Chapter 05

0Shares

சிதம்பரநாதனின் ஜாடையில் கார்த்திகேயன் இருக்கிறான் என்பதை முதல் பார்வையிலேயே கண்டு விட்டாள் நிவேதா..

அதே உயரத்துடன்… மாநிறத்துடன்… திடகாத்திரமான உடலுடன் இருந்தார் அவர்..

என்ன ஒன்று.. கார்த்திகேயன் பேன்ட் சட்டை போட்டிருந்தான்.. அவர் வேட்டி சட்டையில் .. இருந்தார்.. கார்த்திகேயனின் மீசை அடர்த்தியாக.. அளவாக.. இருந்தது.. அவரது மீசையே.. அடர்த்தியாக.. பெரிதாக.. பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருந்தது..

‘அப்பான்னா உங்களுக்கு பயமா..?”

கார்த்திகேயனிடம் தென்பட்ட மாற்றத்தை விசித்திரமாகப் பார்த்தபடி கேட்டாள் நிவேதா..

‘பயமில்லை.. மரியாதை..”

‘அதுவும்தான் எதற்கு..?”

‘என்ன இப்படிக் கேட்கறீங்க..? என் தாத்தா முன்னாடி அப்பாவும் இப்படித்தான் நிற்பார்..”

‘ஓ.. இதுவும் பரம்பரையாய் வருகிறதா..?”

அவள் குரலில் கேலி இருந்ததைப் போல உணர்நதான் கார்த்திகேயன்.. அவனுக்கு அது பிடிக்கவில்லை..

‘உங்க வீட்டில்.. உங்க அப்பாகிட்ட நீங்க மரியாதை காட்ட மாட்டிங்களா..?” என்று எரிச்சலுடன் கேட்டான்..

‘மரியாதைங்கிறது  மனசில இருக்கனும்.. என் டாடி எனக்கு பிரண்ட்..அவர்கிட்ட எனக்கு பயமே கிடையாது..”  பெருமையுடன் கூறினாள் நிவேதா..

இப்படிச் சொன்னவளை பொறாமையுடன் பார்த்தான் கார்த்திகேயன் அதற்குள் சிதம்பரநாதன் அவர்களைப் பார்த்து விட்டார்..

‘யாரு அந்தப் பொண்ணு..?” அருகிலிருந்த கணக்குப் பிள்ளையிடம் கேட்டார்..

‘தெரியலீங்களே ஐயா..” கணக்குப் பிள்ளையும் ஆச்சரியத்துடன் நிவேதாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்..

வெண்மையான நிறத்துடன்.. கரிய கூந்தலை விரித்துப் போட்டு.. சுடிதார் அணிந்து.. நெற்றியின் மேல்பக்கம் ஏற்றி விடப்பட்டிருந்த குளிர் கண்ணாடியுடன் இருந்தவள்.. அந்த கரிச்சான் பட்டியோடு ஒட்டாத தோற்றத்தில் தெரிந்தவள்..

‘எதுவும்.. சினிமா..கினிமாவில் நடிக்கிற புள்ளையோ என்னவோ.. நம்ம வீட்டில் சினிமா படம் பிடிக்கலாமான்னு  கேட்டு வந்திருக்கோ.. என்னவோ..”

நிவேதா நிச்சயமாக ஒரு சினிமா நடிகையாத்தான் இருப்பாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.. கணக்குப் பிள்ளையின் பேச்சில் தென்பட்டது..

“வேற யாரு.. இப்படி.. வெள்ளை வெளேர்ன்னு வெள்ளைக்காரியப் போல.. கொழுகொழுன்னு இருக்கிறது..’

‘அத.. எதுக்கு இவன் காரில் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கான்..?”  சிதம்பரநாதனின் குரலில் கோபம் தெரிந்தது..

அவர்களின் பூர்வீக வீடு.. அரண்மனையைப் போல அழகாக இருப்பதால்.. அந்த வீட்டில் சினிமாப் படப்பிடிப்பு நடத்த விரும்பி பலர் அவரை அணுகிய கதைகள் உண்டு..

