Chapter 21
‘அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமா..?” கார்த்திகேயன் வினவினான்..
‘ம்ம்ம்..” அவனைப் பார்வையால் விழுங்கியபடி பதில் கொடுத்தாள் நிவேதா..
ஆற்றங்கரையோரமாக.. மணலில் கால் புதைய அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.. நாணல்கள் அடர்ந்து செழித்திருந்த கரையோரப் பகுதியை வேடிக்கை பார்த்தபடி கார்த்திகேயனுடன் இணைந்து நடந்தாள் நிவேதா..
அன்றைக்கு என்னவோ.. அவளுக்கு.. அவன் மீதான காதல் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.. குளிர்ச்சியான அந்த மாலை வேளையில் காற்றில் கேசம் பறக்க.. பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி.. இயல்பாக பேசி சிரித்தபடி கூட வந்தவனிடம் கொஞ்சி விளையாட அவள் மனம் துடித்தது..
அவன் ஐஸ்கிரிம் வெள்ளையில் காட்டன் சட்டையும் கருப்புக் கலரில் பேன்டும் அணிந்திருந்தான்.. இரண்டுமே அவனுக்கு பாந்தமாக பொருந்துவதை உணாந்தாள் நிவேதா..
பேசியபடியே அவளைப் பார்த்தவன் அவளது பார்வையை கண்டு கொண்டு புருவங்களை உயர்த்தவும்.. லஜ்ஜையுடன் முகம் திருப்பிக்கொண்டாள் நிவேதா..
கார்த்திகேயன் கண்கள் மின்ன அவளை நெருங்கி.. அவள் தோள்களில் இரு கைகளையும் போட்டு சிறைபிடித்து.. அவள் முகத்தோடு முகம் வைத்து.. உற்றுப் பார்த்தான்..
‘என்னடி..?” உரிமையுடன் வினவினான்..
‘ஒன்றுமில்லை..” அவள் குரலில் தெரிந்த குழைவே அவளைக் காட்டிக் கொடுத்தது..
‘இதை நான் நம்பனுமா..?” அவன் குரலில் சிரிப்பிருந்தது..
‘கார்த்திக்..” அவள் மயங்கிய குரலில் அழைத்தாள்..
‘சொல்லு..” அவன் தூண்டினான்..
‘யு லுக் வெரி ஹேன்ட்சம் டுடே..” அவள் சொல்லிவிட்டாள்..
இதை விடவும ஒரு ஆண் மகனுக்கு பெருமை தரும் விசயம் வேறு இருக்க முடியுமா என்ன..?
நிவேதாவின் மேல உயிராக இருந்த கார்த்திகேயனுக்கு காதில் தேன் பாய்வதைப் போல இருந்தது..
‘ஹேன்ட்சம்மா இருந்தா.. இப்படி தள்ளி நின்னுதான் பார்க்கனுமா..?” என்று கிறங்கிய குரலில் கேட்டான் அவன்..
‘ம்ம்.. சைட் அடிக்கனும்னு தோணியது.. சைட் அடிச்சேன்.. வேற என்ன செய்யச் சொல்றீங்களாம்..?” அவள் முகம் சிவக்க கேட்டாள்..
‘கட்டிப்பிடி.. என்னைக் கட்டிப்பிடி..
நீ எப்போதும் குத்தாத ரோஜாச் செடி..
விட்டுப்பிடி என்னைத் தொட்டுப்பிடி..
இது வில்லேந்தி விளையாடும் வேட்டையடி..
நிறம் மாறும் பூமியடி..
உன்னைப் பறிக்காமல்தொடுப்பேனடி..
அலையாத தீனியடி..
உன்னை அடையாமல் அடைந்தேனடி..”
அவளது முகத்தோடு முகம் வைத்து அவன் பாடியதில் அவள் கிளர்ச்சி அடைந்தாள்.. அது சினிமாப் பாடல்தான்.. அர்த்தமில்லாத வாசகங்கள்தான்.. ஆனால்.. அது காதலர்களின் பாடல்.. நிவேதா கண்மூடி தானும் பாடினாள்..
‘கட்டிப்பிடி.. என்னைக் கட்டிப்பிடி..
நீ எப்போதும் குத்தாத ரோஜாச் செடி..
விட்டுப்பிடி என்னைத் தொட்டுப்பிடி..
நான் விட்டாலும் தொட்டாலும் முல்லைக்கொடி..”
அவளது தோள்மீது படர்ந்த அவனது கரங்கள் இறுக்கி அவளை அணைத்து அருகில் இழுக்க.. அவள் எதிர்ப்பார்ப்புடன் கண் மூடிக் கிறங்கினாள்..
துடிக்கும் அவளது இதழ்களில் தன் இதழ்களைப் பதித்த கார்த்திகேயன்.. அவளது தோள் வளைவில் முகம் புதைத்தான்..
