Chapter 32

0Shares

“அல்லித்தண்டு காலெடுத்து…

அடிமேல் அடியெடுத்து..

சின்னக் கண்ணன் நடக்கையிலே..

சித்திரங்கள் என்ன செய்யும்…?”

வாய்விட்டுப் பாடினாள் சந்தியா… அவளுக்கு எதிரில் தளர்நடை போட்டு வந்த யதுநந்தனைத் தூக்கிக் கொஞ்சி முத்தமிட்டாள்.. அப்போதுதான் காரிலிருந்து இறங்கிய ரகுநந்தனுக்கு.. தோட்டத்தில் மகனைக் கொஞ்சியபடி நின்றிருந்த மனைவியைப் பார்க்கும் போது மிக அழகான தாய் பறவையொன்னு சேய் பறவையைக் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.. அவன் வீட்டுக்குள் போகாமல் தோட்டத்துக்குப் போனான்.. 

“அம்மாவும்.. குட்டியும் என்ன செய்துகிட்டு இருக்கீங்க…?”

திரும்பிப் பார்த்த சந்தியா கணவனைக் கண்டுவிட்ட குதுகலத்துடன்…

“ஊம்..? ஓடிப்பிடித்து விளையாடிக்கிட்டு இருக்கோம்..” என்று சொன்னாள்…

“என்னையும் சேர்த்துக்க மாட்டியா..?” அவன் கண்சிமிட்டினான்..

சந்தியாவின் கன்னம் சிவந்து விட்டது.. கண்களால் கணவனை மிரட்டியபடியே.. ஒற்றை விரலை உயர்த்திக் காட்டி..

“பத்திரம்..” என்று எச்சரித்தாள்..

“ஏண்டி.. இப்ப நான் என்ன சொல்லிட்டேன்..? யது.. அம்மா டாடியை மிரட்டறா.. ஏன்னு கேளுடா..” மகனிடம் போட்டுக் கொடுத்தான் ரகுநந்தன்…

“உன் டாடி பொல்லாத டாடி.. போக்கிரி டாடி.. அவரை ஆட்டத்தில சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லுடா யது..” மகனிடம் கொஞ்சினாள் சந்தியா…

அழகாக அவள் உதட்டைச் சுழித்து அழகு காட்டியதில் இரண்டே எட்டில் அவளை அடைந்து விட்ட ரகுநந்தன்.. மனைவியையும்.. குழந்தையையும் ஒரு சேர இறுக்கி அணைத்துக் கொண்டு இருவருக்கும் முத்தமிட்டான்..

“ஏண்டி.. என்னையா ஆட்டத்தில சேர்த்துக்க மாட்ட..? என்ன செய்யலாம்..? இங்கேயே ஆட்டத்தை ஆரம்பிக்கட்டா..?” அவள் காதோரமாக அவன் கிசுகிசுக்க..

“போதுமே..” வெட்கத்துடன் அவள் விடுபட்டு தள்ளி நின்றாள்…

“கையில உங்க மகன் இருக்கான்.. மறந்து விடவேணாம்..” விளையாட்டாய் அவள் எச்சரித்ததில் அவன் தேன் குடித்த நரியானான்..

‘என் மகன்…’

சந்தியாவிடமிருந்து குழந்தையை வாங்கி தூக்கிப் போட்டு அவன் விளையாடிய போது.. தகப்பனையும் மகனையும் பார்த்த சந்தியாவின் மனம் நிறைந்தது.. அவர்கள் பேசியபடியே வீட்டுக்குள் போனார்கள்…

அந்த வார இறுதியில் குலதெய்வத்தின் கோவிலில் யது நந்தனுக்கு முதல் மொட்டை போட வேண்டும் என்பதற்காக.. அவர்கள் குடும்பத்துடன் கிராமத்துக்குப் போனார்கள்.. கிராமத்து பெரிய வீட்டில் அவர்கள் தங்கியிருந்த போது ரகுநந்தனுக்கு போன் வந்தது.. அவன் குளியலறையில் இருந்தான்.. விடாமல் போன் அடித்துக் கொண்டிருந்ததில் சந்தியா போனை எடுத்தாள்…

