Chapter 08

0Shares

சளசளவென்று  ஆறு ஓடிக் கொண்டிருந்தது.. அதன் கரையோரமாக இருந்த மரத்தின் அகலமான வேரின் மீது அமர்ந்தான் கார்ததிகேயன்..

அவன் சொல்லாமலே நிவேதா வெகு இயல்பாக அவனருகில் அமர்ந்தபோது.. அவன் மனதில் தென்றலடித்தது..

“யார் இவள்..?’ தனக்குள் கேட்டுக் கொண்டான்..

அவனைப் போன்ற கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொள்ளாதவளாக நிவேதா.. ஆற்று நீரில் கை விட்டு அளந்து குதூகலித்தாள்..

‘நீங்கள்ளாம் கொடுத்து வைத்தவங்க..”

‘எதைக் கொடுத்து வைத்திருக்கிNயுhமா«;..”

‘எல்லாத்துக்கும் கேலிதானா..?”

‘சரி.. கேலி செய்யலை.. நீ காரணத்தை சொல்லு..”

‘எவ்வளவு அழகான ஆறு.. அருவி.. காடு.. மலைக் கோவில் பச்சைப் பசேல்ன்னு வயல்கள்ன்னு.. பார்க்கப் பார்;க்க தெவிட்டலை.. இங்கேயே குடியிருக்கிற நீங்க.. கொடுத்து வைத்தவங்கதானே..”

‘நீயும் இங்கேயே இருந்து விட வேண்டியதுதானே..”

இதைச் சொல்லும்போதே.. அவள் அப்படி இருந்து விட வேண்டுமென்று அவனது அடி மனது ஆசைப்பட்டது..

“இதென்னடா வம்பாப் போச்சு.. இவள் யாரோ.. எவரோ.. நேத்துதான் இந்த கரிச்சான்பட்டி மண்ணை மிதித்திருக்கிறா.. இவ இந்த ஊரிலேயே இருந்து விட வேண்டுமுன்னு.. ஏன் நான் ஆசைப்படுகிறேன்..?’

அவனுக்கே அவனது மனப் போக்கு விந்தையாக இருந்தது..

எதனால் அவன் மனதில் அப்படியொரு எண்ணம் தோன்றியது என்று அவனால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை..

நெருங்கிய சொந்தக்காரி போல.. இயல்பாக அவள் பேசிப் பழகுவதாலா..? இல்லை.. காலையில் சிதம்பரநாதனின் கோபத்திலிருந்து மீனாட்சியை அவள் காப்பாற்றினாளே.. அதனாலா..?

எது தான் இது என்று அறிந்து கொள்ள முடியாத ஆயிரம் உணர்வுகளில் இதுவும் ஒன்று என்று அவன் நினைத்துக் கொண்டான்..

‘ம்ம்.. இருக்கனும்னு ஆசைதான்..”

‘இதெல்லாம் சும்மா..”

‘சும்மான்னா..?”

‘ஒரு பேச்சுக்கு சொல்வது..”

‘உண்மையாகவே சொல்கிறேன்… எனக்கு இங்கேயே இருக்க முடிந்தால் நிச்சயம் சந்தோசப்படுவேன்..”

இந்தப் பதில் ஏதோ ஒரு விதத்தில் அவன் மனத்தை திருப்தி படுத்துவதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

‘ஆனா.. உன் ஆராய்ச்சி முடிஞ்சுட்டா.. நீ கிளம்பித்தானே ஆகனும்..?”

‘அதுக்கு முதலில்.. இங்கே எவ்வளவு நாள் தங்க முடியுமோ.. அவ்வளவு நாள்.. நான் தங்குவதாக இருக்கிறேன்..”

‘ஊஹீம்..?”

‘யெஸ்..”

‘எவ்வளவு நாள்ன்னு சொல்ல முடியுமா..?”

‘தெரியலை..”

‘நாள்கள்.. வாரங்களாகி.. மாதங்களாகும்..”

‘ஒரு வருசமே ஆகட்டும்.. நான் இங்கேயே என்ஜாய் பண்ணுவேன்..”

‘உன் வீட்டில் தேட மாட்டாங்களா..?”

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்தாள் நிவேதா.. கார்த்திகேயனும் அதைப் பற்றிப் பேசவில்லை..

‘உங்க சித்தப்பாவை பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தீங்களே.. அவரோட காதலைப் பற்றிச் சொல்லிக்கிட்டு இருந்தீங்களே..”