நிவேதாவின் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தன..
“இது என்ன மாதிரியான உணர்வு..’ என்று அவள் தவித்துப் போனாள்..
“Nயுh..’வென்ற இரைச்சலுடன் பேரலையாய் அவளது உணர்வுகள் பொங்கி எழ.. அவள் அவனைத் தள்ளி விட்டுவிட்டு.. மணலில ஓடினாள்.. அவன் சிரித்தபடி அவளைத் துரத்தி ஓடினான்..
அவன் கைகளில் அகப்பட்டவள் மூச்சிரைக்க நிற்க.. அவளது இடுப்பில் கை கொடுத்து.. தூக்கிக் கொண்டான் கார்த்திகேயன்.. பூமாலையாய் அவன் கைகளில் கிடந்தவள் சரிந்து மணலில் விழுந்து.. உருள.. அவள் மேல் சரிந்தான் கார்த்திகேயன்..
வானில் நிலா எழுந்து கொண்டிருந்தது.. யாருமேயில்லாத ஆற்றங்கரை.. அவர்களது கூடலுக்கு சாட்சியாக.. மௌனம் காத்தது.. மெல்லிய சலசலப்புடன் ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர்.. அவர்களின் தனிமையை கலைத்து விடக் கூடாது என்பதற்காக சப்தத்தை குறைத்து ஓடிக்கொண்டிருந்தது..
விலகி எழுந்த கார்த்திகேயன்.. கசங்கிய பூவாய் இருந்த நிவேதாவைப் பார்த்தான்.. அந்த மெல்லிய நிலா வெளிச்சத்தில் தேவதையைப் போன்ற அழகுடன் அவள் இருந்தாள்..
‘நிவி..” அவன் குரலில் குற்ற உணர்வு இருந்தது..
‘ம்ம்ம்..” அவள் எழுந்து.. முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து ஆற்று நீரைப் பார்த்தாள்..
‘நான் உன் தனிமையை பயன் படுத்திக் கொண்டுவிட்டேன்..”
‘ம்ப்ச்.. என்ன பேச்சு இது..?”
‘அன்றைக்கு நீ என் மீது சொன்ன குற்றச்சாட்டை இன்றைக்கு நான் உண்மையாக்கி விட்டேனே..”
‘அதில் எனக்கு வருத்தமில்லை கார்த்திக்..”
‘இருந்தாலும் நான் செய்தது தப்புத்தானே..”
நிவேதா.. அமைதியாக சிரித்தாள்.. அந்த நிலவொளியில் அவளது சிரிப்பு வெகு அழகாக இருந்தது..
‘இதுதான் நடக்கனும்னு இருந்திருக்கு கார்த்திக்..”
‘எல்லாம் உன்னால்தாண்டி.. நம் விசயத்தை வீட்டில் சொல்லிவிடலாமுன்னு நான் தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. நீ கேட்கலை..”
‘இப்ப என்ன ஆகிவிட்டது கார்த்திக்..?”
‘எதவுமே நடக்கலைன்னு உன்னை நீயே ஏமாத்திக்கப் போகிறாயா..?”
‘ஊஹும்.. உங்களுக்கு உரிமையில்லாத எதையும் நீங்க எடுத்துக்கலைன்னு சொல்கிறேன்..”
‘நிவி..!”
‘நான் உங்களுடையவள் கார்த்திக்..”
அவர்கள் மௌனமாக காரை நோக்கி நடந்தார்கள்.. காரில் ஏறப் போனவளை தடுத்து நிறுத்திய கார்த்திகேயன்.. தன் கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலியை அவிழ்த்து.. அவள் கழுத்தில் போட்டு விட்டான்..
‘இது நான் உனக்கு கட்டுகிற தாலி.. ஊரறிய பின்னால் கட்டுவேன்.. இது இந்த ஆற்றங்கரை அறிய நான் உனக்கு கட்டும் தாலி..”
வாஞ்சையுடன் அவளது தலையை வருடினான் கார்த்திகேயன்.. அவள் தோளில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள் நிவேதா..
அன்று இரவு தூங்கும் போது.. அவளது கை அனிச்சையாக அந்தச சங்கிலியை நிரடியது.. அவள் இதழ்களில் நிறைவான புன்னகை உதித்தது..
“என் கார்த்திக்..’
மனதிற்குள் சொல்லிக் கொண்டே அவள் தூங்கிப் போனாள்..
கல்யாணி கவலையாக இருந்தாள்.. அன்று மாலையில் அவளைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள்..
‘இது அண்ணன் செய்த வேலை..” நிவேதாவிடம் கோபமாக கூறினாள்..
