Chapter 19

0Shares

“ஒன்னை நீ மனசில வைச்சுக்கறது நல்லது..” சந்தியா ஆத்திரத்துடன் பேசினாள்..

“எதை..?”

அவள் மரியாதையை குறைத்து விட்டதைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் கேட்டான்…

“என் குடும்பத்துக்காகத்தான் இங்கே வந்து உட்கார்ந்து.. உன்னை சகித்துக்கிட்டு.. நீ வாங்கிக் கொடுத்ததை கொட்டிக்கிட்டு இருக்கேன்.. அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு.. உன்னை சும்மா விட மாட்டேன்..”

“என்ன செய்வ..?”

“எதையும் செய்வேன்.. துப்பாக்கியை எடுத்துச் சுடுவேன்.. கத்தியால் குத்துவேன்.. உன் கழுத்தை நெரித்துக் கொல்லுவேன்..”

“ஆக.. இத்தனை ஆசைகளையும் உன் மனதில் வைத்திருக்கிறன்னு சொல்லு.. ரகுநந்தா.. நீ கொடுத்து வைத்தவன்.. உனக்கு எப்படிப்பட்ட காதலி கிடைச் சிருக்கா.. வாழ்க வளமுடன்…”

“நான் உன் காதலியில்லை…”

“அதை நீ சொல்லக்கூடாது..”

“என் குடும்பத்தை என்ன செய்யப் போற..?”

“ஆல்ரெடி.. நான் காய் நகர்த்த ஆரம்பிச்சுட்டேன்.. அவங்களும் ஓட ஆரம்பிச்சுட்டாங்க.. இனிப் போட்டுத் தாக்க வேண்டியதுதான்..” அவன் புதிர் போட்டான்…

‘இவன் என்ன சதுரங்கமா விளையாடறான்..? காய் நகர்த்தறதைப் பற்றிப் பேசறான்..’ சந்தியா தலையைப் பிடித்துக் கொண்டாள்…

“புரியலை.. கொஞ்சம் விளங்கச் சொல்லித் தொலைக்கிறயா..?”

“என்ன ஒரு மரியாதை..!”

“உனக்கு இது போதும்..”

“ஓகே.. லீவ் இட்.. இப்ப உன் அக்காவிடமிருந்து வருவோம்…”

“அவளை எதுக்கு இழுக்கற..?”

“தப்பாப் பேசக் கூடாது.. நான் இழுக்கனும்னு நினைச்சா உன் கையைப் பிடித்து மட்டும் தான் இழுப்பேன்.. உன் அக்கா எனக்கு அண்ணி.. அதை நினைவில் வைத்துக்கிட்டுப் பேசு…”

“ராமா..” நெற்றியில் உள்ளங்கையால் அடித்துக் கொண்டாள் சந்தியா..

“என்னாச்சு..?”

“முடியல.. உன் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லையா..?”

“இருக்கு சந்தியா.. அது உன் கையில்தான் இருக்கு..”

“வேணாம்… நான் ஏற்கனெவே கொலைவெறியில் இருக்கிறேன்… ரொம்பவும் ஆட்டம் காண்பிக்காதே… என் அக்காவின் பேச்சை எதுக்காக இழுக்கிற..?” கவனமாக வார்த்தைகளை சந்தியா கோர்த்துப் பேச…

“இது பேச்சு..” என்று மெச்சினான் ரகுநந்தன்..

“இப்படிக் கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேனா..? அதை விட்டுட்டு நீ தப்புத்தப்பா கேள்வி கேட்கலாமா..?”

“நீ பெரிய நியாயவாதிதான்.. விசயத்தைச் சொல்லித்தொலை..” எரிச்சல் பட்டாள் சந்தியா..

“ஒன்றுமில்லை சந்தியா.. உன் அக்காவுக்கு கவர்ண்ட்மென்ட் ஜாப் கிடைக்கிறதைப் போல இருக்கு.. அதனால அவங்க இப்பப் பார்க்கிற வேலையை ரிசைன் பண்ண முன் கூட்டியே நோட்டிஸ் கொடுத்துட்டாங்க.. அந்த வேலைக்கு பிரின்ஸிபாலின் சொந்தக்காரப் பெண்ணை ரெடி பண்ணி வைச்சிருக்காங்க..”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்..?” திகிலானாள் சந்தியா..

“தெரியும்.. சப்போஸ்.. உன் அக்காவுக்கு கவர்ண்மென்ட் ஜாப் கிடைக்கலைன்னா..? நோட்டிஸைக் காரணம் காட்டி இப்ப இருக்கிற வேலையில் இருந்து அவங்களைத் துரத்தி விட்டுட்டாங்கன்னா..?”

ரகுநந்தனின் கேள்வியில் கதிகலங்கிப் போனாள் சந்தியா.. சூர்யாவுக்கு மட்டும் வேலையில்லையென்றால்.. அவளுடைய மாமனார்.. மாமியாரின் உண்மை முகம் வெளிப்பட்டு விடும்.. சாய்நாதனின் உதாசீனத்துக்கும் தண்டனைக்கும் அவள் ஆளாகி விடுவாள்..