ஓருபக்கம் அருவியும்.. ஆறும்.. மறுபக்கம் மலைக் கோவிலுமாக கரிச்சான் பட்டி கண் சிமிட்டியதில் திரைப்டத் துறையினர் மயங்கி விட்டிருந்தனர்..

‘என்ன மாதிரியான லொகேசன்ப்பா.. எல்லாமே இந்த ஊரில் இருக்கு.. வில்லேஜ் சப்ஜெட்டுக்கு பெர்பெக்டா.. இந்த ஊர் பொருந்திப் போகுது..”

தாகத்துடன் ஊருக்குள் வருகிறவர்கள்.. சிதம்பரநாதனின் பூர்வீக வீட்டைப் பார்த்ததும் விழி விரித்து  நின்று விடுவார்கள்..

‘அப்படியே.. அச்சு அசலாய்.. அந்தக் காலத்து அரண்மணையைப் போலவே இருக்குப்பா..”

உடனே சிதம்பரநாதனைத் தேடி ஓடுவார்கள்..

‘என்னது..? எங்க வீட்டில் சினிமா எடுக்கப் போகிறீங்களா.. யாருகிட்ட என்ன பேசறீங்கன்னு நினைப்பிருக்கா..? இது கரிச்சான்பட்டிப்பு.. எனக்குத் தெரியாம ஒரு ஈ எறும்பு கூட வெளியில் போக முடியாது.. தெரியுமில்ல..

‘ஏன் அப்படிச் சொல்றீங்க..”

‘கை காலோடு உருப்படியா இந்த ஊர் எல்லையைத் தாண்டனும்கிற ஆசையிருந்தா.. ஓடிப் போயிருங்க..”

அவர் அப்படிச் சொன்ன பின்னால்.. அங்கே நிற்க அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?

ஆனாலும் கூட.. மனதில் அந்த அரண்மனை வீட்டில் எப்படியாவது படப்பிடிப்பை நடத்தி விட வேண்டுமென்ற ஆவல் சிலருக்கு வந்தது.. அதனால் அவர்கள் சிதம்பரநாதனின் தம்;பியான மேகநாதனை அணுகினார்கள்..

‘பெரிய பண்ணைக்கும்.. சின்னப் பண்ணைக்கும் ஆகாதாம்பா.. அண்ணனுக்கு வீட்டில் பங்கிருந்தா.. தம்பிக்கும் அது இல்லாம போயிடுமா..?”

நம்பிக்கையுடன் அணுகுபவர்களை .. மேகநாதன் பார்க்கும் பார்வையில் அனல் தெறிக்கும்..

‘பெரிசு.. முடியாதுன்னு சொல்லியிருப்பாரே..”

‘ஆமாங்க.. ஆனாலும்.. உங்களுக்கும் அந்த வீட்டிலே உரிமையிருக்கே? ஆதனால.. உங்களைத் தேடி வந்தோம்..”

‘பங்குங்கிறது சொத்தை எடுக்கிறதில் மட்டும் இருக்கக் கூடாதுப்பு.. பரம்பரைப் பெருமையை கட்டிக் காக்கிறதிலயும் இருக்கனும்.. இந்த ஊர் ஜனமெல்லாம்.. எங்க வீட்டு தோட்டத்தோடு நின்று விடும்.. முக்கியமானவங்க.. எங்க வீட்டு முன் பக்கத்தோடு நின்னுடுவாங்க.. கொஞ்சம் நெருங்கிய சொந்த பந்தம்.. சாப்பாட்டு ரூமூ வரைக்கும் வரும்.. அதுக்கும் மேல சொந்தம் கொண்டாடுகிறவங்க மாடி வரைக்கும் வருவாங்க.. ஆனா.. வீடு பூராவும் கால் பதித்தது.. எங்க குடும்பத்து ஆளுக மட்டுதான்ப்பு.. இந்த மாதிரியான வீட்டில.. சினிமாக்காரங்க காலடி எடுத்து வைக்கிறதா..?”