நிவேதா உதடுகளில் இளநகையுடன் அவனது பார்வையைத் தவிர்த்து ஆற்றுநீரைப் பார்க்க.. அவனோ.. அவளையே பார்த்தான்..

‘அப்பா சித்தியை கோபமாய் பேசிட்டார்.. உடனே சித்தப்பா.. அப்பாவை எதிர்த்துப் பேசிட்டார்.. குடும்பம் உடைந்து விட்டது..”

‘ஓ.. யாராக இருந்தாலும்.. வொய்பை பேசினால் ஹஸ்பெண்டுக்கு கோபம் வரும்தானே..?”

‘அது என் அப்பாவின் மரமண்டைக்கு புரியனுமே.. பெண்டாட்டி பின்னாலே போகிறவனெல்லாம் 

ஒரு ஆம்பளையான்னு சித்தப்பாவை பார்த்து கேட்டு விட்டார்..”

‘மை காட்..?”

‘இவரைப் போலவே எல்லா ஆம்பளைகளும் கட்டின பெண்டாட்டியை கால் செருப்பை விடக் கேவலமாக நினைப்பாங்களா..? உயிராய் நினைப்பவனும் இருப்பான்தானே.. இவர் பார்வைக்கு அவனெல்லாம் ஆம்பளையில்லையாம்..”

கொதிப்பாக பேசினான் கார்த்திகேயன்.. கண்ணுக்கு முன்னால் தாய் படுகிற அவமானங்களை பார்த்து வளர்ந்தவன் அவன்..

நிவேதா.. அவனை எப்படி அமைதிப்படுத்துவது என்று புரியாமல் கை விரல்களை பின்னிப் பிரித்துக் கொண்டிருந்தாள்..

அவன் பேச்சை நிறுத்தி விட்டு தொடுவானத்தை வெறித்தபடி அமர்ந்து விட்டதும்.. அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..

அவனை அமைதிப் படுத்த வேண்டும் என்று அவள் நினைத்தாள்.. அவனது மனதிலிருக்கும் இந்த துன்ப உணர்வுகள் விலகி ஓட வேண்டும்.. ஆனால்.. அதைச் செய்வது எப்படி..?

அவனுக்கு அவள் யாரோ.. எவரோ..? ஆனால்.. அவளுக்கு..? 

அவனுக்கு அவள் உறவில்லை..ஆனால் அவளுக்கு..?

அவள் நெஞ்சம் அறியும்.. அவள் யார்..? அவன் யார்..? என்பதை.. எதற்காக அந்த ஊரில் கால் பதித்திருக்கிறாள் என்பதை..

அவனை அவள் அறிவாள்.. அவளை அவன் அறிய மாட்டான்..

கார்த்திகேயனின் முகத்தை நிவேதா அறிந்ததில்லைதான்.. ஆனால்.. அவனது முகவரியை அறிவாள்..

நிவேதாவின் முகத்தை அறிந்திருக்கும் கார்த்திகேயன் அவளது முகவரியை அறிய மாட்டான்..

நதியின் மூலத்தை அறிந்தவர்கள் யார்..?

நதியில் நீராடுபவர்கள் அதன் அழகையும்.. குளிர்ச்சியையும் ரசித்து.. அதில் திளைக்கிறார்களே தவிர.. நதியின் மூலத்தை அறிய முற்படுவதில்லை..

கார்த்திகேயனும் அப்படித்தான்.. வெம்மையான அவனது தினப்படி வாழ்வில் தென்றெலென வருகை தந்த நிவேதாவின் அருகாமையை அவன் விரும்பினான்.. அவள் எங்கிருந்து வந்திருக்கிறாள் என்று அறிய அவன் முற்படவில்லை..

ஒரே.. ஒரு நாளில்.. இந்த அளவுக்கு மன இதத்தை கொடுத்தவள் யாராக இருந்தால் என்ன..?

தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவனைப் பார்க்க நிவேதாவிற்கு பாவமாக இருந்தது..

‘உறவுகள் தொடர்கதை..

உணர்வுகள் விடுகதை….

ஒருகதை என்றும் முடியலாம்…

முடிவிலும் ஒன்று தொடரலாம்..

இனியெல்லாம் சுகமே…..”

தன்னையறியாமல் நிவேதா பாட.. தலையிலிருந்த கையை எடுத்து விட்டான் கார்த்திகேயன்..

“இவளுக்கு பாட்டுப் பாடக் கூட வருமா..?’

மெலிதான ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.. அவள் கண்களில் உண்மையிலேயே ஒரு விடுகதை தெரிந்தது.. அது என்னவென்று புரியாதவனாக அவன் குழம்பிப் போனான்..