“ஹாய்.. ரகு.. நேத்து ஏன் வரலை..?” உரிமையுடன் கேட்ட பெண்குரல் அவளுக்குப் பரிச்சயமானதைப் போல இருந்தது…

“அவர் குளிச்சுக்கிட்டு இருக்கார்.. ஓரு ஃபைவ் மினிட்ஸ் கழித்துப் போன் பண்ணுங்க..” போனை அணைக்கப் போனாள் சந்தியா…

“ஸ்டுப்பிட்.. அவர் போனை நீயேண்டி அட்டெண்ட் பண்ற..? இன்னும் உனக்கு அந்த மிடில் கிளாஸின் வேவு பார்க்கிற புத்தி போகலையா..?” மறுமுனையின் பெண் குரல் சீறியதில் அசையாமல் நின்று விட்டாள் சந்தியா..

“ஹலோ.. மைன்ட் யுவர் வெர்டுஸ்.. இது அடுத்தவங்க போனில்லை.. என் ஹஸ்பெண்டோட போன்.. மைன்ட் இட்..” கோபத்துடன் அவள் சொல்லிக் கொண்டிருந்த போது..

“நிறுத்துடி..” என்றாள் அந்தப் பெண்..

“என்னது..?!” சந்தியா அவளைவிட கோபமானாள்..

“இந்தக் கல்பனா வழி காட்டலைன்னா.. ரகுநந்தன் உனக்கு ஹஸ்பெண்டாவே ஆகியிருக்க மாட்டார்டி.. இப்ப என்ன..? உனக்கு அவர் ஹஸ்பெண்டுன்னா.. எனக்கு ஹஸ்பெண்ட் மாதிரி.. புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன்.. உனக்கா புரியாது..? நீ எப்பேற்பட்டவ.. சந்து கிடைத்ததும் சிந்து பாடிட்ட ஆளாச்சே..” மறுமுனையின் போன் துண்டிக்கப் பட்டது…

‘கல்பனா..?…’

சந்தியா அவசரமாக செல்போனிலிருந்த எண்களைப் பார்த்தாள்.. அது கல்பனாவின் போன் நம்பரேதான்.. குளித்து விட்டு தலையைத் துவட்டியபடி வந்த ரகுநந்தன்.. செல்போனும் கையுமாக இருந்த சந்தியாவிடம்..

“யார் போன் பண்ணினது..?” என்று கேட்டான்…

“யாரோ.. கல்பனாவாம்.. நேற்று ஏன் வரலைன்னு கேட்டா..” அவன் முகம் பார்க்காமல் செல்போனை நீட்டினாள் சந்தியா…

அவசரமாக செல்போனை வாங்கிப் பார்த்தவனின் முகம் மாறியது.. அங்கிருந்து நகர்ந்து விட்டான் அவன்.. சந்தியா தோட்டத்துப் பக்கமாக எட்டிப் பார்த்தாள்.. அவளுக்கு முதுகு காட்டியபடி பேசிக் கொண்டிருந்த ரகுநந்தனின் குரல் அவள் காதில் தெளிவாக விழுந்தது..

“நேற்று வரமுடியலை.. என்ன..? நோ.. நோ.. முக்கியமான வேலை எதுவுமில்லை.. என் மகனுக்கு முதல் மொட்டையெடுக்க.. கிராமத்துக்கு வந்திருக்கோம்.. என்ன..? ஊஹீம்.. என்னதான் கம்யூட்டர் காலத்தில நாம வாழ்ந்தாலும்.. பரம்பரைப் பழக்கம்ன்னு ஒன்னு இருக்கே.. நாளைக்கு கண்டிப்பா வர்றேன்.. இல்லையில்ல.. மறக்க மாட்டேன்.. மறக்க முடியுமா..?”

அவன் போனை அணைத்து விட்டுத் திரும்பிய போது சந்தியா அவசரமாக வீட்டுக்குள் வந்து விட்டாள்.. அவள் மனம் நடுங்கியது.. ஏதோ யோசனையுடன் வந்த ரகுநந்தனிடம் இயல்பாக கேட்பதைப் போல..