‘உங்களை நம்பி வந்திருக்கோம் ஐயா..”

‘எந்த நம்பிக்கையில் வந்தீங்க..? அண்ணனுக்கும்.. தம்பிக்கும் ஆகாது.. அண்ணன் மாட்டேன்னா.. தம்பி சரின்னு சொல்லிடுவாங்கிற நம்பிக்கையில் வந்தீங்களா..?”

“ஐயா..”

‘பெரிசு உடம்புல ஓடுற ரத்தம் தான் என் உடம்பிலயும் ஓடுது.. அவருக்கு இருக்கிற உறுத்து எனக்கு இல்லைன்னா..எங்க அப்பாவுக்கு நான் மகனாப் பிறந்ததில.. என்ன பிரயோசனம்..?”

தோல்வியடைந்தவர்களாக பின் வாங்கி விடும் திரைப்படத்துறை… பகையாளியாக இருந்தாலும்.. பாரம்பர்ய பெருமையைக் கட்டிக் காப்பதில் ஒன்று போல நிற்கும்.. அந்த அண்ணன் தம்பிகளை பார்த்து அதிசயிப்பார்கள்…

‘என்ன மாதிரியான ஆளுகப்பா இவங்க.. கிரேட்.. இப்படியாப்பட்ட கேரக்டர்களை ஒரு படத்திலாவது  நாம வைத்துப்புடனும்..”

இப்படிப்பட்ட ஏராளமான சினிமாத் துறையினரை சந்தித்திருந்த சிதம்பரநாதனுக்கு.. வந்திருக்கும் பெண்.. நிச்சயம் சினிமா நடிகையாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றி விட்டது..

‘ஆமாங்கய்யா.. நம்ம சின்னய்யாவோட.. காரில.. முன் சீட்டில இருந்துதான் இந்தப் பொண்ணு இறங்குச்சு..”

பொறாமையுடன் போட்டுக் கொடுத்தார் கணக்குப் பிள்ளை..

‘இந்தப் பொண்ணு எங்கே இவனைப் பிடிச்சிருக்கும்..?”

என்னவோ.. பேய்.. பிசாசு.. மகனைப் பிடித்து விட்டதைப் போல  விசாரித்து வைத்தார் சிதம்பரநாதன்..

அதற்குள் அவர்கள் இருவரையும் நெருங்கி விட்ட நிவேதா.. ‘வணக்கம் அங்கிள்..” என்று கரம் குவித்தாள்..

அந்தச் செய்கையைப் பார்த்த கணக்குப ;பிள்ளைக்கு.. இந்த பெண் சினிமா நடிகையாக இருக்க முடியாது என்று தோன்றி விட்டது..

தன்னையறியமால் தலையை ஆட்டி நிவேதாவின் வணக்கத்தை அங்கீகரித்த சிதம்பரநாதன்.. யோசனையுடன் அவளைப் பார்த்தார்..

கணக்குப் பிள்ளையைப் போலவே.. அவருக்கும்.. நிவேதா சினிமா சம்பந்தப்பட்ட ஆளாக இருக்க மாட்டாள் என்று தோன்றி விட..

‘யாரும்மா நீ..? என்ன வேனும்..?” என்று விசாரித்தார்..

‘அங்கிள்.. என் பெயர் நிவேதா.. நாட்டுப் புற பாடல்களைப் பத்தி ஆராய்ச்சி செய்கிறேன்.. இங்கே தங்கியிருந்து.. நான் என் வொர்க்கைப் பண்ண உங்ககிட்ட சந்தானம் அங்கிள் பெர்மிசன் வாங்கியிருக்கிறதா சொன்னாரே..”

நிவேதா.. விநயத்துடன் விளக்கம் சொன்ன போது.. சிதம்பரநாதனுக்கு அவருடைய நண்பரின் கோரிக்கை நினைவுக்கு வந்து விட்டது..

‘அட.. நம்ம சந்தானம் சொன்ன பெண்ணா நீ..?”