‘உன் நெஞ்சிலே பாரம்..

உனக்காகவே நானும்..

சுமைதாங்கியாய் தாங்குவேன்..”

  அவளது பாடல் வரிகள் அவனது மனதின் வலிக்கு ஒத்தடம் கொடுத்தன.. அவனது கண்கள் லேசாக கலங்கி விட்டன..

“ஆண்கள்அழுவதா..?’ அவன் இமைகளை சிமிட்டி.. அதை மறைத்துக் கொண்டான்..

‘உன் கண்களின் ஓரம்…

எதற்காகவோ  ஈரம்..?

கண்ணீரை நான் மாற்றுவேன்..?”

அவளது பார்வை தாயின் மடியாக அவனை அரவணைக்க.. அவன் திணறிப் போனான்..

“யார் இவள்..? யட்சிணியா..? தேவதையா..? கந்தர்வ கன்னியா..? எங்கிருந்து வந்தாள்..?’

விடை தெரியாத கேள்விகளோடு அவன் போராடினான்..

‘வேதனை தீரலாம்…

வெறும்பனி  மறையலாம்..

வெண்மேகமே! புது அழகிலே..

நாமும் நனையலாம்…”

அவர்களின் கால் நனைத்த நதியலைகள் மனம் நனைத்த உணர்வை உணர்ந்தான் கார்த்திகேயன்.. அன்றைய பொழுதிற்குள் அவனும் நிவேதாவும்.. மனதால் நெருங்கி விட்டார்கள்..

இரவு உணவுக்குப் பின்னால்.. முந்தய நாளைப் போலவே.. கல்யாணியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் நிவேதா..

‘ஏன் கல்யாணி என்னவோ போல் இருக்கே..”

‘ம்த்சு.. எனக்கு இந்த வீடே பிடிக்கலை..”

‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.. உனக்கென்ன குறை..?”

கல்யாணியின் வெள்ளை மனத்தை அதற்குள் நிவேதா எடை போட்டிருந்தாள்.. ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் மனதிலிருப்பதை கொட்டி விடும் வெள்ளை மனம் கொண்டவள் கல்யாணி..

இப்போது அவள் இதைச் சொல்கிறாளென்றால் அவளுக்கு நிவேதாவை பிடித்துவிட்டது..

‘உனக்கென்னம்மா.. நீ பட்டணத்துப் பொண்ணு.. இந்த டிவியில வர்ற விளம்பரக் கதாநாயாகிகளைப் போல அசத்தலாய் இருக்கிற.. உன்னோட அப்பாம்மாவும்… 

அந்த விளம்பர அப்பாம்மாவைப் போல கொஞ்சிக் குழாவிக்கிட்டு இருப்பாங்க.. என் கதையே வேறம்மா..”

‘உன் கதைக்கென்னவாம்.. கரிச்சான்பட்டி.. பெரிய பண்ணையாரின் செல்லப் பெண் நீ..”

‘பெண்ணுன்னு சொல்லு.. செல்லப் பெண்ணுன்னு சொல்லாதே..”

‘ஏன்..”

‘என் அப்பாவுக்கு செல்லம் கொடுக்கத் தெரியாது.. அவர் யாருக்குமே.. செல்லம் கொடுத்ததில்லை..”

‘அது ஒரு குறையா..?”

‘பின்னே.. குறையில்லையா..? என் சித்தப்பா வீட்டைப் பாரேன்.. அவரோட பிள்ளைக கிட்ட.. அவர் எவ்வளவு செல்லமா பேசிப் பழகுவாருன்னு தெரியுமா..? எங்கப்பாவும் இருக்கிறாரே.. ம்ஹீம்..”

‘ஒவ்வொருத்தரும்.. ஒவ்வொரு குணத்தில் இருப்பாங்க கல்யாணி.. ஒன்னோட ஒன்னு ஒப்பிட்டுப் பார்த்தா.. இந்த உலகத்திலே எதுவுமே தங்காது..”

‘என்னால முடியலை நிவேதா.. எங்கம்மா.. தினமும் செத்துச்செத்து பிழைக்குது.. அண்ணன் ஆம்பளை.. இந்தக் கண்ராவியைப் பார்க்க முடியாம வெளியே தப்பிச்சு ஓடிடுது.. நானெங்க போவது..? பொட்டப் புள்ளயா பொறந்து தொலைச்சிட்டேனே.. அதனால வீட்டு.. வாசப்படியை தாண்ட முடியாம .. மறுகிச் சாகிறேன்..”