“இப்பப் பேசின கல்பனாவோட வாய்ஸ் என் கூடப் படிச்ச கல்பனாவோட வாய்ஸ் மாதிரியே இருக்கே..” என்று கேட்டாள்..

“அவள்தான்..” ரகுநந்தன் அவள் முகம் பார்க்காமல் சொன்னான்..

“அவளா..? அவள்கூட உங்களுக்கு பழக்கமிருக்கா..? ஐ மீன்.. போனில் கூப்பிட்டுப் பேசுகிற அளவுக்கு பழக்கமிருக்கா..?” அக்கறையில்லாதவளைப் போலக் காட்டிக் கொள்ள அரும்பாடு பட்டபடி கேட்டாள் சந்தியா..

“போன மாதம்வரை இல்லைதான்.. பட்.. சந்தர்ப்ப வசத்தினால அவ வீட்டுக்கு நான் போக வேண்டியதாப் போச்சு…”

அவளுக்கு முதுகு காட்டியபடி பதில் சொல்லி விட்டு வெளியேறி விட்டான் ரகுநந்தன்.. அசையாமல் நின்று விட்டாள் சந்தியா.. அவள் காதுகளில்..

“இந்த உலகத்தில் நல்லவர்களில இரண்டே வகையான மனுசங்கதான் இருக்காங்க.. ஒன்று.. நல்லவங்க.. இன்னொன்று ‘சான்ஸ்’ கிடைக்காததினால நல்லவங்களா இருப்பவங்க..”

என்றோ பேசிய ரகுநந்தனின் பேச்சுக்கள் அவள் காதில் ஒலித்தன…

‘அந்த சான்ஸ் இவருக்கு கிடைத்து விட்டதா..?’

சந்தர்ப்ப வசத்தினால கல்பனாவின் வீட்டிற்கு அவன் போயிருக்கிறான் என்றால் கிடைத்த சான்ஸை அவன் பயன் படுத்திக் கொண்டான் என்றுதானே அர்த்தம்..?

“நான் பெண்களை அரியாதவனில்லை..” அன்று சொன்ன ரகுநந்தனின் வார்த்தைகள் அவள் மனதில் எழுந்தன..

“உனக்கு அவர் ஹஸ்பெண்டுன்னா.. எனக்கு ஹஸ்பெண்ட் மாதிரி..”

கல்பனாவின் வெட்கம் கெட்ட குரல் அவளைச் சுற்றி எக்காளமிட்டுச் சிரித்தது.. சந்தியா தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள்..

குலதெய்வ கோவிலுக்கு கல்யாணராமன் குடும்பத்துடன் வந்திருந்தார்.. சுதர்சனத்தின் மடியில் யதுநந்தனை அமரவைத்து மொட்டை போட்டு காது குத்தினார்கள்.. வலியால் அழுத மகனைச் சமாதானப் படுத்திய சந்தியாவின் மனது.. அதைவிட அதிகமாக வலித்தது.. சுதர்சனத்திற்கு பெண் பார்க்கப் போக வேண்டும் என்றாள் ஜானகி.. சந்தியாதான் முன்னே நின்று சுதர்சனத்தின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமென்றார் கல்யாணராமன்…

“சூர்யாக்கா கேட்டா சண்டைக்கு வந்திரும்… நான் மட்டுமா அண்ணன் கூடப் பிறந்தேன்..? அக்கா பிறக்கலையா..?” சந்தியா சிரிக்க முயன்றாள்..

“எங்கே.. அவளைப் பெண் பார்க்கக்கூட அனுப்பி வைக்க மாட்டேன்கிறார் மாப்பிள்ளை.. இதில அவ முன்னால நின்னு கல்யாணத்தைப் பண்ணிட்டாலும்..” மனத்தாங்கலுடன் சொன்னாள் ஜானகி…

“அப்படின்னா நான் வரேன்.. இதுக்குப் போயி கவலைப்படலாமா..?”