‘அதுக்கு கல்யாணத்துக்கு அவசரம்ன்னா பண்ணிக்க வேண்டியதுதானே நிவேதா.. வீட்டில் கல்யாண வயசில் தங்கையை வைத்துக்கிட்டு நான் எப்படிம்மா கல்யாணம் பண்ண முடியும்ன்னு அம்மாகிட்ட கேட்டுச்சாம்.. இந்த மாப்பிளை அண்ணன் கூடப் படித்தவனாம்.. பக்கத்து டவுனில் சினிமாத் தியேட்டர் கட்டியிருக்கானாம்.. பெரிய பணக்காரனாம்.. யாருக்கு வேனும் அவன் பணம்..? எனக்கு என் நிரஞ்சன்தான் வேனும்..”
நிவேதாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. கார்த்திகேயன் எதற்காக கல்யாணியின் திருமணத்தில் அவசரம் காட்டுகிறான் என்பதை அவள் அறிந்திருந்தாள்..
இருந்தாலும்.. இது கல்யாணியின் மனதுக்குப் பிடிக்காத திருமணம் அல்லவா..?
‘நான் வேண்டுமானால் உன் அண்ணனிடம் உன் காதலைப் பற்றிச் சொல்லி.. பேசிப் பார்க்கவா..? ” என்று கேட்டாள் நிவேதா..
‘தயவு செய்து.. அப்படிச் செய்து விடாதே..” கையெடுத்துக் கும்பிட்டாள் கல்யாணி..
நிவேதாவிற்கு அதைப் பார்க்க முடியவில்லை.. மனம் தாளாமல் கல்யாணியை கடிந்து கொண்டாள் அவள்..
‘சீச்சீ.. என்ன வேலை செய்கிற..? நீ சொல்லாதேன்னு சொன்னா நான் சொல்லலை.. அதற்காக கையெடுத்துக் கும்பிடனுமா..?”
‘எனக்கு வேறு வழி தெரியலை நிவேதா..”
‘உன் நிரஞ்சனைப் பார்த்தாயா..?”
‘இரண்டு நாள்களுக்கு முன்னால்.. மலைக் கோவிலில் பார்த்தேன்..”?
‘என்ன சொன்னார்..?”
‘எனக்காகத்தான் இந்தியா வந்திருக்காராம்.. சென்னையில் வேலை முடிய இன்னும் ஒருமாதம்தான் இருக்கிறதாம்.. வேலை முடிந்து அவர் போகும் போது. என்னையும் கூட வந்து விடுன்னு கூப்பிட்டார்..”
‘கல்யாணி..?”
நிவேதா அதிர்ந்து போய் கூவினாள்.. அவளது உடல் நடுங்கியது..
“இது என்ன தொடர்கதையா..? யார் விட்ட சாபம் இது..?’
அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
‘என்னப் பேச்சு பேசுகிற கல்யாணி..? இது யார் செய்கிற வேலை.. இது நீ செய்கிற வேலையில்லை கல்யாணி..”
‘எனக்கு வேற வழி தெரியலை நிவேதா..”
‘ஊஹும்.. அப்படிச் சொல்லாதே.. ஒருநாளும் நீ இதைப் போல செய்து விடக் கூடாது.. அந்த நினைப்பு உன் மனசிலிருந்தால் அழி..”
‘எனக்கு என் அத்தான் வேணும் நிவேதா..”
‘வீட்டில் சொல்லி அதை நடத்தப் பார்..”
‘எப்படி..? எப்படின்னு நீயே சொல்லு.. உனக்கு விசயம் தெரியாதா..? இல்லை தெரியாததைப் போல் நடிக்கிறாயா..”
நிவேதா குற்ற உணர்வுடன் மௌனம் காத்தாள்..
உதிரிப் பூக்களாய் சிதறிக் கிடந்த உடன் பிறப்புகளை ஒன்று சேர்த்தவள் அவள்தானே.. யாராலும் செய்ய முடியாத காரியத்தை அவள் செய்து முடித்தாள்.. சிதம்பரநாதனையும்.. மேகநாதனையும் ஒன்று சேர்த்தாள்.. போதாக்குறைக்கு இருவரிடமும் வழக்கடித்து.. மரகதத்திடமும் பேச வைத்தாள்..
‘நீரடித்து.. நீர் விலகுமா அங்கிள்.. ” என்று அவள் மேகநாதனிடம் கேட்ட போது.. ‘இதை அண்ணனிடம் கேளும்மா ..” என்றார் அவர்..
‘சின்ன அங்கிள் இப்படிக் கேட்கச் சொன்னார் அங்கிள்..” என்று அவள் சிதம்பரநாதனிடம் ஒன்றும் அறியாதவளைப் போல சொல்லி வைக்க..
‘தம்பி.. அக்காகூட ஒன்னாப் போகனுமுன்னு ஆசைப்படுகிறானா..?” என்று தாடையைச் சொறிந்து யோசிக்க ஆரம்பித்தார் சிதம்பரநாதன்..