இப்படிச் சொன்ன தகப்பனாரை.. அந்தச் சந்தானம் எப்போது அதை இவரிடம் சொன்னார் என்ற நினைவுடன் பார்த்தான் கார்த்திகேயன்..

“ஒரு வார்த்தை இதைப்பற்றி என்கிட்டேயும்.. அம்மாகிட்டயும் இவர் சொல்லியிருக்கலாமே..’ அவன் மனதில் மனத்தாங்கல் ஏற்பட்டது..

‘படிக்க வந்திருக்கிற பொண்ணு கணக்கப்பிள்ளை..”

‘அப்படிங்களா ஐயா..”

இப்போதும் அவளுடைய அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தை பார்வையால் அளவிட்டபடி சந்தேகமாக கேட்டார் கணக்கப்பிள்ளை..

“அப்ப இந்தப் புள்ள சினிமா நடிகையில்லையா..?’

அவரைப் பொறுத்த வரை.. அழகாகவும்.. ஸ்டைலாகவும் இருக்கிற பெண்கள் எல்லோரும்.. சினிமாவில் நடிக்கப் பிறந்தவர்கள்தான்..

நிவேதாவின் வருகையைப் பற்றி தன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் கணக்குப் பிள்ளையிடம் பகிர்ந்து கொள்ளும் தந்தையின் செய்கையில் உள்ளூர வெகுண்டான் கார்த்திகேயன்..

‘இந்தப்  பெண்ணை நீ எங்கே பார்த்தே..?”

ஒருவழியாக அங்கே நின்று கொண்டிருந்த மகனிடம் பேசிவிட்டார் சிதம்பரநாதன்..

“இந்தக் கேள்வியை கேட்க இத்தனை நேரமா..?’ மனம் கடுத்தான் கார்த்திகேயன்..

‘வருகிற வழியில் பார்த்தேன்..”

ஓற்றை  வரியில் பதில் சொன்னான் அவன்..

‘எங்கேயிருந்து வருகிற வழியிலப்பா..?” அடுத்த கேள்வி.. சிதம்பரநாதனிடமிருந்து  கிளம்பியது..

இப்படியே விட்டால்.. இன்றைக்கு பொழுதிற்கும் தகப்பனும்.. மகனும் ஒற்றை வரிக் கேள்வி.. பதிலை தொடர்ந்து விடுவார்களே.. என்று மனதிற்குள்கவலைப் பட்டாள் நிவேதா..

இரவு முழுவதும் பிரயாணம் செய்ததில் அவள் களைத்துப் போயிருந்தாள்.. குளித்து உடைமாற்ற வேண்டும் போல.. ஓர்வித அலுப்பு அவளது உடலின் ஒவ்வொரு அணுவிலும் தெறித்தது..

வயிறு வேறு பசித்துத் தொலைத்தது… அவள் பசிதாங்க  மாட்டாள்.. இவர் எப்போது புலன் விசாரணையை முடித்து வீட்டுக்குள் அனுமதிக்கப் போகிறாரோ என்ற எண்ணத்துடன் காத்திருந்தவளுக்கு.. தகப்பனும் மகனும் ஆரம்பித்த கேள்வி.. பதிலைக் கேட்டதும் “பகீர்’ என்று ஆகிவிட்டது..

அவசரமாக பேச்சுக் களத்தின் ஊடே குதிக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளானாள் நிவேதா..

‘நான் மெயின் ரோட்டில் இருந்து இறங்கி.. நம்ம ஊருக்கு வழி கேட்டு வந்தேன் அங்கிள்..”

‘ம்ம்ம்..”

‘வருகிற வழியில் பாலம் இருந்தது..”

‘ம்ம்ம்..”

‘பாலத்துக்கு மேல இவரோட கார் இருந்தது..”

‘ம்ம்ம்..”

‘பக்கத்திலேயே இவரும் இருந்தார்..”

‘ம்ம்ம்..”

‘எனக்கு வழி மறந்து போச்சு..”

