவும் துடித்தேன்.. நீதான் விலகிப் போனாய்.. என் முகத்தைப் பார்த்துச் சொல்லு.. என் மேல் உனக்குக் காதல் இல்லையா..? இவ்வளவு பெரிய நிகழ்வு நம்மிருவருக்குள்ளும் நடந்து முடிந்திருக்கிறது.. நீ மௌனமாய் கண்ணீர் விடுகிறாயே ஒழிய என்மேல் துளிக்கூட கோபப்படவில்லை.. அந்தக் கண்ணீரும் என்னைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக முகத்தைத் துடைத்துக் கொள்கிறாய்.. இதிலிருந்தே உன் மனது எனக்குத் தெரிகிறதே..”

ஆர்த்தி உதட்டைக் கடித்துக் கொண்டு, அவன் முகம் பார்த்தாள்.. விழியில் நீர் நிரம்பியிருக்க.. இமை கொட்டி அது வழிந்து விடாமல் தடுத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த போது அவனுக்குள் குற்ற உணர்வு பொங்கியது..

“ஸாரி..” என்றான்..

“இதில் உங்கள் மேல் மட்டும் தப்பு சொல்ல முடியாதே..” ஆர்த்தி மெல்லிய குரலில் சொன்னாள்..

“உனக்கு என் மேலிருந்த பிரியத்தை நான் பயன்படுத்திக் கொண்டுவிட்டேன் ஆர்த்தி..”

“த்சு.. நான் அப்படி நினைக்கவில்லை..”

கபிலனின் கை அவள் தோள்மேல் படிய… அவள் அவன் மடியில் சரிந்து முகம் புதைத்துக் கொண்டாள்.. அவளது தலை கோதியவாறு அமைதியாய் அமர்ந்திருந்தான் கபிலன்..

எவ்வளவு நேரம் அவர்கள் அப்படி அமர்ந்திருந் தார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.. ஆர்த்தி திடீரென்று எழுந்து அமர்ந்தாள்.. முகம் துடைத்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கினாள்.. மறக்காமல் வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டாள்..

அதைப்பார்த்த கபிலனின் இதழ்களில் வருத்தப் புன்னகை வந்தது..

“இதைக் காப்பாற்றப் போய்தானே என்னிடம் தோற்று விட்டாய்..?” என்று கேட்டான்..

“உங்களிடம் தோற்றாலும் உங்களை ஜெயித்து விட்டேனே.. அதுவே எனக்குப் போதும்..” ஆர்த்தி அமைதியாகக் கூறினாள்..

கபிலன் எழுந்து அவளருகே வந்தான்.. அவள் முகத்தை நிமிர்த்தி கூர்ந்து பார்த்தான்..

“வருத்தப்படுகிறாயா ஆர்த்தி..?” என்று வினவினான்..

“தெரியவில்லை.. வருத்தம் வராமல் இருக்குமா..? ஆனால் ஏதோ ஒருவகையில் என் போராட்டமும் முடிந்து விட்டதைப் போல் உணர்கிறேன்..” ஆர்த்தி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

“போராட்டமா..?”

“ஆமாம்.. போராட்டம்தான்.. எனக்குள் நானே போராடிக் கொண்டிருந்த போராட்டம்.. உங்களுக்குத் தெரியாது.. நான் உங்கள் மேல் உயிரையே வைத்திருக் கிறேன்.. நீங்கள் முகம் திருப்பிக் கொண்டால் என் உயிர் தவிக்கும் தவிப்பைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.. நீங்கள் சிரித்து ஒரு வார்த்தை என்னிடம் பேசிவிட்டால் அன்றைக்கு முழுவதும் உற்சாகமாய் இருப்பேன்.. எனக்கு சக்தி கொடுப்பது நீங்கள்தான்..”

“இவ்வளவு பிரியம் வைத்திருப்பவள், என்னிடம் சொல்லியிருக்க வேண்டியதுதானே..”

“எப்படிச் சொல்லுவேன்..? என் அப்பா என்மேல் வைத்திருக்கும் பாசத்தையும் நம்பிக்கையையும் பற்றி நீங்கள் அறிய மாட்டீங்க.. என் அம்மா, பெண்களை எப்படி பொத்திப் பொத்தி வளர்த்தாங்கன்னும் உங்களுக்குத் தெரியாது.. அவங்களிடம் காதல்ன்னு சொல்லி, எப்படி முன்னால் நிற்பேன்..?”

“சரி.. அதற்காக உன் மனதில் காதலை வைத்துக் கொண்டு வேறு ஒருத்தனை எப்படிக் கல்யாணம் செய்து கொள்வாய்..?”

“இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது.. எனக்கு என் குடும்பத்தை மீறிக் காதல் செய்ய தைரியம் வரவில்லை..”

“இப்போது என்னுடன் குடும்பமே நடத்தி முடித்து விட்டாயே.. இனி என்ன செய்வாய்..?”

கபிலன் குறும்பாக கண்சிமிட்ட.. ஆர்த்தியின் முகத்தில் இருந்த கலக்கம் மறைந்தது.. அவள் அவன் தலையை செல்லக் கோபத்துடன் கலைத்தாள்..

“பசிக்கலையா..?” என்று வினவினாள்..

“பசி மறந்தே போச்சு..” அவன் அவளுடைய கன்னத்தில் தன் மூக்கைத் தேய்த்தபடி கூறினான்..

“சும்மா ஒரு நிமிசம் இருக்க மாட்டீங்களா..?” அவன் மூக்கைப் பிடித்துத் திருகிய ஆர்த்தி, புடவைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டாள்..

“என்ன செய்யப் போகிற..? அடிக்கப் போகிறாயா..?” கபிலன் பயந்தது போல் நடித்தான்..

“ஊஹூம்.. தோசை ஊற்றப் போகிறேன்..” என்றபடி வெளியே நடந்த ஆர்த்தி, அவசரமாய் திரும்பி வந்தாள்..

“இங்கேதானே இருந்தது..” என்றபடி கவலையாய் தேட ஆரம்பித்தாள்..

“எதைத் தேடுகிறாய் ஆர்த்தி..?”

“ஒன்றுமில்லை..”

“என்னிடம் சொன்னால் நானும்கூடச் சேர்ந்து தேடமாட்டேனா..?”

“அதுதான் ஒன்றுமில்லைன்னு சொல்லி விட்டேனே..”

“ஒன்றுமில்லாததைப் போய், விழுந்து விழுந்து தேடுவானேன்..”

“விழுந்தால் தூக்கி விடத்தான் நீங்க இருக்கீங்களே..”

“அட.. என் பத்தினிக்கு என் மேலிருக்கும் நம்பிக்கையைப் பாருடா..”

“அதெல்லாம் நிறைய இருக்கு.. நகருங்க.. நான் தேடணும்..”

ஆர்த்தி அவனை நகர்த்திவிட்டு இங்கும் அங்கும் தேடிக் கொண்டிருக்கையில் அவள் முகத்தின் முன் சாவியை நீட்டிக் கேட்டான் கபிலன்..

“இதையா தேடுகிறாய்ன்னு பார்த்துச் சொல்..”

நிமிர்ந்து பார்த்த ஆர்த்தி சிலையாகி விட்டாள்..

‘கடவுளே..! இத்தனைப் பாடுபட்டும் கடைசியில் சாவியை இவன் கைப்பற்றி விட்டானே.. காலேஜுக்கு போய் விடுவானோ..?’ பயத்தில் அவள் விழிகள் விரிந்தன..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link