பறப்பதை நினைத்து.. இருப்பதை கோட்டை விட்டு விட்ட மனைவியை அவன் மன்னிக்கவே மாட்டான்.. அவனைப் பொறுத்தவரை சூர்யா.. அவனுக்கு மாதா மாதம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய ஒரு அடிமை.. அடிமைகள் வேலையில்லாமல் இருக்க முடியாது..

“காட்..!” சந்தியா பதறிவிட்டாள்..

“இதெல்லாம் நடக்காது.. நடக்கக் கூடாது..” நடுக்கத்துடன் அவள் வார்த்தைகள் வெளிப்பட்டன..

“நானும் அதைத்தான் விரும்பறேன்.. இது நடக்கக் கூடாது..” ரொம்பவும் நல்லவன் போல சந்தியாவுடன் சேர்ந்து கவலைப் பட்டான் ரகுநந்தன்..

அவனையே வெறித்துப் பார்த்த சந்தியாவின் கண்கள் கலங்கின..

‘இவன் இரக்கமில்லாதவன்..’

“இதுக்கே அசந்து போனா எப்படி..? இன்னும் கேள்.. உன் அக்கா கதை முடிந்ததா..”

“அவள் கதை முடியாது..” சந்தியா வேகத்துடன் சொன்னாள்…

“நான் இப்பச் சொல்ற கதையைச் சொல்கிறேன்ம்மா.. நீ எதுக்காக எதிர்காலக் கதையைச் சொல்கிற.. உன் அக்காகதைக்கு அப்புறம் யார் கதை வரும்..?”

வெள்ளிக்கிழமையின் மெகாசீரியல்களைப் போல ஒரு சஸ்பென்ஸை அவன் அவள் முன்வைக்க.. அவள் மனம் பக்பக்கென்று அடிக்க ஆரம்பித்தது…

அடுத்ததாக யார் கதை வரப் போகிறது..? அவளது அப்பாவின் கதையா..? இல்லை அண்ணனின் கதையா..? இது இரண்டும் இல்லாமல் ஜானகியின் கதை வரப் போகிறதா..?

அவள் மனதைப் படித்தவனைப் போல அவன் “ஊஹீம்” என்று தலையை அசைத்தான்..

“உன் அம்மாவெல்லாம் என் ஹிட் லிஸ்டிலியே இல்லை.. தேவையில்லாமல் அவங்களைச் சேர்க்காதே..”

“நீ கூட மதர் சென்டிமென்டைப் பார்ப்பியா..?”

அவளைக் காயப் படுத்தும் வேகத்துடன் அவள் கேட்டாள்.. அவன் கண்களில் மெலிதான கோபக்கீற்று தோன்றி மறைந்தது.. கணப்பொழுதில் அதை மறைத்துக் கொண்டு தோள்களைக் குலுக்கினான்…

“ஊஹீம்.. தேவையில்லாத கற்பனைகளை வைச்சுக்காதே…”

“அதானே.. நீயாவது.. அம்மா சென்டிமென்டை மதிக்கிறதாவது.. யாரு நீ..?”

“ரகுநந்தன்.. உனக்கு இது கூடத் தெரியாதா..? சந்தியா.. உன் அம்மாவைத் தனியாத் தாக்க வேண்டியதில்லை.. உன் குடும்பத்தை தாக்கினாலே.. அவங்க கிளின் போல்டாகிடுவாங்க.. எனக்கே இது தெரிஞ்சிருக்கு.. உனக்குத் தெரியலையே பேபி.. த்ச்சு.. த்ச்சு..”

“போதும்..”

“இப்படிச் சொன்னா எப்படி..? இப்பத்தானே விளையாட்டே ஆரம்பிச்சிருக்கு.. அடுத்து யார் கதை வருதுன்னு தெரியுமா..?”

‘சொல்லித் தொலைடா…’

“டிடாங்.. டிடாங்.. இதோ வந்துருச்சு.. அடுத்ததா வரப் போகிறது உன் அண்ணனின் கதை…”

‘சுதர்சனமா…’ அவளுக்கு திக்கென்று ஆனது…

வானத்தை வில்லாக வளைத்து விடும் கனவுகளோடு இருப்பவன்.. அதற்கான வாய்ப்புக் கிடைத்து விட்டதில் தொடுவானத்தைத் தொட்டு விடும் துடிப்புடன் இயங்குபவன்..  அவனை இவன் என்ன செய்யக் காத்திருக்கிறான்..?

“உன் அண்ணனோட ‘மகாவீர் கம்பெனி’ யாரால் உருவானது..?” அவன் புருவங்களை உயர்த்தினான்..

“ஏதோ ஒரு மல்ட்டி இன்டர் நேசனல் கம்பெனி..” அவள் மென்று விழுங்கினாள்..

“உன் தலை..! அந்தப் போர்வையின் பின்னால் என் கம்பெனி இருக்கிறது..” அவன் சொன்னதும்..

“உன் கம்பெனியா..?” என்று தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள் சந்தியா…

“யெஸ்.. என்னுடைய எத்தனையோ கம்பெனிகளில்.. பிஸினெஸ்களில்.. இந்த கண்ஸ்ட்ரக்சன் பிஸினெஸ்ஸிம் ஒன்று..” அவன் அமர்த்தலாகக் கூறிவிட்டு கண் சிமிட்டினான்..

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link