‘அடக்கடவுளே.. என்னை நம்பி.. உன்னை அனுப்பியிருக்கிற சந்தானம்.. என் நண்பன்ம்மா.. அவனுக்கு நான் என்ன பதிலைச் சொல்வேன்..?”

‘டோண்ட் வொர்ரி அங்கிள்.. இவர் உங்கள் சன்தான்னு  எனக்குத் தெரியாது.. உங்க வீட்டுக்கு இவர்கிட்டயே வழி கேட்டேன்.. விவரம் கேட்டார்.. சொன்னேன்..”

நிவேதா சிதம்பரநாதனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவள் விவரம் சொன்ன லட்சணத்தை  நினைத்துப் பார்த்தான் கார்த்திகேயன்..

அவனது பார்வை அந்த நினைவை அப்படியே பிரதிபலிக்க.. அவசரமாக அவன் பக்கம் சென்ற பார்வையைத்  திருப்பிக் கொண்டாள்  நிவேதா..

“இவன் ஒருத்தன்.. எக்ஸ்ரே பார்வையை பார்த்து வைப்பான்.. எனக்குப் பசி வயிற்றைப் பிசைகிறது.. நேரம் காலம் தெரியாமல்.. இவன் இப்படிப் பார்த்து வைக்கிறானே..’

‘எங்க வீடுதான் வாங்கன்னு சொல்லிக் காரில் ஏறச் சொல்லிட்டார்.. எனக்கு கிரேட் ரிலிஃப்  அங்கிள்.. இல்லைன்னா.. என் பெட்டிகளையும் பைகளையும் தூக்கிக்கிட்டு நான் நடந்து வர.. ஈவினிங் ஆகியிருக்கும்..”

‘உன் பெட்டிகளா..? அது எங்கே..?”

‘காரில் பின் சீட்டில் இருக்கு.. தேங்க்ஸ் அங்கிள்..”

‘எதுக்கு..?”

‘நீங்க.. இருக்கிற இடத்தில இருந்துக்கிட்டே.. உங்க மகன் மூலமா எனக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு..”

ஐஸ் வைத்தாள் நிவேதா.. உருகி விட்டார் சிதம்பரநாதன்.. கடைசியில் “அடிப்பாவி’ என்று மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டவன் கார்த்திகேயன்தான்..

“பாலத்தில் நின்று இவள் யுhயாக பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.. இந்தப் பக்கத்துக்கு புதிதாக இருக்கிறாளேன்னு விசாரிச்சா.. எங்கப்பா பெயரைச் சொன்னா.. என்ன விசயமுன்னு விசாரிச்சா.. என்கிட்ட வம்பு பண்றியான்னு கேட்டு சண்டைக்கு வந்தா.. ஒருவழியாய் இவளை சமாளிச்சு காருக்குள்ள அள்ளிப்போட்டட பின்னாலதான்.. வந்த வேலையைப் பத்தின விவரத்தையே சொன்னா.. இங்கே வந்து அப்பாகிட்ட.. பிளேட்டையே மாத்திப் போடறாளே..’

தகப்பனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து விட்ட மகனை அரிதான பாசப்பார்வை ஒன்றை பார்த்து வைத்தார் சிதம்பரநாதன்..

‘ரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கேப்பா.. பரவாயில்ல என்னை நம்பி என் நண்பன் அனுப்பி வைச்ச பொண்ணை பத்திரமா வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திட்ட..”

எப்போதாவது ஒரு முறைதான்.. இப்படிப்பட்ட பாராட்டு வார்த்தைகள் அவரிடமிருந்து கார்த்திகேயனுக்கு கிடைக்கும்..

வீட்டு வாசலில் காலடி எடுத்து வைத்த மறுகணத்திலேயே அப்படிப்பட்ட பாராட்டை.. தகப்பனிடமிருந்து பெற்றுக் கொடுத்து விட்ட நிவேதாவின் மேல் கார்த்திகேயனுக்கு ஓர் அபிமானம் தோன்றி விட்டது..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link