மனதில் மலையளவு கவலையைச் சுமந்து கொண்டு அன்னையை சமாதானப் படுத்தினாள் சந்தியா.. அவள் முகத்தின் வாட்டத்தில் கவலைப்பட்ட சுதர்சனம்…

“என்ன சந்தியா..? ஏதும் பிராப்ளமா..?” என்று தனிமையில் விசாரித்தான்..

என்ன பிரச்னையென்று அவள் சொல்வாள்..? இது சொல்லக்கூடிய பிரச்னையா..?

“ஒன்னுமில்லை அண்ணா..” என்றாள் அவள்..

சென்னைக்கு அன்றே அவர்கள் அனைவரும் திரும்பி விட்டார்கள்.. மறுநாள் ரகுநந்தன் கம்பெனிக்கு புறப்பட்ட போது.. யது நந்தனை கௌசல்யாவின் பொறுப்பில் விட்டுவிட்டு.. கடைக்குப் போய்விட்டு வருவதாக சொல்லிவிட்டு அவனுக்குத் தெரியாமல் அவளுக்கென்று அவன் வாங்கிக் கொடுத்திருந்த காரில் அவனைப் பின் தொடர்ந்தாள் சந்தியா.. ரகுநந்தனின் கார் கல்பனாவின் வீடு இருந்த பகுதிக்குள் திரும்பியதில் அவளுக்கு மூச்சடைத்தது.. விடாமல் பின் தொடர்ந்தாள்.. கல்பனாவின் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இறங்கினான் ரகுநந்தன்.. வாசலில் காத்திருந்த கல்பனாவிடம் பேசியபடி அவள் வீட்டுக்குள் சென்று விட்டான்..

‘ரகுநந்தனா இதைச் செய்வது..?’

தன் கண்களையே நம்ப முடியாமல் அப்படியே அமர்ந்து விட்டாள் சந்தியா.. அவள் மனம் உலைகளனாக கொதித்தது…

‘இப்படியும் அவன் செய்வானா..?’

வீட்டுக்குத் திரும்பியவள் அவன் வரும் வரைக்கும் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி காத்திருந்தாள்.. என்றைக்கும் போல இல்லாமல் அன்று இரவு நெடு நேரமானபின்னால் வீடு திரும்பினான் ரகுநந்தன்.. கண்கள் சிவக்க காத்திருந்தவளிடம் எதுவும் போசாமல் மௌனமாக குளிக்கப் போய்விட்டான்.. திரும்பி வந்தவன்.. தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தைத் தட்டப் போனான்..

“தொடாதீங்க..” கொதித்து விட்டாள் சந்தியா..

“ஏன்..?” புருவங்கள் முடிச்சிட அவன் நிதானமாகக் கேட்டான்..

“இவன் என் குழந்தை.. கண்டவ வீட்டுக்குப் போய் வந்த உங்க கையாலே என் பிள்ளையைத் தொட வேணாம்..” சந்தியா கொந்தளித்தாள்..

“ஓ..” கண்கள் இடுங்க அவன் எழுந்தான்.. அவள் அருகில் நிதானமாக வந்தான் அவள் முகம் பார்த்து அழுத்தமாகச் சொன்னான்…

“இவன் என் குழந்தை.. இதுதானே நீ நிறைவேற்றி வைத்த மூன்றாவது கண்டிசன்..? என் குழந்தையை நான் தொடக்கூடாதுன்னு சொல்ல நீயார்..?”

அக்கினிக் குண்டலங்களாய் அவன் வார்த்தைகள் வெளிப்பட்டன..

“என்னது..?!”

“ஆமாண்டி.. உன் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்குக் கழுத்தை நீட்டியவதான நீ..! என் முதல் கண்டிசனான ‘ஐ லவ் யு..’ங்கிற வார்த்தையை உன் மனம் விரும்பாம என்னிடம் சொன்ன.. இரண்டாவது கண்டிசனை குடும்பம் நடத்துகிறதையும் இஷ்டமில்லாம செய்து முடிச்ச.. மூன்றாவது கண்டிசனான என் குழந்தைக்கு அம்மாவாகிறதையும் கடமைக்கு செய்து முடிச்சிட்ட.. இதைத்தானே அவனிடம் நீ சொன்ன…?”

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link