Chapter 30

0Shares

அழகான சுவிட்சர்லாந்த்.. பணச் செழுமை மிகுந்த நாடு… ரகுநந்தனுடன் கைகோர்த்து அங்கே கால் வைத்த போது.. இதுபோல வெளிநாட்டில் சுற்றி வருவோம் என்று நினைத்தாவாது பார்த்திருப்போமா என்று அவள் நினைத்துப் பார்த்தாள்..

அதுபோன்ற ஆசைகளெல்லாம் அவளுக்கு இருந்த தில்லை.. சி.ஏ படிக்க வேண்டும்.. அந்தத் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும்.. இதுதான் அவளது கனவாக இருந்திருக்கிறது.. அதிகப்படி ஆசையாக இந்தியாவில் உள்ள கோவில்களைச் சுற்றிப் பார்க்க நினைத் திருக்கிறாள்…

அப்படிப்பட்ட சந்தியா தேநிலவு கொண்டாட சுவிட்சர்லாந்த்துக்கு வந்திருந்தாள்.. பிரம்மாண்டமான ஹோட்டலில்.. தனிவீடு போன்ற பல அறைகளைக் கொண்ட ‘சூட்’டில் தங்கியிருந்தாள்..

“குளிச்சு.. பிரஷ் ஆகிட்டு வர்றேன்.. ஊரைச் சுற்றிப் பார்க்கலாமாங்கிறதை பிளான் பண்ணலாம்..”

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் பெட்டிகளைத் தூக்கிக் கடாசிவிட்டு துவாலையுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்ட ரகுநந்தன் சொன்னான்.. சந்தியா அந்த அறையைச் சுற்றிப்பார்த்தாள்.. அவளுடைய சென்னை வீட்டின் தரைத்தளம் போல முன்னால் வரவேற்பறை.. படுக்கையறை.. அதையொட்டிய உடை மாற்றும் அறை.. குளியலறை.. என்று ஒரு வீட்டின் அமைப்போடு இருந்தது.. அந்த சூட்..

‘ஹப்பா.. இதுக்கு எவ்வளவு வாடகை இருக்கும்..’

மலைத்தவளின் பின்னாலிருந்து நீர்த் திவலைகள் அவள் மேல் படிந்து ஈரமாக்கின.. திரும்பிப் பார்த்தாள்.. ஈரத்தலைமுடியுடன் நின்றிருந்த ரகுநந்தன்.. ‘ரோஜா’ திரைப் படத்தில் கதாநாயகன் அரவிந்த்சாமி தலையைச் சிலுப்பியதைப் போலச் சிலுப்பி.. நீர்திவலைகளை அவள் முகத்தின் மீது விசிறிக் கொண்டிருந்தான்..

“போதும்…”

அவன் கையிலிருந்த துவாலையைப் பிடுங்கி அவன் தலையைத் துவட்டி விட ஆரம்பித்தாள் சந்தியா.. அவன் முகத்துக்கு நேரே இருந்த வளவளப்பான இடுப்புப் பகுதியில் அவன் இதழ்கள் படிந்ததில் ஏற்பட்ட குறுகுறுப்பில்.. அவன் தலையில் செல்லமாக குட்டினாள்..

“அழிச்சாட்டியம் பண்ணாம தலையைக் குடுக்க மாட்டிங்களா..?”

“இது அழிச்சாட்டியமாடி..? அழகான விசயம்டி…”

அவன் மீண்டும் அவள் இடுப்பை நாட.. அவன் கையில் கிள்ளிவிட்டு விலகிக் கொண்டாள் சந்தியா…

“ஏய்ய்.. சந்தியா..”

அவளை எட்டிப் பிடிக்க முனைந்தவனின் கைகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்து.. குளியலறைக்குள் புகுந்தவள்…

“டாட்டா..” என்று அவனுக்கு கையாட்டிவிட்டு உள்ளே மறைந்து கொண்டாள்…

தாழிடப்பட்ட குளியலறைக் கதவைப் பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. விமானத்தில் ஏறியதிலிருந்து இயல்பாக அவள் காட்டும் இணக்கத்தில் அவன் மனம் லயித்தது.. அவனுடன் ஒட்டுதலாகப் பேசிப் பழகும் இந்த சந்தியா அவனுக்குப் புதியவளாக இருந்தாள்..

ரகுநந்தன்.. உடைமாற்றி விட்டு.. அறையிலிருந்த தொலைபேசியில் உணவு வகைகளை அறைக்கே கொண்டு வரச் சொல்லி ஆர்டர் செய்து விட்டு ஜன்னலருகே போனான்.. திரைச் சீலைகளை விலக்கி விட்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின் காதில் குளியலறை திறக்கும் சப்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தான்.. பெரிய டவலால் உடலைச் சுற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்த சந்தியா.. உடை மாற்றும் அறைக்குள் அவன் இருப்பதைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.

அவள் கண்கள் அவசரமாக.. ஆடைகளைத் தேட.. அவன் கண்கள் மின்ன வேட்கையுடன் அவளை நெருங்கினான்..

“உங்களை யாரு இங்கே இருக்கச் சொன்னது..? டிரஸ் மாத்தியாச்சுன்னா வெளியே போக வேண்டியது தானே..?”

சந்தியா குற்றம் சாட்டும் பாவனையில் கூறியபடியே.. டவலை இறுக்கிப் பிடித்தபடி பின்வாங்கினாள்…

“டிரெஸ் மாத்திக்கிட்டா.. டிரெஸ்ஸிங் ரூமை விட்டு வெளியே போயிரனும்னு சட்டம் எதுவும் இருக்கா..?”