பலத்த யோசனையின் பக்க விளைவாக.. மீண்டும் மலைக் கோவிலில் அந்த மூவரையும் பேச வைக்கும் பொறுப்பை சிரமேற்கொண்டாள் நிவேதா..
இப்போது அண்ணன்.. தம்பி புற முதுகு காட்டி நிற்க.. கேசவமூர்த்தி.. அவர்களுக்கு எதிர் முதுகு காட்டினார்..
“இது வேலைக்கு ஆகாது..’ என்று உட்கார்ந்து விட்டாள் நிவேதா.. அவளும்தான் என்ன செய்வாள்..? கோவிலுக்கு வரும் வரையில் பேச்சு வார்த்தைக்கு தயாராக வருபவர்கள்.. நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால்.. ஆளுக்கொரு திசையில் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்..
அவளது கண்கள் மரகதத்தை துணைக்கு அழைக்க.. அவள் ‘தம்பி..” என்று உருக்கமாக அழைத்தாள்..
அவ்வளவுதான்.. அவளுக்கு தோழனாக வளர்ந்த சிதம்பரநாதனும்.. அவள் தூக்கி வளர்த்த மேகநாதனும்..
‘அக்கா..” என்று திரும்பி விட்டார்கள்..
அண்ணனும் தம்பியும் ஒன்று சேர்ந்த போதே.. அக்காவைப் பற்றிய நினைவும் அவர்கள் மனதில் வந்து விட்டது.. மரகதத்தையும் குடும்பத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் இருவரும் மனதிற்குள் விரும்பினார்கள்.. நிவேதா ஒரு தூண்டுகோல்.. அவ்வளவுதான்..
ஒன்று சேர்ந்த உடன் பிறப்புகளால்.. மேகநாதனின் மனைவி அமராவதியும்.. தன் அண்ணன் கேசவமூர்த்தியுடன்.. ஒன்று சேர்ந்து விட்டாள்..
அதுநாள் வரை மனைவிக்காக தமையனை பகைத்து வெளியேறிய போதும் இவர்களால்தான் அண்ணனுடன் சண்டை வந்தது என்ற காழ்ப்புணர்ச்சி.. மேகநாதனின் மனதில் இருந்ததால்.. அவர் மனைவியை..அவளுடைய அண்ணனுடன் பேச விடாமல் தடுத்து வந்தார்..
அண்ணனுடன் பிணக்கு தீர்ந்தவுடன்.. மனைவிக்கு மறைமுக அனுமதி கொடுத்து விட்டார் மேகநாதன்.. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மரகதத்துடன் பேசிவிட்ட பின்னால்.. அவர் மனைவியை தடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது..
மனதில் பூட்டி வைத்திருந்த ஆசைகளை திறவுகோல் போட்டு திறந்து.. அண்ணனிடம் கொட்டி விட்டாள் அமராவதி..
‘சுகந்திக்கும் படிப்பு முடியப் போகுது அண்ணா.. உன் மகனுக்காகவே அவளை இனஜினியருக்கு படிக்க வைத்தோம்.. நீ என்ன சொல்கிற..?”
‘நான் என்ன சொல்லப் போறேன் அமரா..? என்னைக்கு இருந்தாலும் என் தங்கச்சி மகதான் எனக்கு மருமக..”
‘அந்த என்னைக்கு.. என்னைக்குன்னு நீயே சொல்லிருண்ணா..”
‘அதுவும் சரிதான்.. நிரஞ்சன் இந்தியா வந்திருக்கிறான்.. அடுத்த முகூர்த்தத்தில கல்யாணத்தை வைச்சு.. கட்டுடா தாலியைன்னு சொன்னா கட்டிட்டு போறான்..”
நிரஞ்சன்.. சுகந்தியின் திருமணம் நிச்சயமாகி விட்டது.. சிதம்பரநாதன் முழுமனதுடன் அதை ஆதரித்தார்..
‘இரட்டைசொந்தம்.. எனக்கு அவன் அக்கா மகன்; மட்டும்தான்.. தம்பிக்கு மச்சினன் மகனும் கூட.. அதனால.. அவன் பொண்ணு கொடுக்கிறது தான் நியாயம்.. நம்ம கல்யாணிக்கு அருமையான மாப்பிளையை கார்த்தி கொண்டு வந்திருக்கிறான்.. அடுத்த முகூர்த்தத்திலேயே.. தம்பி மகளுக்கு முன்னால.. நம்ம மகளின் கல்யாணத்தை நடத்திப் புடுவோம்.. என்ன சொல்கிற மீனாட்சி..?”
வழக்கமில்லாத வழக்கமாக மனைவியை மதித்து.. சிதம்பரநாதன் கருத்துக் கேட்டால் மீனாட்சி என்ன சொல்வாள்..? சரியென்றுதான் சொன்னாள்..
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.