பொறுக்க முடியாமல் கல்யாணி விம்மியழ.. நிவேதா அவசரமாக அவளை மடியில் சாய்த்துக் கொண்டாள்.. அவளால் கல்யாணியின் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை..

குலுங்கும் அவள் முதுகை தட்டிக் கொடுத்தபடி.. என்ன செய்யலாம் என்று யோசித்தாள்..

எதையாவது செய்ய வேண்டும்..? இந்த நிலையை மாற்ற வேண்டும்..? முடியுமா..? அவளால் முடியுமா..?

“நீ என்ன வேலைக்கு வந்திருக்கங்கிற நினைப்பு உனக்கு இருக்கா..?’ என்று… அன்று கார்த்திகேயன் கேட்டதைப் போல அவளது அடிமனது கேட்கவில்லை..

அவள் மனதிற்குத் தெரியும்.. அவள் எந்த வேலைக்காக.. அந்த ஊருக்கு வந்திருக்கிறாள் என்பது..

அழுது.. அழுது.. ஓய்ந்த கல்யாணி.. முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்..

‘தப்பாக எடுத்துக்காதே நிவேதா..”

‘சேச்சே.. என்ன வார்த்தை பேசற..?”

‘நீ யாரோ.. எவரோ.. உன்கிட்ட.. என் துக்கத்தை கொட்டிட்டேன்..”

“நான் யாரோ.. எவரோவா..?’

நிவேதாவின் மனம் குலுங்கியது.. கல்யாணியின் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள் அவள்..

“இந்த முகத்தை நான் பிறந்ததிலிருந்து பார்க்கிறேன்..’ என்று சொல்ல வேண்டும் போல அவளுக்கு இருந்தது..

ஆனால்.. அவள் சொல்லவில்லை.. மெல்லிய குரலில் வாய்க்குள் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி.. வானத்தைப் பார்த்தாள்..

‘என்ன பாட்டு அது..?” கல்யாணி கேட்டாள்..

நிவேதா பதில் சொல்லாமல் தோள்களை குலுக்கி சிரித்தாள்..

‘இப்படிச் செஞ்சா.. என்ன பாட்டுன்னு தெரிஞ்சிருமா..? சத்தமாத்தான் பாடேன்..

நிவேதா கல்யாணியின் தோள்கள் மீது இரு கைகளையும் வைத்து அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தபடி பாடினாள்..

‘நெஞ்சுக்குத் தெரியும்..

நிலவுக்குத் தெரியும்..

நீ யார்.. நான் யார்.. என்பது..

ஊருக்குள் இருக்கும்..

யாருக்குத் தெரியும்..?

உன்னை.. என் மனம்.. நினைப்பது..”

இப்படிப்பட்ட பாடலை எதற்காக.. தன் முகத்தைப் பார்த்து .. உருகி உருகி நிவேதா பாடி வைக்கிறாள் என்று கல்யாணிக்கு சுத்தமாக புரியவில்லை..

அவள் மனதிலிருந்த வருத்தம் மாறியவளாக.. வாய் மூடி..

‘க்ளுக்..” கென்று சிரித்தாள்..

அவளது சிரிப்பில் நிவேதாவின் பாடல் நின்று விட்டது..

‘ஏன் சிரிக்கிற..?” அவள் புரியாமல் கேட்டாள்..

‘எங்கேயாச்சும்.. பொம்பளப் புள்ளயப் பாத்து.. பொம்பளப் புள்ளயே இப்படியொரு பாட்டை பாடி வைக்குமா..? உனக்கென்ன ஆச்சு..?”

“எனக்கென்ன ஆச்சு..? ‘ நிவேதா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்..

‘வேற யாரைப் பார்த்து பாடச் சொல்கிற..?”

‘என் அண்ணனைப் பார்த்து பாடி வைத்தேன்னு வைய்யு..அதில ஒரு அர்த்தமிருக்கும்.. அத விட்டுட்டு என்னைப் பாத்து பாடி.. வைக்கிறயே..”

‘உன் அண்ணனைப் பார்த்தாலும்.. பாட்டுத்தான் வரும்..”

‘அது வராம வேற என்ன வரும்..?”

‘ஊம்.. ஓட்டம் தான் வரும்..”

இருவரும் இணைந்து கலகலவென்று சிரித்தார்கள்.. கல்யாணியின் மனதில் இருந்த கவலை.. ஓடிப்போய் விட்டது..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link