அவன் புருவங்களை உயர்த்தியபடி அமர்த்தலாக வினவிய விதத்தில் அவள் மனம் கொள்ளை போனது..

‘அழிச்சாட்டியக் காரன்..’ அவனது அந்த அடாவடித்தனத்தை ரசித்தாள் சந்தியா…

அவனது ஈரம் குறையாத முன்னுச்சி முடி.. முன் நெற்றியில் படிந்து பரவியிருந்ததில் வெளிப்பட்ட அவனது ஆண்மையின் கவர்ச்சியில் அவள் கிறங்கிப் போனாள்.. இது போன்ற கிளர்ச்சி.. அவனைப் பார்த்து அவளிடம் ஏற்படக் கூடும் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லை…

பின்வாங்கியவள் சுவரின் மீது சாய்ந்து தோற்றுப் போய் நிற்க.. வெற்றி கொண்டவனாக.. அவளது இரு பக்கமும் கையூன்றி.. அவள் முகத்தை நோக்கிக் குனிந்தான் ரகுநந்தன்..

அவளது இதழோடு அவன் இதழ் பதித்த அந்த நொடியில் அவளது உடலில் இருந்த அத்தனை செல்களிலும் மின்சாரம் பாய்ந்ததைப் போன்றதொரு நூதனமான உணர்வு உற்பத்தியானது…

‘ஹா..’ அவள் கிறங்கித் தவித்தாள்…

அவள்மீது படிந்து நின்ற அவனது உடலின் வெப்பத்தை உணர்ந்தவள் கிளர்ச்சியுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்…

ரகுநந்தனால் நம்பவே முடியவில்லை.. முதன் முறையாக அவனது தொடுகையில் அவள் மயங்கிப் போகிறாள்.. விருப்பத்துடன் அவன் கழுத்தை வளைத்துக் கொள்கிறாள்…

‘இவள் என் சந்தியாதானா..?’

விருப்பத்துடன் உடன்பட்டு நிற்பவளை உடனடியாக ஆள வேண்டும் போல வேகம் அவனுக்குள் கிளர்ந் தெழுந்தது.. அவனது கைகள்.. அவளது வெற்றுத் தோள்களின் மீது படிந்து பரவித் தழுவின.. ஈரத் திவலைகள் படிந்திருந்த அவளது வெற்றுத் தோளில் அவன் முத்தம் பதித்தபோது அவளது உடல் நடுங்குவதை அவன் உணர்ந்தான்.. 

அவள் முகம் பார்க்க அவன் முனைந்த போது.. பிடிவாதமாக கண்மூடி.. அவன் மார்பில் முகம் புதைத்து முகம் காட்ட அவள் மறுத்தாள்..

“என் சந்தியா.. மை லவ்…”

ஆசையுடன் அவன் முணுமுணுத்தான்.. அவள் காதோரம் படிந்த அவனது மீசையின் முடி தந்த உராய்வின் இன்பத்தைத் தாள முடியாதவளாக உதட்டைக் கடித்துத் துடித்தாள் சந்தியா…

அதுபோன்ற ஓர் நிலையில் அதற்கு முன்னால் அவளை அவன் பார்த்ததில்லை.. அவன் உடலெங்கும் பரவிய தாகத்தின் தவிப்பில்.. அவன் அவளைக் கையில் அள்ளிக் கொண்டான்.. மாசு மறுவற்ற சருமத்துடன் பளீரிட்ட அவள் முழங்கால்களில் விழி பதித்தவனின் வேகம் கூடியது.. கட்டிலை அடைந்தவன் கரையுடைந்த வெள்ளமாக அவளை ஆக்ரமிக்க.. அவள் அவனிடம் சிக்கித் திணறிப் போனாள்…

அவன் ஆவேசமாக அவளை ஆட்கொண்டான்.. வேகத்துடன் அவளை முரட்டுத்தனமாக அணைத்து காதோரமாக பல கட்டளைகளை இட்டான்.. அவன் கேட்டதை அவள் நிறைவேற்றும் வரை அவளை விட்டு அவன் விலகவில்லை…

சந்தியாவுக்கு அது புதிது.. அவனது கட்டளைகள் புதிது.. அவனது கரையுடைத்த வெள்ளம் போன்ற அந்த ஆக்ரமிப்பு புதிது.. அதற்கு முன்னாலும் அவன் வேகம் காட்டினான்தான்.. அதுபோன்ற வேகத்தை அவன் காட்டவில்லை.. அதற்கு முன்னாலும் அவள் காதோரமாக ரகசியப் பேச்சுக்களை பேசினான்தான்.. அது போன்ற ரகசியக் கட்டளைகளைப் பேசவில்லை…

கேட்டது கிடைக்க வேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான்.. அவன் கேட்டதை கொடுப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்க வில்லை.. அவனது ரகசிய வேண்டுதல்களை அவள் நிறைவேற்றியதில் அவன் கள்ளுண்ட வண்டானான்..

அது ஒரு நிலாக்காலம்.. தேநிலவு என்றால் இதுதான் தேநிலவு என்று அவன் அவளுக்கு உணர்த்தினான்.. இரவு பகல் பாராமல் அவளுடன் கூடினான்.. கூடிக் களித்தபின் ஊரைச் சுற்றிக் காட்டினான்.. ஊரைச் சுற்றி வரும் போது நிறைய கதைகளைப் பேசினான்..

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link